





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபியவர்களின் பணியாளராகிய அபூ ஹம்ஸா அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மார்க்க மற்றும் உலக விவகாரங்கள் அனைத்திலும் தனக்கு விரும்புவதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு விரும்பி தான் வெறுப்பதை தனது சகோதர முஸ்லிம்களுக்கு வெறுக்காத வரையில் யாரும் முழுமையான இறைநம்பிக்கையை அடைந்து கொள்ளமாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். எனவே மார்க்க விடயங்களில் தனது சகோதரரிடம் ஒரு குறையை கண்டால் அதனை திருத்துவதற்கு –சீர்செய்ய- அவர் முயற்சி செய்வார். அதே போன்று அவரில் நன்மையான விடயங்களை கண்டால் அவரை நெறிப்படுத்தி அதற்கு உதவிசெய்வதோடு மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் அவருக்கு அறிவுரை வழங்குவார்.
அபூமஸ்ஊத் உக்பா இப்னு அம்ர் அல்-அன்ஸாரீ அல்-பத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நவின்றதாக கூறுகின்றார்கள் : 'நீ வெட்கப்படாவிட்டால், நினைத்தை செய்துகொள்' என்பது, முந்திய நபித்துவ வாசகங்களில் இருந்து மக்கள் கற்றுக்கொண்ட ஒன்றாகும்.'
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்முன்சென்ற நபிமார்களின் உபதேசமாக வந்து, மக்களுக்கிடையில் பரிமாறப்பட்ட, வாழையடி வாழையாக இந்த சமுதாயத்தின் ஆரம்பம் வரை வந்தடைந்த ஓர் அம்சமாவது, 'நீ எதைச் செய்யவிரும்புகின்றாயோ, அதைப் பார். அது வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருந்தால், விட்டுவிடு. அவ்வாறில்லாவிட்டால், அதைச் செய். ஏனெனில், அசிங்கமானதைச் செய்யத் தடையாக இருப்பது, வெட்கமே! யாரிடம் வெட்கம் இல்லையோ, அவர் எல்லா மானக்கேடான பாவங்களிலும் மூழ்கிடுவார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நீங்கள் உண்மையான முறையில் இறைவனை நம்பி அவனை சார்ந்திருந்தால், (தவக்குல் வைத்தால்) காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் எவ்வாறு ஒரு பறவை தனது கூண்டிற்கு திரும்புகின்றதோ அதற்கு உணவளிப்பதை போன்று உங்களுக்கும் உணவளிப்பான்".
இமாம்களான அஹ்மத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம் ஆகியோர் இதனைப் பதிவு செய்துள்ளனர்உலகியல் மற்றும் மார்க்கம் சம்பந்தமான விவகாரங்களில் நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், கெடுதிகளைத் தவிர்த்துக் கொள்வதிலும் அல்லாஹ்விடமே நாம் பொறுப்புச் சாட்ட வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவ வஸல்லம் அவர்கள் இந்த நபி மொழியினூடாக எம்மைத் தூண்டுகிறார்கள். ஏனெனில் எமக்கு ஏதும் கிடைப்பதும் கிடைக்காமல் நலுவிச் செல்வதும், நலவோ, கெடுதியோ ஏற்படுவதும் அனைத்தும் அல்லாஹ் ஒருவனிடமிருந்து மாத்திரம் தான் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். அல்லாஹ்வில் முழுமையாகச் சார்ந்திருந்து நலவுகளைப் பெற்றுக்கொள்ளவும், கெடுதிகளைத் தடுப்பதற்குரிய காரணிகளை-வழிமுறைகளை- நாம் செய்வது அவசியமாகும். இவ்வாறு நாம் செய்யும் போது காலையில் வெறும் வயிற்றுடன் சென்று, மாலையில் நிரம்பிய வயிற்றுடன் திரும்பும் பறவைகளுக்கு உணவளிப்பதைப் போன்று அல்லாஹ் உணவளிப்பான். பறவைகளின் இந்த செயற்பாடானது உணவைத் தேடுவதில் பிறரில் தங்கியிருக்காது, சோம்பல் கொள்ளாது முயற்சிசெய்தல், உழைத்தல் எனும் வழிமுறைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வழிமுறையையே மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறியதாக, அன்-நவ்வாஸ் இப்னு ஸிம்ஆன் அல்-அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'நன்மை என்பது நற்குணமாகும், தீமையென்பது உனது மனதில் உருத்தலை ஏற்படுத்தி, மக்கள் அதனை -பார்ப்பதை –கண்டுககொள்வதை நீ வெறுப்பதாகும்.' வாபிஸா இப்னு மஃபத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தேன், அப்போது நபியவர்கள் 'நன்மை தீமை பற்றி நீ கேட்பதற்காக வந்துள்ளீர் அல்லவா' என்று கேட்க நான் ஆம் என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ' உனது உள்ளத்திடமே தீர்ப்புக்கேட்டுக்கொள். நன்மை என்பது மனத்திற்கும் உள்ளத்திற்கும் நிம்மதியை தரக்கூடியது. தீமை என்பது மனதை உருத்தி உள்ளத்தில் தடுமாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. மக்கள் அது குறித்து உமக்கு தீர்ப்புக் கூறியிருந்தாலும் கூட உனது மனம் தயங்குவது பாவத்தைக் காட்டும்'
முதலாம் ஹதீஸ்: இதை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார், இரண்டாம் ஹதீஸ்: இதை இமாம்களான அஹ்மத், தாரமீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நன்மை (புன்னியம்-) மற்றும் பாவம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நன்மையான குணங்களில் மிகவும் உயர்ந்தது அல்லாஹ்வை பயப்படுவதன் மூலம் அல்லாஹ்வுடன் சிறந்தமுறையில் நடத்தல். அத்துடன் சிரமத்தைத் தாங்கிக்கொள்ளுதல், கோபமின்மை, முகமலர்ச்சியுடன் இருத்தல், கனிவான பேச்சு, உறவுகளைப் பேணுதல், பணிவு, கட்டுப்படுதல், மென்மையை கடைப்பிடித்தல், அழகிய முறையில் உறவாடுதல், தோழமை கொள்ளுதல் போன்றவற்றை கடைப்பிடித்து மனிதர்களுடன் நடப்பது நன்மை சார்ந்த விடயமாகும். பிர் என்பது இதயத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதாகும். பாவம் மனித உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தாது ஒரு வகை தயக்கத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவது. இதன் விளைவாக உள்ளத்தில் சந்தேகமும், குறித்த விடயம் தவறு என்பதால் அது குறித்து மனதில் பயமும்; ஏற்படுவதோடு, குறித்த விடயம் அசிங்கமானது என்பதால் மனிதர்களில் கௌரவமானவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தெரிந்து கொள்வதை மனம் விரும்பாது. ஏனெனில் மனமானது இயல்பில் நல்ல விடயங்களை பிறர் காண்பதையே விரும்புகிறது. இதனால், பிறர் கண்டுகொள்வதை விரும்பாத, மனம் வெறுக்கின்ற செயற்பாடுகளாயின் அது பாவமாகும். அதில் எவ்வித நன்மையும் கிடையாது. உம்மிடம் இருக்கும் விடயம் பற்றி மக்கள் நல்லது என்று தீர்ப்பு கூறினும், அது பற்றிய சந்தேகமும் குற்ற உணர்வும் உம் மனதில் இருக்குமாயின் அது பாவமான ஒரு விடயமாகும். மக்கள் தீர்ப்பு ஒரு போதும் ஒரு சந்தேகமான ஒருவிடயத்தை சரிபடுத்தமாட்டாது. சில வேளை தீர்ப்பு கூறுபவர் குறித்தவிடயம் பற்றி போதிய அறிவின்றி தீர்ப்பு கூறிவிடுவார். குறித்த தீர்ப்பானது மார்க்க ஆதரத்தின் அடிப்படையில் இருப்பின் தீர்ப்புக்கோரியவரின் மனம் திருப்தியடையவில்லையெனில் மீண்டும் அவரிடம் செல்வது கடமையாகும்.
அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தின் கடமைகள் எம்மீது அதிகமாக உள்ளன. எனவே எமக்கு கடைப்பிடிப்பதற்கு இலகுவான அதிகமான நன்மைகளைப் பெற்றுத்தரக் கூடிய ஒன்றை அறிவித்துத் தாருங்கள் என்று கேட்டார் அதற்கு நபியவர்கள்: "உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் திளைத்தவாறு இருக்கட்டும் "என்று கூறினார்கள். முஆஸ் இப்னு ஜபர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : இறுதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பிரிந்து செல்லும் தருனத்தில் நபியவர்களிடத்தில் : அமல்களில் மிகவும் சிறந்ததும் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானதும் எது ? என்று நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் உமது நாவு அல்லாஹ்வின் திக்ரில் -இறைநினைவில்- திளைத்த நிலையில் மரணம் தழுவவேண்டும் என்று கூறினார்கள்.
இமாம்களான அஹ்மத், திர்மிதி, இப்னு மாஜா மற்றும் இப்னு ஹிப்பான் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டதுஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, உபரியான வணக்கங்கள் அவரைப் பொறுத்தவரை அதிகமாக இருப்பதாகவும், தான் பலவீனமாக உள்ளதால் அவற்றை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் முறைப்பட்டுவிட்டு, தன்னால் தொடர்ந்து கடைப்பிடிக்கமுடியுமான, அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் இலகுவான ஒரு அமலைக் காட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள், எல்லா நிலைகளிலும் தஸ்பீஹ், தஹ்மீத், இஸ்திக்பார், துஆ போன்றவற்றின் மூலம் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவுகூர்வதில் திளைத்திருக்கக் கூடியதாக அவரது நாவு இருக்கட்டும் என்று வழிகாட்டினார்கள்.
அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'பாவங்களில் மிகப்பெரியது குறித்து உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?' என்று மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள்; 'ஆம் அல்லாஹ்வின் தூதரவர்களே!' எனக் கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரைத் துன்புறுத்தல்' என்று கூறினார்கள். பின்னர் சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதும், (மிகப் பெரிய பாவம்தான்)' என்று கூறினார்கள். இந்த வார்த்தையை கூறுவதை நிறுத்த மாட்டார்களா ? என்று நாம் கூறும் அளவுக்கு அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு மிகப் பெரும்பவாங்கள் குறித்து தெரிவித்தார்கள். அதில் அவர்கள் மூன்று பாவங்கள் குறித்து பிரஸ்தாபித்தார்கள் அவை பின்வருமாறு: முதலாவது அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் : அதாவது வணக்க வழிபாடுகளின் வகைகளுள் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு சமர்பித்தல்.மேலும் அல்லாஹ்வின் இறைமைத்துவம் (உலூஹிய்யா) , ருபூபிய்யா மற்றும் அவனின் திருநாமங்கள் பண்புகளில் அல்லாஹ்வை அல்லாஹ் அல்லாதவற்றுடன் நிகராக்குதல் போன்றவற்றை இது குறித்து நிற்கிறது. இரண்டாவது : பெற்றாருக்கு நோவினை செய்தல் என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது. பொய் பேசுதல் என்பதில் பொய் சாட்சியம் கூறுவதும் அடங்கியுள்ளது. பொய்ச் பேசுதல் என்பது : ஒருவருடைய பொருளாதாரத்தை உரிமையின்றி சுரண்டுவதற்காகவோ, அவருடைய மானத்தில் அத்துமீறுவதற்காகவோ பொய்யாக சோடிக்கப்பட்ட அனைத்து வித வார்த்தை களையும் உள்ளடக்குகின்ற ஒரு பொதுவான சொற் பிரயோகமாகும். பொய் பேசுதல் ஒரு அசிங்கமான விடயம் மற்றும் அது சமூகத்தில்; மோசமான தாக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே நபியவர்கள் பல முறை எச்சரித்து இவ்வார்த்தையைக் குறிப்பிட்டார்கள். இவ்வாறு பல முறை சொல்வதைக் கேட்ட ஸஹாபாக்கள் நபியவர்கள் மீது கொண்ட பரிவினாலும், அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதனாலும் நபியவர்கள் இதனைக் கூறுவதை நிறுத்த மாட்டார்களா என அவர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல் மிக்தாம் இப்னு மஃதீ கர்ப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : 'தனது சகோதரனை (அல்லாஹ்வுக்காக)ஒருவர் நேசித்தால் அவரிடம் தான் அவனை நேசிப்பதை அறிவிக்கட்டும்'.
இமாம்களான அபூ தாவூத், திர்மிதி, குப்ரா எனும் நூலில் நஸாஈ, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்முஃமின்களுக்கு மத்தியில் தொடர்பை –உறவை- வலுப்படுத்தி அன்பையும் நேசத்தையும் பரப்பும்; வழிமுறையொன்றை இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோரை துன்புறுத்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெரும்பவாங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறார்கள்; அவற்றை செய்பவன் இம்மை அல்லது மறுமையில் கடுமையான எச்சரிக்கைக்கு உட்படுவான். அவற்றுள் முதலாவது : அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும் : இதன் கருத்து ; வணக்க வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதவருக்கு செலுத்துதல், உலூஹிய்யா ருபூபிய்யா,அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் -(அல்லாஹ்வின் அழகிய நாமங்களும் பண்புகளும்) போன்ற விடயங்களில் அல்லாஹ் தனக்கென தனித்துவமாக பெற்றிருக்கும் விடயங்களில் ஏதாவது ஒன்றை அல்லாஹ் அல்லாதோரும் பெற்றுள்ளனர் என சமப்படுத்துவதினை குறிக்கும். இரண்டாவது : ' பெற்றோரைத் துன்புறுத்துதல் நோவினை செய்தல்': என்பது சொல் மற்றும் செயல் ரீதியான அனைத்து விடயங்கள் மூலமும் பெற்றோரை துன்புறுத்துவதையும் அவர்களுக்கு உபகாரம் செய்யாதிருத்தலையும் குறிக்கிறது. மூன்றாவது : எவ்வித நியாயமான காரணமுமில்லாது அநியாயமாகவும், அத்துமீறியும் ஒருவரை கொலை செய்தல். நான்காவது : பொய் சத்தியம் என்பது ' பொய்யென்று தெரிந்துகொண்டே ஒரு விவகாரம் சம்பந்தமாக பொய்யாக சத்தியம் செய்தலைக் இது குறிக்கிறது. 'அல் யமீனுல் கமூஸ்' என இச்சத்தியம் அழைக்கப்படக் காரணம் குறித்த நபரை இந்த சத்தியமானது பாவத்தில் அல்லது நரகில் தள்ளிவிடுவதினலாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : '(கணவனை இழந்த) விதவைக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்தனது விவகாரங்களை கவனிப்பதற்கு எவரும் இல்லாத கணவனை இழந்த பெண், மற்றும் தேவையுள்ள ஏழைகளின் நலன்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் கூலியை மாத்திரம் எதிர் பார்த்தவராக அவர்களுக்கு செலவு செய்பவருக் குரிய கூலி, இறைபாதையில் போரிடுபவர், தொடர்ச்சியான இராவணக்கத்தின் காரணமாக சோர்வடையாது நின்று வணங்குபவர், தொடர்ந்து நோன்பு நோற்பவர் ஆகியோருக்கு கிடைக்கும் கூலியை ஒத்தது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்நபிமொழியில் அறிவித்துள்ளார்கள்.