





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக -அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : அழித்தொழிக்கும் (பெரும் அழிவைத் தரும்) ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர்கள் (ஸஹாபாக்கள்) 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அநாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்) என்று (பதில்) கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு நன்மைகளை அழிக்கும் ஏழு பெரும் குற்றங்களை விட்டும் தூரமாகுமாறு ஏவுகின்றார்கள். அவை பற்றிக் கேட்கப்பட்ட போது அவற்றைப் குறித்து பின்வருமாறு தெளிவு படுத்தினார்கள். முதலாவது: அல்லாஹ்விற்கு நிகராக எவ்விதத்திலாவது இணையாளர்களை ஏற்படுத்துவதன் மூலம் இணைவைத்தல். மேலும் வணக்கவழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ் அல்லாதவற்றிற்கும் செலுத்துதல் ஷிர்க்காகும். இது மிகப்பெரும் பாவமாதலால் அதனை கொண்டு ஆரம்பித்துள்ளார்கள்;. இரண்டாவது :சூனியம் செய்தல். சூனியம் என்பது முடிச்சுகள், மந்திரங்கள், மருந்துகள், புகை ஆகியவற்றைக் குறிக்கும். இவை சூனியம் செய்யப்பட்டவரின் உடலில் அவர் கொல்லப்படுவதன் மூலமோ அல்லது நோய் ஏற்படுவதன் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அல்லது கணவன் மனைவிக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தலாம். இது ஒரு ஷைத்தானிய செயலாகும். இவற்றில் பெரும்பாலனவை இணைவைத்தல் மற்றும் தீய ஆவிகள் விரும்பும் ஒன்றைக் கொண்டு மட்டுமே அடைய முடியும். மூன்றாவது: ஆட்சியாளரால் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒரு நியாயமான காரணத்தைத் தவிர, இறைவன் தடைசெய்த ஆன்மாவைக் கொல்வது. நான்காவது: வட்டியை சாப்பிடுதல், அல்லது ஏதோ ஓரு வகையில் பயன்பெரும் விதத்தில் வட்டியை பயன்படுத்தல். ஜந்தாவது: பருவவயதை அடையாத நிலையில் தந்தையை இழந்த குழந்தையின் சொத்தில் அத்துமீறி நடந்து கொள்ளுதல்.(அளவு கடந்து அனுபவித்தல்). ஆறாவது : காபிர்களுடனான போரில் புறமுதுகுகாட்டி ஓடுதல். ஏழாவது: கற்புள்ள சுதந்திர பெண்களின் மீது விபச்சார பழிசுமத்துதல். அதே போன்று ஆண்கள் மீது வீண் பழி சுமத்துவதும் இதில் உள்ளடங்கும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'உங்களது வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், எனது சமாதியைக் கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம், என் மீது நீங்கள் ஸலவாத் கூறுங்கள், நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களது ஸலவாத் என்னை வந்தடைகின்றது'.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்ஸுன்னத்தான தொழுகைகள் போன்ற எந்த வணக்கமுமின்றி வீடுகளை செயலிழக்கச் செய்து மண்ணறைகளைப் போன்று ஆக்க வேண்டாமென நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்துள்ளார்கள். நபியவர்களின் கப்ரை அடிக்கடி தரிசித்து, வழமையான முறையில் அந்த இடத்தில் ஒன்றுகூடுவது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும் வழியாக அமைந்து விடும் என்பதனால் அதனைத் தடுத்தார்கள். பூமியின் எந்த இடத்திலிருந்தாலும் நபியவர்கள் மீது ஸலவாத்தும், ஸலாமும் கூறுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். ஏனென்றால் அருகில் இருப்பவராயினும், தூரத்தில் இருப்பவராயினும் அவர்களின் ஸலவாத்துக்கள் ஒரே மாதிரியாகவே அவருக்கு எத்திவைக்கப்படுகின்றன. ஆகையால் அவரின் மண்ணறைக்கு அடிக்கடி செல்லவேண்டி அவசியம் கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃது ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'தன் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள (நா)வையும், தன் இரு கால்களுக்கிடையே உள்ள மறைவுறுப்பையும் (பாவத்திலிருந்து பாதுகாப்பதாக) எவர் எனக்கு உத்தரவாதமளிக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் உத்தரவாதம் அளிக்கிறேன்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு விடயங்கள் குறித்து அறிவித்துள்ளார்கள். ஒரு முஸ்லிம் பின்வரும் இரண்டு விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவன் சுவர்க்கம் நுழைவான்' முதலாவது : அல்லாஹ்வை கோபப்படுத்தும் விடயங்களை பேசுவதை விட்டும் நாவை பாதுகாத்தல் . இரண்டாவது : மானக்கேடானவற்றில் வீழ்வதை விட்டும் மறையுறுப்பை பாதுகாத்தல். மேலே குறிப்பிடப்பட்ட இரு உறுப்புகளினாலும் அதிக பாவச்செயல்களும் குற்றங்களும் நிகழ்கின்றன
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'திக்ரில் சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் (لا إله إلا الله) என்பதாகும். துஆவில் சிறந்தது அல்ஹம்து லில்லாஹ் ( الحمد لله) என்பதாகும்.
இதனை இமாம்களான திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, இப்னுமாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்இந்த ஹதீஸில் எமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திக்ரில் மிகவும் சிறப்புக்குரியது :லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தை எனக் குறிப்பிடுகிறார்கள். இதன் கருத்து 'உண்மையாக வணங்கத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறும் இல்லை என்பதாகும். மேலும் பிரார்த்தனையில் மிகவும் சிறப்புக்குரியது அல்ஹம்துலில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியது) என்பதாகவும் கூறுகிறார்கள். இதன் கருத்து : அருள்பாலிப்பவன் அல்லாஹ் மாத்திரமே என்பதை ஏற்றுக்கொள்வதும், அவனே அழகிய பரிபூரணமான வர்ணனைக்கு உரித்தானவன் என்பதுமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'சுவனம் உங்களொருவரின் செருப்பின் வாரை விட மிக நெருக்கமானதாகும், நரகமும் அதே போன்றுதான்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்ஒரு மனிதனுக்கு தனது செருப்பின் வார் எவ்வளவு சமீபமாக உள்ளதோ அதேபோன்று சுவனமும் நரகமும் அவனுக்கு சமீபமாக உள்ளதாக நபியவர்கள் இந்த ஹதீஸில் அறியத் தருகின்றார்கள். ஏனெனில் அவன் சிலவேளை அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் ஒரு வணக்கத்தைச் செய்வான், அது அவனை சுவனத்தில் நுழைவித்து விடுகின்றது. சிலவேளை அவன் ஒரு பாவத்தைச் செய்திருப்பான். அவனை நரகில் அவன் அறியாமலே பல வருடங்கள் தள்ளி விடுகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா மற்றும் அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் கூறுகின்றார்கள்: 'ஒரு முஸ்லிமை தைக்கும் முள் உட்பட, அவனுக்கு நேரிடும் சிரமம், நோய், கவலை, துக்கம், மனவேதனைகள் ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவனின் பாவத்தின் சிலதை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோய்கள் கவலைகள் துன்பங்கள் சோதனைகள் பேரிடர்கள் கஷ்டங்கள் பயம் பசி –உடலில் தைக்கும் முள்ளால் ஏற்படும் வலி உட்பட- அனைத்தும் அவனின் பாவத்திற்கு பரிகாரமாகவும், அவனின் குற்றங்களை அழித்துவிடும் விடயங்களாகவும்; அவை உள்ளன என தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'நரகம் ஆசா பாசங்களைக் (மனோ இச்சைகளைக்) கொண்டு திரையிடப்பட்டுள்ளது, சுவர்க்கம் விருப்பமற்ற விடயங்களைக் கொண்டு திரையிடப்பட்டுள்ளது'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நரகமானது மனம் விரும்பும் ஹராமான காரியங்களை செய்வது, கடமைகளை புறக்கணித்து அதில் அலட்சியமாக இருப்பது போன்ற விடயங்களால் திரையிடப்பட்டுள்ளது என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். இந்த விடயத்தில் யார் தனது மனோ இச்சையைப் பின்பற்றி நடந்து கொள்கிறாரோ அவர் நரகிற்கு உரித்தானவராக மாறிவிடுவார். மனம் விரும்பாத விடயங்கள் மூலம்தான் சுவர்க்கம் சூழப்பட்டுள்ளது. மனம் விரும்பாத விடயங்களில்: இறைக்கட்டளைகளை தொடராக பேணிவருதல், ஹராமான விடயங்களை விட்டுவிடுதல், இந்த விடயங்களில் ஏற்படும் சிரமங்களைத் தாங்கிக் கொள்ளல் போன்றவை இதில் உள்ளவையாகும். இந்த விடயங்களில் தீவிரமாக இருந்து தன்னை சிரமப்பட்டுக் காப்பாற்றிக் கொள்பவர் சுவர்க்கம் நுழைய தகுதி பெறுவார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும் : ஸலாத்திற்கு பதிலுரைத்தல், நோயுற்றறால் நலம் விசாரித்தல், மரணித்தால் அவரின் இறுதி சடங்கில் பின்துயர்தல், விருந்துக்கு அழைத்தால் பதிலளித்தல், தும்மி, அல்ஹம்து லில்லாஹ் எனக் கூறினால் பதிலுரைத்தல்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்நபிமொழியில் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய சில கடமைகள் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள். அந்தக்கடமைகளுள் முதலாவது ஒருவர் உமக்கு ஸலாம் கூறினால் அவருக்கு பதிலளித்தல் ஆகும். இரண்டாவது கடமை: நோயாளியை சுகம் விசாரித்தல். மூன்றாவது கடமை: ஜனாஸாவை வீட்டிருந்து தொழுமிடம் வரைக்கும்,தொழுமிடத்திலிருந்து அவரை அடக்கம் செய்யவதற்காக மக்பரா –அடக்கஸ்தளம் வரை பின்தொடரந்து செல்லுதல். நான்காவது கடமை : ஒருவர் வலீமா,மற்றும் வலீமா அல்லாத நிகழ்வுக்கு அழைப்பு விடுத்தால் அதற்கு பதில்அளித்தல். ஐந்தாவது கடமை : தும்மியவருக்கு பதிலளித்தல். அதாவது தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் அதனைக் செவிமடுத்தவர் யர்ஹமுகல்லாஹ் என்று கூறவேண்டும். அதற்கு தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் என்று கூற வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'விற்றாலும், வாங்கினாலும், கடனைத் திருப்பக் கேட்டாலும் மென்மையாக நடந்து கொள்ளும் ஓர் அடியானுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்தனது வியாபாரத்தில் தாராளத்தன்மையுடன், வல்லல் தன்மையுடனும், மென்மையாகவும் நடந்து கொள்ளும் அனைவருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். வாங்குபருக்கு அவர் வாங்கும் பொருளின் விலையில் சிரமப்படுத்தாது நல்ல பண்பாட்டுடன் நடந்து கொள்வார். பொருளை கொள்வனவு செய்தாலும் மென்மையாகவும் தாராளத்தன்மையுடனும், நடந்து கொள்வார். அவர் பொருளின் விலையை அளவுக்கதிகமாகக் குறைத்தோ அதன் பெறுமதியை குறைத்தோ வாங்கமாட்டார் கடனை நிறைவேற்றுமாறு கோரினாலும் அவருடன் மென்மையாகவும், தாராளத் தன்மையுடனும் நடந்து கொள்வார். கடனைப் பெற்றவர் பரம ஏழையாக, தேவையுடையவராக இருப்பின் அவர்களுடன் மென்மையாகவும் இங்கிதமாகவும் அவர்களிடம் கேட்பதோடு, அதனை நிறைவேற்ற வசதியற்றவர்களுக்கு கால அவகாசம் அளிப்பார்.