





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூபர்ஸதுல் அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ((மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.))
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்மறுமை நாளில் சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ எவரும் சில விடயங்கள் குறித்து விசாரிக்கப்படும் வரை விசாரணை மன்றத்தை தாண்டி செல்ல முடியாது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். முதலாவது : மனிதனின் வாழ்வு குறித்தாகும.; தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தான்? என்பது பற்றியதாகும் இரண்டாவது : தனது அறிவு பற்றியதாகும் அதனை அல்லாஹ்வுக்காக கற்றானா? அதன் படி செயல்பட்டானா? அக்கல்வியை தகுதியானவர்களுக்கு எத்திவைத்தானா? போன்ற கேள்விகள் அவனிடம் கேட்கப்படும். மூன்றாவது: தனது செல்வம் குறித்தாகும். அதாவது செல்வத்தை எவ்வழியில் சம்பாதித்தான் ஹலாலான முறையிலா அல்லது ஹராமான முறையிலா ? அவ்வாறு சம்பாதித்த செல்வத்தை அல்லாஹ் விரும்புகின்ற விடயத்திலா அல்லது அல்லாஹ் விரும்பாத விடயத்திலா செலவு செய்தான் போன்ற கேள்விகள் அவனது செல்வம் குறித்து கேட்கப்படும். நான்காவது : உடல் பற்றியதாகும் அதாவது அவனின் பலத்தையும், ஆரோக்கியத்தையும் அதன் வாலிபப்பருவத்தையும் எவ்வாறான விடயங்களில் ஈடுபடுத்தினான்? என்பது பற்றி கேள்வியாகும்
நபி (ஸல்) அவர்கள் கைபர் யுத்த தினம் இவ்வாறு கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கின்றார்கள் : 'நான் இந்தக் கொடியை, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்போகின்றேன், அவரின் கரத்தில் அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான்' என்று கூறினார்கள். உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அன்றைய தினத்தைத் தவிர, தலைமைத்துவத்திற்கு வேறு எப்போதும் நான் ஆசைப்பட்டது கிடையாது. அதற்காக நான் அழைக்கப்படவேண்டுமென, என்னை உயர்த்திக் காட்டிக்கொண்டேன். நபியவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து, அக்கொடியை அவர்களிடம் கொடுத்து விட்டு, 'அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தரும் வரையில் நீங்கள் திரும்பிப் பாராது செல்லுங்கள்.' என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சற்று தூரம் சென்றுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் நின்றுகொண்டு, 'அல்லாஹ்வின் தூதரே, எதுவரை நான் மக்களுடன் போரிடவேண்டும்?' என்று சப்தமாகக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரிய கடவுள்கள் இல்லையென்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் சாட்சியமளிக்கும் வரை யுத்தம் செய்யுங்கள். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டால், தமது உயிர்களையும், சொத்துக்களையும், அவற்றில் உள்ள கடமைகளைத் தவிர, ஏனையவற்றில் உங்களை விட்டும் பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களது விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நாளைய தினம், மதீனாவை அண்மித்த ஓர் ஊராகிய, கைபரில் உள்ள யூதர்களை முஸ்லிம்கள் வெற்றிகொள்வார்கள் என்ற செய்தியை நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். அதாவது, படையின் அடையாளமாகக் கொள்ளப்படும் அந்தக் கொடியை நபியவர்கள் யாருக்குக் கொடுப்பார்களோ, அவராலேயே வெற்றி கிடைக்கும். அந்த மனிதரின் ஒரு அடையாளம் என்னவென்றால், அவர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதோடு, அல்லாஹ்வும், அவனது தூதரும் அவரை நேசிப்பார்கள். உமர் (ரலி) அவர்கள், அந்நாளில் தான், தாம் தலைமைத்துவத்தை ஆசைப்பட்டதாகவும், அங்கு குறிப்பிடப்படுபவர் தாமாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டதாகவும் கூறுகின்றார்கள். அல்லாஹ்வும், அவனது தூதரும் அம்மனிதரை நேசிப்பதாக நபியவர்கள் கூறிய அந்த சிறப்பை அடைவதே அவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. எனவே, நபியவர்கள் தம்மைக் கண்டு அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், அந்தக் கொடியைப் பெற்றுக்கொள்ளும் ஆசையிலும் உமர் (ரலி) அவர்கள் தமது உடம்பை சற்று உயர்த்தி வைத்துக் கொண்டார்கள். நபியவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து அவர்களிடம் கொடியைக் கொடுத்துவிட்டு, படையை அழைத்தக்கொண்டு செல்லுமாறும், தமது எதிரிகளை சந்தித்த பின்னர், ஓய்வெடுத்தலோ, இடைநிறுத்தலோ, அமைதி ஒப்பந்தமோ இன்றி, அல்லாஹ்வின் வெற்றியைப் பெற்று அந்தக் கோட்டைகளை வெற்றிகொள்ளும் வரை திரும்பிவரக் கூடாது என்றும் ஏவி அனுப்புகின்றார்கள். அலீ (ரலி) அவர்கள் சற்றுத் தூரம் சென்றுவிட்டு நிற்கின்றார்கள். ஆனாலும், நபியவர்களது கட்டளைக்கு மாறுசெய்யக்கூடாது என்பதனால், திரும்பிப் பார்க்கவில்லை. பின்பு அவர்கள் தமது சப்தத்தை உயர்த்தி, 'அல்லாஹ்வின் தூதரே, எதுவரை நான் மக்களுடன் போரிடவேண்டும்?' என்று கேட்டார்கள். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'அவர்கள், அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்திற்குரிய கடவுள்கள் இல்லையென்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என்றும் சாட்சியமளிக்கும் வரை யுத்தம் செய்யுங்கள். அவர்கள் அதற்கு பதிலளித்து, இஸ்லாத்தில் நுழைந்துவிட்டால், அவர்கள் தமது உயிர்களையும், சொத்துக்களையும் உம்மிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். உமக்கு அவை ஹராமாகிவிடும். ஆனால், அவற்றில் உள்ள கடமைகளைத் தவிர. அதாவது, இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், கொலையைக் கட்டாயமாக்கும் ஏதாவது, குற்றங்களை அவர்கள் செய்தாலே தவிர. அவர்களது விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள், சில ஜாஹிலிய்யாக் கால செயற்களை எச்சரித்துத் தடுக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள் : முதலாவது : கன்னத்தில் அறைந்துகொள்பவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. கன்னத்தைக் குறித்துச் சொல்வதற்கான காரணம், பெரும்பாலும் அவ்வாறு நடப்பதால் தான். எனவே, முகத்தின் ஏனைய பகுதிகளும் இந்தத் தடையினுள் நுழையும். இரண்டாவது : ஆடையின் திறக்கப்படும் பகுதியைக் கிழித்து, பொறுமையின்மையின் உச்சகட்டமாகத் தமது தலையை அதில் நுழைத்துக் கொள்பவர்கள். மூன்றாவது : ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களாகிய, கேடு உண்டாகட்டும், அழிவு உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தல், ஒப்பாரி வைத்தல், புலம்புதல் போன்றவற்றைச் செய்தல்.
அல்லாஹ்வின் தூதர் கூறுவதை தான் கேட்டதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்; : 'ஆதமின் மகனே, நீ என்னிடம் பிரார்த்தித்து, என்மீது எதிர்பார்ப்பு வைத்திருக்கும் காலமெல்லாம் நீ செய்தவற்றை பொருட்படுத்தாது அதுவரை நீ எந்த நிலையில் இருப்பினும் நான் உன்னை மன்னித்துக் கொண்டிருப்பேன். ஆதமின் மகனே, உன்னுடைய பாவங்கள் வானத்தை எட்டும் அளவிற்கு உயர்ந்து விட்டாலும் பின், நீ என்னிடம் மீண்டு மன்னிப்புக் கோருவாயானால், நீ செய்தவற்றை பொருட்படுத்தாது நான் உன்னை மன்னிக்கவே செய்வேன். ஆதமின் மகனே, நீ பூமியை நிறைத்திடும் அளவிற்கு பாவங்கள் செய்து விட்ட பிறகும் கூட, எனக்கு இணை வைக்காத நிலையில் என்னை சந்தித்தால் அதே அளவுக்கு பாவமன்னிப்பை உனக்கு வழங்குவேன் .
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ்குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்; ஆதமின் மகனே : நம்பிக்கை இழக்காது நீ என்னிடம் பிரார்த்தித்து எனது கருணையை எதிர்பார்த்திருக்கும் காலமெல்லாம் உனது பாவத்தை எவ்விதப்பொருட்படுத்தலுமின்றி மன்னிப்பேன் அந்தப் பாவம் அல்லது குற்றம் பெரும்பாவங்களில் ஒனறாக இருப்பினும் சரியே. ஆதமின் மகனே! உனது பாவம் வானம் பூமி நிறையும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டு அதற்காக என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அதன் அதிகத்தை பொருட்படுத்தாது உமது எல்லா பாவத்தையும் மன்னிப்பேன். ஆதமின் மகனே! நீ எதையும் இணைவைக்காத நிலையில் ஏகத்துவவாதியாக வாழ்ந்து, மரணித்த பின் இந்தப் பூமி நிறைய பாவங்களுடன் தவறுகளுடனும் வந்தாலும் உமது பாவங்களுக்கும் தவறுகளுக்கும் நிகராக இப்பூமி நிறைய மன்னிப்பை வழங்குவேன். ஏனெனில் நான் மன்னிப்பு வழங்குவதில் தயாளன். நான் இணைவைப்பைத் தவிர அனைத்து பாவங்களையும் மன்னிக்கிறேன்.
"ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன்.நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை" என்று நிச்சயமாக.மறுமை நாளில் அல்லாஹ் சொல்வான் அதற்கு அவன் "என் இறைவனே!நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது நான் எவ்வாறு உன்னிடம் நோய் விசாரிக்க வருவேன்?"என்று கூறுவான். அதற்கு அவன் "என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருக்கவில்லையா?அப்போது நீ அவனை நோய் விசாரிக்கச்செல்லவில்லை! நீ அறியவில்லையா நீ அவனை நோய் விசாரிக்க சென்றிருந்தால் நீ அவனிடம் என்னைப் பெற்றுக்கொண்டிருப்பாய்"என்று.கூறுவான்.மேலும் "ஆதமின் மகனே!நான் உன்னிடம் உணவு கேட்டேன்.நீ எனக்கு உணவளிக்கவில்லை"என்று அவன் சொல்வான.அதற்கு அவன் "என் இறைவனே!நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்றபோது நான் உனக்கு எவ்வாறு உணவளிப்பேன்!"என்று கூறுவான்.அதற்கு அவன் "நீ அறியவில்லையா?என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான்,நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நீ என்னிடம் அது இருக்கக்கண்டிருப்பாய்!"என்று கூறுவான்.மேலும் "ஆதமின் மகனே! நான் உன்னிடம் அருந்தக் கேட்டேன்.நீ எனக்கு அருந்த தரவில்லை" என்று.அவன் சொல்வான். அதற்கு அவன் "என் இறைவனே! நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது நான் உனக்கு எவ்வாறு அருந்தத் தருவேன்" என்பான்.அதற்கு அவன் "என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் அருந்தக் கேட்டான்,நீ அவனுக்கு அருந்தக் கொடுக்கவில்லை.நீ அவனுக்கு அருந்தக் கொடுத்திருந்தால் நீ அதனை என்னிடம் கண்டுக் கொண்டிருப்பாய்." என்று கூறுவான்"என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என அபூஹுரைரை (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஆதமின் மகனே!நான் நோயுற்றிருந்தேன் நீஎன்னை நோய் விசாரிக்க வரவில்லை"என்று மறுமை நாளில் அல்லாஹ் சொல்வான்."அதற்குஅவன்"நீயோ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது உன்னை நோய் விசாரிக்க நான் எப்படி வருவேன்"என்று கூறுவான்என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்என அபூஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். இதன் கருத்தாவது நான் உன்னை நோய் விசாரிக்க வருவதற்கு நீ என் பக்கம் தேவை கொண்டவனாக இல்லையே என்பதாகும்.அப்பொழுது"நீ அறியவில்லையா!என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான் நீ அவனை நோய் விசாரிக்கச் செல்லவில்லை.நீ அவனை நோய் விசாரிக்கச்சென்றிருந்தாலோ நீ அவனிடம் என்னை அடைந்திருப்பாய்"என்று அல்லாஹ் கூறுவான்.நோய் என்பது குறையை உணர்த்தும் ஒரு பண்பு.அல்லாஹ்வோ இதிலிருந்தும் மற்றும் எல்லா குறைகளிலிருந்தும் தூய்மையானவன்.அப்படியிருக்க இந்த ஹதீஸில்"நான் நோயுற்றிருந்தேன் நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை"என்று குறிப்பிட்டிருப்பதில் பிரச்சினை எதுவுமில்லை.ஏனெனில் இங்கு அல்லாஹ் நோயுற்றிருந்தான் என்பதன் கருத்தாவது அல்லாஹ்வின் நல்லடியார்களில் யாரேனும் ஒரு அடியான் நோயுற்றிருந்தான் என்பதாகும்.எனவேதான் ஆகாரம்,பானம் விடயத்தில் "அதனை என்னிடம் அடைந்து கொண்டிருப்பாய்" என்று அல்லாஹ் கூறியது போன்று இங்கு கூறாமல்"நீ அவனை நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் நீ அவனிடம் என்னை அடைந்து கொண்டிருப்பாய்"என்று அவன் கூறினான்.இது நோயாளி அல்லாஹ்வவை நெருங்கி விட்டான் என்பதை எடுத்துக் காட்டுகிறது.எனவேதான் ஒருவனுக்கு நன்மை அல்லது தீமை ஏற்படவென நோயாளி பிரார்த்தனனை செய்தால் அது மிகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க பிரார்த்தனையாக இருக்கும் என்று உலமாக்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்"அவன் உணவளிக்கின்றான், அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை"(6:14) என்ற அல்லாஹ்வின் வாக்கின் பிரகாரம் அவன் தனக்காக உணவு கேட்க மாட்டான்என்பது தெரிந்த விடயம்.ஆகையால் அவனுக்கு உணவு,பானம் போன்ற எந்தத் தேவயைும் இல்லை. இப்படியுருக்க"ஆதமின் மகனே!நான் உன்னிடம் உணவு கேட்டேன் நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பதன் கருத்தாவது "அல்லாஹ்வின் ஏதோவொரு அடியான் பட்டினி கிடப்பதைஅறிந்திருந்த ஒருவன் அவனுக்கு உணவளிக்கவில்லை" என்பதாகும்.எனவே"நிச்சயமாக நீ அவனுக்கு உணவளித்திருப்பாயாகில்,நீ அதனை என்னிடம் பெற்றுக்கொண்டிருப்பாய்"என்று குறிப்பிட்டுள்ளான். அதாவது அதன் நன்மைகள் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை, அல்லது அதனைவிட பன்மடங்காக என்னிடம் சேமிப்பில் இருக்க நீ அதனை அடைந்து கொண்டிருப்பாய் என்பதாகும்.மேலும் அல்லாஹ்வின் வாக்கு"ஆதமின் மகனே!உன்னிடம் தண்ணீர் புகட்டும்படி நான் வேண்டினேன்" என்றால்'எனக்குத் தண்ணீர் புகட்டும்படி உன்னிடம் நான் வேண்டினேன்.அப்போது நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை"என்பதாகும்.அதற்கு அவன் "நீ சர்வலோக இரட்சகனாக இருக்க உனக்கு நான் எப்படி தண்ணீர் புகட்டுவேன்"என்பான்.அதாவது நீயோ ஆகாரமும்,பானமும் தேவையற்றவனாக இருக்கின்றாயே, என்பதாகும். அதற்கு"என்னுடைய இன்ன அடியான் தாகித்திருந்தான்,அதனை நீ அறியவில்லையா?அல்லது அவன் தண்ணீர் புகட்டும்படி உன்னிடம் வேண்டினான்,நீ அவனுக்குத் தண்ணீர் புகட்ட வில்லை.நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் நீ அதனை என்னிடம் அடைந்துக் கொண்டிருப்பாய்"என்ற அல்லாஹ்வின் வாக்கின் கருத்தாவது "உன்னிடம் தண்ணீர் புகட்டும்படியாக வேண்டிய ஒருவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அது பத்து முதல் எழுநூறு மடங்குகள் என்ன,அதனைவிட பன்மடங்கு நன்மைகளாக அல்லாஹ்விடம் சேமிக்கப்படடிருக்க நீ அதனைக் கண்டிருப்பாய்"என்பதாகும்
அபூ ஹூரைரா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் : “எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.”
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறியதாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள் : யார் எனது நேசர்களில் ஒருவரை நோவினை செய்து அவரை கோபப்படுத்தி வெறுப்புக்குள்ளாக்குகிறாரோ நான் அவனுடனான எனது வெறுப்பை பகைமையை வெளிப்படையாக தெரிவித்துக்கொள்கிறேன். வலி என்பது இறையச்சமுடைய முஃமினை –நம்பிக்கையாளனை- குறிக்கும். ஓர் அடியானிடம்; காணப்படும் ஈமான் மற்றும் இறையச்சத்தின் அளவிற்கேட்ப அல்லாஹ்வின் நேசத்தைப் ஒருவன் அடைந்து கொள்கிறான். ஒரு முஸ்லீம் தனது இறைவனிடம் அவன் கட்டளையிட்டதையும் கடமையாக்கியதையும் செய்வதன் மூலமும், அவனுக்கு மிகவும் பிடித்தமான காரியங்களைச் செய்வதன் மூலமும்; தடை செய்யப்பட்டதைத் தவிர்ப்பதன் மூலமும் நெருங்குகிறான். அதே போன்று அவர் அல்லாஹ்வின் அன்பைப் பெறும் வரை, அவர் கடமையான செயல்களுடன்; நப்லான செயல்கள் மூலம் அவனை நெருங்குகிறான். எனவே அல்லாஹ் இவ்வாறான ஒரு முஸ்லிமை நேசித்துவிட்டால் அவனுடைய நான்கு உறுப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு அவனுக்கு வழிகாட்டுவான். அவரது செவித்திறனை அல்லாஹ் விரும்பியதை மாத்திரம் செவிமடுக்க வழிகாட்டுவான் . அவர் தனது பார்வையை, அல்லாஹ் எதைப் பார்ப்பதை விரும்பி அதன் மூலம் திருப்தி அடைவானோ அவற்றை பார்ப்பதற்கு உதவி செய்வான். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விடயங்களை மாத்திரம் தனது கையால் செய்வதற்கு அவனது கைக்கு அல்லாஹ் வழிகாட்டுவான். மேலும் அவனது காலுக்கு வழிகாட்டுவது என்பது அல்லாஹ்விரும்புகின்ற செயலுக்காக மாத்திரம் நடந்து செல்லுதல் மற்றும் நன்மையான காரியத்திற்கு விரைந்து செல்வதைக் குறிக்கும். இவற்றுடன் அந்த அடியான் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தித்தால்; அவன் கேட்டவற்றை அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். இந்த வகையில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அடியானாக அவன் இருப்பான். அதே போன்று ஏதாவது ஒரு தீங்கிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி பாதுகாப்புத் தேடினால் அவன் பயப்படுகின்ற தீங்குகளைவிட்டு அவனை அல்லாஹ் பாதுகாப்பான் பின் அல்லாஹ் கூறுகிறான்: ஓர் இறை நம்பிக்கையாளனிடத்தில் தனக்குள்ள கருணையின் காரணமாக அவனின்; உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. ஏனெனில் அவனோ அதில் சிரமம் இருப்பதினால் மரணத்தை வெறுக்கிறான். அல்லாஹ்வும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: மக்களிடம் இரு பண்புகள் உள்ளன. அவை அவர்களிடம் இறைநிராகரிப்பை ஏற்படுத்திவிடும் : வம்சத்தில் குறைகூறுவது, மரணித்த ஒருவருக்காக ஒப்பாரி வைத்து அழுவது.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், ஜாஹிலிய்யாக் கால பண்புகளாகவும், நிராகரிப்பாளர்களின் செயற்களாகவும் உள்ள, மக்களிடம் காணப்படும் இரு பண்புகளைப் பற்றிக் கூறுகின்றார்கள். அவ்விரண்டுமாவன: முதலாவது, மக்களது வம்சத்தில் குறைகூறி, அவற்றைக் தரம்குறைத்துப் பேசி, அவர்களைத் தாழ்த்திப் பெருமையடித்தல். இரண்டாவது, சோதனைகளின் போது, இறைவிதியில் வெறுப்பைக் காட்டும் விதமாக சப்தத்தை உயர்த்துதல், அல்லது பொறுமையிழப்பின் உச்சகட்டமாக, சட்டைகளைக் கிழித்துக்கொள்ளல்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடம் 'வங்குரோத்துக்காரன் 'முப்லிஸ்' என்றால் யார் தெரியுமா?.' என்று கேட்டார்கள்?. அதற்கு தோழர்கள் 'திர்ஹமோ, சொத்துக்களோ இல்லாதவன்' என்று பதில் அளித்தார்கள், அப்போது நபியவர்கள்; 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வருவான், அவனோ ஒருவனுக்கு ஏசியவனாக, இட்டுக் கட்டியவனாக, ஒருவனின் சொத்தை அநியாயமாக சாப்பிட்டவனாக, ஒருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, ஒருவனுக்கு அடித்தவனாக வருவான்,, அப்போது பாதிக்கப் பட்டவனுக்கு அநியாயம் இழைத்தவனின் நன்மைகள் பங்கு வைக்கப்படும், நன்மைகள் முடியும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவனின் தீமைகளை எடுத்து அநியாயம் இழைத்தவனின் மீது சுமத்தப்பட்டு, பின்பு அநியாயம் இழைத்தவன் (தொழுகை, நோன்பு, ஸகாத் போன்றவற்றின் நன்மையோடு வந்தவன்) நரகில் வீசப்படுவான். (முஸ்லிம்)
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை தம் தோழர்களிடம், 'வங்குரோத்துக்காரன்; யார் என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'நம்மில் செல்வமோ சேமிப்புகளோ இல்லாதவர்கள் வங்குரோத்துக்காரர்களாக கருதப்படுகிறார்கள்' என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'எனது உம்மத்தில் வங்குரோத்துக்காரன் (திவாலானவர்) என்பவர், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, தர்மம் போன்ற பல நல்ல செயல்களுடன் வருபவர் ஆவார்.' ஆனால் அவர் பலரை கெட்ட வார்த்தைகளால் அவதூறாகவும், அவமதித்தும் பேசியிருப்பார்;.பிறருடைய மானத்தை பங்கப் படுத்தியிருப்பார், பிறருடைய செல்வத்தை விழுங்கி அவர்களின் உரிமைகளை மறுத்திருப்பார், பிறருடைய இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்கு எதிராக அநீதி இழைத்திருப்பார், ஒருவரை அடித்து அவமானப்படுத்தியிருப்பார். இவ்வாறான ஒருவரின் நன்மைகள் அநீதிக்கு உள்ளானோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் பிறரின் உரிமை மீறலுக்கும் அநீதங்களுக்களுக்கான பிரதீயிடுகளும் நிறைவேற்றப்படும் முன்னர் அவரின் நன்மைகள் (நற்காரியங்ள்) முடிந்து விட்டால் அநீதிக்குட்பட்டோரின் தீமைகள் யாவும் அவரின் மீது சுமத்தப்பட்டு அநியாயக்காரர்களின் ஏட்டில் பதியப்பட்டு எந்த நன்மையுமில்லாதவராக பின்னர் அவர் நரகத்தில் தள்ளப்படுவார்.'
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: தங்கம் மற்றும் வெள்ளியை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றா விட்டால், நெருப்பினால் ஆன இரும்புப் பாளங்கள் அவருக்காக உருவாக்கப்பட்டு, அவை நரக நெருப்பில் சூடு காட்டப்படும். பின்பு, அதைக் கொண்டு அவரது விலாப்புறத்திலும், நெற்றியிலும், முதுகிலும் சூடு போடப்படும். சூடு தனியும் போதெல்லாம் மீண்டும் சூடு போடப்படும். ஐம்பதாயிரம் வருட அளவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவ்வாறு செய்யப்படும். அதன் பின்னர் தான், தனது பாதை ஒன்றில் சுவர்க்கம் என்றோ, நரகம் என்றோ கண்டுகொள்வார். அப்போது நபியவர்களிடம், 'ஒட்டகம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ' ஒட்டகத்தை வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாவிட்டால் - அது தண்ணீர் அருந்தும் நாளில் பால் கரப்பது (அதாவது கரந்து ஏழைகளுக்கு வழங்குவது) அதன் கடமைகளில் ஒன்றாகும் - அவர் (மறுமையில்) ஒரு விசாலமான பூமியில் முகங்குப்புற எறியப்படுவார். அந்த எல்லா ஒட்டகங்களும் பரிபூரணமான நிலையில் வந்து – ஒட்டகக் குட்டிகள் கூட – தமது கால்களால் அவரை மிதிக்கும், வாய்களால் கடிக்கும். எல்லா ஒட்டகங்களும் கடித்துச் சென்ற பின் முதலில் சென்ற ஒட்டகங்கள் மீண்டும் வந்து கடித்து, மிதிக்கும். ஐம்பதாயிரம் வருட அளவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவ்வாறு செய்யப்படும். அதன் பின்னர் தான், தனது பாதை ஒன்றில் சுவர்க்கம் என்றோ, நரகம் என்றோ கண்டுகொள்வார்." என்று கூறினார்கள். அப்போது நபியவர்களிடம், 'ஆடும், மாடும்?' என்று என்று கேட்கப்பட்ட போது, அதற்கவர்கள், "ஆடுகளையும், மாடுகளையும் வைத்துக் கொண்டிருக்கும் யாராக இருப்பினும், அதில் நிறைவேற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாவிட்டால் அவர் (மறுமையில்) ஒரு விசாலமான பூமியில் முகங்குப்புற எறியப்படுவார். அவை அனைத்தும் கொம்புகள் வளைந்த நிலையிலோ, கொம்புகள் இல்லாத நிலையிலோ, அல்லது உடைந்த நிலையிலோ என்றில்லாமல் முழுமையாக வந்து, அவையனைத்தும் கொம்புகளால் அவரைக் குத்திக் கொண்டும், தமது கால்களால் மிதித்துக் கொண்டும் இருக்கும். கடைசிப் பிராணி மிதித்து விட்டுச் சென்றதும், முதலில் வந்த பிராணி மீண்டும் வந்து மிதிக்கும். ஐம்பதாயிரம் வருட அளவைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும், அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கப்படும் வரை இவ்வாறு செய்யப்படும். அதன் பின்னர் தான், தனது பாதை ஒன்றில் சுவர்க்கம் என்றோ, நரகம் என்றோ கண்டுகொள்வார். " என்று கூறினார்கள். அப்போது நபியவர்களிடம், 'குதிரை?' என்று கேட்கப்பட்ட போது, அதற்கவர்கள், இவ்வாறு கூறினார்கள்: 'குதிரை மூன்று வகைப்படும். அது ஒருவருக்குப் பாவமாக இருக்கும். இன்னொருவருக்கு திரையாக இருக்கும். இன்னொருவருக்குக் கூலியாக இருக்கும். யாருக்குக்குப் பாவமாக இருக்கும் என்றால், யாரெல்லாம் அதனைப் பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும், முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகவும் கட்டிவைத்துக் கொண்டிருக்கின்றார்களோ, அது அவர்களுக்குப் பாவமாக இருக்கும். யாருக்கு அது திரையாக இருக்கும் என்றால், எந்த மனிதன் அதனை அல்லாஹ்வின் பாதையில் கட்டிவைத்து, அதில் ஏனையோரை ஏற்றுவதிலும், அதற்கு உபகாரம் புரிவதிலும் அல்லாஹ்வுடைய உரிமைகளை மறக்கவில்லையோ அவருக்கு அது (நரகிற்குச் செல்லாமல்) ஒரு திரையாக இருக்கும். யாருக்கு அது கூலியாக இருக்கம் என்றால், எந்த மனிதர் அதனை அல்லாஹ்வின் பாதையில் முஸ்லிம்களுக்குக்காக ஒரு தோட்டத்திலோ, பசுமையான பூமியிலோ கட்டிவைக்கின்றாரோ அவருக்காகும். அது அந்த பசுமையான பூமியில் இருந்து, அல்லது தோட்டத்தில் இருந்து சாப்பிடும் போதெல்லாம், அது சாப்பிடும் எண்ணிக்கைகளின் அளவு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அதன் விட்டைகள், மற்றும் சிறுநீர்கள் அளவு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். மேலும், அது தனது கயிற்றைத் துண்டித்துக் கொண்டு, ஓரிரு மேடுகளில் ஏறும் போதெல்லாம், அதன் சுவடுகள் மற்றும் விட்டைகளின் அளவு அல்லாஹ் அவருக்குக் கூலிகளை எழுதுவான். மேலும், அதன் உரிமையாளர் அதனை அழைத்துக்கொண்டு ஓர் ஆற்றங்கரைக்குச் சென்று, அது அதில் நீர் பருகினாலும், மேலும் அவர் அதற்கு நீர் புகட்ட நாடினாலும், அது நீர் பருகும் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அவருக்கு அல்லாஹ் கூலிகளை எழுதுவான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் சில குறிப்பிட்ட வகையான சொத்துக்களையும், அவற்றின் ஸகாத்தை வழங்காதவர்களுக்கு மறுமையில் உள்ள தண்டனைகளையும் தெளிவுபடுத்துகின்றார்கள். உதாரணமாக, முதலாவது: தங்கம், வெள்ளி மற்றும் அவற்றின் சட்டத்தில் உள்ள, பணம் மற்றும் வியாபாரப் பொருட்கள் இவற்றில் ஸகாத் கடமையாகியிருந்தும், கொடுக்கப்படவில்லை என்றால், மறுமைநாளில் அவை உருக்கப்பட்டு, பாளங்களாக வார்க்கப்படும். மேலும், நரக நெருப்பில் அவை சூடாக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர் அதைக் கொண்டு வேதனை செய்யப்படுவார். அவரது விழாப்புறங்களும், நெற்றியும், முதுகும் அவற்றால் சூடு போடப்படும். அதன் சூடு குறைந்தவுடன், மீண்டும் சூடாக்கப்படும். இதே நிலைமையில், மறுமை நாள் முழுதும், அதாவது ஐம்பதாயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி முழுவதும் அவர் இருப்பார். அதற்குப் பின்னர் அவரது விடயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கியதும், அவர் சுவனவாதியாகவோ, நரகவாதியாகவோ இருப்பார். இரண்டாவது: ஒட்டகங்களை வைத்துக்கொண்டு, அதில் கட்டாயமான கடமைகளையும், ஸகாத்தையும் கொடுக்காதவர். – ஒட்டகங்களில் பால் கறக்கும் போது அவ்விடத்திற்கு வரும் ஏழைகளுக்கக் கொடுப்பதும் அதில் உள்ள கடமைகளில் ஒன்றாகும் - இந்த ஒட்டகங்கள், கொழுத்துப் பிரமாண்டமாக இருக்கும் நிலையில் அதிக எண்ணிக்கைகளுடன் கொண்டுவரப்படும். அதன் உரிமையாளர் சமாந்திரமான, விசாலமான நிலத்தில் முகங்குப்புற போடப்பட்டதும், அந்த ஒட்டகங்கள் இவரைத் தம் கால்களால் மிதித்து, பற்களால் கடிக்கும். இறுதியான ஒட்டகம் சென்றவுடன் மீண்டும் முதலாவது ஒட்டகம் அனுப்பப்படும். இதே நிலைமையில், மறுமை நாள் முழுதும், அதாவது ஐம்பதாயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி முழுவதும் அவர் இருப்பார். அதற்குப் பின்னர் அவரது விடயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கியதும், அவர் சுவனவாதியாகவோ, நரகவாதியாகவோ இருப்பார். மூன்றாவது: மாடு, (செம்மறி மற்றும் சாதாரண) ஆடுகளை வைத்துக்கொண்டு, அதில் கடமையான ஸகாத்தை நிறைவேற்றாத உரிமையாளர். அவையனைத்தும், ஒன்றும் குறைவடையாமல் முழுமையாகக் கொண்டுவரப்படும். அதன் உரிமையாளர் சமாந்திரமான, விசாலமான நிலத்தில் முகங்குப்புற போடப்படுவார். அந்த ஆடுகளில் கொம்புகள் வளைந்தவையோ, கொம்புகள் அற்றவையோ, கொம்புகள் உடைக்கப்பட்டவையோ இருக்கமாட்டாது. மாறாக, அவை பரிபூரண நிலையில் வந்து, தமது கொம்புகளால் அவனைக் குத்தும். தமது கால்களால் அவனை மிதிக்கும். அவற்றில் இறுதியானது சென்றவுடன் மீண்டும் முதலாவது அனுப்பப்படும். இதே நிலைமையில், மறுமை நாள் முழுதும், அதாவது ஐம்பதாயிரம் வருடங்கள் கொண்ட காலப்பகுதி முழுவதும் அவர் இருப்பார். அதற்குப் பின்னர் அவரது விடயத்தில் அல்லாஹ் தீர்ப்பு வழங்கியதும், அவர் சுவனவாதியாகவோ, நரகவாதியாகவோ இருப்பார். நான்காவது : குதிரையை வைத்துக் கொண்டிருப்பவர். இவர்கள் மூன்று தரப்பினர். முதல் தரப்பினர் : அது அவருக்கு குற்றமாக இருக்கும். அது யாரென்றால், அவற்றை முகஸ்துதிக்காகவும், பெருமைக்காகவும், முஸ்லிம்களுக்கெதிராக யுத்தம் செய்வதற்காகவும் வைத்துக்கொண்டிருப்பவர். இரண்டாவது தரப்பினர் : அது அவருக்கு ஒரு திரையாக இருக்கும். அது யாரென்றால், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக அதை வைத்துக்கொண்டிருப்பவர். அவர் அதற்கு நல் உபகாரம் புரிந்து, அதற்கு உணவு வழங்கி, அதன் தேவைகளை நிறைவேற்றியவர். அதனை ஆண் குதிரையுடன் இணையவிடுவதும் அவற்றில் ஒன்றாகும். மூன்றாவது தரப்பினர் : அது அவர்களுக்குக் கூலியாக அமையும். அது யாரென்றால், அதனை அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வதற்காக முஸ்லிம்களுக்காக வைத்துக்கொண்டிருப்பவர். அது மேய்ந்துகொண்டிருப்பதற்காக பசுந்தரைகளிலும், தோட்டங்களிலும் இருக்கும். அதன் விட்டைகள் மற்றும் சிறுநீர்களின் அளவுக்கு ஏற்ப அவருக்கு நன்மைகளும் எழுதப்படும். அது, அதனைக் கட்டிவைக்கப்பட்டுள்ள கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, மேடுகளுக்கு ஓடிச் சென்று வந்தாலும், அதன் எட்டுக்கள் மற்றும் விட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்லாஹ் நன்மைகளை எழுதுவான். அதன் உரிமையாளர் ஓர் ஆற்றங்கரைக்கு அதனை அழைத்துச் சென்று அங்கு அவர் நீர் புகட்ட நாடாமல், அதுவாக நீர் அருந்தினாலும் அது அருந்தும் அளவுக்கு ஏற்ப அவருக்கு நன்மைகள் எழுதப்படும். பின்பு நபியவர்களிடம், கழுதைகள் பற்றி, அதாவது, அவையும் குதிரையைப் போன்றனவா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : அதற்கென்று தனியான சட்டமொன்றை அல்லாஹ் இறக்கவில்லை. பின்வரும் தன்னிகரற்ற வசனத்தைத் தவிர. இவ்வசனம் அனைத்துவிதமான நன்மைகள் மற்றும் பாவங்களுக்கும் பொதுவானது. அந்த வசனமாவது: "எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்." (ஸூரா ஸில்ஸால் : 8) எனவே, யார் கழுதைகளை வைத்துக்கொண்டு நன்மை செய்கின்றாரோ, அவர் அதற்கான கூலியைக் கண்டுகொள்வார். யார் அவற்றை வைத்துக்கொண்டு பாவங்களில் ஈடுபடுகின்றாரோ அதற்கான தண்டனையைக் கண்டுகொள்வார். இது எல்லா செயற்களையும் உள்ளடக்கிக் கொள்ளக் கூடியது.