





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப்போகிறேன்; வேறெந்த இறைத்தூதரும் அதைத் தம் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகின்றானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கின்றேன்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தஜ்ஜாலின் குணவியல்புகள் மற்றும் அவனின் அடையாளங்கள் பற்றி இதற்கு முன் எந்த நபியும் கூறாத பல விடயங்களை தனது தோழர்களுக்கு குறிப்பிட்டார்கள் அவற்றில் சில பின்வருமாறு : அவன் ஒற்றைக் கண்ணுடையவன். கண்ணின் பார்வைக்குட்டபட்டதாக சுவர்க்கத்தையும் நரகத்தையும் அல்லாஹ் அவனிடம் கொடுத்திருப்பான். என்றாலும் அவனிடமிருக்கும் சுவர்க்கம் நரகமாகவும் நரகம் சுவர்க்கமாகவும் இருக்கும். யார் அவனுக்குக் கட்டுப்படுகின்றானோ அவனை மக்கள் சுவர்க்கம் எனக்கருதுகின்ற அந்த சுவர்க்கத்தில் நுழைவிப்பான். ஆனால் அது சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கும். யார் அவனுக்குக் கட்டுப்படவில்லையோ அவனை மக்கள் நரகம் எனக்கருதுகின்ற அந்த நரகத்தில் அவன் நுழைவிப்பான். என்றாலும் அது உண்மையான அழகிய இன்பமான சுவர்க்கமாக இருக்கும். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நூஹ் அலை அவர்கள் தனது சமூகத்தை எச்சரித்தது போன்று தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் எங்களை எச்சரித்தார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறார்; என்பதைக் அவதானிக்கட்டும்'.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு மனிதன் தனது குணத்திலும்; ஒழுக்கத்திலும் அவனது தோழர்கள் மற்றும் நண்பர்களின் குணங்களை ஒத்திருக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நட்பானது பண்பாடு, நடத்தை மற்றும் ஏனைய விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நீங்கள் ஒரு நல்ல நண்பரைத் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப் படுகிறீர்கள். ஏனென்றால் ஒரு நல்ல நண்பன் நம்பிக்கை, (ஈமான்) நேர்வழி ஆகியவற்றுக்கு வழிகாட்டுவதுடன், நல்ல செயல்களில் தன் நண்பனுக்கு உதவுபவனாகவும் இருப்பான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ((காரிருள் போன்ற பெரும் குழப்பங்கள் வருவதற்குள் நற்காரியங்களை செய்வதற்கு விரைந்திடுங்கள். அவ்வேளை ஒரு மனிதன்; காலையில் முஃமினாக இருந்து மாலையில் காபிராக மாறிவிடுவார், அல்லது மாலையில் முஃமினாக இருந்து காலையில் காபிராக மாறிவிடுவார். இவ்வுலகின் அற்பப் பொருளுக்காக தனது மார்க்கத்தையே விற்றுவிடுவார்.))
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நற்காரியங்களை தடுத்து நிறுத்தக்கூடியதும் அதில் கவனம் செலுத்துவதை விட்டும் திசைதிருப்பக் கூடியதுமான குழப்பங்களும் மார்க்கம் பற்றிய சந்தேகங்களும் நிலவும் காலம் வரமுன் நற்காரியங்களை அதிகம் செய்வதற்கு விரைந்து செல்லுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள். அக்காலம் இரவின் எல்லாப் பகுதிகள் போல் இருள் சூழ்ந்த நிலை காணப்படும். அதில் சத்தியமும் அசத்தியமும் கலந்திருக்கும் இதனால் மக்கள் சத்தியத்தை அசத்தியத்தியத்திலிருந்து வேறுபடுத்தி இனங்காண மிகச்சிரமப்படுவர். இச்சிரமம் காரணமாக முஃமினனான நிலையில் காலையை அடைந்த ஒரு மனிதன் மாலையாகும் போது காபிராக மாறிவிடுவார் அல்லது மாலையில் முஃமினாக இருந்த மனிதன் காலையாகும் போது காபிராக மாறிவிடுவார். இது அழிந்து போகும் இவ்வுலகின் அற்ப பொருளுக்கு தனது மார்க்கத்தை விட்டுவிடுவதினால் ஏற்படும் நிலையாகும்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் பதற்றத்துடன் வந்து, 'அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது' என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், 'அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்; தீமை பெருகிவிட்டால்...' என்று பதிலளித்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸைனப் பின் ஜஹ்ஷ் ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பயந்து நடுங்கிய நிலையில்; வந்து 'லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினார்கள்' லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறியது விரும்பத்தகாத ஒரு விடயம் நிகழவிருப்பதை எதிர்பார்த்து கட்டியம் கூறுவதையும், அதிலிருந்து விமோசனம் பெற –தப்பிக்க அல்லாஹ்விடம் புகழிடம் தேடுவதன் மூலம் மாத்திரமே சாத்தியம் ஆகும் என்பதைக் குறிக்கும். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் - அணை- திறக்கப்பட்டுவிட்டது'. இந்த அணை துல்கர்னைன் அவர்கள் கட்டினார்கள். அது கட்டப்பட்டதை விவரிக்கும் முகமாக தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டினார்கள். அதற்கு ஸைனப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள்: எங்களில் ஸாலிஹான முஃமின்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் எம்மீது அழிவை எப்படி ஏற்படுத்துவானா? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பாவகாரியங்கள் தீயசெயல்கள் மானக்கேடான விடயங்கள் விபச்சாரம் மதூபானம் ஆகியவை அதிகரிக்கும்போது அழிவு பொதுவாக ஏற்படும் என்று குறிப்பிட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'எந்தப் பாவமும் இல்லாத நிலையில் (பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில்)அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை, முஃமினான ஆணும், பெண்ணும் தங்கள் சுய வாழ்விலும், தங்கள் குழந்தைகளிலும், செல்வத்திலும் சோதனைகளை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.'
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு நம்பிக்கை கொண்ட ஆணோ, அல்லது பெண்ணோ சோதனைகளுக்கு ஆட்படாமல் ஒரு போதும் இருக்கமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சில நேரங்களில் சோதனையானது ஒரு முஃமினின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாகக் காணப்படும். உதாரணமாக அவரது ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சார்ந்ததாக இருக்கும். சில நேரங்களில் சோதனையானது குழந்தைகளுடன் தொடர்புடையதாக காணப்படும், உதாரணமாக பிள்ளைகள் நோய்வாயப்டுதல், இறந்து போதல் அல்லது கீழ்படியாது நடத்தல், நோவினை செய்தல் போன்றவைகளை குறிப்பிடலாம். சில நேரங்களில் சோதனை செல்வத்துடன் தொடர்பானதாக இருக்க முடியும். உதாரணமாக வறுமையை எதிர்கொள்ளுதல், வியாபாரம் முழுமையாக நஷ்டம்அடைதல், செல்வம் திருடப்படுதல், பொருளாதார மந்தநிலை, நெருக்கடியை எதிர்கொள்ளல் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்த சோதனைகளின் விளைவாக, அல்லாஹ் அடியானின் அனைத்து பாவங்களையும் அழித்து விடுகிறான், இறுதியாக அவன் அல்லாஹ்வைச் சந்திக்கும் போது, அவன் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் அவன் தூய்மையடைகிறான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது என்று கூறாதீர்கள். மாறாக அல்லாஹ் நாடினான் பின்னர் இன்னாரும் நாடினார் என்று கூறுங்கள்".
இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் தனது பேச்சில் 'மாஷா அல்லாஹ் வஷாஅ புலான்' ( குறித்த விடயமானது அல்லாஹ்வின் விருப்பப்படியும், குறித்த நபரின்; விருப்பப்படியும் நடந்தது) அல்லாஹ்வும் இன்னாரும் நாடியது, அல்லது 'மாஷாஅல்லா வபுலான்' அல்லாஹ்வினதும்; குறித்த நபரினதும் விருப்பப்படி நடந்துவிட்டது என்று கூறுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்துள்ளார்கள். காரணம் அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் அவனின் விருப்பம் பொதுவானது அதில் எவரும் கூட்டுச்சேர முடியாது. குறித்த வசனத்தில் 'வாவ் ' என்ற எழுத்தானது வாவுல் அத்ப் ஆகும். அது ஒருவிடயத்தை சமமாக இணைத்துச் சொல்வதற்கு பாவிக்கப்படும் எழுத்தாகும். அந்தவகையில் அது அல்லாஹ்வுடன் ஒருவர் சமமாக கூட்டுச்சேர்வதை காட்டுகிறது ஆகையால் அவ்வாறு பாவிப்பது தடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் மாஷாஅல்லாஹு ஸும்ம ஷாஆ புலான்' அதாவது அல்லாஹ் நாடியதன் பின் குறித்த மனிதன் நாடியதும் நிகழ்ந்து விட்டது என்று கூறுவதில் எந்தத் தடையுமில்லை. ஆக அடியானின் விருப்ப-நாட்ட-மானது அல்லாஹ்வின் நாட்டத்தை பின்பற்றியதாக உள்ளது. இதனையே நபியவர்கள் 'வாவுக்குப் பதிலாக ஸும்ம என்ற முன்இடைச்சொல்லை பயன்படுத்தியுள்ளார்கள். ஸும்ம என்பது ஒரு விடயம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அல்லது பின்னால் அல்லது தாமதித்து நிகழும் அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் முன்னிடைச்சொல்லாகும்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறித்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'வேறு யாரை? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபியவர்களின் காலத்திற்கு பிறகு, தனது சமூகத்தில் சிலரின் நிலை குறித்து நபிகளார் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். அதாவது தனது சமூகத்தாரில் சிலர் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை தமது நம்பிக்கைக் கோட்பாடுகளிலும் செயற்பாடுகளிலும் வழக்காறுகளிலும் பாரம்பரிய விடயங்களிலும் மிகவும் துல்லியமாக சாணுக்குச் சாண் முழத்திற்கு முழம் பின்பற்றி நடப்பார்கள். இந்நிலையை அவர்கள் விளக்கும் போது அந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் உடும்பின் பொந்தினுள் நுழைந்தாலும் இவர்களும் அவர்களைப் பின்தொடர்ந்து அவ்வேளையைச் செய்வார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யாரொருவர் நேர்வழிக்கு அழைக்கிறாரோ அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவார், ஆனால் இது அவர்களுக்கான வெகுமதியைக் குறைக்காது. மேலும்,வழிகேட்டை நோக்கி அழைப்பவருக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்குச் சமமான பாவம் இருக்கும். ஆனால் இது அவர்களின் பாவத்தைக் குறைக்காது.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் சத்தியமும் நன்மையும் நிறைந்த ஒரு வழிக்கு மக்களை வழிப்படுத்துகிறோரோ அவருக்கு அந்த நல்லவிடயத்தை பின்பற்றி நடப்போருக்கு கிடைக்கும் நன்மை-கூலி- கிடைக்கும். இதனால் அந்த நல்ல விடயத்தைப் பின்பற்றி நடப்பவரின் நன்மையில் எதுவும் குறைக்கப்படமாட்டாது என நபியவர்கள் கூறினார்கள். யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் பாவமும் தவறும் அல்லாஹ் அனுமதிக்காத விடயங்கள் நிறைந்த அசத்திய வழியின் பால் அழைத்தால் அவரைப் பின்பற்றியவர்களுக்கு கிடைக்கும் பாவம் அவருக்கும் கிடைக்கும்.அதில் அவரைப்பின்பபற்றியவர்களின் பாவங்களில் ஏதும் குறைக்க்படமாட்டாது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அறிவிக்கிறார்கள்: (தீய சகுணம்) பறவை சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், தீய சகுணம் இணைவைப்பாகும், என மூன்று தடைவகள் கூறினார்கள். எங்களில் இது குறித்த எண்ணம் உடையவர் எவரும் இல்லாமல் இல்லை. எனறாலும்; இதனை அல்லாஹ் தவக்குளின் மூலம் அகற்றி விடுகிறான்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீய சகுணம் பார்ப்பதை எச்சரித்துள்ளார்கள். தீய சகுணம் என்பது பறவைகள், விலங்குகள், மாற்றுத் திறனாளிகள், எண்கள், நாட்கள், அல்லது வேறு எதையும் கேட்கக்கூடிய அல்லது காணக் கூடிய எதிலும் துற்சகுணம் கொள்ளுதல் - இங்கே பறவைச் சகுணம் பற்றி குறிப்பிட்டிருப்பது அஞ்ஞானக் காலமாகிய ஜாஹிலிய்யாக் காலத்தில் பிரபல்யமாயிருந்ததினாலாகும். இப்பெயர் கொண்டு அழைக்கப்பட இதற்கென ஒரு அடிப்படை உண்டு அக்காலத்தில் ஒரு வேலை நிமித்தம் ஒரு பிரயாணத்தை ஆரம்பிக்க அல்லது வியாபாரத்தில் வெளிக்கிளம்பிச் செல்வது போன்ற விடயங்களை துவங்கும் போது பறவையை பறக்க விடுவார்கள் அது வலது பக்கமாக பறந்து சென்றால் நற்சகுணமாக கருதி அவர் விரும்பிய காரியத்தில் ஈடுபடுவார். அப்பறவை இடப்பக்கமாக பறந்தால் அது துற்சகுணமகாக் கருத்திற்கு கொண்டு அவர் ஈடுபடப்போகும் காரியத்தை தவிர்த்துக்கொள்வார். இதுவே அக்கால நடைமுறையாகக் காணப்பட்டது. சகுணம் பார்த்தல் இணைவைப்பாகும் காரணம் நன்மையொன்றை ஏற்படுத்துவதும் தீங்கொன்றை தடுப்பதும் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையும் கிடையாது. சகுணம் போன்ற விடயங்கள் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் சில வேளை ஏற்படலாம், அதனை உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அல்லாஹ்வின் மீது தவக்குள் (முழுமையாக அல்லாஹ்வை சார்ந்திருத்தல்) வைப்பதன் மூலமே தடுத்திட முடியும் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகிறார்கள்.