





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்ற இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக்கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தல் இருப்பர். அவர்கள் சலம் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, உமிழவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள். அவர்களது சீப்புக்கள் தங்கமாகும். அவர்களது வியர்வை கஸ்தூரியாகும். அவர்கள் நறுமணப் புகை போடும் கலசங்கள் நறுமணக் குச்சிகளால் ஆகியிருக்கும். அவர்களது மனைவியர் ஹூருல் ஈன்களாகும். அவர்கள் அனைவரும் ஒரே மனிதரின் தோற்றத்தில் இருப்பார்கள். (அதாவது) தமது தந்தையாகிய, ஆதமின் தோற்றத்தில் வானத்தில் அறுபது முழம் உயரத்தில் இருப்பார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, சுவனத்தில் நுழையும் முதல் தரப்பினர், அங்கு நுழையும் போது பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று இருப்பர். பின்பு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் வானத்தில் கடுமையாக ஒழி வீசக் கூடிய நட்சத்திரத்தின் தோற்றத்தில் இருப்பர். அவர்களுக்கு பரிபூரணத் தன்மைகள் இருக்கும். அதாவது, அவர்கள் சலம் கழிக்கவோ, மலம் கழிக்கவோ, உமிழவோ, மூக்கு சிந்தவோ மாட்டார்கள். அவர்களது சீப்புக்கள் தங்கமாகும். அவர்களது வியர்வை கஸ்தூரியாகும். அவர்கள் நறுமணப் புகை போடும் கலசங்களில் இருந்து, நல்ல, தூய்மையான நறுமணம் வீசும். அவர்களது மனைவியர் ஹூருல் ஈன்களாகும். அவர்கள் அனைவரும் ஒரே மனிதரின் தோற்றத்தில் இருப்பார்கள். (அதாவது) தமது தந்தையாகிய, ஆதமின் தோற்றத்திலும் உயரத்திலும் இருப்பார்கள். அவரது உடல் வானத்தில் அறுபது முழம் உயரத்தில் இருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. அதற்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள்.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இங்கு நபிவர்கள் அறிவிப்பதாவது, மறுமையில் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. ஒவ்வொரு இரு படித்தரங்களுக்கும் மத்தியில் உள்ள தூரம் வானம் மற்றும் பூமிக்கு மத்தியில் உள்ளது போன்று இடைவெளி இருக்கும். பிர்தவ்ஸ் தான் உயர்ந்த படித்தரத்தில் உள்ளதாகும். அதற்கு மேலிருந்து தான், சுவனத்தின் நான்கு ஆறுகளும் ஊற்றெடுக்கச் செய்யப்படுகின்றன. பிர்தவ்ஸுக்கு மேலால் தான் அர்ஷ் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால், அவனிடம் பிர்தவ்ஸையே கேளுங்கள். ஏனெனில், அதுவே அனைத்து சுவனங்களுக்கும் மேலால் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, முகீரா இப்னு சுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள். அவ்வாறே அவர்கள் மிகைத்தவர்களாகவே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய கட்டளையும் வரும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, எனது உம்மத்தில் ஒரு தரப்பினர் மக்களை மிகைத்தவர்களாகவும், அவர்களை எதிர்ப்பவர்களை வென்றவர்களாகவும் இருப்பார்கள். மறுமை ஏற்பட முன்னர், இவ்வுலகின் இறுதிக் காலங்களில் அவர்களது உயிர்கள் கைப்பற்றப்படும் வரை, அவர்கள் மிகைத்தவர்களாகவே இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : யாராவது ஒரு மனிதர் தனது சகோதரனைப் பார்த்து, 'காபிரே!' (நிராகரிப்பாளனே!) என்று கூறினால், அவ்விருவரில் ஒருவருக்கு அது கிடைக்கவே செய்யும். அம்மனிதன் அவர் கூறியது போன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி அது மீண்டுவிடும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமைப் பார்த்து 'காபிரே!' என்று கூறினால், அந்த வார்த்தைக்கு அவர்களில் ஒருவர் தகுதியாகிவிடுவார். அம்மனிதன் அவர் கூறியதுபோன்றே இருந்தால், அது அவரைச் சேரும். அவ்வாறில்லாவிட்டால், கூறியவரை நோக்கி 'காபிர்' என்று அவர் கூறிய வார்த்தை மீண்டுவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், உங்களில் சிறந்தவர்கள் எனது காலகட்டத்தைச் சேர்ந்தவர்களே! பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள், பின்பு அவர்களை அடுத்து வருபவர்கள். இம்ரான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் பின்னர் இரு தலைமுறையினரையா அல்லது மூன்று தலைமுறையினரையா கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டடேன். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களுக்குப் பின்னர் சில மக்கள் வருவார்கள். அவர்கள் துரோகம் செய்வார்கள். நம்பப்படமாட்டார்கள். சாட்சியம் அளிப்பார்கள். ஆனால், சாட்சியம் அளிக்க அழைக்கப்பட மாட்டார்கள். நேர்ச்சை வைப்பார்கள். ஆனால், நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடம் கொழுப்பு வெளிப்படும்."
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, ஒரேகாலத்தில் ஒன்றுசேரும் மக்கள் தலைமுறையினரில், நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் வாழ்ந்த தலைமுறையினரே சிறந்த தலைமுறையாகும். பின்பு அவர்களை அடுத்து வரும், நபித்தோழர்களது காலத்தை அடைந்த, நபி (ஸல்) அவர்களது காலத்தை அடையாத முஃமின்கள் வருவார்கள். பின்பு அவர்களை அடுத்தவர்கள் வருவார்கள். அவர்கள் தாம், அத்பாஉத் தாபிஈன்களாகும். அவர்களையும் அடுத்து, நான்காவது தலைமுறையாக வருபவர்களைப் பற்றி நபியவர்கள் கூறினார்களா என்ற விடயத்தில் அந்த நபித்தோழர் உறுதியற்றவராகக் காணப்பட்டார். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : அவர்களுக்குப் பின்னர் சில மக்கள் வருவார்கள். அவர்கள் துரோகம் செய்வார்கள். மக்கள் அவர்களை நம்பமாட்டார்கள். சாட்சியம் அளிக்க அழைக்கப்பட முன்னரே, சாட்சியம் அளிப்பார்கள். நேர்ச்சை வைப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் கொழுப்பு வெளிப்படும் அளவு அதிகமாக உண்ணவும், பருகவும் செய்வார்கள்.
அபூஸஃலபா அல் குஷனீ ஜுர்ஸூம் இப்னு நாஷிர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்; ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : 'எல்லாம் வல்ல அல்லாஹ் சில மார்க்கக் கடமைகளை விதித்திருக்கின்றான். ஆகவே அவைகளை வீணடிக்காதீர்கள்; அவன் சில எல்லைகளை நிர்ணயித்திருக்கின்றான். ஆகவே அவற்றைக் கடந்து செல்லாதீர்கள். அவன் நமக்கு சிலவற்றை தடை செய்திருக்கின்றான். ஆகவே அவற்றை மீறிச்செல்லாதீர்கள்; சில விஷயங்களில் மறதியாக அன்றி,உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக அவன் மௌனமாக இருக்கின்றான். ஆகவே அவற்றைக் குறித்து தேட வேண்டாம்.
இதனை இமாம் அத்தாரகுத்னீ தனது ஸுனன் நூலிலும், ஏனையோரும் பதிவு செய்துள்ளனர்அல்லாஹ் சில விடயங்களை கடமையாக்கி அதனை கட்டாயப்படுத்தியுள்ளான். எனவே அவற்றைப் பின்பற்றுங்கள். அவற்றை பின்பற்றாது அலட்சியமாக இருப்பதன் மூலம் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். அதே போன்று சில தடைகளை விதித்துள்ளான் அவை அல்லாஹ் விரும்பாதவைகளை விட்டும் உங்களை தடுக்கும். அதனால் இஸ்லாமிய ஷரீஆ வலியுறுத்தியதற்கு அப்பால் எதனையும் அதிகப்படுத்துவிடாதீர்கள் என்றும், அல்லாஹ் சில விடயங்களை தடைசெய்துள்ளான் அதனை செய்யவோ அதன் அருகே நெருங்கவோ வேண்டாம். இவை தவிர உள்ளவை யாவும் அல்லாஹ் தனது அடியார்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக அது குறித்து ஏதும் பேசாது விட்டுவிட்டான். எனவே அவை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாகும் ஆகையால் அவற்றை தேட வேண்டாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பேரரும்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவருமான அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மகன் அபூ முஹம்மது அல் ஹஸன் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு சொல்லக் கேட்டு நினைவில் இருத்திக் கொண்டேன் : 'உமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற ஒன்றை விட்டு விட்டு அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எடுத்துக் கொள்;'
இமாம்களான திர்மிதி மற்றும் அந்நஸாஈ ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுசொல் மற்றும் செயல்களில், குறித்த விடயம் தடுக்கப்பட்டதா ? இல்லையா? அல்லது அது ஹலாலா ஹராமா என்ற சந்கேகத்திற்கிடமானவற்றை விட்டு விட்டு எந்த சந்தேகமுமில்லாத நல்ல மற்றும் ஹலாலான –தெளிவாக அனுமதிக்கப்பட்ட- விடயங்களை செய்யுமாறு இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அபூ யஃலா ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் , நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள் : ''நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களையும் மிகவும் அழகிய முறையில் செய்ய வேணடும் என விதித்துள்ளான். ஆகவே நீங்கள் கொலை செய்தால் அழகிய முறையில் கொல்லுங்கள். நீங்கள் ஒரு மிருகத்தை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். எனவே உங்களில் அறுக்கும் ஒருவர் தனது கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுவைப் பிராணிக்கும் ஆருதலைக் கொடுக்கட்டும்'. அறுக்கும் மிருகங்களின் கஷ்டங்களை எளிதாக்கட்டும்".
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் எல்லா விவகாரங்களிலும் இஹ்ஸானைக் கடைப்பிடிக்குமாறு எமக்கு அறியத்தருகிறார்கள். இஹ்ஸான் என்பது வணக்க வழிபாடுகளிலும், நன்மையான காரியங்களை செய்வதிலும், படைப்புகளுக்கு நோவினை ஏற்படுவதை தடுப்பதிலும் இறை அவதானம் எனும் உணர்வோடு எப்போதும் இருத்தலையே குறிக்கும். இந்த வகையில்; இஹ்ஸான் என்பது கொலை செய்தல், பலியிடுதல் போன்ற விவகாரங்களிலும் காணப்படும். அது நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் மேற்கொள்ளல் என்ற கருத்தை குறிக்கும். பலிக்குப்பலி தண்டனை நிறைவேற்றும் போது குறித்த நபரை கொலை செய்வதில் இஹ்ஸானை; கடைப்பிடித்தல் என்பது: கொலைசெய்யப்படு பவரின் உயிர் மிக இலகுவான முறையில் விரைவாகவும், சுகமாகவும் பிரிவதற்கு வழிசெய்தல் என்பதைக் குறிக்கும். ஷரீஆ முறைப்படி அறுப்பதில் இஹ்ஸான் பேணல் என்பதன் அர்த்தம் அறுவையின் போது மிருகத்துடன் நலினமாக நடப்பதாகும். அதாவது அறுக்கும் ஆயுதத்தை கூர்மையாக்குதல், அறுவை மிருகத்தின் முன் அது பார்த்துக் கொண்டிருக்கை யில் ஆயுதத்தை கூராக்காதிருத்தல், இன்னொரு மிருகம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அதனை அறுக்காது இருத்தல்.
பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றதாக, அபூ மாலிக் அல் ஹாரிஸ் இப்னு ஆஸிம் அல்-அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: சுத்தம் ஈமானின் பாதியாகும். 'அல்-ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது மீஸானின் நன்மையின் தட்டை நிறைக்கின்றது. 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் குறைகளுக்கு அப்பாற்பட்டவன்) 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அலல்hஹ்வுக்கே) ஆகிய இரண்டுமோ அல்லது ஒவ்வொன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது. தொழுகை ஒளியாகும். தர்மம் தெளிவான அத்தாட்சியாகும்;. பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு ஆதாரமாகும். தனது நாளைத் துவங்கும் ஒவ்வொரு மனிதனும் தனது ஆன்மாவை விற்றுவிடுகின்றனர். ஒன்று அதனை விடுதலைபெறச் செய்கின்றனர். அல்லது அதற்கு அழிவைத் தேடித் தருகின்றனர்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்புறச்சுத்தம்; வுழூ மற்றும் குளித்தலினால் நிகழ்கிறது, அது தொழுகைக்கான நிபந்தனைகளில் ஒன்று என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. எனும் கூற்று அல்லாஹ்வை புகழ்ந்து அவனை அவனுக்கே உரிய பூரண பண்புகளால் வர்ணிப்பதைக் குறிக்கும். இவை மறுமையில் மீஸானில் நிறுக்கப்படும் அவ்வாறு நிறுக்கப்படும் போது அவை அமல்களின் தராசை நிரப்பிவிடும். என்பது இதன் கருத்தாகும். . 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' (எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே) ஆகிய கூற்றுக்களானது அல்லாஹ் எல்லாவிதக் குறைகளிலிருந்தும் தூய்மையானவன் என்பதைக் காட்டும்.அத்துடன் அவனைக் கண்ணியப்படுத்தி அவனை நேசம் கொண்டு அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமாக அவனை வர்ணிப்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையிலான பகுதியை நிரப்பிவிடுகிறது. (அஸ்ஸலாது நூருன்)'தொழுகை ஓளியாகும்' என்ற வாசகம் ஒரு அடியானுக்கு தொழுகையானது அவனது உள்ளத்திலும், முகத்திலும்,மண்ணறையிலும்(கப்ரிலும்) மண்ணறையிலிருந்து விசாரணைக்காக எழுப்பப்படும் போதும் ஒளியாக அமையும் என்ற கருத்தைக் குறிக்கும். 'அஸ்ஸதகது புர்ஹானுன்' தர்மம் அத்தாட்சியாகும் என்பது ஒரு முஃமினின் ஆழமான நம்பிக்கையின் உண்மைத்தன்மையை பிரதிபளிக்கும் ஆதாரமாக தர்மம் அமையும் என்பதாகும். அதாவது மறுமையில் அடியார்களுக்கு வாக்களிக்கப்பட்டவற்றை நம்பாத நயவஞ்சகன்; தர்மம் செய்வதிலிருந்து விலகியிருப்பதால் அவனிலிருந்து முஃமினை வித்தியாசப்படுத்தும் அடையாளமாகவும் இது அமைகிறது. 'பொறுமை பிரகாசமாகும்' அஸ்ஸப்ரு என்பது மனதை பதற்றம் மற்றும் வெறுப்பு போன்றவற்றிலிருந்து கட்டுப்படுத்திக்கொள்வது என்பதைக் குறிக்கிறது. சூரிய ஒளியைப்போன்று வெப்பமும், சுடரும் கலந்த நிலையில் உள்ள பண்பாக பொறுமை காணப்படுகிறது.அதாவது பொறுமை; மனதை அடக்குதல்-கட்டுப்படுத்தல்- என்பது மிக சிரமமான விடயம். அதற்கு உள்ளத்துடன் போராடுதல் மற்றும் உள்ளம் விரும்பும் மனோஇச்சைகளை கட்டுப்படுத்துதல் போன்றன தேவைப்படுகின்றன.இவ்வாறான பொறுமையின் மூலம் பிரகாசத்தைப் பெற்றவன் அந்தப்பிரகாசத்தின் விளைவாக சரியான பாதையில் அவன் தொடர்ந்தும் நிலைத்திருப்பதற்கு அது காரணமாக அமையும்.பொறுமை பல வகைப்படும் 1- அல்லாஹ்வுக்கு வழிபடுவதில் பொறுமையை கடைப்பிடித்தல் 2- அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் மனதை அடக்கி பொறுமை காத்தல் 3- உலகத்தில் நிகழும் பலவகையான துன்பங்கள் மற்றும் சோதனைகளில் பொறுமைகாத்தல், போன்றன முக்கியமானவைகளாகும். அல்குர்ஆனை ஓதி அதன் போதனையை கடைப்பிடித்தொழுகின் அது உனக்கு சான்றாதாரமாக அமையும் அல்லது அதனை ஒதாது அதன் போதனைகளை கடைப்பிடிக்காது விட்டுவிட்டால் அது உமக்கு எதிராக சான்றளிக்கும் ஆதாரமாக அமைந்து விடும். அதனை தொடர்ந்து நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மனிதர்கள் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து பல்வேறு தொழில்களுக்காக வெளிக்கிழம்பி பல்வேறு இடங்களுக்குச் செல்வார்கள் என்பதை இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் . இவ்வாறு செல்வோரில் சிலர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வழிப்படுவதில் உறுதியாக இருந்து நரகத்திலிருந்து தம்மை விடுவிடுவித்துக்கொள்வோரும், சத்திய மார்க்கத்திலிருந்து தடம்புரண்டு பாவகாரியங்களில் ஈடுபட்டு அதன் மூலம் தம்மை நாசத்திற்கு உட்படுத்தி நரகத்திற்கு செல்வோறும் உள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.