





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அபூஉமாமா இயாஸ் இப்னு ஸஃலபா அல்ஹாரிஸீ (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்கள் கூரினார்கள் : யார் (பொய்ச்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமின் உரிமையை அபகரித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நரகத்தைக் கட்டாயமாக்கி விட்டான்; சொர்க்கத்தை அவருக்குத் தடை செய்துவிட்டான்' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், 'அது ஒரு சிறிய பொருளாய் இருந்தாலுமா, அல்லாஹ்வின் தூதரே?' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்; அவர்கள், 'மிஸ்வாக் மரத்தின் ஒரு குச்சியாக அது இருந்தாலும் சரியே!' என்று பதிலளித்தார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி முஹம்மது ﷺ அவர்கள், ஒரு முஸ்லிமின் உரிமையை பறிப்பதற்காக தனக்கு சொந்தமில்லை என்பதை தெளிவாக அறிந்த நிலையில்; அல்லாஹ்வின் பெயரில் பொய்யாக சத்தியம் செய்வதை கடுமையாக எச்சரித்தார்கள். அத்தகைய செயலுக்கான தண்டனை நரகமாகும். சுவர்க்கம் மறுக்கப்படும்; இது பெரும் பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதர்: 'அல்லாஹ்வின் தூதரே சத்தியம் செய்து பறிக்கப்படும் பொருள் மிகவும் சிறியதாக இருந்தாலுமா ? என் கேட்டார். அதற்கு நபி ﷺ அவர்கள்: 'அது அராக் மரத்திலிருந்து எடுக்கப்படும் ஒரு சிறிய மிஸ்வாக் குச்சியாக இருந்தாலும் கூட' என்று பதில் கூறினார்கள்.
விசுவாசிகளின் தாயார், ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : «أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا». (பொருள் : மனிதர்களின் இரட்சகனே! நோயை நீக்கிவிடுவாயாக! மேலும் குணப்படுத்தி விடுவாயாக! நீயே குணப்படுத்தக் கூடியவன். நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர வேறு குணப்படுத்தல் கிடையாது. எந்தவொர நோயையும் விட்டு வைக்காமல் குணப்படுத்தி விடுவாயாக!)
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்று, துஆக் கேட்கும் போது இவ்வாறு கூறுவார்கள் : மனிதர்களின் இரட்சகனே! (அவர்களைப் படைத்துப் போஷிப்பவனே!) நோயை (கடுமையான நோயை) நீக்கி (இல்லாமல்செய்து)விடுவாயாக! மேலும் (இந்த நோயாளியை) குணப்படுத்தி விடுவாயாக! (தூய்மையான) நீயே குணப்படுத்தக் கூடியவன். (குணப்படுத்துபவன் எனும் உனது பெயரை முன்னிறுத்திக் கேட்கின்றேன்.) நீ வழங்கும் ஆரோக்கியத்தைத் தவிர (நோயாளிக்கு) வேறு குணப்படுத்தல் கிடையாது. (வேறு) எந்தவொரு நோயையும் விட்டு வைக்காமல் (முழுமையாகக்) குணப்படுத்தி விடுவாயாக.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் பாதையில் நீ செலவழித்த ஒரு தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக நீ செலவழித்த ஒரு தீனார், ஒரு ஏழைக்கு நீ தர்மமாக வழங்கிய ஒரு தீனார், உனது குடும்பத்திற்கு நீ செலவழித்த ஒரு தீனார். இவற்றில் அதிக நன்மை கொண்டது, உனது குடும்பத்திற்காக நீ செலவழிக்கும் தீனாரே.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், செலவழித்தலின் சில வகைகளை விளக்கும் விதமாகப் பின்வருமாறு கூறுகின்றார்கள் : அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதற்கு செலவழிக்கும் தீனார், ஓர் அடிமையை உரிமையிடுவதற்காக செலவழிக்கும் தீனார், தேவையுள்ள ஓர் ஏழைக்கு செலவழிக்கும் தீனார், உனது குடும்பத்திற்காக செலவழிக்கும் தீனார். பின்பு நபியவர்கள், அவற்றில் மிகச் சிறந்தது, உனது குடும்பத்திற்காகவும், உனது செலவுக்கு உட்பட்டவர்களுக்காகவும் செலவழிக்கும் தீனாராகும் என்றும் கூறுகின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் என்னிடம் : , ''நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?' என்று கேட்டார்கள். நான் ''ஆம்' என்றேன். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும் உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்' என்றார்கள். அதற்கு ''நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ﷺ அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் முழு வருடமும் தொடராக நோன்பு நோற்று, இரவு முழுவதும் தூங்காமல் தொழுவதாக செய்தி எட்டியது. அதனால் நபி ﷺ அவர்கள் அவரை அதிலிருந்து தடுத்தார்கள்; மேலும் அவரிடம்: '(சில நாட்கள்), நோன்பு நோற்றுக்கொள்வீராக மற்றும் சில நாட்கள் நோன்பு நோற்காதிருப்பீராக. இரவில் தொழவும், தூங்கவும் செய்வீராக' என்று கூறினார்கள். இடைவிடாது நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் தொழுவதையும் அவர் தடை செய்தார்கள். மேலும் கூறினார்கள்: 'நீ இதைச் செய்தால், உன் கண்கள் பலவீனமடைந்து உள்ளே சென்று விடும்; உன் உடலும் சோர்வடைந்து, உன் உயிர்சக்தி குன்றி, நீ களைப்புற்று சோர்ந்து போவாய். ஆகவே, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவன் உண்மையில் நோன்பு நோற்றவனாக இல்லை'. ஏனெனில், தடை செய்யப்பட்ட முறையை மீறியதாலும் நோன்பை விடாது நோற்றதினாலும் அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கவில்லை. பின்னர் நபி ﷺ அவர்கள் அவரை வழிப்படுத்தி, 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்' என்று கூறினார்கள். ஏனெனில், ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. இது நன்மையின் பெருக்கத்தின் குறைந்த அளவாகும். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்: 'நான் அதைவிட அதிகமாகச் செய்யும் திறன் கொண்டவன்' என்று கூறினார். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 'அப்படியானால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையைப் பின்பற்றுவீராக அது நோன்புகளில் சிறந்தது. அவர் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விடுவார். மேலும், எதிரியைச் சந்தித்தபோது அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை'. ஏனெனில், அவருடைய நோன்பு முறை அவரது உடலை பலவீனப்படுத்தவில்லை. இடைவிடாது நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் தொழுவதையும் அவர் தடை செய்தார்கள். மேலும் கூறினார்கள்: 'நீ இதைச் செய்தால், உன் கண்கள் பலவீனமடைந்து உள்ளே சென்று விடும்; உன் உடலும் சோர்வடைந்து, உன் உயிர்சக்தி குன்றி, நீ களைப்புற்று சோர்ந்து போவாய். ஆகவே, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவன் உண்மையில் நோன்பு நோற்றவனாக இல்லை'. ஏனெனில், தடை செய்யப்பட்ட முறையை மீறியதாலும் நோன்பை விடாது நோற்றதினாலும் அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கவில்லை. பின்னர் நபி ﷺ அவர்கள் அவரை வழிப்படுத்தி, 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்' என்று கூறினார்கள். ஏனெனில், ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. இது நன்மையின் பெருக்கத்தின் குறைந்த அளவாகும். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்: 'நான் அதைவிட அதிகமாகச் செய்யும் திறன் கொண்டவன்' என்று கூறினார். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 'அப்படியானால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையைப் பின்பற்றுவீராக. அது நோன்புகளில் சிறந்தது. அவர் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விடுவார். மேலும், எதிரியைச் சந்தித்தபோது அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை'. ஏனெனில், அவருடைய நோன்பு முறை அவரது உடலை பலவீனப் படுத்தவில்லை.
அந்நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : தனது தாயார், பின்து ரவாஹா அவர்கள் தனது (நுஃமானின்) தந்தையிடம் அவரது சொத்திலிருந்து, தனது மகனுக்காக சில அன்பளிப்புக்களை வழங்குமாறு கேட்டார். அவரும் ஒரு வருடமளவில் அதைத் தாமதப்படுத்திக் கொண்டிருந்த பின்னர், அவ்வாறு செய்யலாம் என அவருக்குத் தோன்றியது. அப்போது தாயார், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்காக நபியவர்களைச் சாட்சியாக வைக்கும் வரை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். உடனே, எனது தந்தை, சிறுவனாக இருந்த எனது கையைப் பிடித்து நபியவர்களிடம் அழைத்துச் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இவருடைய தாயார் பின்து ரவாஹா அவர்களுக்கு, நான் இவருக்கு வழங்கியுள்ள அன்பளிப்புக்காக உங்களை சாட்சியாளராக வைப்பது விருப்பமாக உள்ளது.' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 'பஷீரே! இவரல்லாத வேறு பிள்ளைகள் உமக்கு உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்று கூறினார். அப்போது நபியவர்கள், 'அவர்கள் அனைவருக்கும் இதுபோன்று வழங்கியுள்ளீர்களா?' எனக் கேட்க, அவர், 'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்க மாட்டேன்' என்று கூறினார்கள். முஸ்லிமின் அறிவிப்பில், 'இதற்கு வேறொரவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
இமாம்களான புஹாரியும், முஸ்லிமும் இதை பதிவு செய்துள்ளனர். இதற்கு பல்வேறு வாசகங்கள் உள்ளனநுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, தனது தாயாராகிய அம்ரா பின்து ரவாஹா அவர்கள், தனது தந்தையிடம் அவரது மகனுக்காக அவரது சொத்திலிருந்து ஒரு அன்பளிப்பைத் தருமாறு வேண்டிக் கொண்டதாகவும், பஷீர் அவர்கள் விருப்பமின்றி ஒரு வருடம் பிற்படுத்திக் கொண்டிருந்து விட்டு, பின்பு அவளது வேண்டுகோளுக்கு இணங்க அவரது மகன் நுஃமானுக்கு ஏதாவது கொடுக்கலாம் எனத் தோன்றியது. அப்போது தாயார், என்னுடைய மகனுக்கு நீங்கள் வழங்கும் அன்பளிப்பக்காக நபியவர்களைச் சாட்சியாக வைக்கும் வரை நான் பொருந்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். உடனே, எனது தந்தை, சிறுவனாக இருந்த எனது கையைப் பிடித்து நபியவர்களிடம் அழைத்துச் சென்று, 'அல்லாஹ்வின் தூதரே! இவருடைய தாயார் பின்து ரவாஹா அவர்களுக்கு, நான் இவருக்கு வழங்கியுள்ள அன்பளிப்புக்காக உங்களை சாட்சியாளராக வைப்பது விருப்பமாக உள்ளது.' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், 'பஷீரே! இவரல்லாத வேறு பிள்ளைகள் உமக்கு உண்டா?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்று கூறினார். அப்போது நபியவர்கள், 'அவர்கள் அனைவருக்கும் இதுபோன்று வழங்கியுள்ளீர்களா?' எனக் கேட்க, அவர், 'இல்லை' என்றார். அப்போது நபியவர்கள், 'அப்படியாயின் என்னைச் சாட்சியாளராக வைக்காதீர்கள். நான் அநீதத்திற்கு சாட்சியாக இருக்கமாட்டேன்' என்று கூறினார்கள். முஸ்லிமின் அறிவிப்பில் அவரைக் கண்டிக்கும் விதமாக, 'இதற்கு வேறொரவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : யார் ஒருவர் மரணத்தின் அறிகுறி ஏற்படாத நோயாளியைச் சுகம் விசாரிக்கச் சென்று அவரிடம் ஏழு முறை: أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ، அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக் என்ற துஆவை (பொருள் ';,அர்ஷின் இரட்சகனான மகத்தான அல்லாஹ்விடம் உம்மை குணமாக்கும்படி நான் வேண்டுகிறேன்') என்று கூறினால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை நிச்சயமாக குணமாக்குவான்'.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு முஸ்லிம் மரணத்தருவாயை அடையாத சக முஸ்லிமை நோய்விசாரிக்கச் சென்று அவருக்கு 'அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக்' (மகத்தான அர்ஷின் இறைவனான அல்லாஹ்விடம் உன்னை குணப்படுத்துமாறு வேண்டுகிறேன்) என்று ஏழு முறை துஆ செய்தால், அல்லாஹ் அந்த நோயிலிருந்து அவனை குணமாக்குவான். இங்கு 'அல்லாஹ் மகத்தானவன்' என்பது அவனது ذات் (மெய்நிலை), குணங்கள், செயல்கள் அனைத்திலும் மகத்துவம் உடையவன் என்பதைக் குறிக்கிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியான உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடினால் துல்ஹஜ் பிறை பிறந்ததிலிருந்து அவர் தனது உடல் ரோமங்களைக் களைய வேண்டாம். மற்றும் நகங்களை வெட்ட வேண்டாம் என்று நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள், யார் உழ்ஹிய்யா (குர்பானி) கொடுக்க விரும்புகிறார்களோ, அவர்கள் துல் ஹிஜ்ஜா மாதத்தின் பிறை தோன்றிய பிறகு, தங்கள் உழ்ஹியாவை நிறைவேற்றும் வரை தலையின் முடி, கைகுழி முடி, மீசை அல்லது பிற உடல் முடி எதையும், மற்றும் கைகள் அல்லது கால்களின் நகங்களிலிருந்தும் எதையும் எடுக்கக்கூடாது என்று கட்டளையிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'ரமழான் வந்துவிட்டால், சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். நரகத்தின் வாயில்கள் மூடப் பட்டுவிடும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டு விடுவர்.'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ரமழான் மாதம் வந்துவிட்டால் மூன்று விடயங்கள் நிகழுவதாக அறிவிக்கின்றார்கள்: முதலாவது : சுவனத்தின் வாயில்கள் திறக்கப் படுகின்றன. எனவே அதன் எந்த வாயிலும் மூடப்பட மாட்டாது. இரண்டாவது : நரக வாயில்கள் மூடப்படும். எனவே, அதன் எந்த வாயிலும் திறக்கப்படமாட்டாது. மூன்றாவது : ஷைத்தான்களும், கட்டுக்கடங்காத ஜின்களும் சங்கிலியால் கட்டப்படுவார்கள். எனவே, ரமழான் அல்லாத காலங்களில் நெருங்க முடியுமான விடயங்களுக்கு அவர்களால் ரமழானில் நெருங்க முடிவதில்லை. இவை அனைத்தும் இந்த மாதத்தை மகத்துவப்படுத்துவதாகும். மேலும், அமல்களில் ஈடுபடுபவர்கள் தொழுகை, தர்மம், திக்ர், குர்ஆன் ஓதல் போன்ற வணக்கங்களை அதிகபடுத்தவும், பாவங்களைத் தவிர்க்கவும் இது ஊக்குவிக்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்துகொள்வார்கள் என்றால்,சீட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றால், அவர்கள் சீட்டுப் போடுவார்கள். தொழுகைக்கு நேரகாலத்துடன் செல்வதன் சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், அதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். மேலும், இஷாத் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், தவன்றாவது அதற்கு வருவார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் அறிவிப்பதாவது, பாங்கு சொல்வதிலும், முதல் ஸப்பிலும் உள்ள சிறப்பையும், நன்மையையும், பரகத்தையும் மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றால், சீட்டுக் குழுக்கித் தான் அதற்காக முந்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் அவர்கள் செய்வார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்திலேயே செல்வதன் சிறப்பை அவர்கள் அறிவார்கள் என்றால், அதற்காக போட்டி போட்டுக் கொள்வார்கள். மேலும், இஷாத் தொழுகையிலும், பஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையின் அளவை அவர்கள் அறிவார்கள் என்றால், ஒரு குழந்தை ஆரம்ப கட்டங்களில் முழங்காலால் தவன்று செல்வது போன்று, தவன்றாவது அதற்கு வருவார்கள்.