





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: நீ ஸுஜூது செய்தால் உனது இரு உள்ளங்கைகளையும் நிலத்தில் வைக்கவும். முழங்கைகளை உயர்த்திக் கொள்ளவும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தொழுகையில் ஸுஜூதில் இரு கைகளும் எவ்வாறு இருக்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள். அதாவது தனது இரு உள்ளங்கைகளையும், விரல்கள் கிப்லாவை முன்னோக்கி, சேர்க்கப்பட்ட வண்ணம் நிலத்தில் பட வைத்தல். இரு முழங்கைகளையும் நிலத்தை விட்டு உயர்த்தி விலாம்புறங்களில் இருந்து விலக்கி வைத்தல்.
வாஇல் பின் ஹுஜ்ர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் தனது வலப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ என்றும் இடப்புறமாக திரும்பி, السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ என்றும் கூறி, ஸலாம் கொடுப்பார்கள்.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிறைவு செய்ய நாடினால் வலப்புறமாகவும், இடப்புறமாகவும் ஸலாம் கொடுப்பார்கள். அதாவது தனது முகத்தை வலப்புறம் திருப்பி السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ என்றும் பின்னர் முகத்தை இடப்புறம் திருப்பி السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ என்றும் கூறுவார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99தடவைகள் கூறிவிட்டு 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்பர்ழான தொழுகை முடிந்த பின் கூற வேண்டிய தஸ்பீஹ் பற்றி தெளிவு படுத்தியுள்ளார்கள் அவை பின்வருமாறு : 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் பரிசுத்தமானவன்) 33 தடவைகள் 'சுப்ஹானல்லாஹ்' என்பதன் பொருள் அல்லாஹ் எல்லா வகையான குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதாகும். 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்புக்கே)33 தடவைகள் 'அல்ஹம்துலில்லாஹ'; என்பதன் கருத்து அல்லாஹ்வை அவனுக்குரிய பரிபூரண பண்புகளினால் அன்புடனும் மகிமைப்படுத்தியும் புகழ்வதாகும். அல்லாஹு அக்பர் 33 தடவைகள் (அல்லாஹ் மிகப்பெரியவன்) அதாவது அல்லாஹ் எல்லாவற்றையும் விட உண்ணதமானவன் மிகவும் கண்ணியத்துக்குரியவன். 100 வதாக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீ(க்)க லஹூ லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (பொருள்: உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) அதாவது : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. முழுமையான ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! மகிமைபடுத்துதல் மற்றும் நேசம் கொள்ளுதலுடன் புகழுக்கும் பாராட்டுக்கும் தகுதியானவன், அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் அவனுக்கு இயலாமை என்பது கிடையாது. இதனை யார் கூறுகிறாரோ கடல் கொந்தளிப்பின் போதும் அலைகளின் போதும் ஏற்படும் நுரையளவு அதிகமாக அவரின் பாவங்கள் இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டு விடும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை.'
இதனை இமாம் நஸாஈ குப்ராவில் பதிவு செய்துள்ளார்பர்ழான தொழுகை முடிந்த பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகிறாரோ அவர் சுவர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம் மாத்திரமே தடையாக உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆயத்துல் குர்ஸி ஸூறா பகராவில் இடம்பெற்றுள்ளது : அந்த வசனம் பின்வருமாறு: 'அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்ழி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி, யஃலமு மாபய்ன அய்தீஹிம் வமா கல்பஹும், வலா யுஹீதூன பிஷய்இம் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ழ வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம்' (பகரா 2:255). அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் நிலைத்திருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் சூழ்ந்தறிய முடியாது, அவன் நாடியதைத் தவிர. அவனது சிம்மாசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று, அவன் உயர்ந்தவன், மகத்துவமிக்கவன். (பகரா : 255).
நபிகள் நாயகம் (ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'உங்களில் ஒருவருக்கு, மூன்று ரக்அத்கள் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு, ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் (தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தொழுகையில் ஈடுபடும் ஒருவருக்கு தான் தொழுதது மூன்று ரக்அத்துக்களா? அல்லது நான்கு ரக்அத்க்களா? என்ற சந்தேகம் (தடுமாற்றம்) ஏற்பட்டால் அவர் தொழுததாக சந்தேகிக்கும் நான்காம் ரக்அத்தை தொழுததாக கொள்ளாது, மூன்று ரக்அத்க்கள் தொழுததாக உறுதியாக கொண்டு நான்காம் ரக்அத்தை நிறைவேவுற்றுவார். பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான இரு ஸஜ்தாக்களை செய்வார். அவ்வாறு அவர் தொழுதது உண்மையில் நான்காக இருந்தால் அவர் இன்னொரு ரக்அத்தை சேர்த்து தொழுவதால் ரக்அத்துக்களின் எண்ணிக்கை ஜந்தாக மாறும். ஆனால் அவர் மேலதிக ரக்அத்துக்கான ஸஜ்தா(ஸுஜுத் ஸஹ்வு) ஒரு ரக்அத்திற்கு பகரமாக காணப்படுவதால் அந்தத் தொழுகையின் எண்ணிக்கை இரட்டைப்படையாக அமையுமே தவிர ஒற்றைபடையாக அமையாது. அவர் மேலதிகமாக தொழும் ரக்அத்தினால் நான்கு ரக்அத் தொழுதிருந்தால் அன்னார் எவ்வித கூடுதல் குறைவின்றி தொழுகையை நிறைவேற்றியுள்ளார். தொழுகையை முடிப்பதற்கு முன் செய்யும் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்கள் ஷைத்தானுக்கு அவமானத்தையும், தோல்வியையும் ஏற்படுத்துவதோடு ஒரு முஸ்லிமை வழிகெடுக்கும் அவனது இலக்கிலிருந்து அவனைத் தூரப்படுத்தி அவனை இழிவின் பால் நகர்த்துகிறது. இந்நிலைக்கான காரணம் அவன் தொழுகையில் ஈடுபவரிடம்; தடுமாற்றத்தை ஏற்படுத்தி அதனை வீணாக்குவதற்கு எத்தனித்ததாகும். இருப்பினும், ஷைத்தான்; ஆதமுக்கு சிரம் தாழ்த்தி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய மறுத்த அதே செயலின் மூலம் மனிதன் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, ஸஜ்தா செய்த போது இறையடியானின் தொழுகை முழுமையடைந்து விட்டது.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ழுஹருக்கு முந்திய நான்கு ரக்அத்களையும், ஸுபஹுக்கு முந்திய இரண்டு ரக்அத்களையும் விடவே மாட்டார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், தனது வீட்டில், உபரியான தொழுகைகளான, ழுஹருக்கு முந்திய நான்கு ரக்அத்களையும் இரு ஸலாம்களுடனும், பஜ்ருக்கு முந்திய இரு ரக்அத்களையும் விடாமல் தொழுதுவருவார்கள் என ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறுவதைக் கேட்டதாக, அவர்களது மனைவியாகிய உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், பின்னர் நான்கு ரக்அத்களையும் யார் பேணித் தொழுதுவருகின்றாரோ, அவரை அல்லாஹ் நரகின் மீது ஹராமாக்கிவிடுவான்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்நபிலான தொழுகைகளான, ழுஹருக்கு முன்னர் நான்கு ரக்அத்களையும், பின்னர் நான்கு ரக்அத்களையும் யார் பேணித் தொழுது வருகின்றாரோ, அல்லாஹ் அவரை நரகின் மீது ஹராமாக்கி விடுவான் என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுக்கு முந்திய ஸுன்னாவில் قل يا أيها الكافرون قل هو الله أحد ஆகிய சூராக்களை ஓதினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபஹுடைய முன் ஸுன்னாவில், முதல் ரக்அத்தில், ஃபாத்திஹாவுக்குப் பின்னர் ஸூரா அல்காபிரூனையும், இரண்டாம் ரக்அத்தில் ஸூரா அல்இக்லாஸையும் ஓதுவதை விரும்புவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது முதல் ஸஃப்பாகும். அந்த ஸஃப்புகளில் கெட்டது கடைசி ஸஃப்பாகும். பெண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்தது அவற்றில் கடைசி ஸஃப்பாகும். அவைகளில் கெட்டது ஆரம்ப ஸஃப்பாகும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தொழுகையில் ஆண்களின் ஸஃப்புகளில் மிகச் சிறந்ததும் அதிகம் நன்மையையும் சிறப்பையையும் பெற்றுத் தரக்கூடியதும் முதல் ஸப்பாகும். ஏனெனில் முதல் வரிசையில் இருப்போர் இமாமுக்கு நெருக்கமாக இருக்கவும், அவரது ஓதலை எளிதாகக் கேட்பதற்குமான வாய்ப்பை பெறுவதோடு பெண்களை விட்டும் தூரமாகவும் இருக்கிறார். ஆண்களுக்கு மிகக் குறைந்த நன்மையையும், சிறப்பையும் பெற்றுத்தரக்கூடியதும், ஷரீஆவின் வேண்டுகோளை விட்டும் தொலைவில் உள்ள ஒரு விடயமாக கடைசி வரிசை (ஸப்பு) உள்ளது. மாறாக, பெண்களுக்குரிய சிறந்த வரிசை (ஸஃப்பு) கடைசி வரிசையாகும். ஏனென்றால் அது அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பானது, மேலும் அது ஆண்களுடன் கலப்பதிலிருந்தும், அவர்களைப் பார்ப்பதிலிருந்தும், அவர்களால் சோதிக்கப்படுவதிலிருந்தும் வெகு தொலைவில் உள்ளது. ஆண்களுடன் அவர்கள் நெருக்கமாக இருப்பதால், சோதனைக்கு ஆளாகிறார்கள் என்பதால், அவர்களின் வரிசைகளில் மிக மோசமானது முதல் வரிசையாகும்.