





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி (ஸல்) அவர்கள் ஆணுக்கு குங்குமச்சாயமிடுவதைத் தடைசெய்தார்கள் என அனஸ் இப்னு மாலிக் ரழி அறிவிக்கிறார்கள்
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுநபி(ஸல்) அவர்ககள் ஒருஆண் தனது உடம்புக்கு அல்லது ஆடைக்கு குங்குமச் சாயமிடுவதைத் தடைசெய்தார்கள். ஏனெனில் அது பெண்களின் வாசனைப்பொருளாகும். பெண்களுக்கு ஒப்பாகுதல் என்ற வகையில் இது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது
அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் "போரிலிருந்து திரும்பி வருவது போரில் ஈடுபடுவது போன்ற நன்மையை பெற்றுத் தரும்". என்று அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸ் வணக்கங்களை நிறைவேற்றும் போது அடியார்களுக்கு அல்லாஹ் புரிகின்ற அருள் குறித்துப் பேசுகிறது.அதே போல் குறித்த இபாதத்துக்களை நிறைவேற்றச் செல்லும் போதும் அந்த இபாதத்தை செய்து முடித்து திரும்பி வரும் போதும் அவனுக்கு கூலி கிடைப்பபதாகவும் பிரஸ்தாபிக்கிறது.இதனையே நபி (ஸல்)அவர்கள் போரிலிருந்து திரும்பி வருபவரும் போர் செய்த கூலியை பெற்றுக் கொள்கிறார் என்றார்கள். இந்த வகையில் போர் செய்பவரும், போர் களத்திலிருந்து திரும்பி வருபரும் ஒரே நன்மையை பெற்றுக் கொள்கினற்னர். பள்ளிக்குச் சென்று திரும்பி வருபவருக்கும் இவ்வாறே நன்மை எழுதப்படுகிறது.
ஒரு மனிதன் ரஸுல் (ஸல்) அவர்களிடம் கடிவாளம் இடப்பட்ட ஒட்டகம் ஒன்றை எடுத்து வந்து இதனை அல்லாஹ்வின் பாதையில் விடுகின்றேன்,என்றார் அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் "இதற்குப் பகரமாக நாளை மறுமை நாளில் எழுநூறு ஒட்டகம் உங்களுக்குக் கிடைக்கும்,அவை அனைத்தும் கடிவாளம் இடப்பட்டிருக்கும்"என்று நபியவர்கள் கூறினார்கள்,என அபூ மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் விடயத்திற்கு இந்த ஹதீஸ் ஆர்வமூட்டுகிறது.குறிப்பாக அல்லாஹ்வின் பாதையில் அறப் போரில் ஈடுபட உதவியாக இருக்கும் குதிரை ஒட்டகம் போன்ற சாதனங்களை தர்மம் செய்வதன் சிறப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்து.இவ்வாறு அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் தர்மத்தின் கூலி ஒன்றுக்கு எழுநூறு என்ற அடிப்படையில் பண்மடங்காக ஆக்கித் தரப்படும்
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, உம்முல் முஃமினீன் ஆஇஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு தீனாரின் கால்வாசி அல்லது அதைவிட அதிகான அளவில் கை வெட்டப்படும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், ஒரு திருடன் ஒரு தீனாரின் கால்வாசி அளவோ, அதற்கு மேற்பட்ட அளவோ திருடினால் அவனது கை வெட்டப்படும் எனத் தெளிவுபடுத்துகின்றார்கள். அது, 1.06 கிராம் தங்கத்துக்கு நிகரான பெறுமதியைக் கொண்டதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக, அபூ புர்தா அல் அன்ஸாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எந்தவொரு மனிதருக்கும், அல்லாஹ் விதித்துள்ள ஒரு தண்டனைகளிலேயே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக்கூடாது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள் ஒரு மனிதருக்கு பாவங்களுக்காகவே தவிர, பத்துக் கசையடிகளுக்கு மேலால் அடிக்கக் கூடாது எனத் தடுக்கின்றார்கள். இங்கு, கசையடி அல்லது அடித்தல் அல்லது குறிப்பிட்ட தண்டனை என மார்க்கத்தில் வந்துள்ள தண்டனைகள் நாடப்படவில்லை. இதன் அர்த்தமாவது, மனைவி, பிள்ளைகளுக்கு அடித்தல் போன்ற ஒழுக்கமூட்டல் தண்டனைகளில் இவ்வாறு அதிகரிக்கக்கூடாது என்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'யாராவது, வேட்டை நாய், அல்லது காவல் நாய் ஆகியவையல்லாத வேறு நாய்களை வைத்துக் கொண்டிருந்தால், அவரது அமல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் இரு கீராத்கள் அளவு குறையும். ஸாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் (அல்லது பயிர்நிலங்களைப் பாதுகாக்கும் நாய்) என்றும் இணைத்துக் கூறுவார்கள். அவர்கள் விவசாயம் செய்யும் ஒருவராகக் காணப்பட்டார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், வேட்டையாடல், கால்நடைகள் மற்றும் மற்றும் பயிர்களைப் பாதுகாத்தல் போன்ற தேவைகளுக்காகவே அன்றி, நாய்களை வைத்துக் கொண்டிருப்பதை எச்சரிக்கின்றார்கள். வேறு காரணங்களுக்காக யாராவது வைத்துக் கொண்டிருந்தால், அவருடைய நற்கருமங்களின் கூலியில் இருந்து தினமும் இரண்டு கீராத்கள் குறையும் என்றும் கூறுகின்றார்கள். இது அல்லாஹ்விடம் (மாத்திரம்) அறியப்பட்டுள்ள ஒரு அளவாகும்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நுழைந்து, தொழுது விட்டு, நபியவர்களுக்கு ஸலாம் கூறினார். அப்போது நபியவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் அளித்து விட்டு, 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். அந்த மனிதரும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்று மீண்டும் தொழுதார். பின்பும் நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறியதும் நபியவர்கள் பதில் கூறிவிட்டு, (மீண்டும்) 'நீங்கள் திரும்பிச் சென்று, மீண்டும் தொழுங்கள். நீங்கள் (சரியாகத்) தொழவில்லை.' என்று கூறியனுப்பினார்கள். (இவ்வாறு) மூன்று தடவை நிகழ்ந்த பின்னர் அம்மனிதர், 'உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவனாகிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதனை விட அழகாக என்னால் தொழமுடியாது. எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : "நீங்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால், தக்பீர் கூறிவிட்டு, பின்பு உங்களால் இலகுவாக ஓதமுடியுமான சில அல்குர்அன் வசனங்களை ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அமைதியடையும் வரை ருகூஇலேயே இருங்கள். பின்பு எழுந்து நேரான நிலைக்கு வாருங்கள். பின்பு ஸுஜூத் செய்து, அமைதியடையும் வரை ஸுஜூதிலேயே இருங்கள். பின்னர் எழுந்து, அமைதியடையும் வரை அமர்ந்து கொண்டிருங்கள். இவ்வாறே உங்களது முழுத் தொழுகையிலும் செய்யுங்கள்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலில் நுழைந்து, இரண்டு ரக்அத்களை, நிலை, ருகூஉ மற்றும் ஸுஜூத் என எதிலும் ஆறுதலாக இருக்காமல் வேகமாகத் தொழுது முடித்தார்கள். அவர் தொழுவதை நபியவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் அம்மனிதர் பள்ளியில் ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்த நபியவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். நபியவர்களும் அவரது ஸலாமுக்கு பதில் அளித்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள் : நீங்கள் திரும்பிச் சென்று, உங்களது தொழுகையை மீளவும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவே இல்லை. அவர் மீண்டும் திரும்பிச் சென்று, ஏற்கனவே தொழுதது போன்றே மீண்டும் வேகமாகத் தொழுது விட்டு, நபியவர்களிடம் வந்து, அவர்கள் மீது ஸலாம் கூறினார். அப்போதும் நபியவர்கள், நீங்கள் திரும்பிச் சென்று, உங்களது தொழுகையை மீளவும் தொழுங்கள். ஏனெனில் நீங்கள் தொழவே இல்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை செய்தார்கள். அப்போது அம்மனிதர், 'உங்களை சத்தியத்தைக் கொடுத்து அனுப்பிய அல்லாஹ்வின் சத்தியமாக! இதைவிட அழகாக என்னால் தொழமுடியாது. நீங்கள் எனக்குக் கற்றுத் தாருங்கள்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் அவரைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள் : நீங்கள் தொழுகைக்காக நின்றால், முதலில் தக்பீரதுல் இஹ்ராமைக் கூறுங்கள். பின்பு ஸூரா அல்பாதிஹாவையும், அல்லாஹ் நாடிய அளவு வேறு வசனங்களையும் ஓதுங்கள். பின்பு ருகூஉ செய்து, அந்த ருகூஇல் அமைதியடையும் வரை இருங்கள். அதாவது, உங்கள் இரு உள்ளங்கைகளையும் உங்கள் முழங்காலில் வைத்து, உங்களது முதுகை சமாந்திரமாக வைத்து, சரியான முறையில் ருகூவை செய்வீராக. பின்பு, எழுந்து, எழும்புகள் அதன் மூட்டுக்களை நோக்கி மீளும் அளவுக்கு உங்களது முதுகந்தண்டை நேராக வைத்து, சரியாக நேராக நிற்பீராக. பின்பு ஸுஜூது செய்து அதில் அமைதியாக இருப்பீராக. அதாவது, மூக்குடன் நெற்றியையும், இரு உள்ளங்கைகளையும், முழங்கால்களையும், பாதங்களின் விரல் ஓரங்களையும் நிலத்தில் பட வைப்பீராக! பின்பு எழுந்து, இரு ஸுஜூதுகளுக்கு மத்தியில் அமைதியாக அமர்வீராக! பின்பு இவ்வாறே உங்களது ஒவ்வொரு ரக்அத்திலும் செய்வீராக.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முஸ்லிமான - அல்லது முஃமினான - ஒரு அடியான் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும். அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் பிடித்த அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும். அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்துப் பாவங்களும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறிவிடும். இவ்வாறே அவர் பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், ஒரு முஸ்லிம் அல்லது முஃமின் வுழூ செய்யும் விதமாக, முகத்தைக் கழுவினால், அவர் தனது இரு கண்களாலும் பார்த்த அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது முகத்திலிருந்து வெளியேறிவிடும் என்றும், அவர் தனது இரு கைகளையும் கழுவினால், அவரது இரு கைகளும் செய்த அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - அவரது இரு கைகளையும் விட்டு வெளியேறிவிடும் என்றும், அவர் இரு கால்களையும் கழுவினால், அவர் தனது இரு கால்களாலும் நடந்துசென்ற அனைத்து சிறிய பாவங்களும் கழுவிய பின்னர் விழும் அந்த நீருடன் - அல்லது நீரின் கடைசித் துளியுடன் - வெளியேறி விடும் எனவும், இவ்வாறே அவர், வுழூ நிறைவடையும் போது, சிறிய பாவங்களை விட்டும், தூய்மையடைந்த ஒருவராக வெளியேறுவார் எனவும் தெளிவு படுத்துகின்றார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் எமக்கு, அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். நபியவர்கள் இவ்வாறு கூறுவார்கள் : உங்களில் ஒருவர் ஏதாவது (முக்கிய) விடயத்தைச் செய்ய நாடினால், கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறட்டும் : 'யா அல்லாஹ்! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன். உன்னுடைய பேருபகாரத்தில் இருந்து உன்னிடம் கேட்கின்றேன். நீயே ஆற்றல் மிக்கவன். என்னிடம் ஆற்றல் கிடையாது. நீயே அறிந்தவன். நான் அறியமாட்டேன். மறைவான வற்றை அதிகம் அறிந்தவன் நீயே! யா அல்லாஹ்! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்து விடுவாயாக. மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து தருவாயாக! இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பிவிடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பிவிடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில் திருப்தியைத் தருவாயாக! அவர் தனது தேவையைக் குறித்துச் சொல்வார் என்றும் அதில் வந்துள்ளது.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்ஒரு முஸ்லிம், தன்னால் சரியான நிலையை அறிந்து கொள்ளமுடியாத ஒரு விடயத்தைச் செய்ய நாடினால், அவர் இஸ்திகாராவுடைய தொழுகையைத் தொழுமாறு மார்க்கம் காட்டியுள்ளது. அதாவது, நபி (ஸல்) அவர்கள், அல்குர்ஆனின் ஒரு ஸூராவைக் கற்றுத் தருவது போன்று, எல்லா விடயங்களிலும் நன்மையைக் கேட்பதையும் கற்றுத் தருவார்கள். கடமையல்லாத இரு ரக்அத்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் : 'யா அல்லாஹ்! அனைத்தையும் அடைவளைத்துள்ள விசாலமான (உனது அறிவைக் கொண்டு) இரு விடயங்களில் சிறந்ததை அடைய பாக்கியம் செய்யுமாறு கேட்டு, (உன்னிடம் நன்மையைக் கேட்கின்றேன். உன்னுடைய சக்தியைக் கொண்டு உன்னிடம் ஆற்றலைக் கேட்கின்றேன்.) என்னைச் சக்தியுள்ளவனாக ஆக்குமாறு கேட்கின்றேன். ஏனெனில், உன்னைக் கொண்டே தவிர, எதையும், தவிர்க்கவும், செய்யவும் எந்த சக்தியும் எனக்கு இல்லை. (உன்னுடைய மகத்தான) விசலமான (பேருபகாரத்தில்) பேருதவி (இருந்து உன்னிடம் கேட்கின்றேன்.) ஏனெனில், எனது உதவி நீ செய்யும் உபகாரமே தவிர, எந்த அருட்கொடைகளிலும் நீ யாருக்கும் கடமைப்பட்டவன் அல்ல. (நீயே) அனைத்துக்கும் (ஆற்றல் மிக்கவன்.) நானுமோ இயலாதவன், பலவீனமானவன். (என்னிடம்) உனது உதவியைக் கொண்டே தவிர, எந்தவொன்றுக்கும் (ஆற்றல் கிடையாது. நீயே) வெளிப்படையானவை, மறைவானவை, நன்மை, தீமை என அனைத்தையும் முழுமையாக அறிந்துள்ள, உனது விசாலமான அறிவைக்கொண்டு (அறிந்தவன். நான்) உனது அருளையும், நேர்வழியையும் கொண்டே தவிர எதையும் (அறியமாட்டேன்.) (மறைவானவற்றை அதிகம் அறிந்தவன் நீயே!) ஒட்டுமொத்த அறிவும், தடையில்லாமல் செயற்படும் அதிகாரமும் உன்னிடமே உள்ளது. ஏனையோருக்கு அவற்றில் நீ விதித்த, சக்தியை வழங்கிய அளவு மாத்திரமே உண்டு. பின்பு முஸ்லிம் தனது தேவையைக் குறித்துக் கூறி, இவ்வாறு தனது இறைவனிடம் கேட்பார். (யா அல்லாஹ்!) எனது விவகாரத்தை நான் உன்னிடம் பொறுப்புச் சாட்டிவிட்டேன். உனது அறிவில் (இந்த விடயம்,) உதாரணமாக இந்த வீட்டை வாங்குவது, அல்லது இந்த வாகனத்தை வாங்குவது, அல்லது இந்தப் பெண்ணைத் திருமணம் செய்வது போன்றவை இந்த விடயம் உனது முந்திய அறிவில், எனது விடயங்களின் பிடிகயிறாகிய (எனது மார்க்கத்திற்கும்,) இவ்வுலக (வாழ்க்கைக்கும் எனது இறுதி முடிவுக்கும்)எனது விவகாரங்களின் இறுதி நிலைக்கும் - (அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும்) அதாவது, உலகிலும், மறுமையிலும் (- நன்மையானதாக இருந்தால், அதை எனக்கு விதித்துவிடுவாயாக.) எனக்கு அதனை இலகுபடுத்தி, நிறைவேற்றித் தா! (மேலும் அதனை எனக்கு இலகுபடுத்தி விடுவாயாக! பின்பு எனக்கு அதில் பரகத் செய்து) மேலும் நன்மைகளை அதிகப்படுத்தித் (தருவாயாக!) அல்லாஹ்வே! (இந்த விடயம், எனது மார்க்கத்திற்கும், வாழ்க்கைக்கும், எனது இறுதி முடிவுக்கும் - அல்லது எனது உடனடியான, தாமதமான விடயங்களுக்கும் - தீமையானதாக இருந்தால், என்னை விட்டும் அதைத் திருப்பி விடுவாயாக! மேலும், அதையும் என்னை விட்டுத் திருப்பி விடுவாயாக! நன்மை - எங்கிருந்த போதிலும் - அதை எனக்கு விதித்து விடுவாயாக! பின்பு எனக்கு அதில்) மேலும் நான் விரும்பும், வெறுக்கும் உனது அனைத்து விதிகளிலும் (திருப்தியைத் தருவாயாக!).