





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா, அவர்கள் கூறுகிறார்கள் மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் ஒரு மனிதனை விடுதலை செய்வான். அவனது குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட தொண்ணூற்றி ஒன்பது ஏடுகள் அவன் முன் விரிக்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தொலைவில் இருக்கும். இவற்றில் எதையேனும் மறுக்கிறாயா? நம்பகமான எனது எழுத்தாளர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா? என்று இறைவன் கேட்பான். இல்லை இறைவா! என்று அவன் கூறுவான். அக்குற்றங்களுக்கு உன்னிடம் எதாவது நியாயமான காரணம் ஏதும் உள்ளதா? என்று இறைவன் கேட்பான்.இல்லை இறைவா! என்று அவன் கூறுவான். அப்போது இறைவன் 'நிச்சயமாக உனக்கு என்னிடத்தில் நல்லதே கிடைக்கும், இன்று உமக்கு எந்த அநீதியும் கிடையாது, என்று கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு ஒன்று எடுத்துக்காட்டப்படும்; அதில் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலு{ஹு என்று எழுதப்பட்டிருக்கும். 'உனது செயலின் எடையைப்பார்' என்று இறைவன் கூறுவான். அதற்கு அம்மனிதன் இறைவா! அந்தத் துண்டுச்சீட்டு அந்த ஏடுகளுக்கு எப்படி நிகராகும்? என்று கேட்பான். (இன்றைய தினம்) உனக்கு எந்த அநியாயமும் செய்யப்படமாட்டாது என்று இறைவன் கூறுவான். அந்த ஏடுகள் அனைத்தும் ஒரு தட்டிலும் அந்தத் துண்டுச் சீட்டு இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். ஏடுகள் உயர்ந்து துண்டுச்சீட்டு வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு நிகராக எதுவும் கனதியாக இருக்காது என்று நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டதுமறுமை நாளில் மக்கள் முன்னிலையில் தனது சமூகத்திலிருந்து ஒரு மனிதனை விசாரணைக்காக அழைத்து அவனிடம் 99 பதிவேடுகளை எடுத்துக்காட்டுவான், என நபி ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். பதிவேடு என்பது அந்த மனிதன் உலகில் செய்த தீய செயல்களின் ஏடுகளைக் குறிக்கும். ஓவ்வொரு பதிவேடும் பார்வை எட்டும் அளவுக்கு நீண்டதாக காணப்படும்;. பின்னர் அல்லாஹ் அந்த மனிதனைப்பார்த்து இந்தப் பதிவேடுகளில் எழுதப்பட்டவைகளில் ஒன்றையேனும் நீ மறுக்கிறாயா? எனக் கேட்பான். எழுத்தாளர்களான எனது வானவர்கள் உமக்கு அநியாயம் இழைத்துள்ளனரா? அதற்கு அந்த மனிதன் : எனது இரட்சகனே அவ்வாறில்லை என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் அந்த மனிதனிடம் உலகில் நீ செய்து முற்படுத்திய தீய செயல்களுக்கு மறதி அல்லது தவறு அல்லது அறியாமை போன்ற ஏதும் நியாயமான காரணங்கள் உண்டா? என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் எனது இரட்சகனே அதற்கான எந்த நியாயமும் என்னிடத்தில் கிடையாது என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனைப்பார்த்து உண்மைதான்; உமக்கு எம்மிடம் நன்மை உண்டு எனவும் இன்றைய தினம் உமக்கு எந்த அநியாயமும் நிகழாது என்றும் கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு (பதிவட்டை) ஒன்று எடுத்துக்காட்டப்படும்; அதில்" அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு" (உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறும் இல்லை என்று சாட்சி கூறுகிறேன். முஹம்மத் அவனின் அடியாரும் அவனின் தூதருமாவார் எனவும் சாட்சி கூறுகிறேன்) என்று எழுதப்பட்டிருக்கும். தொடர்ந்தும் அல்லாஹ் அந்த மனிதனைப்பார்த்து ' உனது செயலின் எடையை காட்டும் ' என்று கேட்பான். அதற்கு அந்த மனிதன் எனது இரட்சகனே! இந்தப்பதிவேடுகளின் நிறைக்கு இந்த பதிவட்டையின் நிறை நிகராகுமா? என மனிதன் ஆச்சரியமடைந்தவனாக கேட்பான். அதற்கு அல்லாஹ் ' உமக்கு எந்த அநியாயமும் நிகழ மாட்டாது' எனக் கூறுவான். பதிவேடுகள் ஒரு தட்டிலும் பதிவட்டை இன்னொரு தட்டிலும் வைக்கப்படும், அப்போது பதிவேடுகளின் தட்டு குறைந்து பதிவட்டை இருந்த தட்டு கனதியாகி அதன் எடை அதிகரித்து விடும் அப்போது அல்லாஹ் அந்த மனிதனின் பாவத்தை மன்னித்து விடுவான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். 'அல்லாஹ் சுவர்க்கத்தையும் நரகத்தையும் படைத்து விட்டு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சுவர்க்கத்துக்கு அனுப்பி சுவர்க்கத்தையும், சுவர்க்கவாசிகளுக்காக நான் தயார்செய்தவற்றையும் பார்ப்பீராக என்று கூறினான். அவர் அதனை பார்த்துவிட்டு வந்து உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக எவரும் அதன் இன்பம் பற்றி கேள்விப்பட்டால்; அதில் நுழைந்து விடவே நினைப்பர். உடனே அந்த சுவர்க்கம் வெறுக்கப்டபடக்கூடிய விடயங்களால் சூழ்ந்திருக்க கட்டளைப் பிரப்பித்தான். மீண்டும் அங்கு சென்று சுவர்க்கவாசிகளுக்கு தான் தயார்செய்தவற்றை பார்த்து வருமாறு கூறினான் அங்கு சென்று பார்த்த போது சுவர்க்கம் வெறுக்கத்தக்க விடயங்களால் சூழப்பட்டிருந்தது. அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அதனுள் எவரும் நுழைய மாட்டார்களோ என நான் பயப்படுகிறேன். பின் நரகத்தையும் நரகவாதிகளுக்கு தான் தயார்ப்படுத்திவைத்திருப்பவற்றை பார்ப்பீராக என ஜிப்ரீலிடம் அல்லாஹ் கூற, அதனைச் சென்று பார்த்த போது அது அடுக்கடுக்காக இருப்பதை கண்டார்.பின் திருப்பிவந்து உனது கண்ணியத்தின் மீது ஆணையாக அதில் எவரும் நுழைய விரும்ப மாட்டார்கள். உடனே அல்லாஹ் நரகத்தை இச்சைகளால் சூழ்ந்திருக்க கட்டளைப்பிரப்பித்தான் பின் மீண்டும் அதனை பார்த்து வருமாறு அவருக்கு கட்டளையிட்டான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸ்லாம் அவர்கள் சென்று பார்த்த போது அது இச்சைகளால் சூழப்பட்டிருந்தது.உடனே திரும்பி வந்து (இறைவா) உனது கண்ணியத்தி;ன் மீது சத்தியமாக அதனுள் நுழையாது எவறும் தப்ப மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்.'
இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்அல்லாஹ் சுவர்க்கத்தையும், நரகத்தையும் படைத்த போது, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சுவர்க்கத்தை சென்று பார்ப்பீராக என்று கூற அவர் அதனை பார்த்து விட்டு அல்லாஹ்விடம் திரும்பி வந்தார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். சுவர்க்கத்தை பார்த்துவிட்டு திரும்பிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை விளித்து எனது இரட்சகனே! உனது மாட்சிமையின் -கண்ணியத்தின் மீது சத்தியமாக இந்த சுவர்க்கத்தில் உள்ள இன்பங்கள் சுகங்கள் பாக்கியங்கள் பற்றி எவரும் கேள்விப்படுவாராயின் அதில் நுழைவதற்கு அதிவிருப்பம் உடையவராகவே இருப்பார். அதனை அடைந்து கொள்ள நல்ல காரியங்களில் ஈடுபடுவார் என்று கூறினார். பின்னர், அல்லாஹ் இன்னல்களாலும், (இடையூறுகளாலும்), இறைகட்டளைகளை எடுத்து நடக்கும் போதும், அவன் தடுத்தவற்றை தவிர்ந்து விலகி நடக்கும் போதும் ஏற்படுகின்ற சிரமங்களாலும் அதனை சூழச்செய்தான். ஆகவே யார் அதில் -சுவர்க்கத்தினுள் நுழைய விரும்புகிறாரோ அவர் இந்த இடையூறுகளை தாண்டிச்செல்லல் அவசியமாகும். சுவர்க்கம் இன்னல்களால் சூழப்பபட்டதன் பின், ஜிப்ரீலே இப்போது சுவர்க்கத்தை பார்த்து வருவீராக என்று அல்லாஹ் கூறினான். உடனே அவர் அதனைப் பார்த்து விட்டு வந்து ; எனது இரட்சகனே உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக , சுவர்க்கம் செல்லும் பாதையில் எதிர்ப்படும் சிரமங்கள் மற்றும் இன்னல்களினால் எவறும் அதில் நுழைய மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் எனக் கூறினார். நரகத்தை அல்லாஹ் படைத்த வேளை ஜிப்ரீலே அதனைப்பார்;த்து வருவீராக எனக் கூற உடனே ஜிப்ரீல் அதனை பார்க்கச் சென்றார். பின் மீண்டும் அல்லாஹ்விடம் அவர் வந்து எனது இரட்சனே! உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக, அதன் வேதனை,கடுந்துயர்,இன்னல்கள் மற்றும் சித்திர வதைகள் போன்றவற்றை கேள்விப்படும் எவரும் அதில் நுழைவதை விரும்பாது அதன் பால் இட்டுச்செல்லும் வழிகளிலிருந்து விலகி நடப்பர் என்று கூறினார். அல்லாஹ் மனோ இச்சைகள், உலக இன்பங்கள் போன்றவைகளால் அந்நரகத்தை சூழச்செயததன் பின், ஜிப்ரீலே இப்போது நரகத்தை பார்த்து வருவீராக என்று கூறினான். உடனே ஜிப்ரீல் அதனைப்பார்த்துவிட்டு அல்லாஹ்விடம் வந்து இறைவா! உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அந்த நரகத்தை சூழ மனோஇச்சைகளும், உலகியல் இன்பங்களும் இருப்பதால் அதில் நுழையாது எவரும் தப்பிட மாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் 'அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்வானங்கள் பூமிகள் படைக்கப்படுவதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன் 'லவ்ஹுல் மஹ்பூலில்' படைப்பினங்களின் வாழ்வு, மரணம், வாழ்வாதாரம் போன்ற ஏனைய விடயங்கள் குறித்த விதிகள் தொடர்பாக நிகழவிருப்பவற்றை விரிவாக அல்லாஹ் எழுதிவிட்டான் என்பதை இந்த ஹதீஸில் நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.அவை யாவும் அல்லாஹ்வின் தீர்ப்புக்கேற்ப நிகழ்ந்தே தீரும். இந்த உலகில் (உள்ளவை) படைக்கப்பட்டவை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே இயங்கும். எனவே ஒரு அடியானுக்கு கிடைத்தவை ஒரு போதும் கைநழுவிச்சென்றிடாது, கைநழுவிச்சென்றவை ஒரு போதும் கிடைத்திடவும் மாட்டாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை தான் செவிமடுத்ததாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'நிச்சயமாக ஒரு (முஸ்லிம்) அடியானுக்கும்; இணைவைப்பிற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விடுவதாகும் '.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கடமையான தொழுகையை விட்டுவிடுவதை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கண்டித்துள்ளார்கள். மேலும் ஒரு மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைநிராகரிப்பில் விழுந்து விடுவதற்கும் இடையிலான வித்தியாசம் தொழுகையை விட்டுவிடுவதாகும் எனத் தெரிவித்துள்ளார்கள். தொழுகை இஸ்லாத்தில் இரண்டாவது முக்கிய கடமையாகும். இஸ்லாத்தில் அதற்கென தனியான அந்தஸ்த்து உண்டு. தொழுகை கட்டயாக் கடமை என்பதை ஏற்றுக்கொள்ளாதவன் இறைநிராகரிப்பாளன் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். அலட்சியம், மற்றும் சோம்பலின் காரணமாக அதனை நிறைவேற்றாது இருப்பவனும் காபிராவான். இது ஸஹாபாக்கள் -நபித்தோழர்களின்- ஏகோபித்த முடிவாகும். யார் விட்டு விட்டுத் தொழுகிறாறோ அவரும்; இங்கு குறிப்பிட்ட கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: எமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) இடையில் உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்'
இமாம்களான திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கும் அவர்கள் அல்லாத காபிர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோருக்கிடையிலான ஒப்பந்தமும், உடன்படிக்கையும் தொழுகையாகும். யார் அதனை விட்டுவிடுகிறாரோ அவர் காபிராகிவிட்டார், என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். 'உங்களின் மூதாதையரைக் கொண்டு நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்' என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை என உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் .
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் அல்லாஹ் மூதாதையர்களின் மீது சத்தியம் செய்வதை தடுத்ததாக நபி ஸல்லலல்லாஹுஅலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். யார் சத்தியம் செய்ய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வைத்தவிர வேறு எதிலும் சத்தியம் செய்ய வேண்டாம். இந்த செய்தியை உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டது முதல் அவர் விரும்பியோ அல்லது பிறரின் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகவோ அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வதை தடுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். மறுமை நாளில் (மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மறுமை நாளில் மனிதர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த, அநியாயம் தொடர்பில் கொலை மற்றும் காயப்படுத்தியமை பற்றியே முதலாவாதாக தீர்ப்பளிக்கப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது; 'இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை, அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை, மற்றொருவர் புறம்பேசித் திரிந்தார்' என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான ஈத்த மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை நட்டினார்கள். அது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?' என கேட்கப்பட்டபோது, 'அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் காலமெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு கப்ருகளுக்குப் பக்கமாக சென்றபோது அவர்கள்: இந்த இரண்டு கப்ருகளிலும் அடக்கம் செய்யப்பட்வர்கள் உண்மையில் வேதனை செய்யப்படுகிறார்கள், அவர்கள் இருவருக்கமான வேதனை உங்களின் பார்வையில் மிகப்பெரிய விடயத்திற்காக அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவமாகும். அவ்விருவரில் ஒருவர் இயற்கைத்தேவையை –சிறுநீர் கழிக்கையில் அச்சிறுநீர் தனது உடல் மற்றும் ஆடையில் படுவதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதை பொருட்படுத்தாது இருந்தவர். மற்றொருவர், மக்களுக்கு மத்தியில் புறம் பேசித் திரிபவர். அதாவது, முரண்பாட்டையும் பிரச்சினையையும் மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தி பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பிறரின் பேச்சை பரப்பித் திரிபவர்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன (நற்செயல்களைத்) தயார் செய்து வைத்திருக்கிறாய்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அம்மனிதர், 'எதுவுமில்லை'. எனினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன்தான் (மறுமையில்) நீ இருப்பாய்' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், 'நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்' என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரழி) அவர்களையும் உமர் (ரழி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் (மறுமையில்) அவர்களுடன்தான் இருப்பேன் என்று நான் நம்புகிறேன். அவர்களுடைய நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்பாலை வனத்தில் வசிக்கும் ஒரு நாட்டுப்புற அரபி நபியவர்களிடம் வந்து மறுமை நாள் நிகழும் நேரம் குறித்து வினவினார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவரிடம் நீ அதற்காக நல்லமல்களில் எவற்றை தயார்செய்து வைத்துள்ளாய்? என்று கேட்டார்கள். கேள்வி கேட்டவர் நான் அதற்கென பெரிதாக எந்தவொரு நற்காரியத்தையும் செய்யவில்லை என்றாலும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உளமாற தான் நேசிப்பதாக கூறினார். இது தவிர உளரீதியான, உடல் ரீதியான மற்றும் செல்வ ரீதியான எந்த ஒரு வணக்கத்தையும் அவர் குறிப்பிடவில்லை. ஏனெனில் இவையெல்லாம் அடிப்படையான நேசத்தின் விளைவாக வருபவை. அத்துடன் உண்மையான நேசமானது நல்லமல்களின் பால் முயற்சிப்பதை தூண்டக் கூடியதாக இருக்கும். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் சுவர்க்கத்தில் இருப்பாய் என்று கூறினார்கள். இந்த நன்மாரயத்தின் (நற்செய்தி) மூலம் ஸஹாபாக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். தொடர்ந்தும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகையில், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையும் அபூபக்ர் உமர் ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோரையும் நேசிக்கிறேன். தனது அமல்கள் அவர்களின் அமல்களின் அளவுக்கு இல்லையென்றிருந்தாலும் அவர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன் என்றார்கள்.