





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் யாராவது ஜும்ஆவுக்காக வருவதாக இருந்தால், குளித்துக்கொள்ளட்டும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்யாராவது ஜும்ஆத் தொழுகைக்காக வர நாடினால், கடமையான குளிப்பைப் போல குளித்துக்கொள்வது அவருக்கு ஸுன்னாவாகும் என்பதை நபியவர்கள் இங்கு உறுதிப் படுத்துகின்றார்கள்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : '(வெள்ளிக்கிழமை) யார் வுழு செய்து அதனை அழகிய முறையில் செய்து, பின் ஜும்ஆவிற்கு வருகை தந்து (இமாமின் உரையை) குத்பாவை செவிதாழ்த்தி மௌனமாக கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் செய்த (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படுவதோடு மேலதிகமாக மூன்று நாட்களின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. இமாம் உரைநிகழ்த்தும் போது தரையில் கிடக்கும் சிறுகற்களை தொட்டு யார் விளையாடுகிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அவர்கள் யார் வுழு செய்து அதன் அர்கான்கள் மற்றும் சுன்னாக்கள் ஒழுக்கங்களை பேணி சீராகவும் அழகிய முறையிலும் செய்து, பின் ஜுமுஆத் தொழுகைக்காக வந்து இமாமின் உரையை ஈடுபாட்டுடன் மௌனமாக செவிதாழ்த்திக் கேட்பதோடு வீணான பேச்சுக்களை பேசாது மௌனமாக இருப்பவரின் பத்து நாட்களுக்கான சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. ஏனெனில் ஒரு நன்மையென்பது அது போன்று பத்து மடங்காகும். என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . குத்பாவில் கூறப்படும் அறிவுரைக்கு முக்கியத்துவம் கொடுக்காது பொடிக்கற்களால் விளையாடுதல் போன்ற சிந்தனை திசைத் திருப்பும்; வீணான செயல்களில் ஈடுபடுவதானது ஜுமுஆவின் பூரணகூலியைப் பெற்றுக் கொள்வதில் தடையாக இருப்பதோடு, அதற்கான அதிஷ்டமும் கைநழுவிவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : யார் பள்ளிவாசலுக்கு காலையிலோ, மாலையிலோ செல்கின்றாரோ, அவ்வாறு காலையிலோ, மாலையிலோ செல்லும் போதெல்லாம் சுவனத்தில் ஒரு விருந்தை ஏற்பாடு செய்வான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்வணக்கத்திற்காக வேண்டியோ, கல்விக்காகவோ, வேறு எந்த நல்ல நோக்கங்களுக்காக வேண்டியோ, காலை, மாலை என எந்த நேரத்திலாவது யாராவது பள்ளிவாசலுக்குச் சென்றால், அவ்வாறு காலையிலும், மாலையிலும் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம், சுவனத்தில் அவருக்கு அல்லாஹ் ஒரு விருந்தையும், அதற்குரிய ஓர் இடத்தையும் ஏற்பாடு செய்வான் என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் அவரைச் சந்திக்க விரைந்தனர், (அவ்வேளை) 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து விட்டார்கள்! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து விட்டார்கள்!' என்று மூன்று முறை கூறப்பட்டது. நான் மக்களுடன் அவரைப் பார்க்க வந்தேன், அவரது முகத்தை நான் தெளிவாகக் பார்த்த போது, அவரது முகம் பொய்யரின் முகம் அல்ல என்பதை அறிந்தேன். அவர்கள் கூறியதில் நான் முதலில் கேட்டது: ' மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள், மற்றவர்களுக்கு உணவளியுங்கள், உறவைப் பேணுங்கள், இரவில் மக்கள் தூங்கும்போது தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்.'
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் அவரைக் கண்டு அவர்களை நோக்கி விரைந்து சென்றார்கள். அவ்வாறு சென்றோரில் யூதர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ரழியல்லாஹு அவர்கள் நபியவர்களை பார்த்ததும் அவர்களின் முகத்தில் பிரகாசமும் அழகும் உண்மையான மதிப்பச்சமும் பிரதிபளித்ததினால் அவர்கள் ஒரு பொய்யர் அல்ல என்பதை புரிந்துகொண்டார். அவர் சுவர்க்த்தினுள் நுழைவதற்கு காரணமாக உள்ள சில நற்காரியங்களை மக்களுக்கு வலியுறுத்திய விடயங்களையே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து முதன் முதலில் கேட்டார்கள் அவை பின்வருமாறு : முதலாவது : ஸலாத்தைப் பரப்புவதுடன் அதனை அறிமுகமானவர்கள் அறிமுகமற்றவர்கள் யாவருக்கும் அதிகமாக சொல்லுதல். இரண்டாவது: தர்மம் அன்பளிப்பு மற்றும் விருந்தோம்பல் மூலம் பிறருக்கு உணவளித்தல். மூன்றாவது: தந்தை அல்லது தாயின் உறவுகள் மற்றும் உடன்பிறந்தோர் உறவுகளை சேர்ந்து நடத்தல். நான்காவது : மக்கள் உறங்கும் வேளை உபரியான இரவு நேரத் தொழுயை (கியாமுல்லைலை) தொழுதல்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் இருந்தோம் அப்போது நபியவர்கள் கூறினார்கள் : ''யார் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும்; ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்திருமணத்திற்குப் பிறகு, ஒருவரின் பார்வையும் அந்தரங்க உறுப்புகளும் தடைசெய்யப்பட்ட விஷயங்களிலிருந்து பாதுகாக்கப்படும், மேலும் ஒழுக்கக்கேடான செயல்களில் விழும் வாய்ப்புகள் குறையும் என்பதால், நபி (ஸல்) அவர்கள், உடலுறவில் ஈடுபடுவதற்குரிய சக்தியையும், திருமணத்திற்குரிய வசதிகளையும் பெற்ற அனைவரையும் திருமணம் செய்து கொள்ளுமாறு ஊக்குவித்தார்கள். உடலுறவு கொள்ளும் சக்தி இருந்தும், திருமணச் செலவுகளுக்கான வசதி ஒருவருக்கு இல்லை என்றால், அவர் நோன்பு நோற்க வேண்டும், ஏனெனில் நோன்பானது காமத்தைக் குறைக்க உதவுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'பெண்களுக்குள் நுழைவதை நான் உங்களுக்கு எச்சரிக்கின்றேன்.' என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது, அன்ஸாரிகளில் ஒருவர், 'கணவன் புறத்தால் வரும் ஆண் உறவுகள் (கணவனின் சகோதரர் போன்றவர்கள்) நுழைவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்க, 'கணவன் புறத்தால் வரும் அந்த உறவு தான் மரணமே' என்று கூறினார்கள் நபியவர்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அந்நியப் பெண்களுடன் கலந்து இருப்பதைத் தடுக்கும் விதமாக நபியவர்கள், 'நீங்கள் பெண்கள் இருக்கும் இடத்தில் நுழையாமலும், பெண்கள் நீங்கள் இருக்கும் இடத்தில் நுழையாமலும் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர், 'கணவனின் உறவுகளில், ஒரு வேளை இப்பெண் திருமணம் முடிக்காமல் இருந்திருந்தால், திருமணம் செய்வதற்கான அனுமதியுள்ள, கணவனின் சகோதரன், அவரது சகோதரனின் மகன், அவருடைய சிறிய தந்தை, சிறிய தந்தையின் மகன், அவரது சகோதரியின் மகன் போன்றோர் பற்றி என்ன சொல்கின்றறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'மரணத்தை எச்சரிக்கையாக இருப்பது போன்று, அவர்களை எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், கணவனின் உறவுகளோடு தனிமையில் இருப்பதென்பது, குழப்பம் மற்றும் மார்க்கத்தில் அழிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, கணவனின் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் அல்லாத உறவுகள் ஏனைய அன்னிய ஆண்களை விடத் தடுக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில், அன்னிய ஆண்களுடன் தனிப்பதை விட, கணவனின் உறவுகளுடன் தனிப்பதே அதிகமாக நிகழ்கின்றது. ஏனையோரை விட, அவர்களாலே தீங்குகள் நடக்க வாய்ப்புள்ளது. குழப்பங்கள் அவர்களால் நடப்பதே அதிக வாய்ப்பானது. ஏனெனில், எந்தவொரு எதிர்ப்பும் இன்றி அவர்களால் பெண்ணை அடையவும், தனிமையில் இருக்கவும் முடியும். அவ்வாறு தனிப்பது சிலவேளை தவிர்க்கமுடியாமல் கட்டாயமாகவும் நடக்கும். ஏனெனில், அதில் சற்றுக்கவனயீனம் உள்ளது. எனவே தான் பெண்கள் தனது கணவனின் சகோதரர்களோடு தனித்து விடுகின்றார்கள். அதனால், இதன் அறுவறுப்பு நிலை மற்றும் பாதிப்புக்கள் காரணமாக, இது மரணத்தை ஒத்ததாக உள்ளது. ஆனால், அன்னிய ஆணின் விடயம் அவ்வாறல்ல. அவனது விடயத்தில் எச்சரிக்கையாவே இருந்துகொள்வர்.
மாலிக் பின் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் "(எம்மிடமுள்ள தங்கத்தை) வெள்ளி நாணயத்திற்கு மாற்றித் தருபவர் யார்?" என்று கேட்டபடி வந்தேன். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு அருகிலிருந்த தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள், "எங்கே) உமது தங்கத்தைக் காட்டும். அதைக் கொண்டு வாரும்! எம் ஊழியர் (வெளியூரிலிருந்து) வந்ததும் அதற்குரிய வெள்ளியைத் தருகிறோம்" என்று கூறினார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு வெள்ளியை (உடனடியாக)க் கொடுத்துவிடு. அல்லது அவரது தங்கத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக் கொள்வது வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குத் தொலி நீக்கப்பட்ட கோதுமையை மாற்றிக் கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) தொலி நீக்கப்படாத கோதுமைக்குத் தொலி நீக்கப்படாத கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்; உடனுக்குடன் அல்லாமல் (தவணை முறையில்) பேரீத்தம் பழத்திற்குப் பேரீத்தம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மாலிக் பின் அவ்ஸ்; என்ற தாபிஈ அவர்கள், தன்னிடம் சில தங்க தீனார்கள் இருந்ததாகவும், அவற்றை வெள்ளி திர்ஹம்களுக்கு மாற்றிக்கொள்ள விரும்பியதாகவும் கூறுகின்றார்கள். அப்போது தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், 'உங்கள் தீனார்களைத் தாருங்கள் பார்க்கலாம்' என்று கூறினார்கள். பின்பு அவர்கள் வாங்குவதாக முடிவெடுத்துவிட்டு, 'எமது பணியாள் வந்த பின்னர் வாருங்கள், நாம் உங்களுக்கு வெள்ளி திர்ஹம்களைத் தருவோம்' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் அந்த சபையில் இருந்தார்கள். அப்போது அவர்கள் இந்த வியாபார முறையைக் கண்டித்து, அபூ தல்ஹா இப்போதே அந்த வெள்ளியைக் கொடுக்கவேண்டும். அல்லது தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடவேண்டும் என்று சத்தியமிட்டுக் கூறிவிட்டுக் காரணத்தையும் விளக்கினார்கள். அதாவது, தங்கத்திற்கு வெள்ளியை விற்பதாக இருந்தாலும், வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதாக இருந்தாலும், உடனுக்குடனே விற்கவேண்டும். அவ்வியாபாரம் தடுக்கப்பட்ட வட்டியாகவோ, பிழையான வியாபாரமாகவோ இருக்கக்கூடாது. எனவே, தங்கத்தை தங்கத்திற்கும், வெள்ளியை வெள்ளிக்கும் உடனுக்குடன் விற்று, அவ்விடத்திலேயே மாற்றிக் கொள்ளவேண்டும். தொலி நீக்கப்பட்ட கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, பேரீத்தம்பழம் ஆகியவையும், ஒரே அளவில் நிறுக்கப்பட்டு, அல்லது ஒரே அளவாக அளக்கப்பட்டு, உடனுக்குடன் விற்கப்படவேண்டும். அவற்றில் எந்தவொன்றும் தவணை பிற்படுத்தி விற்க முடியாது. பொருட்களை மாற்றிக் கையகப் படுத்திக்கொள்ள முன்னர், பிரிந்து செல்ல முடியாது.
உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள், தாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து உடம்பில் உணர்ந்த ஒரு வலியை நபியவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்போது நபியவர்கள் அவர்களுக்கு இவ்வாறு கூறினார்கள் : உங்களது உடம்பில் வலியுள்ள பகுதியில் உங்கள் கையை வைத்து, இவ்வாறு கூறுங்கள் : "பிஸ்மில்லாஹ்" (3 தடவைகள்) "அஊது பில்லாஹி வகுத்ரதிஹி மின் சர்ரி மா அஜிது வஉஹாதிரு" (ஏழு தடவைகள்) 'அல்லாஹ்வைக் கொண்டும், அவனது ஆற்றலைக் கொண்டும் நான் உணரும், பயப்படும் இந்த வலியை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்ளுக்கு ஒரு வலி ஏற்பட்டு, அவர்களைக் கடுமையாகப் பாதித்தது. அவர் நபியவர்களிடம் சென்று முறைப்பட்டார்கள். அப்போது நபியவர்கள், அல்லாஹ் அவருக்கு ஏற்பட்டுள்ள வலியை நீக்கும் விதமாக ஒரு துஆவைக் கற்றுக் கொடுக்கின்றார்கள். அதாவது, அவர்கள் தாம் வலியை உணரும் இடத்தில் தமது கையை வைத்து, இவ்வாறு கூறவேண்டும். பிஸ்மில்லஹ் (3 தடவைகள்) 'நான் (தற்போது) உணரும், (எதிர்காலத்தில் பயத்தையும், கவலையையும் ஏற்படுத்தும் என, அல்லது தொடர்ந்து இருந்து, உடம்பு பூராகப் பரவிவிடலாம் எனப்) பயப்படும் இந்த வலியை விட்டும் அல்லாஹ்வைக் கொண்டும், அவனது ஆற்றலைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அவனிடமே ஒதுங்குகின்றேன்.)' (ஏழு தடவைகள்).
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில், நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்தி கற்றுக் கொடுப்பார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றை விட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர், மேலும் ரமளான் மாதத்தில் அவரது தாராள மனப்பான்மை இன்னும் அதிகமாக இருந்தது. அவர் வேண்டியவர்களுக்கு தாராளமாக கொடுப்பார். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன: 1- ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்தமை. 2- குர்ஆனை மீட்டுவது, அதாவது அல் குர்ஆனை மனப்பாடத்தில் ஓதுவதை மறுபரீசீலனை செய்வது. அல்குர்ஆனில் அந்நேரம் வரை இறக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதியோடு அதனை நபியவர்களுடன் மறுபரிசீலனை செய்தார்கள். இந்த நேரத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் மழையுடனும் கருணையுடனும் அனுப்பும் இனிமையான காற்றை விட, மக்களுக்கு மிகவும் தாராளமாகவும், கனிவாகவும், வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.