





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : "அபூ ஸஈதே! யார் அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக்கொண்டால், அவருக்கு சுவனம் கட்டாயமாகி விடும்." ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "இன்னுமொன்று உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக் கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவது" என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள் அபூ ஸஈத் (ரலி) அவர்களிடம், யார் அல்லாஹ்வை ஈமான் கொண்டு, அவனை ரப்பாகவும், ஆட்சியாளானகவும், தலைவனாகவும், அதிகாரம் மிக்கவனாகவும் பொருந்திக் கொண்டு, இஸ்லாத்தின் ஏவல், விலக்கல்களுக்கு முழுவதுமாகக் கட்டுப்பட்டு அதனை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டு, நபியவர்களுக்கு வழங்கப்பட்ட, அவர்கள் எத்திவைத்த அனைத்துடனும் அவர்களை நபியாகவும் பொருந்திக் கொள்கின்றாரோ, அவருக்கு சுவனம் நிச்சயம் என்று கூறுகின்றார்கள். ஆச்சரியப்பட்ட அபூ ஸஈத் அவர்கள், "அதை எனக்கு மீண்டும் கூறுங்கள்" என்று கேட்டார்கள். நபியவர்கள் மீண்டும் கூறிவிட்டு மேலும் இவ்வாறு கூறினார்கள் : "என்னிடம் இன்னுமொறு விடயமும் உள்ளது, அதைக் கொண்டு ஓர் அடியான் சுவனத்தில் நூறு படித்தரங்கள் உயர்த்தப்படுவான். ஒவ்வொரு படித்தரத்துக்கும் இடையில் வானம் பூமிக்கு இடையில் உள்ள அளவு இடைவெளி இருக்கும்" அப்போது அபூ ஸஈத் அவர்கள், 'அது என்ன அல்லாஹ்வின் தூதரே!' எனக்கேட்ட போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது; அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : “இறைவழியில் (அறப்போருக்குச் செல்லும்போது) ஒரு நாள் நோன்பு நோற்றவரின் முகத்தை, அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்தி விடுவான்.”
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்'யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடியும், அவனுடைய கூலியை எதிர்பார்த்தும் ஜிஹாதின் போது ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அல்லது ஜிஹாத் அல்லாத நிலையிலும் நோன்பு நோற்கிறரோ அல்லாஹ் தனது அருளின் மூலம், அவருக்கும் நரகத்திற்கும் இடையிலான எழுபது வருட தூரத்தை நீக்குகிறான்.' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நோன்பு திறப்பதை (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் (நலவிலே) நிலைத்திருக்கிறார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்சூரியன் மறைந்துவிட்டது என்பது உறுதியானதன் பின், மக்கள் தங்கள் நோன்பைத் துறக்க தாமதிக்காது விரைந்து செல்லும் காலமெல்லாம், அவர்கள் நலவில் இருப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனெனில், இது நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப் பின்பற்றி, அவர் நிர்ணயித்த வரம்புகளை மீறாமல் இருப்பதற்கான வழிகாட்டலாகும்.
அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: 'நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் ஒரு ஸாஉ உணவு அல்லது ஒரு ஸாஉ பாலாடைக் கட்டி அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழம், அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமை, அல்லது ஒரு ஸாஉ உலர்ந்த திராட்சை ஆகியவற்றில் ஒன்றை (ஏழைகளுக்கு) நோன்புப் பெருநாள் தர்மமாக முஆவியா ரழியல்லாஹு எம்மிடம் வரும்வரையில் இவ்வாறு கொடுத்து வந்தோம். முஆவியா இப்னு அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ரா செய்யும் நோக்கத்துடன் எங்களிடம் வந்து மிம்பரில் அமர்ந்து மக்களிடம் பேசியபோது 'ஷாம் (சிரியா) நாட்டு உயர்ரகக் கோதுமை இரண்டு 'முத்துகள்' ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் கருதுவதாகக் கூறினார். எனவே மக்கள் அதைச் செய்யத் தொடங்கினர். அபூ ஸஈத்; (ரழி) அவர்கள், 'நான் உயிருடன் இருக்கும் வரை, நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்த அதே அளவு ஸகாத் அல்-ஃபித்ரை தொடர்ந்து கொடுப்பேன்' என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்திலும், அவருக்குப் பிறகு வந்த கலீஃபாக்கள் காலத்திலும், முஸ்லிம்கள் சிறியவர்கள் அல்லது பெரியவர்கள் என ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு ஸாஉ உணவை ஸகாத்துல் பித்ராக கொடுத்து வந்தனர். அந்த நாட்களில் அவர்களின் உணவு: பார்லி, உலர்ந்த திராட்சை, பதப்படுத்தப்பட்ட பாலாடைக் கட்டி மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவனாகும். ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துகளாகும். ஒரு முத் என்பது ஒரு சாதாரண மனிதனின் இரண்டு கைப்பிடிகள் கொள்ளும் கொள்ளளவிற்கு நிகரானதாகும். முஆவியா (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் வேளை மதீனாவிற்கு வந்தார். அந்நேரம் சிறிய கோதுமை அதிகளவில் காணப்பட்டது. மதீனாவுக்கு வந்த போது மக்களுக்கு ஓர் உரை நிகழ்த்தினார்; அதில் அவர் : இரண்டு முத்து சிறிய கோதுமை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்குச் சமம் என்று தான் அபிப்பிராயப்படுவதாக குறிப்பிட்டார்கள். எனவே மக்கள் அவரது கூற்றின்படி செயல்படத் தொடங்கினர். ஆனால் இக்கருத்தை அபூ ஸஈத் (ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வேளை அபூ ஸஈத் (ரழி) அவர்கள்: நான் உயிருடன் இருக்கும் வரை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் நான் கொடுத்தது போலவே, ஸகாத்துல் பித்ரை கொடுப்பேன் என்று கூறினார்.
ஸைத் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: நாம் அல்லாஹ்வின் தூதரோடு ஸஹ்ர் செய்தோம். பின்னர் அவர்கள் தொழுகைக்காக சென்றார்கள். நான் ஸைதிடம் அதானுக்கும் ஸஹ்ர் உணவுக்குமிடையில் எவ்வளவு இடைவெளி இருந்ததென கேட்டேன். அதற்கு ஐம்பது ஆயத்துக்கள் அளவு என்றார்கள் என அனஸ் அறிவிக்கிறார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபித் தோழர்களில் சிலர் (ரழியல்லாஹு அன்{ம்;) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஸஹ்ர் உணவு உண்டார்கள் பின்னர் ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து சென்றார்கள். அப்போது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸைத் இப்னு தாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ஸஹுர் -ஸஹ்ர் உணவை முடிப்பதற்கும் தொழுகைக்கான அழைப்புக்கும் இடையிலான இடைவெளி எவ்வளவு இருந்தது என்று கேட்டார்கள்? அதற்கு ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் மிக நீண்ட வசனமோ அல்லது மிகச்சிறிய வசனமோ அல்லாது ஐம்பது நடுத்தரமான வசனங்களை சாதாரண வேகத்தில் ஓதக்கூடிய நேரம் என்று கூறினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியான உம்முல் முஃமினீன்; ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : “நபியவர்கள் மரணிக்கும் வரையில் ரமழானில் இறுதிப்பத்தில் இஃதிகாப் இருந்து வந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களது மனைவியர் இஃதிகாப் இருந்தார்கள்”.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இறை நம்பிக்கையாளர்களின் தாயார் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானின் கடைசி பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை எதிர்பார்த்து பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்தார்கள். நபியவர்கள்; இறக்கும் வரை இதனை தொடர்ந்தும் செய்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, அவரது மனைவியர்களும் இஃதிகாஃபை கடைப்பிடித்து வந்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பறக்கத் (அபிவிருத்தி) இருக்கிறது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸுஹுர் செய்வதை ஊக்குவித்தார்கள். ஸஹுர் என்பது இரவின் கடைசிப் பகுதியில் நோன்பு நோற்பதற்கு தயாராகும் நோக்குடன் உண்ணும் உணவாகும், அதிகமான நன்மை மற்றும் பரகத் (அபிவிருத்தி) கிடைக்கின்றமை, இரவின் கடைசிப் பகுதியில் தொழுது பிரார்த்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை, நோன்பு நோற்பதற்கான வலிமையும்; அதற்கான புத்துணர்ச்சியும் கிடைக்கின்றமை, நோன்பின் கஷ்டத்தைக் குறைத்தல் போன்ற பல நன்மைகள் ஸஹர் செய்வதினால் கிடைக்கப் பெறுகின்றன. இதன் காரணமாக நபியவர்கள் ஸஹர் உணவை உண்ணுமாறு ஊக்குவித்துள்ளார்கள்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ""ரமழானுக்கு ஒரு நாள் முந்தியோ இரண்டு நாட்களுக்கு முந்தியோ உங்களில் யாரும் நோன்பு நோற்க வேண்டாம்; (அந் நாட்களில் வழக்கமாக) நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்!.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்பேணுதல் என்ற அடிப்படையில் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு நோன்பு நோற்பதைத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்தார்கள். காரணம் ரமழான் நோன்பின் பிறைபார்ப்பதுடன் தொடர் பட்டுள்ளது. இதில் வருத்திக்கொள்ளவோ கஷ்டப் படுத்திக் கொள்ளவோ தேவையில்லை. இருப்பினும், யாராவது ஒருவர், ஒரு நாள் நோன்பு நோற்று மற்றொரு நாள் நோன்பு நோற்காமல் இருப்பது அல்லது திங்கள் அல்லது வியாழக் கிழமைகளில் நோன்பு நோற்பது போன்ற வழமையைக் கொண்டிருந்தால், வழக்கமான நாள் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தால், அவர் அந்த நாளில் நோன்பு நோற்கலாம். ஏனெனில் இது ரமழானை வரவேற்பதாக அமையாது. இதேபோல், தவறவிட்ட (கழா நோன்பு மற்றும் நேர்ச்சை நோன்புகள் போன்ற கட்டாய நோன்புகளையும் ரமழானுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு நோற்கலாம்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : (முஸ்லிம்களில் அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் ஆகிய அனைவருக்காகவும் ஒரு 'ஸாஉ' அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு 'ஸாஉ' அளவு தொலி நீக்கப்படாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்பே கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்).
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள் ரமழான் முடிந்த உடனேயே ஸகாத் அல்-பித்ர் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அதன் அளவு ஒரு ஸாஉ ஆகும் (சுமார் 2.75 கிலோகிராம்)', இது நான்கு 'முத்துகளின் எடைக்கு நிகராகும். ஒரு முத்து என்பது ஒரு சராசரி நபரின் இரண்டு கைப்பிடி (பேரிச்சம்பழம் அல்லது பார்லி) அளவு ஆகும். ஸகாத்துல் பித்ர் முஸ்லிம்களில் - சுதந்திரமானவர் அடிமை, ஆண் அல்லது பெண், சிறியோர் அல்லது பெரியோர் என்ற வித்தியாசமுமின்றி அனைவர் மீதும் கடமையாகும். தனது சொந்த தேவைகளை விட அதிகமாகவும், தனது குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை விட அதிகமாகவும் வைத்திருக்கும் அனைவர் மீதும் கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்வதற்கு முன்பு ஸகாத் அல்-பித்ரை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்கள்.