





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பி;ன்னர் அவர்கள் குளிப்பார்கள் . பின்னர் விரல்களால்; தலை முடியின் அடிப்பாகம் நனையுமளவிற்கு கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.' நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா(ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்'நபிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற நாடினால் தனது இரு கைகளையும் முதலில் கழுபவர்களாக இருந்தார்கள். பின்னர்; தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள் பின்னர் தனது தலைமுடியின் அடிப்பாகத் தோல் நனையும் வரை இரு கைகளினாலும் கோதுவார்கள். பின்னர் தலையின் மீது மூன்று முறை நீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலின் எஞ்சிய எல்லாப் பகுதிகளையும் கழுவுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். நாங்கள் இருவரும் சேர்ந்து பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளுவோம்' என ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நான் அதிகமாக 'மதி' எனும் இச்சை (ஆசை)நீர் வெளிப்படுபவனாக இருந்தேன். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளுடைய கணவன் என்பதால் இது பற்றி வினவுவவதற்கு எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவர்களிடம் இது பற்றி கேட்டு வருவதற்கு அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பினேன். அவர் சென்று கேட்டபோது; 'அவர் தனது ஆண்குறியைக்(ஆணுறுப்பை) கழுவிவிட்டு வுழு செய்யட்டும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரியின் அறிவிப்பில்' 'நீ உன்னுடைய ஆண்குறியைக் கழுவிவிட்டு வுழுச் செய்து கொள்' என்று இடம்பெற்றுள்ளது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு அதிகம் இச்சை நீர் வெளிப்படுவதாக அறிவிக்கிறார்கள். மத்யு' என்பது வெள்ளை நிறத்திலான பசைபோன்ற மென்மையான நீராகும். இது ஆண் குறியிலிருந்து இச்சை மேலீட்டால் அல்லது குடும்பவாழ்வில் ஈடுபட முன்னர் வெளிப்படும். அது வெளியேறுகையில் என்ன செய்யவேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை . நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகளான பாத்திமாவின் கணவர் என்பதால் இது குறித்து நபியவர்களிடம் கேட்க வெட்கப்பட்டார். எனவே இது குறித்து அறிந்து கொள்ள, நபியவர்களிடம் அல்மிக்தாத் இப்னுல் அஸ்வத் அவர்களை அனுப்பி வைத்தார். அவர் நபியவர்களிடம் இது விடயமாக கேட்டபோது: நபியவர்கள் தனது ஆண்குறியை நன்றாக கழுவிவிட்டு பின் வுழு செய்யுங்கள் என பதிலளில்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்' என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல் என்றார்கள்;(இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்) இவற்றை நான் கேட்ட கேள்விகளுக்கு இவற்றை குறிப்பிட்டார்கள், நான் (கேள்வியை) மேலும் அதிகப்படுத்தியிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் இன்னும் அதிகமாக கூறியிருப்பார்கள்.”
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது? அதற்கு நபியவர்கள்; பர்ழான தொழுகைகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் வரையறுத்துக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதாகும் எனப் பதிலளித்தார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்களில் இரண்டாவதாக பெற்றோருக்கு உபகராம் புரிதல், அவர்களின் உரிமைகளை நிறைவேற்றுதல் அவர்களுக்கு நோவினை செய்யாதிருப்பதன் மூலம் அவர்கள் இருவருக்கும் நன்மை செய்தல் எனக் குறிப்பிட்டார்கள். மூன்றாவதாக அல்லாஹ்வின் வார்த்தையான கலிமாவை மேலோங்கச் செய்யவும், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்கவும், அவனின் அடையாளங்களை தெரியப்படுத்தவும் உயிராலும் உடமையாலும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல். மேற்படி செயல்களை நபியவர்கள் நான் கேட்டதன் அடிப்படையில் எனக்குக் கூறினார்கள். நான் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான விடயங்கள் எது என தொடர்ந்தும் கேட்டிருந்தால் இதனைவிட அதிகமாக கூறியிருப்பார்கள் என இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இரு மலக்குகள் இறங்கி பிரார்த்திப்பார்கள் என நபியவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் இவ்வாறு கூறுவார்: "யா அல்லாஹ்! வணக்கங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், விருந்தாளிகளுக்காகவும், உபரியான நற்கருமங்களுக்காகவும் செலவழிப்பவர்களுக்கு அவற்றை விடச் சிறந்த ஒன்றைப் பதிலாக வழங்கி, அவருக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக" மற்றவர் இவ்வாறு கூறுவார்: செலவழிக்காமல் வைத்துக் கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக! உரியவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொண்ட அவரது சொத்தை அழித்துவிடுவாயாக!
ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கைபர் நாளில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ்வுடையவும் அவனு டைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப்போகிறேன். அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான்' என்று கூறினார்கள். அந்தக் கொடி தம்மில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் ஆழ்ந்திருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அலீ பின் அபீதாலிப் எங்கே?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வலி ஏற்பட்டுள்ளது' என்று கூறப்பட்டது. நபி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், '(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்புங்கள்' என்று கூறினார்கள். அலீ (ரழி) அவர்கள் அழைத்து வரப்பட்டபோது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காகப் பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வலி எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், அலீ (ரழி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ (ரழி) அவர்கள், 'நம்மைப் போன்று அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாய்) ஆகும்வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா?'என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்கள், 'நிதானமாகச் சென்று, அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள்மீது கடமையாகின்ற, அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நல்வழியளிப்பது (அரபியரின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றைத் தர்மம் செய்வதை)விட உங்களுக்குச் சிறந்ததாகும' என்று சொன் னார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தான் யாரிடம் கொடியை கையளிக்கிறேனோ அவரின் மூலம் நாளை கைபர் யூதர்களை முஸ்லிம்கள் வெற்றிகொள்வார்கள் என ஸஹாபாக்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அறிவிக்கிறார்கள். கொடி என்பது படையினர் தமக்கு அடையாளாமாக குறியீடாக எடுத்துக்கொள்ளும் ஒரு விவகாரமாகும். குறித்த நபரின் பண்புகளில் ஒன்று அவர் அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நேசிப்பவர், அவரையும் அல்லாஹ்வும் அவனின் தூதரும் நேசிக்கின்றனர். இந்த மாபெரும் சிறப்பை அடைந்து கொள்ளும் ஆர்வம் கொண்டதினால் ஸஹாபாக்கள் யாவரும் இந்த கொடி யாரிடம் வழங்கப்பட உள்ளதோ என்ற பேச்சில் மூழ்கி இரவு முழுவதையும் கழித்தனர். அதிகாலையானதும் குறித்த இம்மாபெரும் சிறப்பை அடைந்து கொள்ளவதை எதிர்பார்த்து அவர்கள் அனைவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்றனர். அப்போது நபியவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப்பற்றி விசாரித்தார்கள் அதற்கவர்கள் அலி ரழி ஒரு நோயாளி அவர் கண்ணோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினர். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அலி (ரழி) அவர்களை அழைத்துவர ஆட்களை அனுப்பினார்கள். அலி (ரழி) அவர்கள் வந்ததும் தனது புனித எச்சிலை அவரின் இரு கண்களிலும் துப்பி அவருக்காகப் பிராரத்தனை புரிய, அவரின் நோய் முழுமையாக குணமடைந்து விட்டது. அவ்வேளை அவரிடன் முஸ்லிம் சேனையின் கொடியை கொடுத்து, எதிரியின் கோட்டையையை மிகவும் மெதுவாக அனுகி அவர்களிடம் இஸ்லாத்தை முன்வைக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் இணங்கி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளை அறிவித்துக்கொடுக்குமாறும் நபியவர்கள் கட்டளைப்பிரப்பித்தார்கள். பின்னர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறை அழைப்பணியின் சிறப்பு குறித்து குறிப்பிடுகையில், இறை அழைப்புப்பணியில் ஈடுபடுவர், ஒரு நபர்; நேர்வழி பெறக் காரணமாக இருப்பாராயின் அறபுகளின் செல்வங்களில் மிகவும் பெறுமதிக்க உயர்ந்த செல்வமான சிவப்பு ஒட்டகையை பெற்றிருப்பதை விட மிகவும் சிறந்தது. அதனை அவர் தனக்கு சொந்தமாக்கிக் கொள்வார், அல்லது அதனை ஸதகா தர்மம் செய்து விடுவார் எனத் தெளிவுபடுத்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் ரழியல்லாஹு அவர்கள் அறிவிப்பதாவது : 'யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பற்றி போர்செய்தவராவார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்றபின் அவரது வீட்டாரின் நலன் காக்கின்றாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவராவார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்'யார் ஒருவர் அறப்போரில் கலந்து கொள்ளும் ஒருவருக்கு பயணம் மற்றும் போருக்கு மிகவும் தேவையான ஆயுதம், வாகனம், உணவு, செலவு போன்ற ஏனைய விடயங்களை பொறுப்பேற்று அவற்றை ஒழுங்கு செய்து தயார்படுத்திக் கொடுக்கிறாரோ அவரும் ஒரு போராளியின் அந்தஸ்த்தில் இருக்கிறார் அவருக்கும் போரில் கலந்து கொள்ளும் போராளியின் அதே கூலி கிடைக்கும் என்று நபியவர்கள் கூறினார்கள். அறப்போரில் கலந்து கொள்ளச்சென்ற ஒருவரின் விவகாரத்தை பொறுப்பேற்று அவரின் குடும்ப விவகாரங்களை கவனித்து வருபவரும் அறப்போராளியின் அந்தஸ்த்தைப் பெற்றவராக இருக்கிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
யஹ்யா இப்னு உமாரா அல்மாஸினி அவர்கள் கூறுகிறார்கள். அம்ர் பின் அபீஹஸன் (ரஹ்) அவர்களுடன் (ஒரு நாள்) நான் இருந்தேன். அவர்கள் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செய்த வுழூ பற்றிக் கேட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஸைத் (ரழி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று வுழூச் செய்துகாட்டினார்கள்: (ஆரம்பமாக) பாத்திரத்திலிருந்த தண்ணீரைத் தமது கையில் ஊற்றி மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை தண்ணீர் அள்ளி வாய்கொப்புளித்து மூக்கிற்குள் நீர் செலுத்திச் சிந்தினார்கள். மீண்டும் தமது கையைப் பாத்திரத்தில் நுழைத்து மூன்று முறை முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தம் இரு கைகளையும் முழங்கைவரை இரு முறை கழுவினார்கள். பின்னர் கையை (பாத்திரத்தில்) நுழைத்து (ஈரக் கையால்) தமது தலையைத் தடவினார்கள். (அதாவது) இரு கைகளையும் முன் தலையில் வைத்து பின்னால் கொண்டுசென்றார்கள். அப்படியே பின்னாலிருந்து முன் பகுதிக்கு (ஆரம்பித்த இடத்திற்கே) கொண்டுவந்தார்கள். இவ்வாறு ஒரு தடவை மட்டுமே செய்தார்கள் (மூன்று தடவை செய்யவில்லை). பின்னர் தம் கால்களை கணுக்கால்கள்வரை கழுவினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வுழு செய்யும் முறை பற்றி செயல்ரீதியாக விளக்குகிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டுவருமாறு வேண்டினார்கள். முதலில் தனது இரு முன்னங்கைகளை கழுவினார்கள், பின்னர் பாத்திரத்தை சாய்த்து பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை நீரை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தனது கையை பாத்திரத்தினுள் இட்டு மூன்று முறை தண்ணீரை அள்ளி வாய்கொப்பளித்து நாசுக்குள் நீறை செலுத்தி அதனை சிந்தினார்கள், பின் பாத்திரத்திலிருந்து நீரை அள்ளி தனது முகத்தை மூன்று தடவைகள் கழுவினார்கள். அதன் பின் நீரை அள்ளி தனது இரு கைகளையும் முழங்கைகள் வரை இரு முறை கழுவினார்கள். அதன் பின் தனது இருகைகளையும் பாத்திரத்தினுள் இட்டு இருகைகளாலும் தலையை தடவினார்கள் (மஸ்ஹ் செய்தார்கள்) அதாவது தலையின் முன்பகுதியிலிருந்து ஆரம்பித்து பிடரியின் மேல் பகுதி வரை கொண்டு சென்று ஆரம்பித்த இடம் வரை மீண்டு கொண்டு வந்தார்கள். கரண்டைக் கால் உட்பட தனது இரு கால்களையும் கழுவினார்கள்.
அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்னை ஒரு தேவைக்காக அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளிப்பு கடமையாகி) விட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நான் (குளிப்புக்கு தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். (ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சொன்னேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் "தமது கையை பூமியில் ஓர் அடி அடித்து விட்டு,தமது வலக் கரத்தால் இடது கையையும் இரு முன்னங்கைகளையும் (இரு கைகளால்) தமது முகத்தையும் தடவி விட்டு, இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும் என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சில தேவைகளின் நிமித்தம் அனுப்பி வைத்தார்கள். அவ்வேளை அவருக்கு உடலுறவின் மூலம் அல்லது இச்சையினால் விந்து வெளிப்பட்டு; அவருக்கு பெருந்தொடக்கு ஏற்பட்டது.(குளிப்பு கடமையாகியது) ஆகவே அருக்கு குளிப்பதற்கான நீர் கிடைக்கவில்லை. சிறு தொடக்குக்குக்குரிய சட்டம் பற்றி அறிந்திருந்த அவர் பெருந்தொடக்குக்கு தயம்மும் செய்வதன் சட்டம் குறித்து அவர் அறியாதிருந்தார். சிறு தொடக்குக்கு வுழுவின் சில உறுப்புக்களை மண்ணில் தடவிக்கொள்வது போன்று, -நீரனால் உடல் முழுவதையும் கழுவிக்கொள்வதை ஒப்பிட்:டு - ஜனாபத்திற்கான தயம்மும் உடல் முழுவதையும் மண்ணில் படுத்துவதாகும் என எண்ணி இந்த விடயத்தில் ஒரு முடிவை பெற்று உடல் முழுவதும் மண் படுமளவிற்கு மண்ணில் புரண்டு விட்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். பின் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, தான் செய்தது சரியா அல்லது தவறா என்பதை தெரிந்து கொள்ள இந்த விடயம் சம்பந்தமாக குறிப்பிட்டார்கள். அதற்கு நபியவர்கள் ,சிறு தொடக்கு சிறு நீர் கழித்தல் பெருந்துடக்கு ஜனாபத் போன்ற இரு தொடக்குகளிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ளும் முறை பற்றி தெளிவு படுத்தினார்கள். இரு கைகளையும் மண்ணில் ஒரு முறை அடித்து விட்டு பின்னர் வலது கையால் இடது கையையும் இரு முன்னங்கைகளின் வெளிப்புறத்தையும் முகத்தையும் தடவிக்காட்டி தெளிவு படுத்தினார்கள்.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் எனது கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : முஆதே! நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், 'அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வசுக்ரிக வஹுஸ்னி இபாததிக' (யா அல்லாஹ்! உன்னை நினைவுகூறவும், உனக்கு நன்றிசெலுத்தவும், அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு நீ உதவுவாயாக) என்று கூறுவதை விட்டுவிட வேண்டாம். என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.'
இமாம்களான அபூ தாவுத், நஸாஈ, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபியவர்கள் முஆத் (ரலி) அவர்களின் கையைப் பிடித்து இவ்வாறு கூறினார்கள் : நான் உம்மை நேசிக்கின்றேன்! முஆதே! ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும், பின்வரும் துஆவைக் கூறுவதை விட்டுவிடவேண்டாம் என நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன். 'யா அல்லாஹ் (வணக்கத்திற்கு நெருக்கமாக்கி வைக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும், செயலிலும்) உன்னை நினைவுகூறவும், (கிடைக்கின்ற அருட்கொடைகளுக்காகவும், தடுக்கப்படுகின்ற சோதனைகளுக்காகவும்) நன்றிசெலுத்தவும், (உளத்தூய்மையுடனும், நபியவர்களைப் பின்பற்றியும்) அழகான முறையில் உன்னை வணங்கவும் எனக்கு உதவி செய்வாயாக!'