





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸிஹ்ஹீர் رضى الله عنه அவர்கள் அறிவிக்கின்றார்கள்; பனூஆமிர் கூட்டாத்தாருடன் நபியவர்களிடம் நான் சென்றேன். அப்போது நாம் நபியவர்களைப் பார்த்து" நீங்கள் எங்கள் (மாபெரும்} தலைவர்"என்று கூறினோம், அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே மாபெரும் தலைவன் ஆவான். அப்போது நாம் நீங்கள் எங்களில் அந்தஸ்த்தால் உயர்ந்தவராகவும் அள்ளி வழங்கும் வள்ளலாகவும் இருக்கிறீர்கள் என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் அல்லது சிலதை கூறுங்கள் உங்களை ஷைத்தான் எல்லை மீறிப்புகழ்வதற்கு இட்டுச் செல்லாதிருக்கட்டும்.' எனக் குறிப்பிட்டார்கள்.
இமாம்களான அபூ தாவுத், அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு குழு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களை அணுகியதும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்பாத சில வார்த்தைகளால் அவர்களைப் புகழ்ந்து கூறினார்கள். அவர்கள் நபியவர்களைப் பார்த்து: 'நீங்கள் எங்கள் எஜமானர்.' என்று கூறினார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்: ''எஜமானன் அல்லாஹ்', எனக் கூறினார்கள். ஏனெனில் தனது படைப்பின் மீது முழு இறையாண்மை அவனுக்கே உள்ளது, ஆகையினால் அவர்கள் அவனுடைய அடிமைகளாவர். அவர்கள் மேலும் சொன்னார்கள்: நீங்கள் 'எங்களில் சிறந்தவர்' அதாவது பதவி, மரியாதை மற்றும் தகுதி ஆகியவற்றில் எங்களில் உயர்ந்தவர். அதாவது நீங்கள் எங்களில் ' தாராள மனப்பான்மை கொண்டவர் ' தாராளமாக கொடுப்பவர், உயர்ந்தவர் மற்றும் எங்களில் மிகவும் மதிப்புமிக்கவர். பின் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஷிர்க் (பல தெய்வ வழிபாடு) மற்றும் அதற்கு வழிவகுக்கும் காரணிகளான மிகைப்படுத்தல் மற்றும் எல்லை மீறல் போன்ற ஷைத்தானின் சூழ்சிகளுக்கு ஆட்படாமல் இருக்க, வலிந்து வார்த்தைகளைக் கூறாது சாதாரணமாக வார்த்தைகளைக் கூறி புகழுமாறு வழிகாட்டினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். "தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது.சிங்கத்திடமிருந்து நீ எப்படி விரண் டோடுவாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து விரண்டோடு."
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்எல்லா விவகாரங்களின் அதிகாரம் அல்லாஹ்வின் கையில் உள்ளது என்பதையும், அவனுடைய கட்டளை மற்றும் தீர்மானமத்தின் மூலமேயேன்றி எதுவும் நடக்காது என்பதை தெளிவுபடுத்தவும், ஜாஹிலிய்யாக் கால சில நடைமுறைகளை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். அவை பின்வருமாறு : முதலாவது : நோயானது தானாக பரவும் என ஜாஹிலிய்யாக்கால மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். இயல்பாக ஒரு நோயாளியிடமிருந்து இன்னொரு நோயாளிக்கு குறித்த நோயானது தொற்றும் என நம்புவதை தடை செய்தார்கள். ஏனெனில் அல்லாஹ்வே இந்த பிரபஞ்சத்தை நிர்வகிப்பவன். அவனே நோயை இறக்குகிறான்; அதனை நீக்கி நோய் நிவாரணத்தையும் வழங்குகிறான். நோய் தொற்றுதல் என்பது அவனின் நாட்டம் மற்றும் தீர்மானத்தின் படியே நிகழும். இரண்டாவது:ஜாஹிலிய்யாக் கால மக்கள் ஒரு பயணத்திற்கோ அல்லது வியாபாரத்திற்கோ செல்ல நாடினால் பறவையொன்றை பறக்க விடுவார்கள். அந்தப் பறவை வலது பக்கமாக சென்றால் அதனை நற்சகுணமாக கருதுவார்கள். ஆனால் அது இடதுபுறம் பறந்தால் அவர்கள் அதைத் தீய சகுனமாகக் கருதி திரும்பி விடுவார்கள். பறவைகளை கெட்ட சகுனமாகக் கருதும் இத்தகைய செயலை நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் தடை செய்து அது தவறான நம்பிக்கை என்று தெளிவு படுத்தினார்கள். மூன்றாவது : ஜாஹிலிய்யாக் கால மக்கள் ஆந்தை ஒரு வீட்டின் மீது விழுந்து விட்டால் அந்த வீட்டில் உள்ளோருக்கு சோதனை - பேரழிவு ஏற்பட்டு விடும் என கூறிக்கொண்டிருந்தார்கள். இவ்வாறு துற்சகுணம் கருதுவதை நபியர்வகள் தடை செய்தார்கள். நான்காவது: சந்திர நாட்காட்டியில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதத்தை கெட்ட சகுனமாக எடுத்துக் கொள்வதை தடை செய்தார்கள். 'ஸஃபர்' என்பது: கால்நடைகள் மற்றும் மக்களையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வயிற்றில் காணப்படும் ஒருவகை புழுவாகும். இது சிரங்கு நோயை விட கடுமையானதும் பிறரில் தொற்றக் கூடியதுமாகும் என்று ஜாஹிலிய்ய மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய நம்பிக்கையை பிழையானது என நபியவர்கள் அதனை நிராகரித்தார்கள். ஐந்தாவது: தற்பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், உயிரை பாதுகாக்கும் முகமாகவும், அல்லாஹ் கட்டளையிட்டுள்ள காரணகரியங்களை மேற்கொள்ளுதல் என்ற அடிப்படையிலும்; (முன்னெச்சரிக்கையாக) சிங்கத்திடம் இருந்து வெகுதூரம் விலகியிருப்பது போல் தொழுநோயாளியிடம் இருந்து விலகி இருக்குமாறு கட்டளையிட்டார்கள்;. தொழுநோய் என்பது : மனிதனின் உறுப்புகளைத் சிறிது சிறிதாக அரிக்கும் ஒரு வகை நோயாகும்;.
பராஉ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ளவும் மாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்.யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்".
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மதீனாவைச் சேர்ந்தவர்களான அன்ஸாரிகளை நேசம் கொள்வது ஈமானின் பூரணத்துவத்திற்கான அடையாளம் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆரம்பத்திலேயே இஸ்லாத்திற்கும் நபியவர்களுக்கும் செய்த உதவியினாலும் மதீனா முஸ்லிம்களுக்கு அடைக்களம் வழங்கி அவர்களின் உடமைகள் மற்றும் உயிர்களினாலும் செய்த தியாகத்தினாலும் இந்த சிறப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது. அத்துடன் அவர்களை வெறுப்பது நயவஞ்சத்தின் அடையாளம் எனவும் இந்த ஹதீஸில் நபியவர்கள் பிரஸ்தாபிக்கிறார்கள் . தொடர்ந்தும் நபியவர்கள் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் 'யார் அன்ஸாரிகளை நேசிக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் நேசிப்பதாகவும் யார் அவர்களை வெறுக்கிறாரோ அவரை அல்லாஹ் வேறுப்பதாகவும் தெளிவு படுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: “இயன்றவரை சரியான அமல்களையே செய்யுங்கள். உங்களில் யாரும் தனது அமல்களால் மாத்திரம் தப்பிக்கமுடியாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” அப்போது நபித்தோழர்கள், “நீங்களுமா? அல்லாஹ்வின் தூதரே” எனக் கேட்டபோது, “நானும் தான். அல்லாஹ் தனது அருளாலும், பேருபகாரத்தாலும் என்னை மறைத்துக் கொண்டாலே தவிர (என்னாலும் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது நபித்தோழர்களுக்கு, அமல் செய்யுமாறும், எல்லைமீறலோ, பொடுபோக்கோ இல்லாமல் இயன்றவரை அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறும், தமது அமல்களில் உளத்தூய்மையையும் நபி வழிகாட்டுதலையும் பேணி, சரியானதைத் தேடிச் செய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட அமலாகவும் அதனை ஆக்கிக் கொள்ளுமாறும் தூண்டுகின்றார்கள். அப்போதுதான், அவ்வணக்கம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் இறங்கக் காரணமாக அமையும். பின்பு, தமது அமல்களால் மாத்திரம் ஒருவர் தப்பிவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்வின் அருளும் அவசியம் என்பதையும் கூறுகின்றார்கள். அப்போது நபித் தோழர்கள், “உங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே! பிரமாண்டமான அளவுள்ள உங்களது அமலும் உங்களைக் காப்பாற்ற மாட்டாதா?” எனக் கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள், “நானும் தான்; அல்லாஹ் தனது அருளினால் என்னை மறைத்தாலே அன்றி (என்னால் தப்பமுடியாது)” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அவருக்கென்று சில சீடர்களும், தோழர்களும் இருந்திருப்பர். அவர்கள் அந்த நபியின் வழிமுறையைப் பற்றிப் பிடிப்பர். அவரது கட்டளையைப் பின்பற்றுவர். அவர்களுக்குப் பின்னர் சில வழித்தோன்றல்கள் வருவர். செய்யாதவற்றைக் கூறுவார்கள். ஏவப்படாதவற்றைக் செய்வார்கள். யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், தனக்கு முன்னர் இருந்த எந்த சமுதாயத்திற்கும் அல்லாஹ் அனுப்பிய எந்த நபியாக இருப்பினும், அச்சமுதாயத்தில் அவருக்கென்று, தூய்மையானவர்களும், உதவியாளர்களும், உளத்தூய்மையுடன் போராடுபவர்களும் இருப்பார்கள் என்றும், அந்த நபிக்குப் பின்னர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்பதற்குத் தகுதியானவர்களாகவும், நபியுடைய வழிமுறையை எடுத்து நடந்து, அவரது கட்டளைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள் என்றும், பின்பு அந்த நன்மக்களுக்குப் பின்னர் வரும் சிலர் எந்த நலவுமற்றவர்களாக இருப்பதோடு, அவர்கள் செய்யாததைக் கூறிக்கொண்டும், ஏவப்படாததைச் செய்துகொண்டும் இருப்பார்கள் என்றும் கூறிவிட்டு, யாரெல்லாம் அவர்களோடு கையால் போரிடுகின்றார்களோ, அவர்கள் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு நாவினால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். யாரொல்லாம் அவர்களோடு உள்ளத்தால் போரிடுகின்றார்களோ, அவர்களும் முஃமின்களாகும். அதற்கப்பால், ஈமானில் கடுகளவும் இல்லை என்றும் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து அம்சங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மாத பயணத்ததூரத்தின் அளவு (என்னைப் பற்றிய) பயத்தைக் கொண்டு நான் உதவப்பட்டுள்ளேன். பூமி தொழுமிடமாகவும், சுத்தம் செய்யக் கூடிதாகவும் எனக்கு ஆக்கித் தரப்பட்டுள்ளது. எனவே, எனது சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் எந்த இடத்தில் தொழுகை நேரத்தை அடைந்து கொண்டாலும், தொழுது விடட்டும். போர்ச் செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் யாருக்கும் அது ஹலாலாக இருக்கவில்லை. எனக்கு 'ஷபாஆ' எனும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. நபிமார்கள் தமது கூட்டத்திற்கு மாத்திரமே அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் எல்லா மனிதர்களுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தனக்கு முன்னர் வந்த எந்த நபிக்கும் கொடுக்கப் படாத, ஐந்து சிறப்புக்கள் தனக்கு வழங்கப் பட்டுள்ளதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். முதலாவது, பயத்தைக் கொண்டு நான் உதவி செய்யப்பட்டுள்ளேன். எனது எதிரிகள் ஒரு மாதகாலம் பயணம் செய்யும் தூரத்தில் இருந்தாலும், அவர்களது உள்ளத்தில் என்னைப் பற்றிய பயம் போடப்பட்டிருக்கும். இரண்டாவது, பூமி எமக்குத் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. நாம் எங்கிருந்தாலும் தொழலாம். நீரைப் பயன்படுத்த முடியாத போது, (பூமியில் உள்ள) மண், சுத்தத்தைத் பெற்றுத் தரும் ஒன்றாகவும் உள்ளது. மூன்றாவது, முஸ்லிம்கள், நிராகரிப்பாளர்களுடனான யுத்தத்தில் பெற்றுக் கொள்ளும் போர்ச்செல்வங்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. நான்காவது, மறுமையின் பயங்கர நிலையில் இருந்து மக்களுக்கு விடிவை வழங்குவதற்கான 'ஷபாஆ உழ்மா' எனப்படும் மாபெரும் பரிந்துரை எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது, மனித, ஜின்கள் என எல்லாப் படைப்புக்களுக்கும் நான் நபியாக அனுப்பட்டுள்ளேன். அவர்களுக்கு முன்னர் இருந்த நபிமார்கள் அவ்வாறல்ல. அவர்கள் தமது சமுதாயத்திற்கு மாத்திரமே நபியாக அனுப்பப்படுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக ஹாரிஸா பின் வஹ்ப் அல் குஸாஈ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: 'சுவனவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? பலவீனமான, பணிவாக நடக்கும் ஒவ்வொருவரும் (சுவனவாதிகள் தாம்). அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்து விட்டால், அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுவான். நரகவாதிகளை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? வன்மையான, பெருமைபிடித்த, கர்வம் கொண்ட ஒவ்வொருவரும் (நரகவாதிகள் தான்)'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் சுவானவாதிகளின் சில பண்புகளையும், நரகவாதிகளின் சில பண்புகளையும் கூறுகின்றார்கள். பெரும்பாலான சுவானவாதிகள், பணிவுத் தன்மையோடு, அல்லாஹ்வுக்கு அடிபணிந்து, தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்பவர்கள். சிலபோது, மனிதர்கள் கூட அவர்களை பலவீனமானவர்களாகக் கண்டு, அற்பமாகக் கருதுவார்கள். ஆனால், இவ்வாறு தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்கள் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து அவனைக்கொண்டு சத்தியம் செய்துவிட்டால், அல்லாஹ் அதை நிறைவேற்றி, அவர்கள் எதிர்பார்த்ததை அடைய வைப்பான். அவர்களது அழைப்புக்கு பதிலளிப்பான். பெரும்பாலான நரகவாதிகள், இரக்கமற்ற வன்மையான, மோசமாக விவாதிப்பவர்களாக அல்லது நன்மைக்கு அடிபணியாத கெட்டவர்களாக இருப்பார்கள். 'ஜவ்வாழ்' எனப்படுபவன், பெருமையடிக்கும், அதிகம் சாப்பிடும், பிரமாண்டமான உடலமைப்பைக் கொண்ட, தன் நடையில் அகம்பாவம் காட்டும், கெட்ட குணம் கொண்டவனாகும். அவன் சத்தியத்தை மறுத்தும், ஏனையோரை அற்பமாகக் கருதியும் பெருமையடித்துக் கொண்டிருப்பான்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கூறுகின்றான்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அவன் என்னை நினைவுபடுத்தும் போது நான் அவனோடு உள்ளேன். அவன் தனக்குள் என்னை நினைவு படுத்தினால், நான் எனக்குள் அவனை நினைவு படுத்துவேன். அவன் ஒரு கூட்டத்தில் என்னை நினைவுபடுத்தினால், அவர்களை விடச் சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நான் நினைவு படுத்துவேன். அவன் என்னை ஒரு சாண் நெருங்கி வந்தால், நான் அவனை ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னை ஒரு முழம் நெருங்கிவந்தால், நான் அவனை ஒரு பாகம் நெருங்கிவருவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால், நான் அவனிடம் விரைந்து வருவேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ் கூறுவதாக நபிகள் (ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள்: என் அடியான் என்னைப் பற்றி நினைக்கும் இடத்தில் நான் உள்ளேன். அதாவது அருளை, பாவமன்னிப்பை எதிர்பார்த்தல் போன்று, என்னுடைய அடியான் என்னைப் பற்றி நினைக்கும் விதத்திலேயே நான் அவனோடு நடந்து கொள்வேன். நன்மையாகவோ வேறு எதுவாகவோ இருந்தாலும், அவன் என்னிடமிருந்து எதிர்பார்ப்பதை நான் செய்வேன். அவன் என்னை நினைவுபடுத்தினால், நானும், அவனுக்கு அருள் புரிந்து, நேர்வழி காட்டி, பாதுகாத்து, பலப்படுத்தி அவனோடு இருப்பேன். அவன் தனிமையில் என்னைத் துதித்து, ஒருமைப்படுத்தி நினைவுகூர்ந்தால், நானும் எனக்குள் அவனை நினைவுபடுத்துவேன். ஒரு கூட்டத்தில் அவன் என்னை நினைவு படுத்தினால், அவர்களை விட அதிகமான, நல்ல ஒரு கூட்டத்தில் நான் அவனை நினைவு படுத்துவேன். யார் ஒரு சாண் அளவு அல்லாஹ்வை நெருங்குகின்றாரோ, அவன் அதனை அதிகப்படுத்தி, ஒரு முழம் அளவு அவனை நெருங்குவான். யார் ஒரு முழம் அளவு நெருங்குகின்றாரோ, அல்லாஹ் அவரை ஒரு பாகம் அளவு நெருங்குவான். அவன் அல்லாஹ்விடம் நடந்துவந்தால், அல்லாஹ் அவரிடம் விரைந்தோடி வருவான். எனவே, அடியான் வணக்கங்கள் மூலம் அவனை முன்னோக்கி, நெருங்கிவந்தால், அதே போன்று கூலி வழங்கும் அடிப்படையில் அல்லாஹ் அவனை மேலும் நெருங்கிவருவான். ஓர் அடியான் அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணியும் போதெல்லாம், அவன் அல்லாஹ்வை நெருங்கிவருகின்றான். எனவே அல்லாஹ்வுடைய கொடையும், கூலிகளும் அடியானின் செயலையும், முயற்சியையும் விட அதிகமானது. சுருக்கமாக, அல்லாஹ்வின் கூலி, அடியானின் அமலை விட எண்ணிக்கையிலும், வகையிலும் உயர்ந்தது. எனவே ஒரு முஃமின் நல்லெண்ணம் வைத்து, அமல் செய்து, அல்லாஹ்வை சந்திக்கும் வரை விரைந்து, அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
தல்ஹா பின் உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) ஒலித்த அவரது குரல் கேட்டதே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் விளங்க முடியவில்லை. அவர் (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களுக்கு) அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் என்றார்கள். அவர் இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை', நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், 'இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, 'இல்லை, நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர்,இதைத் தவிர வேறு (தர்மம்) ஏதேனும் என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தை தவிர என்றார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதற்குமேல் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நஜ்த் பிரதேசத்திலிருந்து ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்தார், அவரின் முடி சிதைந்து காணப்பட்டதோடு அவரின் தொணி மிகவும் உயர்ந்து காணப்பட்டது. அதனால் அவர் பேசியது ஒன்றும் புரியவில்லை. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் மிகவும் நெருக்கமாகச் சென்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் குறித்து வினவினார் அதற்கு நபியவர்கள்; முதலில் தொழுகையைப் பற்றிக் கூறினார்கள். ஒரு நாளைக்கு ஜவேளைக் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியதாகக் குறிப்பிட்டார்கள். அதற்கு அம்மனிதர் இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தவிர்த்து வேறு கடமையான தொழுகைகள் உண்டா? எனக் கேட்டார் அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் நப்லான தொழுகைகள் தவிர என்று பதில் கூறினார்கள். அதன் பின் நபியரவர்கள் உம்மீது அல்லாஹ் ரமழான் மாதத்தில் நோன்பை கடமாக்கியுள்ளான் என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ரமளான் நோன்பு தவிர்த்து வேறு கடமையான நோன்புகள் என்மீது உண்டா எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பி நோற்கும் உபரியான நோன்புகளைத் தவிர என்று பதில் கூறினார்கள். பின்னர் ஸகாத் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதற்கு அம்மனிதர் பர்ழான ஸகாத் தவிர்த்து வேறு கடமையான தர்மங்கள்; என்மீது உண்டா எனக் கேட்டார்? அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பி செய்யும் தர்மங்கள்; தவிர என்று பதில் கூறினார்கள். இந்த அடிப்படைக் கடமைகள் பற்றி கேட்டதன் பின் அம்மனிதர் இந்தக் கடமைகளை எவ்விதக் கூட்டலும் குறைவவுமின்றி நிறைவேற்றுவதாக சத்தியம் செய்தவராக திரும்பிச்சென்றார்