





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளை யார் தொழுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்பஜ்ர் மற்றும் அஸ்ர் ஆகிய குளிர்ந்த இரு நேரத் தொழுகைகளில் ஆர்வம் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவுருத்துகிறார்கள். இவ்விரு தொழுகைகளையும் உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் உரிய முறையில் ஒருவர் நிறைவேற்றி வந்தால் அவர் சுவர்க்கம் பிரவேசிக்க இத்தொழுகைகள் காரணமாக அமையும் என்ற நட்செய்தியை கூறுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : "பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்."
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறப்பு மற்றும் உறவு முறையின் மூலம் மணம் முடிக்கத் தடைசெய்யப் பட்டவர்களான தந்தையின் சகோதரர்கள் தாயின் சகோதரர்கள் அல்லது சகோதரன் ஆகியோர் பால் குடி உறவாலும் மணம் முடிக்க தடைசெய்யப்பட்டோர் என தெளிவு படுத்துகிறார்கள். அதே போன்று பிறப்பினால் அனுமதிக்கப்படுகின்ற சட்டதிட்டங்கள் யாவும் பால்குடி உறவுக்கும் பொருந்தும்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: எனது உற்ற தோழர், முஹம்மத் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விடயங்களைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். 1.ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். 2. இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். 3. உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தனது நேசத்திற்குரிய தோழராகிய, நபி (ஸல்) அவர்கள் தனக்கு மூன்று விடயங்களை உபதேசமாகக் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : முதலாவது, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றல். இரண்டாவது, ஒவ்வொரு நாளும் இரண்டு ரக்அத்கள் ழுஹாத் தொழுதல். மூன்றாவது, உறங்குவதற்கு முன்னர் வித்ர் தொழுதல். இது, இரவின் இறுதிப் பகுதியில் கண்விழிக்க முடியாது எனப் பயப்படுபவர்களுக்காகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நீங்கள் அதை (பிறையைக்) கண்டால் நோன்பு பிடியுங்கள். அதைக் கண்டால் நோன்பு விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், அதைக் கணக்கிட்டுக் (30 ஆக பூரணப்படுத்திக்) கொள்ளுங்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் ரமழான் மாதம் ஆரம்பிப்பது மற்றும் நிறைவடைவதன் அடையாளங்களை விளக்கும் வகையில் இவ்வாறு கூறுகின்றார்கள் : நீங்கள் ரமழானின் தலைப்பிறையைக் கண்டால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அதற்கும் உங்களுக்கும் மத்தியில் மேகம் மறைத்து, உங்களால் அதைக் காணமுடியாவிட்டால், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள். ஷவ்வால் மாதத் தலைபிறையைக் கண்டால், நோன்பை விட்டுப் பெருநாள் எடுங்கள். அதற்கும் உங்களுக்கும் மத்தியில் மேகம் மறைத்து, உங்களால் அதைக் காணமுடியாவிட்டால், ஷவ்வால் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்.
அபுல் ஹவ்ரா அஸ்ஸஃதி, (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடம், 'நீங்கள் நபியவர்களிடமிருந்து எதைக் கேட்டு மனனமிட்டுள்ளீர்கள்?' என்று கேட்டபோது, அவர்கள் கூறினார்கள் : 'நான் நபியவர்கள் இவ்வாறு கூறியதை மனனமிட்டுள்ளேன்: உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துபவற்றை விட்டுவிட்டு, சந்தேகத்தை ஏற்படுத்தாதவற்றை எடுத்துக்கொள். ஏனெனில், உண்மை மனஅமைதியைத் தரும். பொய் சந்தேகத்தைத் தரும்.'
இமாம்களான திர்மிதி, நஸாஈ மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுதடுக்கப்பட்டவையா? தடுக்கப்படாதவையா? ஹராமா? ஹலாலா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும், வார்த்தைகள் மற்றும் செயற்களை விட்டுவிட்டு, ஹலாலான, நல்லவை என நீங்கள் உறுதியாக அறிந்துவைத்துள்ள, சந்தேகமற்றவற்றை எடுத்துக்கொள்ளுமாறு நபியவர்கள் ஏவுகின்றார்கள். ஏனெனில், உள்ளம் அதில் நிம்மதியையும், அமைதியையும் காண்கின்றது. சந்தேகத்திற்கிடமானவற்றில், அது தடுமாற்றத்தையும், கலக்கத்தையும் காண்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : மூன்றில் ஒரு காரணத்திற்காகவே தவிர ஒரு முஸ்லிமின் இரத்தம் (அவரைக் கொலைசெய்வது) ஹலாலாகமாட்டாது: திருமணம் முடித்தபின் விபச்சாரம் செய்பவர், இன்னொருவரைக் கொலைசெய்தவர், (முஸ்லிம்) சமூகத்தைப் பிரிந்து, இஸ்லாத்தை விட்டுச் செல்பவர்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் மூன்றில் ஒரு விடயத்தை செய்தாலே தவிர, அவரது இரத்தம் (உயிர்) ஹராமாகும் என்று தெளிவு படுத்துகின்றார்கள். முதலாவது : ஒருவர் முறையான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் திருமணம் செய்தபின்னரும் விபச்சாரத்தில் ஈடுபடல். கல்லெறிந்து அவரைக் கொல்வது ஹலாலாகும். இரண்டாவது: பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரை, உரிமையின்றி வேண்டுமென்றே கொலை செய்தவர். இவர் - நிபந்தனைகள் பேணப்பட்ட பின்னர் - கொல்லப்படுவார். மூன்றாவது : முஸ்லிம் சமூகத்தை விட்டும் பிரிந்து செல்பவர். அது ஒன்றில் முழுமையாக இஸ்லாத்தை விட்டு வெளியேறி செல்வதாக இருக்கலாம். அல்லது முழுமையாக வெளியேறாமல், இஸ்லாத்தின் சில பகுதிகளை விட்டு வெளியேறிச் செல்வதாக இருக்கலாம். உதாரணமாக, அடர்ந்தேருபவர்கள், வழிப்பறிக்கொள்ளையர்கள், கவாரிஜ்கள் போன்ற ஆட்சிக்கெதிராகப் போரிடுபவர்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'
இதனை அல்பைஹகீ பதிவு செய்துள்ளார்எவ்வித ஆதாரமோ, தகுந்த சாட்சியங்களோ இல்லாது தங்களது வாதத்தின் அடிப்படையில் வழக்காடும் ஒருவருக்கு அவரால் கோரப்படுபவை வழங்கப்படும் என்றிருந்தால் சிலர் மக்களின் உடமைகளையும், அவர்களின் உயிரையும் கூட உரிமை கோரத் தொடங்குவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, வாதி தனது கூற்றுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவரிடம் ஆதாரம் இல்லையென்றால், அந்தக் கோரிக்கை பிரதிவாதியின் முன் வைக்கப்படும். அவர் மறுத்தால், அவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் சாப்பிடுகின்றாரோ, அவர் எங்களை விட்டும் - அல்லது எமது பள்ளிவாசலை விட்டும் - ஒதுங்கி, தனது வீட்டில் இருந்துகொள்ளட்டும். (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாததைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிடவில்லை)” என்று கூறினார்கள். நபியவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் முஸ்லிமின் ஒரு அறிவிப்பில் இவ்வாறு வந்துள்ளது : இந்தக் கீரைகளை மற்றும் வெள்ளைப்பூண்டுகளை – அல்லது இந்த வெங்காயம், வெள்ளைப் பூண்டு மற்றும் லீக்ஸ் போன்றவற்றை – யார் சாப்பிடுகின்றாரோ, அவர் எமது பள்ளிவாசலை நெருங்கவேண்டாம். மனிதர்களுக்கு நோவினையை ஏற்படுத்துபவை, மலக்குகளுக்கும் நோவினையை ஏறப்டுத்துகின்றன.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்வெள்ளைப் பூண்டு அல்லது வெங்காயம் போன்றவற்றைச் சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதை நபியவர்கள் தடுக்கின்றார்கள். ஏனெனில், அவர்கள் தமது துர்வாடையினால், ஜமாஅத் தொழுகைக்கு வரும் சகோதரர்களுக்குத் தொல்லையை ஏற்படுத்துகின்றார்கள். இது (தடையைக் காட்டாத) தூய்மைப்படுத்தல் சார்ந்த அமைப்பில், பள்ளிவாசலுக்கு வருவதைத் தான் தடுக்கின்றதே ஒழிய, அவற்றைச் சாப்பிடுவதை அல்ல. ஏனெனில். அவை அனுமதிக்கப்பட்ட உணவுகளாகும். காய்கறிகள் உள்ள ஒரு சட்டி நபியவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அதில் ஒரு துர்வாடையை நபியவர்கள் உணர்ந்த போது, அதில் இருப்பவை பற்றி நபியவர்களுக்குக் கூறப்பட்டது. உடனே நபியவர்கள் சாப்பிடாமல் தவிர்ந்து கொண்டார்கள். பின்பு நபியவர்கள் தனது ஒரு நபித்தோழர் அதனைச் சாப்பிடுவதற்காக, அவரிடம் கொடுத்தார்கள். அவரும் நபியவர்களைப் பின்பற்றி, அதைச் சாப்பிட வெறுத்தார். அதை நபியவர்கள் கண்டவுடன், 'நீங்கள் சாப்பிடுங்கள். நான் மலக்குகளுடன் உரையாடுகின்றேன்.' என்று கூறினார்கள். துர்வாடைகளால் மனிதர்கள் தொந்தரவுக்குள்ளாவது போன்று, மலக்குகளும் உள்ளாவதாக நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் கூறியதாகஅபூ ஹுரைரா(ரழியல்லாஹு அன்ஹு) அறிவித்துள்ளார்கள் : பெருந்துடக்கிற்காகக் குளிப்பதைப் போன்று வெள்ளிக்கிழமை அன்று குளித்துவிட்டுப் பள்ளிவாசலுக்கு (நேரத் தோடு) செல்பவர், ஓர் ஒட்டகத்தை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். இரண்டாவது நேரத்தில் செல்பவர், ஒரு மாட்டை 'குர்பானி' கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிவாசலுக்குள்) வந்துவிட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகிறார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஜும்ஆத் தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்வதன் சிறப்புக் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நேரகாலத்துடன் ஜும்ஆத் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்லுதல் சூரிய உதயத்திலிருந்து ஆரம்பித்து இமாம் உரை நிகழ்த்த வரும் வரை நீடிக்கிறது. இது ஐந்து நேரங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இந்நேரங்கள் சூரியன் உதித்ததிலிருந்து இமாம் பள்ளிக்கு வருகைத் தந்து மின்பரில் ஏறும் வரை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.அவை பின்வருமாறு: முதலாவது : ஒருவர் பெருந்தொடக்கை நீக்க குளிப்பது போன்று முழுமையான முறையில் குளித்து விட்டு ஜும்ஆத் தொழும் பள்ளிக்கு அதன் ஆரம்ப நேரத்தில் சென்றால் அவர் ஒரு ஒட்டகையை தர்மம் செய்தவர் போன்றாவராவார். இரண்டாவது நேரத்தில் செல்பவர், ஒரு மாட்டை'குர்பானி' கொடுத்த வரைப் போன்றவர் ஆவார். மூன்றாவது நேரத்தில் செல்பவர், கொம்புள்ள ஆட்டை 'குர்பானி' கொடுத்தவரைப் போன்றவர் ஆவார். நான்காவது நேரத்தில் செல்பவர், ஒரு கோழியைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். ஐந்தாவது நேரத்தில் செல்பவர், முட்டையைத் தர்மம் செய்தவரைப் போன்றவர் ஆவார். இமாம் பள்ளிக்குள் உரை நிகழ்த்த வந்துவிட்டால் பள்ளிக்குள் முதன் முதலாக வருபவர்களை பதிவு செய்ய அமர்ந்திருந்த மலக்குகள் பதிவு செய்வதை நிறுத்தி விட்டு, இமாமின் உரையை செவிமடுக்க வந்து விடுவார்கள்.