





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: (முற் காலத்தில்) ஒருவர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தன்னுடைய (அலுவலரான) வாலிபரிடம், '(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக் கூடும் என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவரின் பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்துவிட்டான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதர் குறித்துக் குறிப்பிடுகிறார். அவர் மனிதர்களுக்கு கடன் கொடுப்பதன் மூலம் அல்லது தவணை அடிப்படையில் வியாபாரம் செய்வதன் மூலம் நல்ல முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார். மனிதர்களிடமிருந்து கடனை மீளப் பெற்றெடுக்கும் தனது பணியாளனுக்கு அம்மனிதர் பின்வருமாறு கூறிக்கொண்டிருந்தார் : நீ கடனாளியிடம் சென்று அவர் உம்மிடம், கடனை நிறைவேற்ற தன்னிடம் ஒன்றுமில்லை என்று கூறினால் அவனுக்கு தவணை கொடுப்பதன் மூலம், அல்லது வற்புறுத்தி கேட்காமல் விடுவதன் மூலம் அவனை மன்னித்துவிடுவாயாக.' அல்லது சிறிது குறைவாக இருந்தாலும் கடனாளியிடம் உள்ளதை பெற்றுக் கொள்வதன் மூலம் விட்டுக் கொடுப்பதாகும்.இவ்வாறு இலகு படுத்தி நடந்து கொள்வதற்கான காரணம்; அல்லாஹ்வும் பாவங்களை மன்னித்து விடுவான் என்ற ஆவல் மற்றும் எதிர்ப்பார்பினாலுமாகும். அவர் மரணித்ததும் அல்லாஹ் அவரின் தவறுகளைப் பொருந்தி அவரை மன்னித்துவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) கூறுகின்றார்கள் :"கல்வியைத் தேடி வெளியில் சென்றவர் திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையிலேயே இருக்கின்றார்".
இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்ஹதீஸ் விளக்கம் : தனது வீட்டிலிருந்தோ, நாட்டிலிருந்தோ மார்க்கக் கல்வியைத் தேடி வெளியேறிச் சென்றவர் வீடு திரும்பும் வரை அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய வெளியேறிச் சென்றவரைப் போலாவார். ஏனெனில் இவர் மார்க்கத்தை உயிர்ப்பிப்பதிலும், ஷைத்தானை இழிவாக்குவதிலும், தன்னை வருத்திக் கொள்வதிலும் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.
அபூ தர் ஜுன்துப் இப்னு ஜுனாதா (ரலி) அவர்களும், அபூ அப்திர் ரஹ்மான் முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அறிவிக்கின்றார்கள் : நீர் எங்கிருந்த போதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! ஒரு பாவத்திற்குப் பின்னர் ஒரு நன்மை செய்துவிடு. அது அப்பாவத்தை அழித்துவிடும். மேலும், மக்களோடு நற்பண்புடன் நடந்துகொள்.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள் மூன்று விடயங்களைக் கொண்டு ஏவுகின்றார்கள் : முதலாவது : இறையச்சம். அதாவது, கடமைகளைப் பேணிச் செய்வதுடன், எல்லா இடங்களிலும், காலங்களிலும், நிலைகளிலும், இரகசியத்திலும், வெளிப்படையிலும், ஆரோக்கியத்திலும், சோதனையிலும் பாவங்களைத் தவிர்த்தல். இரண்டாவது : ஏதாவதொரு பாவத்தை செய்துவிட்டால், அதற்குப் பின்னர், தொழுகை, தர்மம், உபகாரம், உறவுகளை சேர்ந்து நடத்தல், தவ்பா போன்ற நன்மைகளை செய்துவிடல். அவை அப்பாவத்தை அழித்துவிடும். மூன்றாவது : மக்களோடு, அவர்களது முகத்தில் புன்னகைத்தல், மென்மையாக நடந்துகொள்ளல், உபகாரம் புரிதல், நோவினைகளைத் தடுத்தல் போன்ற நற்குணங்களுடன் நடந்துகொள்ளுங்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டு அதில் கொலைசெய்தவனும், கொலைசெய்யப்பட்டவனும் நரகத்திற்கே செல்வார்கள் என்று கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! கொலை செய்தவன் (நரகத்திற்குச் செல்வது நியாயமானது) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என நான் அவர்களிடம் கேட்டதற்கு, நபியவர்கள் 'அவர் இவரைக் கொல்ல வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தார்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில், இரு முஸ்லிம்கள் தமது வாட்களினால் மற்றவரை கொலை செய்து அழித்து விட வேண்டும் என்ற நோக்கில் சந்தித்துக் கொண்டால் கொலைசெய்தவர் தனது தோழரை கொலை செய்யதன் காரணமாக நரகம் செல்வார் என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் கொலைசெய்யப்பட்டவரும் நரகம் செல்வார் எனக் குறிப்பிட்டது நபித்தோழர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது அதனால் நபியவர்கள் கொலைசெய்யப்பட்டவர் எப்படி நரகில் இருப்பார் என வினவினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது தோழரை கொல்ல வேண்டும் என்ற ஆவலுடனே அவரும் மோதினார். ஆனால் கொலை செய்தவர் மிகவிரைவாக செயற்பட்டு அவரை முந்தி கொலை செய்து விட்டார் என விளக்கமளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'செயல்கள் அனைத்தும் எண்ணத்தைக் கொண்டே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது. ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற் காகத்தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். இமாம் புஹாரியின் அறிவிப்பில் ' செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும்; தாம் எண்ணியதற்கேட்பவே கூலி கிடைக்கிறது' என்று இடம்பெற்றுள்ளது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அனைத்து செயற்பாடுகளும் நிய்யத்தைக் கொண்டே கணிக்கப்ப்படுவதாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த சட்டமானது வணக்கங்கள் நடைமுறை சார்ந்த விடயங்கள் அனைத்திற்கும் பொதுவானது. யார் தனது செயற்பாட்டினூடாக உலகியல் நலனை நாடினால் அவர் அதை மாத்திரமே அடைந்துகொள்வார். அவருக்கு எந்த கூலியும் கிடையாது. யார் தனது செயற்பாடுகளினூடாக அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறரோ, அவரின் அந்த செயலுக்கு வெகுமதியும் கூலியும் கிடைக்கும். குறிப்பிட்ட அந்த செயல் குடித்தல் சாப்பிடுதல் போன்ற அன்றாட செயல்களாக இருந்தாலும் சரியே. வெளிப்படையில் குறித்த செயலானது ஒரே மாதிரியாக இருந்தாலும் நிய்யத் -எண்ணமானது எந்தளவிற்கு தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் குறிப்பிடுகையில் யார் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரமே நாடி தனது தாயகத்தை துறந்து (ஹிஜ்ரத்) செல்கிறரோ அவரின் ஹிஜ்ரத் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹிஜ்ரத்தாகும். அவரின் உண்மையான நிய்யத்திற்கு கூலி வழங்கப்படும். யார் தனது ஹிஜ்ரத்தின் போது உலகியல் நலன்களான செல்வம், அல்லது புகழ் அல்லது வியாபாரம் அல்லது மனைவி போன்ற விடயங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் சென்றிருந்தால் அவரின் நிய்யத்தில் (எண்ணத்தில்) அவர் அடைந்து கொள்ள விரும்பும் நலனைத் தவிர வேறு எதனையும் அடைந்து கொள்ளமாட்டார். அவருக்கு எந்த வெகுமதியோ கூலியோ கிடைக்காது என நபியவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்' என ஒரு மனிதர் கூறினார். அதற்கு நபியவர்கள், 'நீர் கோபப்படாதீர்' என பதிலளித்தார்கள். அம்மனிதர் மீண்டும், மீண்டும் கேட்டார். நபியவர்கள்; 'நீர் கோபப்படாதீர்' என்றே கூறினார்கள்.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபித்தோழர்களில் ஒருவர் அவரின் இம்மை மறுமைக்கு பயனளிக்கும் ஒரு விடயத்தை காட்டித்தருமாறு நபியவர்களிடம் வேண்டினார். அதற்கு நபியவர்கள் கோபம் கொள்ள வேண்டாம் என அறிவுரைக் கூறி கட்டளை பிரப்பித்தாரகள். இதன் கருத்து, கோபத்தை தூண்டக் கூடிய காரணிகளை தவிர்ந்திருத்தல், கோபம் ஏற்பட்டால் மனதை அடக்கி அடக்கமாக இருத்தல், கோபத்தின் காரணமாக அத்துமீறி கொலை அல்லது தாக்குதல் அல்லது ஏசுதல் போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருத்தல் போன்றவற்றை குறிக்கும். நபியவர்களிடம் வந்த மனிதர் பல தடவைகள் தனக்கு உபதேசம் செயயுமாறு வேண்டிக்ககொண்டாலும்; நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் 'கோபம் கொள்ளாதீர்' என்ற வார்த்தையை தவிர மேலதிகமாக எதனையும் கூறவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நீங்கள் உங்களின் விடயங்ளை அல்லாஹ்வின் மீது உண்மையாகவே பொறுப்புச் சாட்டினால் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று உங்களுக்கும் உணவளிப்பான். அவை அதிகாலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்புகின்றன'.
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஉலகியல் மற்றும் மார்க்கம் சம்பந்தமான விவகாரங்களில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், கெடுதிகளைத் தவிர்த்துக் கொள்வதிலும் அல்லாஹ்விடமே நாம் பொறுப்புச் சாட்ட வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் இந்த நபி மொழியினூடாக எம்மைத் தூண்டுகிறார்கள். ஏனெனில் எமக்கு ஏதும் கிடைப்பதும் கிடைக்காமல் நலுவிச் செல்வதும், நலவோ, கெடுதியோ ஏற்படுவதும் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமிருந்து மாத்திரம் தான் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். அல்லாஹ்வில் முழுமையாகச் சார்ந்திருந்து நலவுகளைப் பெற்றுக்கொள்ளவும், கெடுதிகளைத் தடுப்பதற்குரிய காரணிகளை-வழிமுறைகளை- நாம் செய்வது அவசியமாகும். இவ்வாறு நாம் செய்யும் போது காலையில் வெறும் வயிற்றுடன் சென்று, மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்பும் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று அல்லாஹ் உணவளிப்பான். பறவைகளின் இந்த செயற்பாடானது உணவைத் தேடுவதில் பிறரில் தங்கியிருக்காது, சோம்பல் கொள்ளாது முயற்சிசெய்தல், உழைத்தல் எனும் வழிமுறைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வழிமுறையையே மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: உயர்வும் கண்ணியமிக்கோனாகிய தம் இறைவன் அறிவித்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: 'ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு 'இறைவா! (நான் ஒரு பாவம் செய்து விட்டேன்.) என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று கூறினார். உடனே உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய இறைவன், 'என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான் பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்துகொண்டான்' என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, 'என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!' என்று பிரார்த்தித்தார். அப்போதும் உயர்வும் கண்ணியமும் மிக்கவனாகிய அல்லாஹ் -இறைவன்- , '(இம்முறையும்) என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான். எனது அடியானை மன்னித்து விட்டேன், அவன் நாடியதைச் செய்யட்டும்' என்று சொல்கிறான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது இரட்சகனிடமிருந்து அறிவிக்கிறார்க்ள். ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற, அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் அந்த அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு, அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் அவனை மன்னித்துவிட்டேன் என்று கூறுகிறான். மீண்டும் மூன்றாவது தடவையாகவும் அந்த அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் யாஅல்லாஹ் எனது -குற்றத்தை –பாவத்தை எனக்கு மன்னித்தருள்வாயாக என்று கூற அதற்கு அல்லாஹ் எனது அடியான் ஒரு பாவத்தை செய்துவிட்டு அவனது அப்பாவத்தை மன்னிக்க இறைவன் உள்ளான் என்பதை அறிந்துள்ளான். எனவே அவனுடைய பாவத்தை மன்னித்து அதனை மறைத்துவிடுகிறான். இவ்வாறான ஒரு நபருக்கு அல்லாஹ் நான் எனது அடியானை மன்னித்துவிட்டேன் என்பதாகக் கூறுகிறான். அந்த அடியான் பாவம் செய்துவிட்டு அதனை விட்விட்டுகிறான், பின்னர் அதற்காக வருந்தி மீண்டும் அப்பாவகாரியத்திற்கு செல்வதில்லை என்று மனஉறுதி கொள்கிறான். இவ்வாறு இருக்கையில் அவனின் மனம் அவனை ஆட்கொண்டு மீண்டு அப்பாவ காரியத்தில் வீழ்ந்து விடுகிறான். இப்படியிருக்கும் ஒரு அடியானை -அதாவது பாவம்செய்வதும் அதற்காக பாவமீட்சி கோருவதும் என்ற நிலையில் இருப்பவனை- அல்லாஹ் தான் மன்னித்து விடுவதாக கூறுகிறான். ஏனெனில் தவ்பாவானது முன் செய்தபாவங்களை அழித்துவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'நிச்சயமாக தன் குடும்பத்திலும் ஆட்சியிலும் அவர்கள் அதிகாரம் பெற்றவைகளிலும் நீதியாக நடக்கக் கூடியவர்கள் உயர்ந்தோனாகிய அர்ரஹ்மானின் வலப்புறத்திற்கு பக்கமாக அவனிடமுள்ள ஒளியிலான மேடைகளில் இருப்பார்கள் அவனின் இரு கைகளும் வலக்கரமாகும்'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தமது ஆட்சி, அதிகாரத்திற்குக் கீழிருக்கும் மக்கள் மத்தியில் நீதியாகவும், சத்தியத்தை கொண்டும்; தீர்ப்புச் செய்வோருக்கு கிடைக்கும் வெகுமதி குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்நபிமொழியில் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் ஒளியினாலான உயர்ந்த இருக்கைகளில், மேடைகளில் வீற்றிருப்பார்கள். இது அவர்களை மறுமையில் கௌரப்படுத்துவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ள மிகப்பெரும் சன்மானமாகும். இந்த மேடைகள் அர்ரஹ்மானாகிய அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் காணப்படும். ஆனால் அவனின் இரு கைகளும் வலப்பக்கமாகும்