Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way






























Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
மார்க்க மற்றும் உலக விவகாரங்களில்; மென்மையாக நடந்து கொள்ளும் பண்பை இழந்தவருக்கு தோல்வியே கிட்டும். அது தன்னோடு தொடர்பான மற்றும் பிறருடன் தொடர்பான விவகாரங்களை கையாள்வதாத இருந்தாலும் அவை அனைத்திலும் நன்மைகள்; இழக்கப்பட்டவராகவே அவர் காணப்படுவார்.
இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புறம் பேசுதலின் யதார்த்தத்தைத் தெளிவு படுத்துகின்றார்கள். அதாவது ஒரு சகோதரரைப் பற்றி அவரின் தோற்றம் பற்றியோ அல்லது அவரின் குணம் பற்றியோ அவர் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர் விரும்பாத ஒரு செய்தியைக் கூறுவதாகும். உதாரணத்திற்கு குறித்த நபர் பற்றி அவர் ஒற்றைக் கண்ணுடையவர், மோசடிக்காரன், பொய்யன் போன்ற மோசமான பண்புகளை அடையாளப்படுத்தும் பெயர்களை கூறுவது புறமாகும். இக்குறித்த பண்புகள் அவரிடத்தில் இருந்தாலும் இது புறம் பேசுவதில் சேரும் என்பதை உணர்தல் வேண்டும். குறித்த பண்புகள் அவரிடத்தில் இல்லாது விட்டால் அது புறத்தை விட மிகவும் கடுமையான விடயமான அபாண்டம் பலி சுமத்துதல் என்ற விவகாரத்திற்கு இட்டுச்செல்லும்.
முஸ்லிம்களின் உடமைகளை, செல்வத்தை தவறான முறையில் கையாளும் சில மனிதர்களை நபியவர்கள் கூறி, அவர்கள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சுரண்டுகின்றனர் என்பதைக் கூறுகின்றார்கள். உரிய முறையில் அல்லாது வேறு வழிகளில் செல்வத்தை சம்பாதித்து அதனை திரட்டி, உரிய இடங்களில்,சந்தர்ப்பங்களில் செலவளிக்கப்படாத செல்வம் குறித்த பொது கருத்து இதுவாகும்.இதில் அநாதைகளின் சொத்துக்கள், வக்பு சொத்துக்கள், அமானிதங்களை ஒப்டைக்க மறுத்தல், பொது நிதியிலிருந்து அனுமதியோ, தகுதியோ இல்லாமல் எடுத்தல் போன்றன இதில் உள்ளடங்குகின்றன. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோருக்கான கூலி நரகம்தான் என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பகைமை மற்றும் பிரிவினைக்கு வழிவகுக்கும் விடயங்கள்; சிலவற்றை எச்சரித்து தடைசெய்துள்ளார்கள். அவற்றுள் பின்வருன ஹதீஸில் குறிப்பிடப்பட்டவையாகும் (அழ்ழன்)'ஊகம், பழிசுமத்துதல் என்பது இதன் கருத்தாகும் அதாவது எவ்வித ஆதாரமுமின்றி ஊகத்தின் அடிப்படையில் உள்ளத்தில் எழும் பிறர் குறித்த தீய எண்ணம் (பழியுரைத்தல்). இதனை நபியவர்கள் பேச்சுகளில் மிகப்பெரும் பொய் என தெளிவுபடுத்துகிறார்கள். (அத்தஹஸ்ஸுஸ்) மனிதர்களின் குறைகளை நேரடியாக பார்த்தல்; அல்லது கேட்டல் ஊடாக தேடிச் செல்வதை குறிக்கும். (அத்தஜஸ்ஸுஸ்) மனிதர்களின் தெரியாத மறைவான விடயங்களை தேடிச்செல்லுதல், ஆய்வுசெய்தல். இவ்வார்த்தை அதிகம் தீமை சார்ந்த விடயங்களில் பிரயோகிக்கப்படும். (அல் ஹஸத்) : பிறருக்கு கிடைத்த அருள்களை விரும்பாதிருத்தல்,(வெறுத்தல்). (அத்ததாபுர்) என்பது ஒருவறை புறக்கணித்து பிணங்கிக் கொள்வது இதனால் தனது சகோதர முஸ்லிமுக்கு ஸலாம் கூறாதிருப்பது அவரை சந்திக்காது இருத்தல். (அத்தபாகுழ்) என்பது வெறுத்தல் ஓதுக்குதல் என்ற கருத்தைக்குறிக்கும் அதாவது பிறருக்கு நோவினை செய்தல் முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொள்ளுதல்,வெறுப்போடு சந்தித்தல் என்பவை இதன் கருத்தாகும். இறுதியாக முஸ்லிம்களின் நிலைகளை சீர்செய்யும் முகமாகவும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதற்காகவும் வேண்டி கருத்தாளமிக்க ஒரு வார்த்தையை குறிப்பிட்டார்கள். அதுதான் 'நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடியார்கள் என்றவகையில் சகோதரர்களாக இருங்கள்';. சகோதரத்துவம் என்பது மனிதர்களுக்கு மத்தியில் உறவை, தொடர்பை பலப்படுத்தும் ஒரு இணைப்பாகும். அது அவர்களுக்கு மத்தியில் அன்பையும் நேசத்தையும் அதிகப்படுத்துகிறது.
மனிதன் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளதாலும், தனது எஜமான் ஏவியதை எடுத்து நடப்பதிலும், விலக்கியதைத் தவிர்ந்து கொள்வதிலும் அவனுக்குக் கட்டுப்படுவதிலும் பாவம் செய்யாமல் அவனால் இருக்க முடியாது. எனினும் தவ்பாவின் பாவமீட்சி வாயிலை அல்லாஹ் தனது அடியார்களுக்காகத் திறந்து வைத்துள்ளான். தவறிழைப்பவர்களில் அதிகம் தவ்பாச் செய்வோரே சிறந்தவர்கள் எனவும் அவன் அறிவித்துள்ளான்.
பிறருக்கு செய்யும் உபகாரமும், பயன்படத்தக்க ஒவ்வொரு வார்த்தையும் செயலும் தர்மமாகும், அதற்கு கூலியும், வெகுமதியும் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் நல்லறங்களை செய்யுமாறு தூண்டியுள்ளார்கள்.அது ஒருவரை சந்திக்கும் போது மலர்ந்த -இன்-முகத்துடன் இருப்பது போன்ற சிறிய ஒரு செயலாக இருப்பினும் சரியே என்கிறார்கள். இதன் மூலம் தனது சகோதர முஸ்லிமுக்கு அன்பு காட்டி, மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமென்பதால் இவ்வாறான விடயங்களை ஒரு முஸ்லிம் அற்பமாகக் கருதாது ஆர்வத்துடன் மேற்கொள்வது அவசியமாகும்.
உண்மையான வலிமை என்பது உடல் வலிமையோ, அல்லது பலசாலியை வீழ்த்துவதோ அல்ல. மாறாக மிகப்பெரும் பலசாலி என்பவன் கடுமையான கோபத்தின் போது தனது உள்ளத்துடன் போராடி கட்டுப்படுத்துபவனே என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள். ஏனெனில் இது தன்னைக் கட்டுப்படுத்தி அவனிடமுள்ள ஷைத்தானை வெற்றி கொள்ளும் அவனது ஆற்றலைப் பறைசாற்றுகின்றது.
ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று தனது வாகனத்தை இழந்து விட்டேன். எனவே என்னை ஒரு வாகனத்தில் ஏற்றிச்செல்லுங்கள், அல்லது நான் சென்றடைவதற்கான ஒரு வாகனத்தை தாருங்கள் என்று கேட்க, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தன்னிடம் அவரை ஏற்றிச்செல்வதற்குரிய வாகனம் எதுவும் கிடையாது என விளக்கம் கூறினார்கள். அவ்வேளை அந்த இடத்தில் ஆஜராகி இருந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே!அவரை ஏற்றிச்செல்லக்க கூடிய ஒருவரை நான் காண்பித்துக் கொடுக்கிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தேவையுடையவரை தர்மம் வழங்கக் கூடியவருக்கு காட்டிக் கொடுத்தமைக்காக தர்மம் வழங்கியவரின் கூலியில் பங்காளியாக உள்ளார் எனத் தெரிவித்தார்கள்.