





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். 'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?' என்று கேட்டதற்கு, ' வேண்டாம், அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு, பின்னர் குளித்து தொழுது கொள்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்பாதிமா பின் அபூ ஹுபைஷ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து: 'தனக்கு தொடராக இரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை, அது மாதவிடாய் காலப்பகுதியையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, எனவே மாதவிடாய் சட்டத்தைப் பின்பற்றி தொழுகையை விட்டுவிடலாமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: 'அது தொடர் உதிரப்போக்கு, கருப்பையில் உள்ள நரம்பின் துண்டிப்பினால் ஏற்படுகின்ற நோய் நிலை இரத்தமாகும். அது மாதவிடாயல்ல எனப் பதிலளித்தார்கள் ஆகவே இஸ்திஹாழா வரமுன் உமக்கு வழமையில் மாதாந்தம் ஏற்படுகின்ற மாதவிடாய் காலப்பகுதியை நீ அடையும் நேரத்தில் அக்காலப்பகுதியில் மாத்திரம் தொழுகை மற்றும் நோன்பு போன்றவற்றை விட்டுவிடுவீராக, இது மாதவிடாய் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய விடயங்களாகும். வழமையான மாதவிடாய் நாட்கள் -காலப்பகுதி- முடிவடைந்ததுவிட்டால், நீ மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்துவிட்டாய், ஆதலால் இரத்தம் இருக்குமிடத்தை நன்கு கழுவிவிட்டு பின்னர் தொடக்கை நீக்குவதற்காக முழுமையாக உடலை கழுவி குளித்து கொண்டு பின் தொழுவீராக என்று குறிப்பிட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூட்டாகத் தொழக்கூடியவர்களுக்கு தங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுமாறு பணிப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை முந்தி நிற்காது அணியைச் சீர் செய்து கொள்ளுமாறும் பணிப்பார்கள். மேலும்; அணியை சீர் செய்து கொள்வதில் தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது. அணி வளைந்து கோணலாக இருப்பது தொழுகையில் ஒரு வகை முறைகேட்டையும் குறையையும் ஏற்படுத்திவிடும். .
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்களில் ஒருவர் வுழூச் செய்தால் தம் நாசிற்கு தண்ணீர்ச் செலுத்தி பின்னர் அதை சிந்தட்டும். மலசலம் கழித்துவிட்டுக் கல்லால் சுத்தம் செய்பவர் ஒற்றைப் படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் வுழூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும். ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்' முஸ்லிமின் அறிவிப்பில்: உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் இரு கைகளையும் கழுவமுன் வுழூ செய்யும் பாத்திரத்தினுள் செலுத்த வேண்டாம். ஏனென்றால் அவரின் இருகைகளும் இரவில் எங்கிருந்தது- எதனைத் தொட்டது- என்பது பற்றி அவர் அறியமாட்டார்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சுத்தம்- வுழுவின் சட்டங்களின் சிலவற்றை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். அவை பின்வருமாறு: முதலாவது: வுழு செய்யும் ஒருவர் நாசுக்கு நீர் செலுத்தி அதனை சிந்த வேண்டும். இரண்டாவது: சிறுநீர் கழித்த ஒருவர் அதனை நீர் அல்லாத கல் அல்லது அதன் நிலையிலுள்ள பொருட்களால் சுத்தம் செய்து, நீக்கிவிட நாடினால் அதனை ஒற்றைப்படையாக செய்ய வேண்டும். அதன் குறைந்தபட்ச எண்ணிக்கை மூன்றாகும். மூன்றாவது : இரவுத் தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தவர் தனது இரு கைகளையும் பாத்திரத்திற்குள் இட முன் மூன்று தடவைகள் கழுவிக்கொள்ளல் வேண்டும். ஏனென்றால் அவர் இரவில் தூங்குகையில் அவரின் கை எவற்வையெல்லாம் தொட்டது என்பது பற்றி அவருக்கு தெரியாது. ஆகவே அசுத்தம் அவற்றில் பட்டிருக்காது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. சில வேளை ஷைத்தான் அவனைக் குழப்பி மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது நீரை மாசுபடுத்தக்கூடியவைகளை கொண்டு வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நிச்சயமாக இந்த உலகம் இனிமையும் பசுமையும் நிறைந்தவை. நீங்கள் எவ்வாறு செயலாற்றுகிறீர்கள் என்பதை பார்ப்பதற்காக அல்லாஹ் உங்ளை இதில் பிரதிநிதியாக-முகவர்களாக- ஆக்கியுள்ளான். ஆகவே நீங்கள் உலகவிடயங்களில் மூழ்கிவிடுவதிலிருந்தும் மற்றும் பெண்கள் விடயங்களில் மதிமயங்கி விடுவதைவிட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் இஸ்ரவேல் சந்ததிகளில் தோன்றிய குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் விவகாரத்திலாகும்”.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வுலகமானது சுவையில் இனிமையானது எனவும் பார்ப்பதற்கு கவர்ச்சி நிறைந்ததாகவும் உள்ளது எனவும் தெளிவுபடுத்துகிறார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறக் காரணம் என்னவெனில் மனிதன் இதில் கவர்ச்சியுற்று மூழ்கிச்செல்வது மாத்திரமல்லாது அதனையே தனது முழு இலக்காகவும் ஆக்கிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது என்பதினாலாகும். நாம் இவ்வுலகில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோமா அல்லது கட்டுப்படாது நடக்கிறோமா? என்ற எமது செயல் முறை குறித்து அவதானிக்கவே இவ்வுலகில் எம்மை ஒருவர் பின் ஒருவராக பிரதிநிதியாக வைத்துள்ளான். மேலும் நபியர்கள் இந்த ஹதீஸில் இவ்வுலக பொருட்கள் மற்றும் அலங்காரங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பணிக்கிறார்கள். ஏனெனில் இவ்வுலக இன்பங்களில் திழைத்திருப்பது அல்லாஹ் உங்களுக்கிட்ட கட்டளைகளை விட்டுவிட்டு அவன் தடுத்த விடயங்களின் பால் அவை இட்டுச்செல்ல வழிவகுத்து விடும். இஸ்ரவேல் சந்ததிகளில் ஏற்பட்ட குழப்பங்களில் முதன்மையானது பெண்கள் சம்பந்தப்பந்தப் பட்டது என்பதினால், உலக கவர்ச்சிகளில் பெண்களின் கவர்ச்சியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பதே மிக முக்கிய விடயமாகும்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பத்து ரக்அத்களைத் தொழுததை நான் நினைவில் வைத்திருக்கிறேன் : லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்கள், ஸுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்கள் ஆகியனவே அவை. ஸுப்ஹுக்கு முன் உள்ள அந்த நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம அவர்களிடம் யாரும் செல்ல முடியாத நேரமாகும். அத்துடன் முஅத்தின் அதான் கூறி பஜ்ரும் உதயமாகிவிட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள் என ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என்னிடம் கூறினார்கள். மேலும் ஒரு அறிவிப்பில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஜும்ஆத் தொழுகையின் பின் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
இதன் எல்லா அறிவிப்புக்களும் இமாம் புஹாரீ, இமாம் முஸ்லிம் இருவரும் பதிவு செய்தவைகளாகும்ராதிபான ஸுன்னத் தொழுகைள் என்றழைக்கப்படும் -பர்ழான தொழுகைகளுக்கு முன் அல்லது பின் தொழப்படும் தொழுகை- பத்து ரக்அத்துக்களை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து நினைவில் வைத்துக்கொண்டதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தெளிவுபடுத்துகிறாரகள். அவைகள் பின்வருமாறு: லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மஃரிபுக்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்துகள், இஷாவிற்குப் பின் வீட்டில் இரண்டு ரக்அத்துகள், ஸுப்ஹுத்தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள், ஆக இவைகள்; பத்து ரக்அத்துக்களாகும். ஜும்ஆத் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுவார்கள்.
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரவில் (உறங்கி) எழுந்ததும் பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைக் கழுவி சுத்தம் செய்)வார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகம் மிஸ்வாக் செய்பவர்களாகவும் அதனை வலியுறுத்துபவர்களாகவும் இருந்தார்கள். பல்துலக்குவது –மிஸ்வாக் செய்வது- சில வேளைகளில் வலியுறுத்தப்பட்ட விடயமாகும் அவற்றில் : இரவில் தூங்கி எழும்பினால் பல்துலக்குவது. அந்த நேரத்தில் நபியவர்கள் அராக் குச்சியால் -மிஸ்வாக்- பல்லை துலக்கி சுத்தம் செய்பவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: 'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின் வேறொரு குணத்தை (விடயத்தை) பொருந்தி அங்கீகரிக்கலாம்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்கணவன் தன் மனைவியை அவளுக்கு அநியாயம் இழைத்து கைவிட்டு புறக்ணிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு தன் மனைவியை வெறுப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்தார்கள். நிச்சயமாக மனிதன் குறை உடனே படைக்கப்பட்டுள்ளான். அவளிடமிருந்து வெளிப்படும் கெட்ட, மோசமான குணமொன்றை வெறுத்தால், அவளிலே காணப்படும் வேறொரு நல்ல குணத்தை - பொருந்தி ஏற்றுக் கொள்வான். அத்துடன் அவனால் பொறுந்திக்கொள்ள முடியாத மோசமான பண்புகளில் பொறுமையை கடைப்பிடிப்பான். அவ்விதம் அவன் பொருமையை கடைபிடிப்பிடிக்கும் அந்த மோசமான பண்பை வெறுப்பதானது அவளை பிரிந்து வாழ்வதற்குரிய அளவிற்கு தூண்டுவதாக அமைந்துவிடுதல் ஆகாது.
அபூ அய்யூபுல் அல்அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் : ((நீங்கள் மலம் கழிக்கச் சென்றால், கிப்லா (கஃபா) திசையை முன்னோக்கவும் வேண்டாம்; (அதன் திசையில்) முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். மாறாக, கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள். இதை அறிவித்த அபூ அய்யூப் அல்அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றிருந்த போது, (அங்குள்ள) கழிப்பறைகள் கிப்லாவை முன்னோக்கி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். ஆகவே, நாங்கள் (கிப்லாவின் திசையிலிருந்து) விலகிக்கொண்டதோடு (அவ்வாறு கட்டியவர்களுக்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினோம் என்று சொன்னார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்சிறு நீர் அல்லது மலம் கழிக்க நாடுபவர் கிப்லாத் திசையையை முன்னோக்கி அல்லது பின்னோக்கி தனது தேவையை நிறைவேற்றுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தடைசெய்தார்கள். மாறாக அவர் அத்திசையை விட்டு விலகி கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்து தனது இயற்கைத்தேவையை நிறைவேற்றுமாறு குறிப்பிடுகிறார்கள். அதாவது இது மதீனா வாசிகளின் கிப்லாத் திசை உள்ளோர் இவ்வாறு செய்தல் வேண்டும். இவர்கள் அல்லாதோர் அவர்களின் நோக்கும் கிப்லாத் திசையை விட்டு விலகி மாற்றுத்திசையை நோக்கி அமர்தல் வேண்டும். தொடர்ந்தும், அபூஅய்யூப் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு குறிப்பிடுகையில் அவர்கள்; ஷாம் தேசத்திற்கு சென்றிருந்த போது அங்கே இயற்கைத்தேவையை நிறைவேற்றுவதற்கென தனியான கழிவறைகள் காணப்பட்டதாகவும் அவை கிப்லா திசைநோக்கி அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கிறார்கள். அவர்கள் அக்கழிவறைகளை பயன்படுத்தும் போது தங்களது உடலை கிப்லாத்திசையை விட்டு சற்று விலக்கி அமர்ந்தாகவும் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரியதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ கதாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ((உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, மறை உறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத் தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம்.))
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் சில ஒழுக்கங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தனது மறையுறுப்பை வலது கையால் பிடிப்பதையும், முன்பின் துவாரங்களில் உள்ள அசுத்தத்தை வலது கையினால் நீக்குவதையும் தடை செய்துள்ளார்கள். ஏனெனில்; வலது கை நல்ல விடயங்களில் பயன்படுத்துவதற்குறியது என்பதினாலாகும். அதே போன்று குடிக்கும் பாத்திரத்தினுள் மூச்சு விடுவதையும் தடைசெய்துள்ளார்கள்.