





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் தாம் கண்ட தேவாலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். அந்த தேவாலயம் 'மாரியா' என்று சொல்லப்படுகிறது. அதில் கண்ட உருவங்களையும் உம்மு ஸலமா (ரழி) குறிப்பிட்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்'அவர்களில் நல்லடியான் அல்லது நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். அவர்கள்தான்; அல்லாஹ்விடத்தில் படைப்பினங்களில் மிகவும் தீயவர்களாவர்;'என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அபீ ஸீனியாவில் இருக்கும் போது அங்கு தாம் கண்ட மாரியா என்றழைக்கப்படுகின்ற தேவாலயத்தைப் பற்றியும், அதன் அலங்காரங்கள், உருவச் சிலைகளின்,படங்கள் போன்றவற்றை வியந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தெரிவித்தார்கள். உடனே நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறான படங்களை வைத்ததன் பின்னனியை விளக்கினார்கள் நீர் குறிப்பிடும் அவர்கள் தங்களுக்கு மத்தியில் வாழ்ந்த நல்லமனிதர் ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் மண்ணறையின் மீது ஒரு பள்ளியைக் கட்டி அதில் அவர்கள் தொழுவார்கள், மற்றும் இவ்வாறான சிலைகளைப் படைத்து பதித்துவிடுவார்கள். இந்த செயலானது அல்லாஹ்வுக்கு இணைவைப்பின் பால் இட்டுச்செல்வதன் காரணமாக இக்காரியத்தை செய்பவர் அல்லாஹ்விடத்தில் மிகவும் கெட்ட மனிதராக இருப்பார் எனத் தெளிவுபடுத்தினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஜந்து தூண்களை தாங்கி நிற்கும் பலமான ஒரு கட்டடத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை ஒப்பிட்டார்கள். இஸ்லாத்தின் எஞ்சிய பண்புகள் யாவும் அக்கட்டடத்தை பரிபூரணப்படுத்தக்கூடிய விடயங்களாகும். இஸ்லாத்தின் தூண்களில் முதலாவதாக இரண்டு ஷஹாதா கலிமாக்கள் ஆகும். அவை 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்' ஆகும். இவ்விரண்டு விடயங்களும் ஒரு தூணாகவே கணிக்கப்படும். இவை ஒன்றையொன்று ஒரு போதும் பிரிந்திருக்கமாட்டாது. இவ்வார்த்தையை ஒரு அடியான் நாவினால் மொழிந்து, அல்லாஹ்வின் ஏகத்துவத்தன்மையையையும், அவன் மாத்திரமே வணக்கவழிபாடுகள் செலுத்த தகுதியானவன் என்பதையும் ஏற்று அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்படல் அவசியமாகும். அத்துடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை விசுவாசித்து, அவரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றல் அவசியமாகும். இரண்டாவது : தொழுகையை நிலைநாட்டுதல், இது இரு சாட்சியங்களுக்கு அடுத்து பிரதான தூணாகும். தினமும் கடமையான ஐவேளை தொழுகைகளான பஜ்ர், லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகியவைகளை அதன் நிபந்தனைகள், ருகுன்கள் மற்றும் வாஜிபாத்துக்களைப் பேணி நிறைவேற்றுவதைக் குறிக்கும். மூன்றாவது : ஸகாத் வழங்குதல், இது பொருள் ரீதியான ஒரு வணக்கமாகும். ஷரீஆவில்-மார்க்கத்தில்- வரையறுக்கப்பட்ட அளவை அடைந்த செல்வங்கள் அiனைத்திலும் இது கடமையாவதோடு அதற்கு தகுதியானவர்களுக்கு கொடுத்திட வேண்டும். நான்காவது : ஹஜ் செய்தல், ஹஜ் என்பது அல்லாஹ்வுக்கு வழிப்படும் முகமாக மக்காவுக்கு சென்று கிரியைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கும். ஐந்தாவது : ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, பஜ்ர் உதயமாகியது முதல் சூரியன் மறையும் வரையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் எண்ணத்துடன் உண்ணுதல் மற்றும் பருகுதல் மற்றும் நோன்பை முறிக்கும் காரியங்கள் அனைத்தையும் தவிர்த்தலை இது குறிக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொருவரினதும் இயலுமைக்கேட்ப- சக்திக்கு ஏற்ப- தீமையைத் தடுக்குமாறு இந்த ஹதீஸில் அறிவுருத்துகிறார்கள். ('அல் முன்கர்' என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடைசெய்த அனைத்து பாவகாரியங்கள் மற்றும் தீமைகளைக் குறிக்கும்) ஒருவர் தீமையை கண்டு அதனை தனது கையினால் தடுப்பதற்கான சக்தி பெற்றிருப்பின் –அல்லது அதிகாரத்தைப்பெற்றிருப்பின் - அவர் தனது கையால் தடுக்க வேண்டும். குறித்த தீமையை தடுப்பதற்கான இயலுமை அவரிடத்தில் காணப்படாவிட்டால்; தனது நாவினால் அப்பாவத்தை புரிபவரை தடுத்து அதன் விபரீதங்களை விளக்குவதுடன் தீமைக்குப் பதிலாக நன்மையின் பால் வழிகாட்ட வேண்டும் தனது நாவினால் குறித்த தீமையை தடுப்பதற்கு இயலவில்லையாயின் உள்ளத்தால் அத்தீமையை வெறுப்பதுடன் தனக்கு அத்தீமையை தடுப்பதற்கான பலம் கிடைத்தால் அதனை செய்வதாக மனதில் உறுதி கொள்ளல் வேணடும். தீமையை அல்லது பாவகாரியத்தை தடுப்பதில் ஆகக்குறைந்த நிலை மனதால் வெறுப்பதாகும்.
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்தவற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தினுள் (இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதன்) நுழைவதன் சிறப்பை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாத்தை தழுவிய ஒருவர் இஸ்லாத்தை சிறப்பான முறையில் கடைப்பிடித்தொழுகி, அல்லாஹ்வை மாத்திரம் நோக்காக்கொண்டு கலப்பற்ற எண்ணத்துடன்; எல்லாக்காரியங்களை மேற்கொள்பவராகவும் ,தமது சொல் மற்றும் செயல்களில் உண்மையாளராகவும் இருந்தால் அவர் ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலத்தில் செய்த பாவகாரியங்களுக்காக விசாரிக்கப்படமாட்டார். யார் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதன் பின் நயவஞ்சகனாக, அல்லது இஸ்லாம் மார்க்கத்தை துறந்து சென்று, இஸ்லாத்தை துவம்சம் செய்யும் முகமாக நடந்து கொள்கிறானோ, இவ்வாறான ஒருவன் இஸ்லாத்தை ஏற்காதிருந்த போது செய்தவற்றிற்காகவும், இஸ்லாத்தை ஏற்றதன் பின் செய்தவைகளுக்காகவும் மறுமையில் விசாரிக்கப்படுவான்!
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸலல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் அதிகமாக நான் எதுவும் செய்யவில்லையாயின், இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள் என வினவினார்'. அதற்கு நபியவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்' அதற்கு அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு மேலதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன் என்று கூறினார்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில்,ஒரு மனிதர் உபரியான தொழுகைளை தவிர்த்து கடமையான ஐவேளைத் தொழுகைகளை மாத்திரம் தொழுபவராகவும், உபரியான நோன்புகளைத் தவிர்த்து கடமையான நோன்புகளை மாத்திரம் நோற்பவராகவும், ஹலாலானவை ஹலால் என ஏற்று அவற்றை செய்தும் ஹராமானவை தவிர்க்கப்படவேண்டியவை என்பதை ஏற்று அவற்றை தவிர்ந்தும் இருப்பாராயின்; அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூமாலிக் அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும், பொறுமை பிரகாசமாகும். திருக்குர்ஆன் உனக்கு சாதகமான அல்லது பாதகமான ஒரு ஆதாரமாகும்; தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை பேரத்தில் விடுகின்றான். ஒன்று அதற்கு விடுதலையைத் தேடித் தந்திருக்கின்றான். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றான்'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்புறச்சுத்தம்; வுழூ மற்றும் குளித்தலினால் நிகழ்கிறது, அது தொழுகைக்கான நிபந்தனைகளில் ஒன்று என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. எனும் கூற்று அல்லாஹ்வை புகழ்ந்து அவனை அவனுக்கே உரிய பூரண பண்புகளால் வர்ணிப்பதைக் குறிக்கும். இவை மறுமையில் மீஸானில் நிறுக்கப்படும் அவ்வாறு நிறுக்கப்படும் போது அவை அமல்களின் தராசை நிரப்பிவிடும். என்பது இதன் கருத்தாகும். . 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' (எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே) ஆகிய கூற்றுக்களானது அல்லாஹ் எல்லாவிதக் குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதைக் காட்டும்.அத்துடன் அவனைக் கண்ணியப்படுத்தி அவனை நேசம் கொண்டு அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமாக அவனை வர்ணிப்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையிலான பகுதியை நிரப்பிவிடுகிறது. (அஸ்ஸலாது நூருன்)'தொழுகை ஓளியாகும்' என்ற வாசகம் ஒரு அடியானுக்கு தொழுகையானது அவனது உள்ளத்திலும், முகத்திலும்,மண்ணறையிலும்(கப்ரிலும்) மண்ணறையிலிருந்து விசாரணைக்காக எழுப்பப்படும் போதும் ஒளியாக அமையும் என்ற கருத்தைக் குறிக்கும். 'அஸ்ஸதகது புர்ஹானுன்' தர்மம் அத்தாட்சியாகும் என்பது ஒரு முஃமினின் ஆழமான நம்பிக்கையின் உண்மைத்தன்மையை பிரதிபளிக்கும் ஆதாரமாக தர்மம் அமையும் என்பதாகும். அதாவது மறுமையில் அடியார்களுக்கு வாக்களிக்கப்பட்டவற்றை நம்பாத நயவஞ்சகன்; தர்மம் செய்வதிலிருந்து விலகியிருப்பதால் அவனிலிருந்து முஃமினை வித்தியாசப்படுத்தும் அடையாளமாகவும் இது அமைகிறது. 'பொறுமை பிரகாசமாகும்' அஸ்ஸப்ரு என்பது மனதை பதற்றம் மற்றும் வெறுப்பு போன்றவற்றிலிருந்து கட்டுப்படுத்திக்கொள்வது என்பதைக் குறிக்கிறது. சூரிய ஒளியைப்போன்று வெப்பமும், சுடரும் கலந்த நிலையில் உள்ள பண்பாக பொறுமை காணப்படுகிறது.அதாவது பொறுமை; மனதை அடக்குதல்-கட்டுப்படுத்தல்- என்பது மிக சிரமமான விடயம். அதற்கு உள்ளத்துடன் போராடுதல் மற்றும் உள்ளம் விரும்பும் மனோஇச்சைகளை கட்டுப்படுத்துதல் போன்றன தேவைப்படுகின்றன.இவ்வாறான பொறுமையின் மூலம் பிரகாசத்தைப் பெற்றவன் அந்தப்பிரகாசத்தின் விளைவாக சரியான பாதையில் அவன் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு அது காரணமாக அமையும்.பொறுமை பல வகைப்படும் 1- அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் பொறுமையை கடைப்பிடித்தல் 2- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் மனதை அடக்கி பொறுமை காத்தல் 3- உலகத்தில் நிகழும் பலவகையான துன்பங்கள் மற்றும் சோதனைகளில் பொறுமைகாத்தல், போன்றன முக்கியமானவைகளாகும். அல்குர்ஆனை ஓதி அதன் போதனையை கடைப்பிடித்தொழுகின் அது உனக்கு சான்றாதாரமாக அமையும் அல்லது அதனை ஒதாது அதன் போதனைகளை கடைப்பிடிக்காது விட்டுவிட்டால் அது உமக்கு எதிராக சான்றளிக்கும் ஆதாரமாக அமைந்து விடும். அதனை தொடர்ந்து நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்கள் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து பல்வேறு தொழில்களுக்காக வெளிக்கிழம்பி பல்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்பதை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . இவ்வாறு செல்வோரில் சிலர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வழிப்படுவதில் உறுதியாக இருந்து நரகத்திலிருந்து தம்மை விடுவிடுவித்துக்கொள்வோரும், சத்திய மார்க்கத்திலிருந்து தடம்புரண்டு பாவகாரியங்களில் ஈடுபட்டு அதன் மூலம் தம்மை நாசத்திற்கு உட்படுத்தி நரகத்திற்கு செல்வோறும் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
முஆத் இப்னு ஜபல்(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்று அழைக்கப்படும் கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு அடியார்கள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதை நீர் அறிவீரா? மேலும் அடியார்களுக்கு அல்லாஹ் ஆற்ற வேண்டிய கடமை யாது என்பதையும் நீர் அறிவீரா என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ' அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனை மாத்திரமே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருப்பவரை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! இந்த நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், 'மக்களுக்கு இந்த நற்செய்தியை (இப்போது) அறிவிக்காதீர்;. அவர்கள் இந்தச் செய்தியை மட்டுமே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதில் அளித்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றியும் அல்லாஹ் அடியார்களுக்குச்செய்ய வேண்டிய கடமை குறித்தும் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்யவேண்டிய கடமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய -உரிமை –கடமை யாதெனில், அவனுக்கு எதையும் இணை கற்பிக்காமல் இருக்கும் ஏகத்துவவாதிகளை (மறுமையில்) அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும். பின்னர் முஆத் அவர்கள் நபியவர்களை விளித்து அல்லாஹ்வின் தூதரே இந்தச் சிறப்பை அறிந்து மக்கள் மகிழ்ச்சியடைவதற்காக நான் அவர்களுக்கு இதனை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் இதில் அவர்கள் (அடியார்கள்) நற்காரியங்களில் ஈடுபடாது இந்த விடயத்திலே உறுதியாக இருந்துவிடுவார்கள் என்ற அச்சத்தினால் இதனை மக்களிடம் கூறுவதை தடுத்தார்கள்.
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! சுவர்கத்தையும் நரகத்தையும் விதியாக்கும் இரு விடயங்கள் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் யார் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காது மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார். யார் அல்லாஹ்வுக்கு ஏதாவது ஒன்றை இணைவைத்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகம் நுழைவார் என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபியவர்களிடம் ஒரு மனிதர் வந்து சுவர்கத்திலும் நரகத்திலும் நுழைவிக்க்கக் கூடிய இரு விடயங்கள் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது அவனை மாத்திரமே வணங்கும் நிலையில் மரணிப்பது சுவர்க்கத்தை விதியாக்கும் விடயம் என்றும் 'ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு நிகராக அவனது உலூஹிய்யா (வணங்கி வழிபடுவதற்கு தகுதியானவன்) எனும் பண்பில் இணைகற்பிப்பித்து அல்லது அவனது ருபூபிய்யா என்ற பண்பில் (படைத்தல், பரிபாலித்தல், திட்டமிடுதல் போன்ற பண்புகளில் தனித்துவமானவன்) இணைகற்பித்து அல்லது அவனது திருநாமங்கள் மற்றும் அவனது அழகிய பண்புகளிலும் இணைகற்பித்து, மற்றும் ஏனைய விடயங்களிலும் இணை கற்பித்த நிலையில் மரணிப்பது நரகத்தை விதியாக்கும் விடயம் என பதிலளித்தார்கள்.
ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் அஸ்ஸகபி ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
இமாம் முஸ்லிம் மற்றும் இமாம் அஹ்மத் ஆகியோரால் பதிவு செய்யப்பட்டதுநபித்தோழர் ஸுப்யான் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் கடைப்பிடித்தொழுகுவதற்கு இஸ்லாத்தின் கருத்துக்கள் யாவும் பொதிந்துள்ள, அது குறித்து வேறு யாரிடமும் கேட்பதற்கு அவசியமற்ற ஒரு கூற்றை சொல்லித் தருமாறு வேண்டினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவரிடம் : நான் அல்லாஹ் ஒருவன் என்று ஏற்று , அவனே எனது இரட்சகனும், உண்மையான கடவுளும், எனது படைப்பாளனும், எனது உண்மையான இறைவனுமாவான், அவனுக்கு நிகராக எவனும் இல்லை என்று நம்பிக்கை கொண்டேன் எனக் கூறுவீராக என்று வேண்டினார்கள். பின் அல்லாஹ் விதித்த கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் அல்லாஹ் தடுத்த விடயங்களை தவிர்ந்திருப்பதன் மூலமும் அவனுக்குக் கட்டுப்பட்டு அதிலே நிலைத்திருக்குமாறும் வேண்டினார்கள்.