





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்றும் 'முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'ஈஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்' என்றும், 'அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ('ஆகுக!' என்னும்) ஒரு வார்ததை(யால் பிறந்தவர்)' என்றும், 'அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்' என்றும், சொர்க்கம் (இருப்பது) உண்மை தான்' என்றும், நரகம் இருப்பது உண்மைதான் எனவும் (சொல்லால் உரைத்து, உள்ளத்தால் நம்பி) உறுதிமொழி கூறுகிறவரை அல்லாஹ் அவரின் செயல்களுக்கேற்ப சொர்க்கத்தில் நுழைவிப்பான்.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் ஏகத்துவ வார்த்தையை மொழிந்து அதன் கருத்துக்களை அறிந்து அதன் அடிப்படையில் அமல் செய்து, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடிமையென்றும், அவரின் தூதுத்துவத்தை சான்று பகர்ந்து, ஈஸா (அலை) அவர்களையும் அவரின் தூதுத்துவத்தையும் ஏற்று, மேலும் அல்லாஹ் அவரை 'குன்'ஆகுக என்ற வார்த்தையின் மூலம் படைத்தான் என்றும் அவர் அல்லாஹ் படைத்த உயிர்களில் ஒன்று என ஏற்று, யூதர்கள் அவர்களின் தயார் குறித்து கூறிய தரங்கெட்ட வார்த்தையை விட்டும் அவர்களின் தாயார் தூய்மையானவர் என தூய்மைப்படுத்தி, சுவர்க்கம் மற்றும் நரகம் உண்மையானவை என விசுவாசித்து, அவைகளின் உள்ளமையை ஏற்றுக் கொண்டு அவை இரண்டும் அல்லாஹ்வின் வெகுமதியும் அவனின் தண்டனையும் என முழுமையாக நம்பி, அந்த நம்பிக்கையின் மீதே மரணித்துவிட்டால் அவர் செல்லுமிடம் சுவர்க்கமாகும். அவர் வணக்க வழிபாடுகளில் குறைவு செய்து, பாவங்கள் செய்திருந்தாலும் சரியே!
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'யார் அல்லாஹ்வை இணைவைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். யார் அவனை இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ அவர் நரகில் நுழைவார்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்' அல்லாஹ்விற்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிப்பவர், அவரின் சில குற்றங்களுக்கு-பாவங்களுக்கு- தண்டனை வழங்கப்பட்டாலும் அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு வார்த்தையை கூற அதற்கு நான் வேறு ஒன்றை கூறினேன். நபியவர்கள் 'அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நரகில் நுழைவார்'. அப்போது நான் அல்லாஹ்வுக்கு நிகராக வேறொருவரை அழைக்காத நிலையில் மரணித்தவர் சுவர்க்கம் நுழைவார் என்று கூறினேன்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வுக்கென உரித்தான விடயங்களில் ஒன்றை பிற ஒன்றின் பால் யார் திருப்பி விடுகிறாறோ அதாவது அல்லாஹ் அல்லாதவரிடத்தில் பிரார்த்தித்தல், அல்லது உதவி கோரி வேண்டுதல் போன்ற விடயங்களை செய்த நிலையில் ஒருவர் மரணிப்பாராயின் அவர் நரக வாதிகளில் ஒருவராக கருதப்படுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். யார் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவரின் இறுதி முடிவு சுவர்க்கமாகும் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தகவலுடன் மேலதிகமாக குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் கூறினார்கள் : 'மார்க்கத்தை எல்லை மீறி பின்பற்றுவோருக்கு (தீவிரமானோர்)அழிவு உண்டாகட்டுமாக' இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்எவ்வித சரியான வழிகாட்டலோ அறிவோ இன்றி மார்க்கத்திலும் உலக விவகாரங்களிலும், வார்த்தை மற்றும் செயல்களிலும் தீவிரமாகவும் கடுமையாகவும் நடந்துகொள்வோரின் கைசேதம் மற்றும் அழிவு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆ வரம்புகளை மீறி நடந்தோர்களாவர்.
"மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்." எனும் வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் : இவை நபி நூஹ் (அலை) அவர்களது சமூகத்தில் வாழ்ந்த நல்லடியார்களது பெயர்களாகும், அவர்கள் மரணித்ததும் அவர்கள் உட்கார்ந்த இடங்களில் சிலைகளை நட்டி, அவர்களுடைய பெயர்களையே வைக்கும் படி ஷைத்தான் அச்சமூகத்திற்கு அறிவித்தான், அவர்களும் அவ்வாறே செய்தார்கள், எனினும் அச்சிலைகள் வணங்கப் படவில்லை, அச்சமூகம் மரணித்து, அறிவும் மறக்கடிக்கப்பட்டதும் அச்சிலைகள் வணங்கப்பட்டது என்றார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களின் சமூகம் தொடர்ந்து வணங்க வேண்டும் என தமக்கிடையே உபதேசித்துக் கொண்ட அந்த கடவுள்களெல்லாம் அடிப்படையில் அக்காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நல்லடியார்களின் பெயர்களாகும். ஷைத்தானின் வசப்படுத்தல் காரணமாக அவர்கள் இவ் நல்லடியார்கள் விடயத்தில் அளவு கடந்து சென்று அவர்களுடைய உருவங்களை நட்டு, இறுதியில் அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படும் சிலைகளாக இவை மாறிவிட்டதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கஷ்டத்தில் உள்ள ஒருவனுக்கு தவணை கொடுப்பவனுக்கு அல்லது அவனுக்கு விட்டுக் கொடுப்பவனுக்கு, அல்லாஹ்வின் அர்ஷின் நிழலன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளிலே, தன் அர்ஷின் நிழலின் கீழ் அல்லாஹ் நிழல் அளிப்பான்".
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கடனாளிக்கு கால அவகாசம் அளிப்பவர் அல்லது கடனைத் தள்ளுபடி செய்பவர் குறித்தும் இவ்வாறு நடந்து கொள்பவருக்குக் கிடைக்கும் சன்மானம் பற்றியும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த சன்மானம் என்னவெனில் மறுமை நாளில் அடியார்களின் தலைகளுக்கு அருகில் சூரியன் நெருக்கமாகக் கொண்டுவரப்பட்டு, கடும் வெப்பத்தில் இருக்கும் அந்த தருனத்தில் இவ்வாறு சக மனிதர்களுடன் நடந்து கொண்ட அந்த அடியானுக்கு அல்லாஹ் தனது அர்ஷின் நிழலை அளித்து கடும் வெப்பத்திலிந்து பாதுகாக்கிறான் அந்நாளில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலை எவரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான். (அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துவான்).
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏதேனும் நலனைத் தர நாடினால் அவர்களின் பாவ காரியங்களின் குற்றப் பரிகாரத்துக்கும், அவர்களின் அந்தஸ்த்தின் உயர்வுக்கும் காரணமாக அமைவதற்கு அவர்களின் உயிர், செல்வம், பிள்ளைகள் விடயத்தில் அவர்களைச் சோதிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவுக்குச் செய்யுங்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஷரீஆ சட்ட நிலைகளின்; -தீர்ப்புகளின்- மூன்று பிரிவுகள் குறித்து குறிப்பிடுகிறார்கள். அவை : ஏதும் கூறாது மௌனம் காத்தவை, தடைகள், கட்டளைகள் என்பவையாகும். முதலாவது : இஸ்லாமிய ஷரீஆ ஏதும் தீர்ப்புகள் சொல்லாது விட்டுவிட்டவை. அதாவது எல்லா விவகாரங்களிலும்; அடிப்படை கட்டாயம் செய்ய வேண்டும் என்பது அல்ல என்ற விதியின் அடிப்படையில் அமைந்தவை. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தை பொறுத்தவைரை ஒரு விவகாரம் கடமையாகிவிடும் அல்லது தடுக்கப் பட்டுவிடும் என்ற இறைத் தீர்ப்பு இறங்கும் என்ற பயத்தினால் நிகழாத ஒருவிடயம் குறித்து கேள்வி கேட்காது இருப்பது அவசியம் என்ற நிலை காணப்பட்டது. இவ்வாறனவை அல்லாஹ் அடியார்கள் மீது செய்த அவனின் கருணையால் விட்டுவிட்டவையாகும். ஆனால் நபியவர்களின் மரணத்தின் பின் மார்க்கத்தீர்ப்பை கோரியோ அல்லது மார்க்க விவாகாரங்களில் தேவையானவற்றை கற்பிக்கும், கற்கும் நோக்கிலோ கேள்விகளைக் கோட்பது அனுமதிக்கப்பட்டதும் வலிறுத்தப்பட்ட விடயமுமாகும். இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'கேள்விகேட்பதை தவிர்த்துக்கொள்ளுதல்'; என்பதன் அர்த்தம் வலிந்து தேவையில்லாத ஒன்றை கேள்விப்கேட்பதைக் குறிக்கும். இவ்வாறு தேவையற்ற விடயங்களை பற்றி கேள்வி கேட்பது பனூ இஸ்ராஈல்களுக்கு நடந்ததைப் போன்ற ஒரு விவகாரத்திற்கு இட்டுச்சென்றுவிடும். அவர்களுக்கு அல்லாஹ் பசுமாட்டொன்றை அறுக்குமாறு கட்டளையிட்டான். அவ்வாறு அவனின் கட்டளைக்கு அடிபணிந்து நிறைவேற்றியிருந்தால் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவர்களாக மாறியிருப்பார்கள். ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தை சிரமப்படுத்திக் கொள்ளவே அல்லாஹ் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினான். இரண்டாவது : தடைகள். இவற்றை செய்யாது விட்டுவிட்டால் கூலியும், செய்தால் தண்டனையும் கிடைக்கும். ஆகவே தடைகளை முழுமையாக தவிர்ந்து கொள்வது கடமையாகும். மூன்றாவது: கட்டளைகள் . இதனை செய்பவருக்கு கூலியும் செய்யாது விட்டுவிட்டவருக்கு தண்டனையும் கிடைக்கும். ஆகவே இயலுமான அளவு செய்வது கடமையாகும்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூஅன்ஹூமா கூறுகிறார்கள் : அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அறிவிக்கிறார்கள் : "அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனதில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தா விட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு தீமையையே அல்லாஹ் எழுதுகிறான்".
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் நிர்ணயித்து அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை இரு மலக்குகளுக்கும் தெளிவுபடுத்திய விடயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் விவரிக்கிறார்கள் : ஆகவே யார் நன்மை செய்ய விரும்பி அதனை செய்வதென உறுதிகொண்டு செய்யாவிட்டாலும் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அவ்வாறு அதனை செய்துவிட்டால் அவருக்கு பத்திலிருந்து எழுநூறு மடங்காகவும் அதைவிட பல மடங்கு அதிகமாகவும் நன்மைகளை எழுதிவிடுகின்றான். இவ்வாறு நன்மைகள் பல மடங்காக அதிகரிப்பதென்பது அவரின் மனத்தூய்மை மற்றும் பிறருக்கு நன்மை விளைதல் என்ற அடிப்படையிலாகும். யார் தீமையொன்றை செய்ய நாடி அதனை செய்வதற்கு உறுதிகொண்டும் பின்னர் அல்லாஹ்வுக்காக அதனை விட்டு விட்டால் அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அதனை அவர் வேறு விடயங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டதனால் அந்தத் தீமையை செய்வதற்கான எந்த காரியங்களையும் செய்யாதிருந்தால் அதற்காக அவருக்கு எதுவும் எழுப்படமாட்டாது. அவர் இயலாமையின் காரணமாக அதனை செய்யவதை விட்டுவிட்டால் அவரின் எண்ணத்திற்கான கூலி எழுதப்படுகிறது. அவ்வாறு நினைத்த அந்தத் தீமையை செய்துவிட்டால் அவருக்கு ஒரு தீமை எழுதப்படும்.