





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ் கூறுகின்றான் : ஆதமுடைய மகனின் அமல்கள் அனைத்தும் அவனுக்குரியதாகும். நோன்பைத் தவிர. ஏனெனில் அது எனக்குரியதாகும். அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு ஒரு கேடயமாகும். உங்கள் ஒருவருடைய நோன்பு தினமாக இருந்தால், அவர் கெட்டவார்த்தைகள் பேசவேண்டாம், வீணாக சப்தமிடவேண்டாம். யாராவது அவருக்கு ஏசினால், அல்லது சண்டைக்கு வந்தால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடட்டும். முஹம்மதுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட வாசமானது. ஒரு நோன்பாளி சந்தோசப்படும் இரு சந்தோசங்கள் உள்ளன: அவன் நோன்பு திறக்கும் போது சந்தோசப்படுவான். தனது ரப்பை சந்திக்கும் போது, தனது நோன்பை நினைத்து சந்தோசப்படுவான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ் தஆலா ஹதீஸ் குத்ஸியில் பின்வருமாறு கூறுவதாக நபியவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆதமுடைய மகனின் அனைத்து அமல்களும், பத்து மடங்கு தொடக்கம் எழுநூறு மடங்கு வரை பன்மடங்காக்கப்படும். நோன்பைத் தவிர. ஏனெனில், அதில் முகஸ்துதி வர வாய்ப்பில்லை என்பதால், அது எனக்கே உரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். அதற்கான கூலியின் அளவு மற்றும் அதன் நன்மைகள் பன்மடங்காக்கப் படுவது பற்றிய அறிவு என்னிடமே உள்ளது. பின்பு அல்லாஹ் கூறுகின்றான் : நோன்பு ஒரு கேடயமாகும். அதாவது, நரகை விட்டும் பாதுகாக்கும் திரையாகவும், பலமான கோட்டையாகவும் அது இருக்கும். ஏனெனில், நோன்பு என்பது இச்சைகளையும், பாவத்தில் வீழ்வதையும் தவிர்ப்பதாகும். நரகம் இச்சைகளாலேயே சூழப்பட்டுள்ளது. உங்களில் ஒருவர் நோன்புடைய தினத்தில் இருந்தால், அவர் முற்றாகவே கெட்ட வார்த்தைகளைப் பேசவேண்டாம். (இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 'ரபஸ்' என்ற வார்த்தைக்கு, 'உடலுறவிலோ, அதற்குத் தூண்டக்கூடியவற்றிலோ ஈடுபடவேண்டாம்' என்ற அர்த்தமும் உள்ளது. அவர் (இரைச்சல்கள், தர்க்கங்கள் என்பவற்றின் மூலம்) சப்தமிடவும் வேண்டாம். ரமழானில் (யாராவது அவரை ஏசினால், அல்லது சண்டைக்கு வந்தால்) நான் நோன்பாளி எனக் கூறிவிடட்டும். அப்போது அவர் சிலவேளை தவிர்ந்து கொள்வார். அவர் உண்மையிலேயே சண்டையிடுவதிலேயே விடாப்பிடியாக இருந்தால், அத்துமீறுபவர்களைத் தடுப்பது போன்று, இலகுவான படிமுறைகளைக் கடைப்பிடித்துத் தடுக்கட்டும். பின்பு நபியவர்கள், நோன்பின் காரணமாக நோன்பாளியின் வாயில் ஏற்படும் மாற்றமான வாடை, ஜும்ஆக்களிலும், திக்ருடைய சபைகளிலும் பூசிக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்ட, உங்களிடமுள்ள கஸ்தூரியின் வாடையை விட மறுமையில் மணமானதாகவும், சிறந்த கூலியைத் தரக்கூடியதாகவும் இருக்கும் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொல்கின்றார்கள். நோன்பாளிக்கு மகிழ்ச்சியைத் தரும் இரு சந்தோசங்கள் உள்ளன : நோன்பு துறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் அவன் நோன்பு துறக்கும் போது, பசி மாற்றும் தாகம் நீங்குவது கொண்டும், அவனது வணக்கம் பூரணமடைந்து, நோன்பு நிறைவடைந்ததாலும், இறைவன் புறத்தில் இருந்து வந்த அந்த இலகுபடுத்தலாலும், அது அடுத்த நோன்புகளைப் பிடிக்க உதவியாக இருப்பதாலும் அவன் சந்தோசப்படுகின்றான். அவன் தனது ரப்பைச் சந்தித்தால், தனது நோன்பைக்கொண்டு (அதாவது அதற்கான கூலியைக் கொண்டு) அவன் சந்தோசப்படுவான்.
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைக் காணவில்லை. அவர்களை நான் தேடியபோது எனது கை அவர்களது உட்கால்ப் பாதங்களைத் தொட்டது. அவை நட்டிவைக்கப் பட்டிருந்தன. அவர்கள் பள்ளிவாசலில் இருந்தார்கள். அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்தார்கள்: யா அல்லாஹ்! உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும், உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு உன் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ உன்னைப் புகழ்ந்தது போல, என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் நபியவர்களுக்கு அருகாமையில் உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென இரவில் அவர்களைக் காணவில்லை. அப்போது, அவர்கள் அறையில் இரவுத் தொழுகை தொழும் இடத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கு இரு பாதங்களும் நேராக இருக்க, அவர்கள் ஸுஜூதில் இருந்துகொண்டு, இவ்வாறு கூறிக்கொண்டிருந்தார்கள்: “நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்” (அதாவது பாதுகாக்குமாறு உதவி தேடுகின்றேன்) “உன் திருப்தியைக் கொண்டு உனது கோபத்தை விட்டும்” (என் மீதோ, எனது சமுதாயம் மீதோ நீ கோபப்படுவதை விட்டும்) உன்னிடமுள்ள ஈடேற்றத்தைக் கொண்டு (உனது அதிக மன்னிப்பைக் கொண்டு) உன் தண்டனையை விட்டும் “உன்னைக் கொண்டே, உன்னை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன்.” (உனது அழகு, மற்றும் கண்ணியத்தின் பண்புகளைக் கொண்டு. நீயே உன்னை விட்டும் பாதுகாப்பாய். அல்லாஹ்விடமிருந்து தப்பி ஒதுங்குவதற்கான இடம் அவனிடத்தைத் தவிர வேறில்லை). “என்னால் உன்னைப் புகழ்ந்து முடிக்க முடியாது”. (நான் எவ்வளவு முயற்சித்தாலும், உனது பேருபகாரங்களையும், அருட்கொடைகளையும் என்னால் அளவிட முடியாது என்பதால், உனக்குத் தகுதியான அளவு உன்னைப் புகழ்ந்து முடிக்கவும் இயலாது.) “நீ உன்னைப் புகழ்ந்தது போல” நீ மாத்திரமே உனக்குப் பொருத்தமான விதத்தில் உன்னைப் புகழ்ந்துள்ளாய். எனவே, யாரால் உன்னைப் புகழும் கடமையை சரிவரநிறைவேற்றமுடியும்?
ஷுரைஹ் பின் ஹானி அவர்கள் கூறுகின்றார்கள்: நான் ஆஇஷா (ரழி) அவர்களிடம், “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்வார்கள்?" எனக் கேட்டதற்கு, "பல் துலக்குவார்கள்" என்றார்கள் அவர்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் வீட்டினுள், இரவிலோ, பகலிலோ எந்த நேரத்தில் நுழைந்தாலும் முதலாவதாக பற்களை சுத்தப்படுத்துவது அவர்களது வழிமுறையாக இருந்தது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : இரவிலிருந்து காலை வரை உறங்கிய ஒரு மனிதரைப் பற்றி நபியவர்களிடம் கூறப்பட்ட போது, "அம்மனிதனின் இரு காதுகளிலும் (அல்லது ஒரு காதில்) ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்." என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இரவிலிருந்து சூரியன் உதித்து காலையாகும் வரை உறங்கி, கடமையான தொழுகைக்கு எழுந்துசெல்லாத ஒரு மனிதரைப் பற்றி நபியவர்களிடம் கூறப்பட்ட போது, "அம்மனிதனின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்." என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : உங்களில் ஒருவர் உறங்கும் போது ஷைத்தான் அவரது தலையின் பிடரியில் மூன்று முடிச்சுக்களை இடுவான். ஒவ்வொரு முடிச்சின் போதும், 'உனக்கு நீண்ட இரவு உள்ளது. எனவே உறங்கு' எனக் கூறுவான். அவர் விழித்து, அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு நீங்கிவிடும். அவர் வுழூ செய்தால் இன்னொரு முடிச்சும் நீங்கிவிடும். அவர் தொழுதுவிட்டால் அடுத்தமுடிச்சும் நீங்கிவிடும். எனவே அவர், சுத்தமான உள்ளத்துடன், உற்சாகமானவராக காலைப்பொழுதை அடைவார். அவ்வாறில்லா விட்டால் கெட்ட உள்ளத்துடன் சோம்பேறியாகக் காலைப் பொழுதை அடைவார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ஷைத்தானுடைய நிலையையும், இரவுத்தொழுகைக்காக, அல்லது பஜ்ர் தொழுகைக்காக எழும்ப நினைக்கும் மனிதனோடு அவன் செய்யும் போராட்டத்தையும் விளக்குகின்றார்கள். ஒரு விசுவாசி தூங்கச் சென்றால், ஷைத்தான் அவனது பிடரியின் மீது மூன்று முடிச்சுக்களை இடுவான். அந்த முஃமின் கண்விழித்து, பின்னர் ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு செவிசாய்க்காமல் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடும். அவன் வுழூ செய்தால் அடுத்ததும் அவிழ்ந்து விடும். அவன் எழுந்து தொழுதால், மூன்றாவது முடிச்சும் அவிழ்ந்துவிடும். வணக்கத்தில் ஈடுபடுவதற்கான பாக்கியத்தை அவனுக்கு அல்லாஹ் வழங்கிய மகிழ்ச்சியினாலும், ஷைத்தானுடைய முடிச்சுக்களும், தடுப்புக்களும் நீங்கிவிட்டதாலும் நல்லுள்ளத்துடனும், உற்சாகத்துடனும், அல்லாஹ் அவனுக்கு வாக்களித்துள்ள நன்மைகளையும், பாவமன்னிப்பையும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்த நிலையிலும் காலையை அடைவான். அவ்வாறில்லாவிட்டால், கெட்ட உள்ளத்துடனும், கவலையான மனத்துடனும், நற்கருமங்களில் ஈடுபட சோம்பல்பட்ட நிலையிலும் தான் காலையை அடைவான். ஏனெனில் அவன் ஷைத்தானின் விலங்குகளினால் விலங்கிடப்பட்டுள்ளான். ரஹ்மானின் நெருக்கத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுள்ளான்.
மஃதான் இப்னு அபீதல்ஹா அல்யஃமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை சொல்லித்தாருங்கள் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரழி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம்கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு அந்தஸ்தை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்கிறான் என்று கூறினார்கள். என்றார்கள். பின்னர் நான் அபுதர்தா (ரழி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் ரழி அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்சுவர்க்கத்திற்குள் பிரவேசிக்க காரணமாக அமையும் செயல் குறித்து அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்கள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேள்வி கேட்டவரைப் பார்த்து (அதிகமான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம்) அதிகமாக ஸுஜுத் செய்வதை பேணி வருவீராக, அவ்வாறு நீ செய்யும் ஒரு ஸஜ்தா உனது ஒரு அந்தஸ்த்தை உயர்த்தும். உனது குற்றமொன்றை அல்லாஹ் அதன் மூலம் மன்னித்து விடுகிறான் என்று பதிலளித்தார்கள்.
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் இறுதி பத்துத் தினங்களிலும் ஏனைய தினங்களில் இல்லாத அளவு முயற்சிப்பார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ரமழானின் இறுதிப் பத்துத் தினங்களும் வந்து விட்டால், ஏனைய காலங்களை விட, வணக்க வழிபாடுகளில் அதிக முயற்சியுடன், ஈடுபட்டு, பல்வேறுபட்ட நன்மைகளைக் கூடுதலாகச் செய்வார்கள். அவ்விரவுகள் மகத்தான சிறப்புடையவாக இருப்பதோடு, லைலதுல் கத்ரையும் தேடுவதே அதன் காரணமாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூ அப்ஸ் அப்துர் ரஹ்மான் பின் ஜப்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஓர் அடியானின் இரு கால் பாதங்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் புழுதி படிந்தால், அவற்றை நரகம் தீண்டமாட்டாது.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்யாராவது அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிந்து, அதன் மூலம் அவரது பாதங்களில் புழுதி படிந்தால் அவரை நரகம் தீண்டாது என நபியவர்கள் நற்செய்தி கூறுகின்றார்கள்.
அபூ கதாதா (ரழி) அவர்கள் தம்மிடம் கடன்பெற்ற ஒருவரைத் தேடிச் சென்றபோது, அவர் ஒழிந்து கொண்டார். பின்பு அவரைக் கண்டபோது, “நான் கஷ்டத்தில் உள்ளேன்” என்று கூறினார் அவர். அதற்கு அபூ கதாதா அவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? அல்லாஹ்வின் மீது ஆணையாகவா? எனக் கேட்டுவிட்டு, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக பின்வருமாறு அறிவித்தார்கள்: யாராவது ஒருவருக்கு, அல்லாஹ் தன்னை மறுமையின் துன்பங்களில் இருந்து பாதுகாப்பது மகிழ்ச்சியைத் தரும் என்றிருந்தால், அவர் கஷ்டத்தில் இருக்கும் ஒரு கடனாளிக்கு அவகாசம் கொடுக்கட்டும், அல்லது தள்ளுபடி செய்யட்டும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தனக்குத் தரவேண்டிய கடனைத் தராமல் ஒழிந்து கொண்டிருந்த ஒரு மனிதரை அபூ கதாதா அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் போது அவரைக் கண்டு கொண்டார்கள். அப்போது அம்மனிதர், 'நான் கஷ்டவாளி, கடனைத் திரும்பத் தருவதற்கான பணம் என்னிடம் இல்லை' எனக் கூறினார். தன்னிடம் பணம் இல்லை எனச் சத்தியம் செய்யும் படி அவரிடம் கேட்டார்கள். அவரும், தான் கூறுவது உண்மையே எனச் சத்தியம் செய்தார். அப்போது அபூ கதாதா அவர்கள், நபியவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக இவ்வாறு கூறினார்கள்: மறுமையின் துன்பங்கள், சிரமங்கள் மற்றும் பயங்கரங்களில் இருந்து பாதுகாக்கப்பட யார் விரும்புகின்றாரோ, அவர் சிரமத்தில் உள்ள ஒரு கடனாளியின் கடனுக்குத் தவணையை நீடித்துக் கொடுத்தோ, அல்லது கடனை பகுதியாகவோ, முழுமையாகவோ தள்ளுபடி செய்தோ இலகுபடுத்திக் கொடுக்கட்டும்.