





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) ஆண் துணையின்றி (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு முஸ்லிம் பெண் மஹ்ரம் இல்லாமல் ஒரு இரவுக்கு மேல் பயணம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால், அவர் தமது நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒருவர் கடமையான (பர்ழான) அல்லது நப்லான- நோன்பு நோற்று இருக்கும் நிலையில் மறதியாக சாப்பிட்டால் அல்லது ஏதாவது பானத்தை குடித்து விட்டால் அவர் நோன்பை விட்டுவிடாது அதனைப் பூரணப்படுத்தல் வேண்டும்; ஏனெனில் இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்குக்கு கிடைத்த உணவாகும். இந்த வகையில் அல்லாஹ்வே அவருக்கு உணவளித்து குடிக்கக் கொடுத்தான் என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.
இப்னு அஸ்ஹரின் அடிமையான அபூ உபைத் கூறுகறார் : நான் ஒரு பெருநாளில் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பு மற்றும்; ஹஜ்ஜுப் பொருநாள் தினங்களில் நோன்பு நோற்பதை தடைசெய்தார்கள். (அதாவது நபி (ஸல்) அவர்கள், ஷவ்வால் மாதத்தின் 1 ஆம் நாள் மற்றும் துல்-ஹிஜ்ஜா மாதத்தின் 10 ஆம் நாள் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதைத் தடை செய்தார்கள்.) ரமழான் நோன்பு முடிவடையும் நாள் ஈதுல் பித்ர் ஆகும். பலியிடப்பட்ட விலங்குகளை உண்ணும் நாள் ஈத்-அல்ஹா ஆகும்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : 'லப்பைக், அல்லாஹும்ம லப்பைக். லப்பைக், லா ஷரீக்க லக லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக, வல்முல்க்க லா ஷரீக்க லக்' என்பதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் 'தல்பியா' ஆகும். (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உனக்கு இணை துணை கிடையாது. எல்லாப் புகழும் அருட் கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானக –நிகர்- யாருமில்லை). அப்துல்லாஹ் இப்னு உமர் - ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்; - لَبَّيْكَ لَبَّيْكَ، وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ بِيَدَيْكَ، لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَلُ. 'லெப்பைக்க லெப்பைக்க வஸஃதைக்க வல்கைய்ரு பியதைகக்க,லெப்க்க வர்ரஃபாஉ இலைக்க வல்அமலு' எனும் வாசகத்தை மேலதிகமாக கூறுபவர்களாக இருந்தார்கள். 'யா அல்லாஹ் நான் உனது அழைப்பை ஏற்று வந்துவிட்டேன் மேலும் உன் ; அழைப்புக்கு நான் பதிலளித்தேன். உன்னிடம்; நல்வாழ்வைத் தேடுகிறேன்;.(உனக்கு கட்டுப்பட்டு வழிபடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்;) எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன. எனது எல்லா எதிர்பார்புகளும், ஆசைகளும் மற்றும் செயற்பாடும் உன்னை நோக்கியே உள்ளது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா கிரியையை செய்ய நுழைந்து விட்டால் பின்வருமாறு தல்பியா கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்: (لبيك اللهم لبيك) (லெப்பக்கல்லாஹும்;ம லெப்பைக் (கருத்து விளக்கம்) : யா அல்லாஹ்! நேர்மை, ஏகத்துவம் மற்றும் ஹஜ் போன்றவற்றில் உனது அழைப்பினை ஏற்று இதோ நாம் வந்து விட்டோம்;. (لبيك لا شريك لك لبيك) லெப்பைக் லா ஷரீக லக லெப்பைக் (கருத்து விளக்கம்) ஏனென்றால், நீ மட்டுமே வணக்கத்திற்கு மிகவும் தகுதியானவன்;. உனது இரட்சித்தல் விவகாரத்திலும் மற்றும் வணக்கத்திற்கு தகுதியானவன் என்ற விடயத்திலும், மற்றும் உன் பெயர்கள் பண்புகளிலும் உனக்கு நிகரானவர் எவரும்; இல்லை. (إن الحمد) (இன்னல் ஹம்த) உண்மையில், பாராட்டும், நன்றியும்;, புகழும் உனக்குரியது. (والنعمة) (வன்னிஃமத) அருள்கள் யாவும் உன்னிடமிருந்தே வருகின்றன, நீயே அவற்றை வழங்குகிறாய். (لك) (லக) இவை யாவும் எல்லா நிலைகளிலும்; உனக்காகவே செலுத்தப் படும். (والملك) (வல் முல்க்) ஆட்சி அதிகாரமும் உன்னுடையது. (لا شريك لك) (லாஷரீகலக) உனக்கு அதில் எந்த துணையும் இல்லை. எனவே, இவை அனைத்தும் உனக்காக மட்டுமே செலுத்தப்படும். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் இந்த தல்பியாவில் பின்வரும் வார்த்தைகளைச் சேர்த்துக் கூறுபவர்களாக இருந்தார்கள். (لبيك لبيك وسعديك) லெப்பைக்க லெப்பைக்க வஸஃதைக்க (உன் அழைப்புக்கு நான் பதிலளிக்கிறேன், உன் அழைப்புக்கு நான் மீண்டும் மீண்டும் பதிலளிக்கிறேன், என்னை மகிழ்விக்குமாறு நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன்) கருத்து: எல்லா நேரங்களிலும் இந்த மகிழ்ச்சியை மீண்டும் மீண்டும் வழங்குவாயாக! (والخير بيديك).'வல் கைரு பியதைக்க' (எல்லா நன்மைகளும் உன் கைகளில் உள்ளன) பொருள்: எல்லா நன்மைகளும் உன்னுடையது, அது உன் அருளால் தான் கிடைக்கப்பெறுகிறது (لبيك والرغباء إليك) லெப்பைக்க வர்ரஃபாஉ இலைக்க' (நான் உன் அழைப்புக்கு பதிலளிக்கிறேன், என் நம்பிக்கைகள் உன்னை நோக்கியே உள்ளன) பொருள்: எங்கள் நம்பிக்கைகள், எங்கள் ஆசைகள், எங்கள் தேவைகள் அனைத்தும் உன்கைவசம் உள்ளது அவற்றை நீ மட்டுமே நிறைவேற்ற முடியும். (والعمل) 'வல்அமல்' (மற்றும் செயல்கள்) பொருள்: வழிபாடு, நல்ல செயல்கள் - உனக்காக செய்யப்படுகின்றன, ஏனென்றால் நீ மட்டுமே வணக்கத்திற்கு தகுதியானவன்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : ரமழானின் இறுதிப்பத்தில ஒற்றைப்படையான இரவுகளில்; 'லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ரமழானில் இறுதிப்பத்துகளில் நற்செயல்களை அதிகம் செய்வதன் மூலம் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்கு பாடுபடுமாறும் சிறப்பு கவனம் செலுத்துமாறு நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் மக்களை ஊக்குவித்துள்ளார்கள். இந்த இரவு ஒவ்வொரு ஆண்டும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் 21, 23, 25, 27 மற்றும் 29 போன்ற ஒற்றைப் படையான இரவுகளில் வருவதற்கான வாய்ப்பு மிகவும் உள்ளது.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் ஒன்றில் 'லைலத்துல் கத்ர்' எனும் கண்ணிய மிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''இறுதி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் எனது கனவுடன் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமழானின்) இறுதி ஏழு (இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்!' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ர் ரமழானின் கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக ஒரு கனவில் காட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ' லைலத்துல் கத்ர் இரவு கடைசி ஏழு இரவுகளில் ஒன்றில் நிகழும் என்பதை உங்கள் கனவுகள் ஒருமித்துக் காட்டி நிற்கிறது. எனவே, லைலத்துல் கத்ரைக் அடைய விரும்புபவர், கடைசி ஏழு இரவுகளில் அதை விடாமுயற்சியுடன் தேடட்டும்.' என நபி (ஸல்) அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். லைலத்துல் கத்ர் இரவு ரமழானின் கடைசி பத்து இரவுகளில், குறிப்பாக கடைசி ஏழு இரவுகளில் இருக்க வாய்ப்புள்ளது. ரமழான் மாதம் 30 நாட்கள் என்றால், கடைசி ஏழு இரவுகள் 24 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. ரமழான் மாதம் 29 நாட்கள் என்றால், அவை 23 வது இரவில் இருந்து தொடங்குகின்றன. நபி (ஸல்) அவர்கள் நம்மை அதிக நல்ல செயல்களைச் செய்யவும், அல்லாஹ்வை நினைவில் கொள்ளவும், இந்த இரவுகளில் அதிகமாக பிரார்த்தனை செய்யவும் ஊக்குவித்தார்கள்.
அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தோழர்களில் சிலர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அதிகம் செல்வமுள்ளவர்கள் மிகுந்த நற்கூலியை சம்பாதித்துச் சென்றார்கள். நாங்கள் தொழுவது போலவே அவர்களும் தொழுகிறார்கள். நாங்கள் நோன்பு நோற்பது போலவே நோன்பு அவர்களும் நோற்கிறார்கள் இன்னும் அவர்கள் தங்களது தேவைக்கு மிகுதியாக உள்ள செல்வத்திலிருந்து தர்மமும் செய்கிறார்கள். அதற்கு இறைத்தூதர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் : "அல்லாஹ் ' உங்களுக்கும் தர்மம் செய்யக் கூடியவற்றை அருளவில்லையா?" ஒவ்வொரு 'தஸ்பீஹும்'; (ஸுப்ஹானல்லாஹ்) ஒரு தர்மமாகும் (ஸதகாவாகும் ). ஒவ்வொரு தக்பீரும்' (அல்லாஹு அக்பர்) ஒரு ஸதகாவாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) ஒரு ஸதகாவாகும்.ஒரு நன்மையை ஏவுவதும் ஸதகா. ஒரு தீமையை தடுப்பதும் ஸதகா. உங்கள் மனைவியரோடு உடலுறவுகொள்வதும் ஸதகா. அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன் இச்சையை நிறைவு செய்ய வருகிறார் அதற்கும் அவருக்கு நற்கூலி உண்டா ? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 'அதனை ஹராமான வழியில் தீர்த்தால் அவருக்கு பாவமுண்டென கருதுகின்றீர்களா? அவ்வாறே அதனை ஹலாலான முறையில் தீர்த்துக்கொண்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு.' " என்றார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஏழை ஸஹாபாக்காளில் சிலர் நபியவர்களிடம் தமது நிலை குறித்தும் வறுமை பற்றியும் முறையிட்டதோடு, வசதிபடைத்தோர்; தங்களது செல்வத்தின் மூலம் அடைந்து கொள்ளும் அதிக நன்மைகள் போல் தம்மால் அடைந்து கொள்ள முடியவில்லையென்றும், தர்மம் செய்யவோ அவர்களைப் போன்று நன்மைகள் செய்வதற்கு முடியவில்லை என்று முறையிட்டார்கள். அதாவது அவர்களும் எங்களைப் போன்று தொழுது நோன்பு நோற்கிறார்கள். அத்துடன் அவர்களின் செல்வத்தில் எஞ்சியதிலிருந்து தரம்மமும் கொடுக்கிறார்கள். ஆனால் நாம் ஏழை என்பதால் எம்மால் தர்மம் செய்ய முடிவில்லை என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்களுக்கு செய்வதற்கு இயலுமான பல்வகையான தர்மம் குறித்து வழிகாட்டினார்கள் . நபியவர்கள் கூறினார்கள் : நீங்கள் தர்மம் செய்யக்கூடியதை அல்லாஹ் உங்களுக்கு வழங்கவில்லையா?! என்று கேட்டுவிட்டு, (சுப்ஹானல்லாஹ்) (அல்லாஹ் தூயவன்) என்று கூறுவதும் ; (அல்லாஹு அக்பர்) (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறுவதும் தர்மமாகும்; (அல்ஹம்துலில்லாஹ்) (லாஇலாஹஇல்ல்லாஹ); (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதும் தர்மமாகும். (நன்மையை ஏவுவது) தர்மமாகும், (தீமையைத் தடுப்பது) தர்மமாகும், உங்களில் ஒருவர் தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதும்;, தர்மமாகும் என்று கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டு, 'அல்லாஹ்வின் தூதரே, நம்மில் ஒருவர் தனது ஆசையை தீர்த்துக் கொள்வதற்கும் கூலியைப் பெறுகிறாரா?' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் : 'விபச்சாரம் போன்ற தடைசெய்யப்பட்ட வழியில் அல்லது வேறு வழியில் அதை நிறைவேற்றினால், அவர் பாவத்திற்கு ஆளாவார் என்பதை நீங்கள் அறியவில்லையா? அதேபோல், அவர் அதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்ட்ட முறையில் நிறைவேற்றினால், அவருக்கு ஒரு கூலி கிடைக்கும்.!
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: (ரமழானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்தி(வழிபாடுக்கு ஆயத்தமாகி)விடுவார்கள்; இரவில் (இறைவனை வழிபட்டு) விழித்திருப்பார்கள்; (இறை வழிபாட்டிற்காக) தம் குடும்பத் தாரை எழுப்பிவிடுவார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ரமழானின் கடைசிப் பத்து நாட்கள் வந்தவுடன், இரவு முழுதும் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள், தங்கள் குடும்பத்தினரை தொழுகைக்காக எழுப்புவார்கள். வழமையை விட அதிகமாக வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அத்துடன் உடலுறவு கொள்வதிலிருந்தும், மனைவியரிடமிருந்தும் விலகி இருப்பார்கள்.
உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : (நபியே! உமக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின்னர் 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை. ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தமது (தொழுகையின்) ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் அதிகமாக 'ஸுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும் மஃக்பிர் லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறி வந்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இறைநம்பிக்கையாளர்களின் தாயார் ஆஇஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்குர்ஆனின் (110) ம் அத்தியாயமான இதா ஜாஅ நஸ்ருல்லாஹ் நபியவர்களுக்கு அருளப்பட்டபோது அதில் உள்ள வசனமான ( எனவே உமது இறைவனின் புகழைப் போற்றி, அவனிடம்; மன்னிப்புக் கோருவீராக) என்ற வசனத்தின் கட்டளையின்படி செயல்பட விரைந்தார்கள், அதனால் அவர்கள் தொழுகையில் ருகூஉ மற்றும் ஸஜ்தாவிலும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து பாவமன்னிப்புக் கோரினார்கள் அந்த வாசகத்தின் தெளிவுரை வருமாறு : , 'ஸுப்ஹானக' (உமக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத குறைகள் அனைத்தை விட்டும் தூய்மைப்படுத்தி உன்னை நான் புகழ்கிறேன்;) 'அல்லாஹும்ம ரப்னா வ பிஹம்திகா' (எங்கள் இறைவனே, உம்மைப் புகழ்ந்து துதிக்கிறேன்;, உம்முடைய தனித்துவம், பண்புகள் மற்றும் செயல்களுக்குத் தகுதியான எல்லா வழிகளிலும் உம்மைப் போற்றி புகழ்கிறேன். எனவே 'அல்லாஹும்ம இக்ஃபிர் லி' (யா அல்லாஹ்! என்னை மன்னித்து, என் பாவங்களை நீக்கிவிடுவாயாக). இந்த வாசகத்தை அதிகம் ருகூவிலும் ஸஜ்தாவிலும் அதிகமதிகம் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.