





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸுஹைர், உமாரா இப்னு ருஐபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மறைவதற்கு முன்னரும் தொழுத எவரும் நரகம் நுழையமாட்டார்கள். '
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், யாரெல்லாம், பஜ்ர் தொழுகையையும், அஸ்ர் தொழுகையையும் பேணித்தொழுது வருகின்றார்களோ, அவர்கள் நரகம் நுழையமாட்டார்கள் என அறிவிக்கின்றார்கள். இவ்விரு தொழுகையையும் குறித்துச் சொல்வதற்கான காரணம், இவ்விரண்டும் சிரமமான தொழுகைகளாக இருப்பதாகும். அதேபோன்று, ஸுபஹுடைய நேரம் என்பது, தூக்கத்தில் இன்பமாக இருக்கும் நேரமாகும். அஸ்ருடைய நேரம் என்பது, பகல்பொழுது வேலைகளிலும், வியாபாரத்திலும் ஈடுபடும் நேரமாகும். எனவே, சிரமங்கள் இருந்தபோதிலும், யார் இவ்விரு தொழகைகளையும் பேணி வருகின்றாரோ, அவர் நிச்சயமாக, ஏனைய தொழகைகளையும் பேணித் தொழுது வருவார்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்வுடைய தூதரே! நாம் கடல் பயணம் செய்கின்றோம். அப்போது, எம்முடன் சொற்பமான அளவு நீரையே சுமந்து செல்கின்றோம். அதைக் கொண்டு நாம் வுழூ செய்துவிட்டால், தாகித்துவிடுவோம். கடல் நீரால் நாம் வுழூ செய்யலாமா?' என்று கேட்டார். அப்போது நபியவர்கள், 'அதன் நீர் பரிசுத்தமானது, அதில் இறப்பவைகளும் ஹலாலானவையே' என்று கூறினார்கள்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, நாம் மீன் பிடித்தல், வியாபாரம் போன்ற நோக்கங்களுக்காக கப்பல்களில் பயணம் செய்கின்றோம். அப்போது நாம் குடிப்பதற்குப் பொருத்தமான சொற்ப அளவு நீரையே கொண்டு செல்கின்றோம். குடிப்பதற்கான நீரை, வுழூ செய்வதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தினால், அது தீர்ந்து விடும். குடிப்பதற்கு எமக்கு நீர் இருக்கமாட்டாது. எனவே, கடல் நீரில் இருந்து நாம் வுழூ செய்யலாமா? என்று கேட்டார். அப்போது நபியவர்கள், கடல் நீரைப் பற்றி, 'அதன் நீர் சுத்தமானது, மேலும், சுத்தப்படுத்தக் கூடியது. அதைக் கொண்டு வுழு செய்யவும், குளிக்கவும் செய்யலாம். அதிலிருந்து வெளிப்படும் மீன்கள் போன்றவற்றை சாப்பிடலாம். அவை வேட்டையாடப்படாமல், இறந்த நிலையில், நீரின் மேல் மிதந்துகொண்டிருந்தாலும் சரியே!
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் நீரைப் பற்றியும், அவற்றில் பிராணிகளும், மிருகங்களும் நீர் அருந்திவிட்டுச் செல்வது பற்றியும் கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள், பின்வருமாறு கூறினார்கள் : 'நீர் 'குல்லதைன்' அளவை எட்டிவிட்டால், அது அழுக்குகளை சுமக்கமாட்டாது.'
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்விலங்குகளும், மிருகங்களும் அருந்திவிட்டுச் செல்லும் நீரின் சுத்தநிலை பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது நபியவர்கள், 'அதன் கொள்ளளவு, இரு பீப்பாய்கள், அதாவது, 210 லீட்டர்கள் அளவு இருந்தால், அது அதிகமான நீராகும். அது அசுத்தமாகமாட்டாது. ஏதாவது ஒரு அசுத்ததைக் கொண்டு, அதனுடைய நிறம் அல்லது வாடை அல்லது சுவை ஆகிய தன்மைகள் மாற்றமடைந்தாலே தவிர.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் தனது உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தால், மூன்று தடவை மூக்கை சீறிவிடட்டும். ஏனெனில் ஷைத்தான் அவரது மூக்கினுள் இரவில் தரிக்கின்றான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள், தூங்கியெழும்புபவர் மூன்று தடவை, மூக்கினுள் நீரை செலுத்தி சீறிவிடுமாறு ஏவுகின்றார்கள். ஏனெனில் ஷைத்தான் மூக்கினுள் இரவுத் தரிக்கின்றான்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு 'ஸாஉ' முதல் ஐந்து 'முத்'து வரையிலான தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு 'முத்'து அளவுத் தண்ணீரில் வுழுச் செய்வார்கள்.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு ஸாஅ' முதல் ஐந்து முத் வரையிலான தண்ணீரைக் கொண்டு ஜனாபத்திலிருந்து தூய்மைபெற பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். அதே வேளை அவர்கள் ஒரு முத் தண்ணீரைக் கொண்டு வுழுச் செய்வார்கள். ஒரு ஸாஃ' என்பது நான்கு முத் ஆகும். ஒரு முத் என்பது சராசரி உடல் எடை கொண்ட ஒருவரின் இரண்டு உள்ளங்கைகளின் அளவாகும்.
உக்பா பின் ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்துவந்தோம். இந்நிலையில் எனது முறை வந்த போது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக் கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், ஒரு முஸ்லிம் அழகிய முறையில் வுழுச் செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்று கூறுவதை நான் கேட்டேன். உடனே நான் என்ன அருமையான வார்த்தை! என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்ததை; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன.அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்துகொள்ளலாம்''.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்களை நோக்கி உரையாற்றும்போது வுழுவின் இரண்டு மிகப்பெறும் சிறப்புகளை குறிப்பிட்டார்கள்: முதலாவதாக: நபிகளார் காட்டித்தந்த முறையில் யார் முறையாக, முழுமையாக, நிறைவாக, மற்றும் சரியான முறையில் ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய அளவு தண்ணீ எடுத்து வுழூச் செய்து, பின்னர், أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُولُهُ (அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்,) என்று கூறினால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படும். அவர் எந்த வழியாக வேண்டுமானாலும் நுழையலாம். இரண்டாவது: யார் மேற்கூறப்பட்ட முறையில் பரிபூரணமாக வுழுவைச் செய்துவிட்டு, பின்னர் இரண்டு ரக்அத்களைத் இஹ்லாஸுடன் -மனத் தூய்மைப் பேணி உள்ளமும் உடலின் அனைத்து உறுப்புகளும் அல்லாஹ்வுக்கு முற்றும் முழுவதுமாக பணிந்த நிலையில் தொழுதால், அவருக்கு நிச்சயம் சொர்க்கம் கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் வுழூ செய்து, பின்னர் தனது காலுறைகளை அணிந்துகொண்டால், அவற்றுடனேயே தொழட்டும். அவற்றின் மீது மஸ்ஹு செய்துகொள்ளட்டும். பின்பு – அவர் நாடினால் - குளிப்புக் கடமையாகிவிட்டாலே தவிர, அதனைக் கழற்றவேண்டியதில்லை.
இதனை இமாம் அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் வுழூ செய்த பின்னர் தனது காலுறைகளை அணிந்து, அதற்குப் பின்னர் வுழூ முறிந்து மீண்டும் வுழூ செய்ய நாடினால், - அவர் விரும்பினால் - அவ்விரண்டின் மீதும் மஸ்ஹு செய்துவிட்டு, அவற்றுடனேயே தொழலாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்கு அவற்றைக் கழற்றாமல் இருக்கலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள். ஆனால், அவருக்குக் குளிப்புக் கடமையாகவிட்டால், காலுறையைக் கழற்றிவிட்டுக் குளிக்கவேண்டும்.
அபூ ஸஈத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோன்புப் பெருநாட் தினமோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாட் தினமோ தொழுமிடத்திற்குச் சென்ற போது, பெண்களிடம் சென்று இவ்வாறு கூறினார்கள்: “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட மழுங்க வைப்பவர்களாகவும் உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்கத்திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு பெருநாள் தினம் நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்திற்குச் சென்றார்கள். ஏற்கனவே, பெண்களிடம், அவர்களுக்குத் தனியாக உபதேசிப்பதாக வாக்களித்திருந்தார்கள். அந்நாளில் அதை நிறைவேற்றினார்கள். நபியவர்கள் இவ்வாறு உபதேசித்தார்கள்: பெண்களே! தர்மம் செய்யுங்கள். அதிகம் பாவமன்னிப்புக் கேளுங்கள். இவ்விரண்டும் பாவமன்னிப்பின் மிக முக்கிய காரணிகளாகும். மிஃராஜ் உடைய இரவில், உங்களை நான் நரகவாதிகளில் அதிகமானவர்களாகக் கண்டேன். அப்போது அவர்களில் இருந்த அறிவும், புத்திசாதுர்யமும், நிதானமும் மிக்க ஒரு பெண், நாம் ஏன் நரகவாதிகளில் அதிகமானவர்களாக இருக்க வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள், 'பல காரணங்களினால். அதிகம் ஏசுகின்றீர்கள், சபிக்கின்றீர்கள், கணவனது உரிமையை மறுக்கின்றீர்கள். பின்பு நபியவர்கள் அவர்களை இவ்வாறு வர்ணித்தார்கள்: அறிவும், தீர்க்கமும், தன் விவகாரங்களைக் கையாளும் திறமையும் கொண்ட ஒரு ஆணையே மிகைப்பவர்களாக, அறிவும், மார்க்கமும் குறைவாக உள்ள பெண்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை. அப்போது அப்பெண், 'அல்லாஹ்வின் தூதரே! அறிவிலும், மார்க்கத்திலும் குறையிருத்தல் என்பதன் அர்த்தம் என்ன? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: பகுத்தறிவுக் குறைபாடென்பது, ஒரு ஆணின் சாட்சியத்திற்கு நிகராக இரு பெண்களின் சாட்சியம் இருப்பதாகும். இது அவளது பகுத்தறிவுக் குறைபாடாகும். மார்க்கத்தில் குறைபாடென்பது, நல்லமல்களின் குறைபாடாகும். அதாவது, மாதவிடாய் காரணமாக பல நாட்கள் அவள் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கின்றாள். இதுவே மார்க்கத்தில் குறைபாடு. எனினும், இதற்காக அவர்கள் குற்றம்பிடிக்கப்படவோ, கண்டிக்கப் படவோ மாட்டார்கள். இது அவர்களது இயற்கையான படைகோலம். இது, மனிதன் இயற்கையிலேயே பணத்தை விரும்புபவனாகவும், தன் விவகாரங்களில் அவசரப்படுபவனாகவும், அறியாமையுள்ளவனாகவும் இருப்பதைப் போல. இங்கு நபியவர்கள் அதைக் குறித்துக் கூறியது, அவர்களால் குழப்பத்திற்குள்ளாகாமல் இருக்கவே.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : உங்களில் யாரும் தனது இரு தோள்புயங்களிலும் எந்த ஒன்றும் இல்லாமல் ஒரு ஆடையில் தொழ வேண்டாம்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் ஒரே ஒரு ஆடையில் தொழுபவர், தனது தோள் புயங்கள் மேல் எதையும் வைத்து மறைக்காமல் தொழுவதை தடுக்கின்றார்கள். ஏனெனில் இரு தோள் புயங்களும் அவ்றத்தாக இல்லாவிட்டாலும், அவ்விரண்டையும் மறைப்பதுவே அவ்ரத்தை மறைப்பதை முழுமைப்படுத்தும். தொழுகையில் அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நிற்கும் போது இவ்வாறு மறைத்திருப்பது அவனை கண்ணியப் படுத்தும், மகத்துவப்படுத்தும் ஒரு அடையாளம் ஆகும்.