





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அபூபஷீர் அல் அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பயணம் ஒன்றில் அவர்களுடன் அபூபஷீர் அல் அன்ஸாரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி, 'எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப்படுகிற) நாண்போன்ற மாலையோ அல்லது வேறு ஏதாவது ஒரு மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்'' எனக் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சில பயணங்களின் போது மக்கள் எல்லோரும் தங்களின் கூடாரங்களிலும், தங்குமிடங்களிலும் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை கண்திருஷ்டிக்காகவும், ஆபத்துக்களிலிருந்து காப்பதற்காகவும் ஒட்டகங்களின் கழுத்துக்களில் கட்டப்பட்டுள்ள மணி, அல்லது காலணி போன்றவற்றை கத்தரித்து நீக்கிவிடுமாறு ஒரு நபரை அனுப்பி வைத்தார்கள். காரணம் இவ்வாறனவை அவர்களுக்கு ஏற்படவுள்ள எந்தத் தீங்யையும் தடுத்திட மாட்டாது. அத்துடன், நன்மையோ கெடுதியோ அல்லாஹ் ஒருவனின் கைவசம் மாத்திரமே உள்ளது, அவனுக்கு இணையேதும் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அகீம் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "பாதுகாப்பிற்காக யார் ஒரு பொருளைத் தொங்க விடுகிறாரோ அதன் பக்கமே அவர் சாட்டப்பட்டு விடுவார்".
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார் - இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்தனது உள்ளத்தால், அல்லது செயலினால், அல்லது இரண்டினாலும் பயனை எதிர்பார்த்தோ, தீங்கைத் தடுக்கவோ ஒரு பொருளை நோக்கிச் சென்றால் அல்லாஹ் தனது பாதுகாப்பைக் கைவிட்டுவிட்டு, அப்பொருளிடமே அவனை சாட்டி விடுகின்றான். அல்லாஹ்வை யார் சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவன் போதுமானவன், அனைத்து சிரமங்களையும் இலகுபடுத்திக் கொடுத்து விடுவான். அவனல்லாத ஒன்றைச் சார்ந்திருந்தால் அதன் பக்கமே அவனை சாட்டி விட்டு, உதவ மறுத்து விடுவான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக தாரிக் இப்னு அஷ்யம் அல்அஷ்ஜஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள் : 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லாஇலாஹ இல்லல்லாஹ்) என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (இரகசியமான விடயம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்யார் தனது நாவினால் 'லாஇலாஹ இல்லல்லாஹ்' அதாவது உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மொழிந்து, அல்லாஹ்வைத் தவிர மற்றவை அனைத்தும் வணங்கத் தகுதியற்றவை என நிராகரித்து, ஏனைய மதங்களைத் தவிர்த்து இஸ்லாத்தை மாத்திரம் மார்க்கமாக ஏற்றுக்கொள்பவரின் உயிரும் உடமையும் முஸ்லிம்களுக்கு புனிதமாகும். அவனின் புறச்செயற்பாடுகளை மாத்திரமே கருத்திற் கொள்ள வேண்டும். எனவே அவனின் சொத்துக்களை பரிமுதல் செய்யவோ –அபகரிக்கவோ, அவனின் இரத்தத்தை ஓட்டவோ- கொலைசெய்யவோ முடியாது. ஆனால் இஸ்லாமிய சட்ட ஒழுங்குக்குட்பட்ட ஏதாவது ஒரு குற்றத்தை அல்லது பாவகாரியத்தை செய்துவிட்டால் அதற்கான தண்டனை நிறைவேற்றப்படும். மறுமை நாளில் அல்லாஹ் அவனை விசாரிப்பதை பொறுப்பேற்பான், அவன் உண்மையாளனாக இருந்தால் அதற்கு வெகுமதி வழங்குவதோடு, அவன் நயவஞ்சகனான இருந்தால் அவனிற்கு வேதனையளிப்பான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'இரக்கமுள்ளவர்களுக்கு அர்ரஹ்மானாகிய அல்லாஹ் இரக்கம் காட்டுவான், பூமியிலுள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவான்'.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறருக்கு இரக்கம் காட்டுவோருக்கு அருளாளனாகிய அல்லாஹ் ஏகமெல்லாம் வியாபித்திருக்கும் அவனின் கருணையின் மூலம் நிறைவான கூலியை வழங்குகிறான் எனத் தெளிவுபடுத்துகிறார்கள். பின்னர் அவர்கள் இவ்வுலகிலுள்ள மனிதன் அல்லது மிருகம் அல்லது பறவை இவையல்லாத உயிரினங்கள் அனைத்திற்கும் கருணை காட்டுமாறு கட்டளைப்பிரப்பிக்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கான கூலி, கருணை காட்டுவோருக்கு அல்லாஹ் ஏழுவானங்களுக்கு மேலிருந்து அருள்,கருணை புரிவதே என குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் நரகவாதிகளுள் ஆகக் குறைந்த வேதனையை அனுபவிக்கும் ஒருவனிடம் : பூமியில் உனக்கு சொந்தமாக ஏதாவது இருந்தால் அதனை பிணையாக- இழப்பீடாக- வழங்கி இந்த வேதனையிலிருந்து விடுதலைபெற முயற்சிப்பீரா? என்று கேட்பான். அதற்கு அவன் 'ஆம்'; என்று கூறுவான். அப்போது அல்லாஹ் அவனிடம் நீ ஆதத்தின் முதுகுத்தண்டில் இருக்கும் போது, இதனை விடவும் சிறிய ஒரு விடயமான நீ எனக்கு இணைவைக்கக் கூடாது என்பதையே எதிர்பார்த்தேன். ஆனால் அதனை நீ ஏற்றுக் கொள்ளாது எனக்கு நீ இணைவைத்தாய் என்று கூறுவான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நரகவாதிகளுள் மிகக் குறைந்த தண்டனையைப் பெறும் ஒரு அடியானிடத்தில் அவன் நரகில் நுழைந்த பின் ' உமக்கு உலகமும் அதிலுள்ளவைகளும் சொந்தமாயிருப்பின் இந்த வேதனைக்கான இழப்பீடாக அவற்றை செலுத்துவாயா? என்று மறுமையில் அல்லாஹ் வினவுவதாக குறிப்பிடுகிறார்கள். அதற்கு அந்த அடியான் 'ஆம்'என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் அவனிடம் 'நீ ஆதமின் முதுகுத் தண்டில் இருக்கும் போது, உம்மிடம் உடன்படிக்கை எடுக்கும் வேளை இதனை விடவும் மிகவும் இலகுவான ஒருவிடயமான ''எனக்கு எதனையும் இணைவைக்கலாகாது ' என்று வேண்டிக் கொண்டேன். ஆனால்; நான் உன்னை பூமிக்கு அனுப்பியபோது, நீ மறுத்து ஷிர்க்கைத் தேர்ந்தெடுத்தாய் என்று கூறுவான்.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: சில நபர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சோதிடர்கள் குறித்து வினவினர். அதற்கு 'அவர்கள் குறித்து கருத்திற் கொள்ளத் தேவையில்லை' என அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)' என்று வினவினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒத்துக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மறைவான விடயங்களைப் பற்றி அறிவிக்கும் சோதிடர்களைப் பற்றி சிலர் நபியவர்களிடம் வினவ, அதற்கு அவர்கள், அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம், அவர்களது பேச்சுக்களை எடுக்கவும் வேண்டாம், அவர்களை கணக்கில் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்கள். அப்போது சிலர் அவர்கள் கூறுவது யதார்த்தத்திற்கு உடன்படுகின்றதே, இன்ன மாதத்தில், இன்ன தினத்தில் நடைபெறும் என மறைவான ஒன்றை அவர்கள் அறிவித்தால் அவர்களது கூற்றுப் பிரகாரமே நடக்கின்றதே எனக் கேட்டனர். வானத்தில் பேசப்படும் செய்திகளை ஒத்துக்கேட்டு, தமது சோதிட நேசர்களிடம் இறங்கி தாம் கேட்டவற்றைக் கூறி விடுகின்றனர், பின் அந்த சோதிடன் தான் கேட்டவற்றில் மேலும் நூறு பொய்களைக் கலந்து விடுகின்றான் என நபியவர்கள் விளக்கமளித்தார்கள்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரே வாகனத்தின் மீது முஆத் (ரழியல்லாஹு அன்ஹு )அவர்கள் நபி ஸல்லல்லாஹு அiலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்கும் நிலையில், நபியவர்கள் 'முஆதே! என்று அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என்று முஆத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார். முஆதே!' என்று என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம் அவர்கள் அழைத்தார்கள். 'இதோ உள்ளேன் இறைத்தூதர் அவர்களே! (கட்டுப்படுவதைப்) பெரும் பேறாகவும் கருதுகிறேன்' என மீண்டும் முஆத் (ரழியல்லாஹு அன்ஹு கூறினார். இவ்வாறு மூன்று முறை கூறி அழைத்தார்கள். பிறகு 'தன் உள்ளத்தினால் உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய உண்மையான இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்லவதை தடுக்கிறான்' என்று நபி ஸல்லல்லாஹு அiலைஹிவஸல்லம அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இச்செய்தியை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? அவர்கள் மகிழ்ந்து போவார்களே!' என்று முஆத் கேட்டதற்கு 'அவ்வாறு நீர் அறிவிக்கும் அச்சமயத்தில் (இது மட்டும் போதுமே என்று) அவர்கள் அசட்டையாக இருந்துவிடுவார்கள்' என நபியவர்கள் கூறினார்கள். இருப்பினும் மார்க்க அறிவை மறைத்த குற்றத்திற்கு ஆளாகாமலிருப் பதற்காக முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது இறுதிக் காலத்தில் இதனை அறிவித்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாகனத்தின் மீது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின் அமர்ந்திருந்தார்கள் அப்போது நபியவர்கள் தான் கூறுப் போகும் விடயத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்த 'முஆதே!' என மூன்று தடவை அழைத்தார்கள். ஓவ்வொரு தடவையும் நபியவர்கள் அழைக்கும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதரே! அப்படியே ஆகட்டும், அல்லாஹ்வின் தூதரே உங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு கட்டுப்பட்டவனாக உள்ளேன். உங்களுக்கு கட்டுப்படுவதினால் நான் மகிழ்ச்சியை தேடுகிறேன் என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஒருவர் உண்மையாக வணங்கப்படத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லையென்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் பொய்யாக அல்லாமல் உள்ளத்தாள் உண்மைப் படுத்தியவராக சாட்சி கூறி அதே நிலமையில் மரணிக்கிறாரோ அவர் மீது நரகத்தை ஹராமாக்கி விடுகிறான் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறவே முஆத் ரழியல்லாஹு அன்ஹு; இந்த செய்தியை மக்களி டம் அவர்கள் மகிழ்ச்சியடையவும், நல்ல சுபச் செய்தியாக அமைந்துவிடவும் இதனை நான் அறிவிக்கட்டுமா எனக் கேட்டார்கள். நபியவர்கள் மக்கள் இதிலேயே நம்பிக்கொண்டு அலட்சியமாக இருந்து அவர்களின் அமல்களெல்லாம் குறைந்து விடும் என அஞ்சினார்கள். எனவே முஆத் அவர்களும் அறிவை மறைத்த குற்றத்திற்கு உட்பட்டு விடுவதைப் பயந்து தனது மரணத்திற்கு முன்தான் இந்த ஹதீஸை அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்: 'இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது எம்முடைய இரட்சகன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி , 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹுதஆலா இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது கீழ்வானிற்கு (அவனது கண்ணியத்திற்கு ஏற்றவாறு) இறங்கி, தனது அடியார்களை தன்னிடம் பிரார்த்திக்குமாறும் அதற்கு அவன் பதிலளிப்பதாகவும் ஆர்வமூட்டுகிறான். மேலும் அவர்கள் விரும்பியதை தன்னிடம் கேட்குமாறும் அவ்வாறு தன்னிடம் கேட்போருக்கு வழங்குவதாகவும் அவன் தூண்டுகிறான். மேலும்; தங்களது பாவங்களுக்கு தன்னிடம் பாவமன்னிப்புக்கோருமாறும் அவ்வாறு மன்னிப்புக்கோரும் முஃமினான அடியார்களை மன்னிப்பதாகவும் அவன் அழைப்பு விடுப்பதாகவும் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்து கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மர்ஸத் அல்கனவீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : '' நீங்கள் கப்ருகளின் -மண்ணறைகளின்- மீது உட்காரவும் வேண்டாம் அதனை முன்னோக்கித் தொழவும் வேண்டாம்''.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கப்ரின் மீது உட்காருவதை- அமர்வதை-தடுத்தார்கள். அதே போன்று கப்ரை முன்னோக்கி –அதாவது தொழுபவரின் கிப்லாத் திசையில் கப்ரு இருக்கும் நிலையில்- தொழவேண்டாம் என்றும் தடுத்தார்கள். காரணம் இந்த விடயம் இணைவைப்பிற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்திட வாய்பிருப்பதால் இவ்வாறு செய்வதை தடுத்தார்கள்.