





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: (தொழுகை நடத்தும்) இமாமுக்கு முன் தலையை உயர்த்துபவர், அல்லாஹ் தன் தலையை கழுதையின் தலையாக மாற்றிவிடுவிடுவதை அல்லது அவரின் தோற்றத்தை கழுதையின் தோற்றமாக மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இமாமுக்கும் முன் முந்தி செல்பவருக்கு கடுமையான எச்சரிக்கையை பதிவு செய்கிறார்கள். அவ்வாறு நடந்து கொள்பவரின் தலை கழுதையின் தலையாக அல்லது அவரின் வடிவத்தை கழுதையின் வடிவமாக அல்லாஹ் மாற்றிடுவான் என்பதே அந்த கடுமையான எச்சரிகை.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக 'தக்பீர்' கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோல்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து எழும்போது) 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவிலிருந்து எழும்போதோ) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் போது மூன்று நிலைகளில் தோல்பட்டைக்கு நேராக தனது இரு கைகளையும் உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது:தோள்பட்டை என்பது மூட்டுக்கும் கைக்கும் இடைப்பட்ட பகுதி. முதலாவது இடம் : தொழுகையின் ஆரம்பத் தக்பீரான இஹ்ராம் தக்பீர் கூறுகையில். இரண்டாவது இடம் : ருகூஉ செய்ய தக்பிர் கூறும் போது , மூன்றாவது : ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் ரப்பனா வலகல் ஹம்த்' என்று கூறும் போது. பொருள் : தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான். எங்கள் இரட்சகனே புகழனைத்தும் உனக்கே உரியது. ஸஜ்தாவைத் தொடங்கும்போதோ அல்லது அதிலிருந்து எழும்போதோ நபியவர்கள் கைகளை உயர்த்தமாட்டார்கள்.
இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (எனது இரண்டு கைகளையும் பிடித்து) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) தஷஹ்{ஹதை (அத்தஹிய்யாத்தைக்) எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள். (அது பின்வருமாறு) ' அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' பொருள் : (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும்-தொழுகைகளும்- பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்களின் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் நிலவட்டுமாக! எங்களின் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் மீதும் சாந்தி நிலவட்டுமாக! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). புஹாரி முஸ்லிமின் இன்னொரு அறிவிப்பில்' நிச்சயமாக அல்லாஹ் ' அஸ்ஸலாம் ஆவான்' உங்களில் ஒருவர் தொழுகையில் இறுதி அமர்வில் அமர்ந்தால் 'அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்று கூறட்டும். இவ்வாறு கூறும்போது வானம் பூமியிலுள்ள எல்லா அடியாருக்கும் நீங்கள் ஸலாம் கூறியவர்களாவீர்கள். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெருவமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்). இதன் பிறகு உங்களுக்கு விருப்பமாக துஆவைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் பிரார்த்தியுங்கள்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தொழுகையில் ஓதப்படவேண்டிய தஷஹ்ஹுதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். நபியவர்கள் இப்னுமஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவரின் கையை தனது இருகரங்களால் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.' அல்குர்ஆனின் அத்தியாயத்தை கற்றுக் கொடுப்பது போன்று இதனை கற்றுக் கொடுத்தார்கள்' என்ற வார்த்தையானது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த தஷஹ்ஹுதின் வார்த்தை மற்றும் கருத்தில்; அதீத கவனம் செலுத்தியுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது. நபியவர்கள் பின்வறுமாறு கூறினார்கள்: அத்தஹிய்யாத்து லில்லாஹ் (அனைத்துக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன.') என்பதன் கருத்து: அல்லாஹ்வை மேன்மைப்படுத்தும் எல்லா வார்த்தைகள்; மற்றும் செயல்களைக் குறிக்கிறது. இவையனைத்திற்கும் மிகவும் தகுதியானவனாக அல்லாஹ் இருக்கிறான். 'அஸ்ஸலவாத்' என்பதன் கருத்து : பர்ழான மற்றும் ஸுன்னத்தான அனைத்து தொழுகைகளும் அல்லாஹ்வுக்கே உரியன, என்பதாகும். 'அத்தய்யிபாத்து' என்பதன் அர்த்தம்: அல்லாஹ்வின் பரிபூரண நிலையை காட்டும் வார்த்தைகள்,செயல்கள் மற்றும் அழகிய வர்ணனைகள் அனைத்திற்கும் அல்லாஹ் மிகத்தகுதியானவன் அவை அவனுக்கே உரியது என்பதாகும். 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு என்பது'. எல்லாவிதமான ஆபத்துக்கள், துயர்களிருந்தும் ஈடேற்றம் பெறவும், அனைத்து நன்மையான விடயங்களிலும் அதிகம் ஈடுபடவும் நபியவர்களுக்காக கேட்கும் ஒரு பிரார்த்தனையாகும். 'அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் என்பது' : தொழுபவர் மற்றும் வானம் பூமியிலுள்ள நல்லடியார் அனைவரின் ஈடேற்றத்திற்காக கேட்கப்படும் பிரார்த்தனை. 'அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு' என்பது,: உண்மையாக வணங்கப்படக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவுமில்லை என்பதை நான் மிக உறுதியாக ஏற்றுக் கொள்கிறேன். 'அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' என்பது; நபியவர்களின் அடிமைத்துவத்தையும், இறுதி தூதுத்துவத்தையும் நான் ஏற்று அங்கீகரிக்கிறேன் என்று பொருளாகும். அத்தஹிய்யாத்தை ஓதிய பின் தொழுபவர் அவருக்கு விரும்பிய பிரார்த்னையை தேர்வு செய்து ஓதவும் நபியவர்கள் வலியுறுத்தினார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னாரி வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால்.என்று -இறுதி தஷஹ்ஹுதின் பின் பிரார்திக்கக் கூடியவராக இருந்தார்கள்: பொருள்: இறைவா! நான் உன்னிடம் கப்ரின் வேதனையிலிருந்தும், நரகின்; வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும்; பாதுகாப்பு தேடுகிறேன். முஸ்லிமின் அறிவிப்பில் : 'உங்களில் ஒருவர் கடைசி தஷஹ்ஹூதை ஓதி முடித்த பின், நரக வேதனை, கப்ரு வேதனை, வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை, தஜ்ஜால் மூலம் ஏற்படும் தீங்கு ஆகிய நான்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடட்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தொழுகையில் இறுதி தஷஹ்ஹுத் ஒதியதன் பின் ஸலாம் கொடுப்பதற்கு முன் நான்கு விடயங்களிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடக்கூடியவராக இருந்தார்கள். எனவே நாமும் அவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடி பிராத்திக்க வேண்டும் என்றும் எமக்கு கட்டளையிடுகிறார்கள். முதலாவது: கப்ரின் வேதனை இரண்டாவது: மறுமை நாளின் நரக வேதனை. மூன்றாவது: உலக வாழ்வு மற்றும் மரணத்தின் சோதனை : அதாவது உலக வாழ்வின் சோதனை என்பது உலகில் தடைசெய்யப்பட்ட ஆசைகள் மற்றும் வீணான சந்தேகங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். மரணத்தின் சோதனை மரணத் தருவாயில் இஸ்லாத்ததை விட்டு விலகிச் செல்லுதல் அல்லது ஸுன்னாவிலிருந்து தடம்புரலுதல் அல்லது கப்ரில் நிகழும் இருமலக்குகளின் விசாரணை குறித்த சோதனை போன்றவற்றைக் இது குறிக்கும். நான்காவது : மறுமை நெருங்குகையில் இறுதிக் காலத்தில் வெளிப்படும் தஜ்ஜாலின் சோதனை : இவனால் அடியார்கள் அதிகம் சோதனைக்குள்ளாவார்கள். அந்நேரத்தில் அவனின் சோதனையும் வழிகெடுப்பும் மிகவும் உச்ச நிலையில் இருப்பதாலே இங்கு விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கதாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள். (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!).
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகைக்காக இஹ்ராம் தக்பீர் கூறினால் ஸுறா பாத்திஹா ஒத முன் சொற்ப நேரம் மௌனமாக இருப்பார்கள். அந்நேரத்தில் அவர்கள் தொழுகையை ஆரம்பிப்பதற்காக சில துஆக்களை ஒதுவார்கள். அவ்வாறான துஆக்களில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ்; அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத் என்று கூறுகிறேன் என்றார்கள். (பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படு வதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!) நபியரவர்கள் இந்த துஆவில் கிழக்கும் மேற்கும் சந்திப்பது எப்படி அசாத்தியமானதோ அதே போன்று தனக்கும் தவறுகளுக்குமிடையில்; -அதற்குட்படாதாவாறு- மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்துமாறு பிரார்த்தனை புரிகிறார்கள். அவ்வாறு பாவத்திற்குள் அகப்பட்டுவிட்டால் அப்பாவக் கரையை வெள்ளை ஆடையின் அழுக்கை சுத்தப்படுத்துவது போன்று தூய்மைப்படுத்துமாறு வேண்டுகிறார்கள். தனது தவறுகளை கழுவுமாறும் அதன் சூட்டையும் சுவாலையையும் நீர் பணிக்கட்டி ஆலங்கட்டி போன்றவற்றால் தனித்து விடுமாறும் வேண்டுகிறார்கள்.
அல்லாஹ்வின் துதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு தடவைகள் கழுவட்டும்' முஸ்லிமின் அறிவிப்பில் 'அதில் முதன் முறை மண்ணினால் கழுவுங்கள்' என்று இடம்பெற்றுள்ளது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நாய் பாத்திரத்தில் வாய்விட்டால் அதனை ஏழு தடவைகள் கழுவுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கட்டளையிட்டார்கள். அதில் முதலாவது தடவை மண்ணால் தேய்த்து பின் நீரால் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது நாயின் அசுத்தம் மற்றும் பாதிப்பிலிருந்து முற்றிலும் சுத்தமானதாக பாத்திரம் மாறிவிடும்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கழிப்பறைக்கு நுழையும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மினல் குப்ஸி வல் கபாஇஸி' எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். பொருள்: யா அல்லாஹ்! உன்னிடம் ஷைத்தான்களில் ஆண் மற்றும் பெண்ணகளின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காக கழிவறைக்குள் நுழையும்போது அல்லாஹ்விடம் ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாது காக்குமாறு கோருவார்கள். ஹதீஸில் குறிப்பிடப்பட்ட அல்குப்ஸ்,அல்கபாஇஸ் என்பது தீங்கு மற்றும் அசுத்தம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஹுனைப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "உண்மையாகவே அல்லாஹ்விடம் வீரமரணத்தை வேண்டுபவர் தனது படுக்கையில் மரணித்தாலும் அல்லாஹ் அவருக்கு உயிர்த்தியாகிகளின் அந்தஸ்துக்களை அடையச் செய்வான்".
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்டு ஷஹாதத்தை –வீரமரணம் அடைவதை அல்லாஹ்விடம் கேட்பவர், அவரது நிய்யத்தில் -எண்ணத்தில்- அல்லாஹ்வுக்காக எனும் உளப்பரிசுத்ததோடு உண்மையாளராகவும் இருந்தால் அவரின் உண்மையான –தூய்மையான நிய்யத்தின் காரணமாக அவர் (ஜிஹாத்) அறப்போரில் அல்லாது தனது படுக்கையில் மரணித்தாலும் அறப்போரில் வீரமரணமடைந்தோரின் அந்தஸ்த்தைப் பெறுவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.
உம்முல் முஃமினீன் மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : 'நான் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து விட்டு, ஒரு துணியால் அவர்களுக்குத் திரையிட்டேன். அவர்கள் (முதலில்) தம் கைகளின் மீது தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கரத்தில் தண்ணீர் ஊற்றி, தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து, மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். மேலும், தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள்: பிறகு தமது தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்: தமது உடம்பிற்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம் பாதங்களைக் கழுவினார்கள். (குளித்த) உடன் அவர்களிடம் நான் (துடைப்பதற்கு) ஒரு துணியை எடுத்துக்கொடுத்தேன். ஆனால், அதை அவர்கள் வாங்கிக்கொள்ளவில்லை; தம் கைகளை உதறிக்கொண்டே சென்றுவிட்டார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்பெருந்தொடக்கிற்கான நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குளிப்பின் முறை குறித்து உம்முல் முஃமினீன் மைமூனா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது மைமூனா ரழி அவர்கள்; நபியவர்களுக்கு குளிப்பதற்கான நீரை வைத்துவிட்டு ஓரு துணியினால் மறைத்து விட்டார். அவ்வேளை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் விடயங்களை செய்தார்கள் : முதலாவது : கையை பாத்திரத்தினுள் இடுவதற்கு முன் அவர்கள் தனது இரு கைகளையும் நீர் ஊற்றிக் கழுவியமை. இரண்டாவது : ஜனாபத்தின் விளைவால் படிந்திருப்பவற்றை சுத்தம் செய்யும் வகையில், வலது கையினால் இடது கையில் நீரை வார்த்து தனது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். மூன்றாவது : கையில் படிந்துள்ள அசுத்தத்தை நீக்குவதற்காக இரு கைகளையும் தரையில் படர்த்தி தேய்த்துவிட்டு பின்னர் கழுவினார்கள். நான்காவது : வாயில் நீர்விட்டு நன்றாக அலசி விட்டு அதனைக் கொப்பளித்தார்கள். அத்துடன் நாசுக்கும் நீர் செலுத்தி அதனையும் வெளியேற்றினார்கள். ஜந்தாவது: முகத்தையும் இரு முழங்கைகளையும் கழுவினார்கள். ஆறாவது: தலைக்கு தண்ணீர் உற்றினார்கள். ஏழாவது: உடலின் ஏனைய பகுதிகளுக்கு நீர் ஊற்றினார்கள். எட்டாவது: தான் குளித்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்ந்து தனது இரு கால்களையும் கழுவினார்கள். பின்னர் மைமூனா (ரழி) அவர்கள் துடைப்பதற்காக ஒரு துண்டுத்துணியை எடுத்துக் கொடுக்க அதனை நபியரவர்கள் எடுக்காது தனது கையால் நீரை துடைத்ததோடு அதனை உதரலானார்கள்.