





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
வாபிஸா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதன் வரிசைக்குப் பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகையை மீட்டுமாறு அவருக்கு ஏவினார்கள்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்ஒரு மனிதன் வரிசைக்கு பின்னால் தனித்து நின்று தொழுவதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை மீட்டுமாறு அவரிடம் ஏவுகின்றார்கள். இவ்வாறு அவர் தொழுத தொழுகை நிறைவேறவில்லை என்பதே அதன் காரணமாகும்.
உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தொட்டு அறிவிக்கப் படுகிறது : ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எமக்கு ஸுப்ஹ் தொழுவித்ததுவிட்டு 'இன்னார் தொழுகைக்கு வந்துள்ளாரா? என்று கேட்டார்கள் அப்போது ஸஹாபாக்கள் இல்லை என்று கூற, மீண்டும் 'இன்னார் வந்துள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று கூறவே "'பஜ்ர் மற்றும் இஷா ஆகிய இரண்டு தொழுகைகளும் நயவஞ்சகனுக்கு மிகவும் பாரமான தொழுகைகளாகும். அவை இரண்டிற்கும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களேயானால் தவழ்ந்தாவது வந்து விடுவார்கள்.தொழுகையின் முன் வரிசை மலக்குமார்களின் வரிசையைப்போன்றதாகும். இதன் சிறப்பை அவர்கள் அறிவார்காளானால் விரைந்து வருவார்கள். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது தனித்து தொழுவதைவிடவும் மிகவும் சிறப்பானது. ஒருவர் இரண்டு நபரகளுடன் கூட்டாக தொழுவது ஒருவருடன் கூட்டாகத் தொழுவதைவிட சிறப்புக்குரியது. கூட்டுத் தொழுகையில் எவ்வளவு அதிகமாக மக்கள் கலந்து கொள்கிறார்களோ அது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது.
இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுவித்து விட்டு 'இன்னார் எமது இந்தத் தொழுகையில் கலந்து கொண்டுள்ளாரா? என்று விசாரித்தார்கள். அதற்கு ஸஹாபாக்கள் இல்லை என்று கூறினார்கள். பின்னர் இன்னொருவரைக் குறித்தும் அவர் வந்துள்ளாரா? என்று கேட்டார்கள். அதற்கும் ஸஹாபாக்கள் இல்லை என்று பதில் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சந்தேகத்திற்கு இடமின்றி, பஜ்ர் மற்றும் இஷா தொழுகைகள் நயவஞ்சகர்களுக்கு மிகவும் கடினமானவை, ஏனெனில் இந்த இரண்டு நேரங்களிலும் சோம்பேறித்தனம் மேலோங்கி நிற்கிறது, மேலும் இருள் காரணமாக யாரும் பார்க்க முடியாததால் நயவஞ்சகத்திற்கான –முகஸ்துதிக்கான- வாய்ப்பு குறைகிறது. முஃமின்களே! ஸுப்ஹ் மற்றும் இஷா தொழுகைகளுக்கு எவ்வளவு கூடுதல் வெகுமதியும் கூலியும் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருந்தால், (ஏனென்றால் முயற்சியின் அளவைப் பொறுத்து கூலியின் -நன்மை- அதிகரிக்கப்படுகிறது), நீங்கள் இந்த இரண்டு தொழுகைகளிலும் தவழ்ந்து வந்தாவது கலந்து கொள்வீர்கள் . உண்மையில், இமாமுக்கு அருகில் முதல் வரிசையில் இருப்பது அல்லாஹ்வுக்கு பக்கத்தில் மலக்குகள் இருக்கும் வரிசையைப் போன்றது. முஃமின்கள் முதல் வரிசையின் சிறப்பு என்ன என்பதை அறிவார்களாயின் உண்மையில் அவர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள். ஒருவர் தனியாகத் தொழுவதை விட, மற்றொரு நபருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது அதிகம் நன்மையை பெற்றுத்தரக்கூடியது. மேலும் ஒருவர் தனியாகத் தொழுவதை விட, இருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுவது மிகவும் சிறந்தது. தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் தொழுகை அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானதும் சிறந்ததுமாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, முஃமின்களின் தாயார், ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : எந்தப் பெண்ணாவது தனது பொறுப்புதாரிகளின் அனுமதியின்றி திருமணம் செய்தால், அவளது திருமணம் செல்லாது, செல்லாது, செல்லாது. அவன் அவளுடன் உறவு கொண்டிருந்தால், அதனால் மஹர் அவளுக்குரியதாகிவிடும். அவர்கள் (பொறுப்புதாரிகள்) முரண்பட்டுக் கொண்டால், பொறுப்புதாரி அற்றவர்களுக்கு ஆட்சியாளரே பொறுப்புதாரியாவார்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்ஒரு பெண் தனது பொறுப்புதாரிகளின் அனுமதி இன்றி தானாகவே திருமணம் செய்து கொள்வதை நபியவர்கள் எச்சரித்து, அது செல்லுபடியற்றது என்று மூன்று தடவைகள் கூறினார்கள். அதாவது, அவ்வாறான திருமணம், நடக்காத ஒரு திருமணத்தை போன்று என்பதை உணர்த்துகின்றார்கள். திருமணம் செய்து கொண்டவன், அவளது பொறுப்புதாரிகளின் அனுமதி இன்றி அவளோடு உறவு கொண்டிருந்தால், அவளது மர்மஸ்தானத்தில் உறவு கொண்ட காரணத்தினால் மஹர் முழுவதும் அவளுக்கு வழங்கப்படும். திருமணத்திற்கு பொறுப்பாக வருவதில் சம அந்தஸ்தில் உள்ள பலர் முரண்பட்டுக் கொண்டால் அவர்களின் ஒப்பந்தத்திற்கு யார் முந்திக் கொள்கின்றாரோ, அவரே தகுதியானவர். ஆனால் அவர் அவளுக்கு நலவு நாடுபவராக இருக்க வேண்டும். ஒரு பொறுப்புதாரி பெண்ணுக்கு திருமணம் செய்து கொடுக்காமல் தவிர்ந்து வந்தால், அவள் பொறுப்புதாரி அற்றவளாகக் கொள்ளப்பட்டு, நாட்டுத் தலைவரோ அல்லது அவருக்குப் பதிலாக உள்ள நீதிபதிகள் போன்றோரோ பொறுப்புதாரி ஆகிவிடுவார்கள். அவ்வாறில்லாமல் பொறுப்புதாரி ஒருவர் இருக்கும் போது நாட்டுத் தலைவர் வலியாக வர முடியாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்பவன் சபிக்கப்பட்டவனாவான்.
இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்தன் மனைவியின் பின் துவாரத்தில் உறவு கொள்ளும் கணவன் இறையருளில் இருந்து விரட்டப்பட்ட, சாபத்திற்குறியவன் எனக் கூறி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். அது பெரும்பாவங்களில் ஒன்றாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ஓர் ஆணுடனோ, பெண்ணுடனோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்பவனை அல்லாஹ் பார்க்கவே மாட்டான்.
இதனை இமாம் திர்மிதியும், குப்ரா எனும் நூலில் இமாம் நஸாஈயும் பதிவு செய்துள்ளனர்ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ பின் துவாரத்தில் உறவு கொள்பவனை அல்லாஹ் தனது அருட்பார்வை கொண்டு பார்க்கமாட்டான் எனவும், அது ஒரு பெரும் பாவம் எனவும் கடுமையான ஓர் எச்சரிக்கையை இங்கு நபியவர்கள் விடுக்கின்றார்கள்.
முஆவியா அல் குசைரீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான், 'அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருவர் தமது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ன?' எனக் கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'நீ உண்டால் அவளுக்கும் உணவளிக்க வேண்டும். நீ ஆடையணிந்தால் (அல்லது சம்பாதித்தால்) அவளுக்கும் ஆடையளிக்க வேண்டும். அவளது முகத்தில் அடிக்கக் கூடாது. அவளை அசிங்கப்படுத்தக் கூடாது. அவளை வீட்டிற்குள்ளே தவிர ஒதுக்கி வைக்கக்கூடாது.
இமாம்களான அபூதாவுத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஒரு கணவன் தனது மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றி நபியவர்களிடம் வினவப்பட்ட போது, சில விடயங்களை நபியவர்கள் கூறினார்கள்: பின்வருவன அவற்றில் சிலவாகும்: 1. அவளுக்குக் கொடுக்காமல் நீ மாத்திரம் சாப்பிட்டு விடாதே. மாறாக நீ சாப்பிடும் போதெல்லாம் அவளுக்கும் உணவளி. 2. நீ மாத்திரம் ஆடை அணிந்துகொள்ளாமல், நீ அணியும் போதும், நீ சம்பாதித்து உனக்கு வசதி இருக்கும் போதும் அவளுக்கும் ஆடை வழங்க வேண்டும். 3. தேவைக்காகவும் நியாயமான காரணத்திற்காகவும் மாத்திரமே அவளை அடிக்க வேண்டும். ஒழுக்கமூட்டவோ, அல்லது கடமைகளை விட்டதானாலோ அவளை அடிக்க வேண்டி ஏற்பட்டால், காயம் ஏற்படாதவாறு அடிக்க வேண்டும். முகத்தில் அடிக்கக் கூடாது. ஏனெனில் முகம் மிக முக்கியமான, தென்படக்கூடிய உறுப்பாக உள்ளதோடு, கண்ணியமான பகுதிகளையும், மென்மையான உறுப்புக்களையும் அது கொண்டுள்ளது. 4. அவளை ஏசாதே! அல்லது, 'அல்லாஹ் உனது முகத்தை அசிங்கப்படுத்திவிடட்டும்.' என்று கூறி விடாதே. அவளோ, அவளது உடலின் ஏதாவது ஒரு பகுதியோ அழகின்றி அசிங்கமாக உள்ளது என்று கூறி விடாதே! ஏனெனில், அல்லாஹ்வே மனிதனின் முகத்தையும் உடலையும் படைத்தவன். அவன் அழகாகவே படைத்துள்ளான். படைக்கோலத்தைக் குறைகூறுவது படைத்தவனைக் குறைகூறுவது போன்றது. அல்லாஹ் பாதுகாப்பானாக!. படுக்கையிலே தவிர அவளை ஒதுக்கி விடாதே. அவளை விட்டு வேறிடம் சென்று விடாதே. அவளை வேறு வீட்டிற்கு மாற்றி விடாதே! இது கணவன் மனைவியருக்கு மத்தியில் சர்வசாதாரணமாக நடக்கும், தண்டிக்கும் முறைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: யாருக்கு இரு மனைவியர் இருந்து, அவர்களில் ஒருவர் பக்கம் சாய்ந்து விடுகின்றாரோ, அவர் மறுமையில் உடலின் ஒரு பாதி வளைந்த நிலையில் வருவார்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜ, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்யாருக்காவது பல மனைவியர் இருந்து, செலவழித்தல், தங்குமிடம் மற்றும் ஆடை வழங்கல், இராத்தரித்தல் போன்ற இயலுமான அம்சங்களில் அவர்களிடையே நீதம் செலுத்தா விட்டால் அதற்குத் தண்டனையாக மறுமையில் அவரது உடலின் ஒரு பாதி வளைந்தவாராக வருவார் என நபியவர்கள் கூறுகின்றார்கள். மனைவியரோடு நடந்து கொள்வதில் ஒரு பக்கம் சாய்ந்து, அநீதமிழைத்தமைக்கான தண்டனையாக இவ்வாறு வளைந்து வருவார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தில் வரும் தீய எண்ணங்களுக்கு, அவர் அவற்றைச் செயல்படுத்தும் வரை அல்லது அவற்றை வெளிப்படுத்தும் வரை –(அது குறித்து பேசும் வரை) குற்றம் பிடிக்கப்படமாட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள். ஏனென்றால் சிரமத்தை நீக்குதல் அடிப்படையில் அத்தகைய எண்ணங்களை அல்லாஹ் மன்னிக்கிறான். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சமூகத்தாரின் மனங்களிலும் இதயங்களிலும் தோன்றி மறையும் எண்ணங்களுக்கு அவை மனதில் நிலையாக குடிகொண்டாலே தவிர குற்றம் பிடிக்கப்பட மாட்டாது . ஆணவம், கர்வம், நயவஞ்சகத்தனம் போன்ற கெட்ட எண்ணங்கள் எவனுடைய உள்ளத்தில் நிலைகொண்டு, உள்ளம் அவற்றால் திருப்தி காணும் அளவிற்கு அவற்றுக்கு இடமளிக்கிறானோ, அல்லது தன் உறுப்புகளினால் அவற்றைச் செய்கிறானோ அல்லது தன் நாவால் அவற்றை வெளிப்படுத்துகிறானோ அவன் குற்றம் பிடிக்கப்படுவான் என்கிறது இந்த ஹதீஸ்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: எழுது கோள் மூவரை விட்டும் உயர்தப்படுகிறது: (மூவரின் செயல்கள் பதியப்படுவதில்லை) தூங்குபவர் விழித்தெழும்வரை, சிறுவன் பருவவயதை அடையும் வரை, புத்திசுவாதின மற்றவர் அவரின் புத்தி தெளியும் வரை.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, குப்ரா எனும் நூலில் இாம் நஸாஈ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்ஆதமின் சந்ததிகளில் மூன்று நபர்களைத் தவிர மற்ற அனைரும் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள், அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவது அவசியம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த மூன்று நபர்களும் பின்வருமாறு : ஒரு குழந்தை வளர்ந்து பருவமடையும் வரை. புத்திசுவாதினமற்றவர்; அவரின் புத்தி தெளியும் வரை. தூங்குபவர் விழித்தெழும் வரை இந்த மூன்று பிரிவினரும் மார்க்கரீதியான கடமையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். அவர்கள் தீமை செய்தால், அது அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்படாது. ஆனால் ஒரு சிறு குழந்தை நன்மை செய்தால் அது பதிவு செய்யப்படுகிறது. ஆனால் ஒரு புத்திசுவாதீனமற்றவர் அல்லது தூங்கும் நபரின் நன்மை பதிவு செய்யப்படுவதில்லை. அவர்கள் உணர்வு நிலையில் இல்லாததால் அவர்களின் வழிபாடு செல்லுபடியாகாது.