





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியே வந்ததும், 'குஃப்ரானுக்' «غُفْرَانَكَ (யா அல்லாஹ், நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்தேவையை முடித்து விட்டு கழிப்பறையிலிருந்து வெளியே வரும்போது, 'அல்லாஹ்வே! நான் உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன்' என்று பொருள்படும் غُفْرَانَكَ என்ற வார்த்தையைக் கூறுபவர்களாக நபியவர்கள் இருந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைத் தொட்டும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'விலங்குகளில் உளிப்பற்களைக் (கோரைப்) பற்களைக் கொண்ட அனைத்து மாமிச உண்ணி விலங்குகளையும், பறவைளில் கூரிய கால் நகங்களைக் கொண்டு வேட்டையாடி உண்ணும் அனைத்து பறவைகளையும் நபி (ஸல்) அவர்கள் (சாப்பிடத்) தடை செய்தார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி (ஸல்) அவர்கள் கூர்மையான பற்களைக் கொண்ட வேட்டையாடும் விலங்குகளையும், கால்களில் கூரிய நகங்களைக் கொண்ட தாக்கி வேட்டையாடும் பறவைகளையும் சாப்பிடுவதைத் தடை செய்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது : '(பாங்கு, இகாமத் ஆகிய) ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு' என (இரண்டு முறை) கூறிவிட்டு, மூன்றாவது முறை 'விரும்பியவருக்கு' என்றார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஐவேளைத் தொழுகைக்கான அழைப்பு -அதான்- மற்றும் இகாமத்திற்கு மத்தியில் நப்லான –உபரியான தொழுகை உண்டு என நபியவர்கள் மூன்று முறை கூறி தெளிவு படுத்தினார்கள். மூன்றாவது முறை கூறும் போது இதனை விரும்பியவர் தொழுது கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்கள்.
"எனது வயது ஏழு வருடங்களாக இருக்கும் போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடன் சேர்ந்து இறுதி ஹஜ்ஜை நிறைவேற்றி இருக்கிறேன்" என அஸ் ஸாஇப் இப்னு யசீத் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்அஸ்ஸாஇப் இப்னு யஸீத் ரழி அவர்கள் ஒரு சிறிய ஸஹாபியாவார். அவரது குடும்பத்தினர் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஹஜ் செய்ததினால் ஹஜ்ஜதுல் வதாவை அடைந்து கொண்டார்கள். இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் சிறுவர்கள் ஹஜ் செய்வதை அங்கீகரித்திருக்கிறார்கள். அந்த ஹஜ் சிறுவர்களுக்கான கடமையான ஹஜ்ஜாக கருதப்படமாட்டாது. அவர்கள் பருவ வயதைஅடைந்தவுடன் பர்லான ஹஜ்ஜை இன்னொரு முறை நிறைவேற்றுவது அவசியமாகும் ஹஜ் செய்யும் சிறுவர்கள் பெரியவர்கள் செய்வது போல் ஹ்ராம் அணிதல், தைத்த ஆடையை தவிர்ந்திருத்தல், தல்பியா முழங்குதல் போன்றவற்றை செய்தல் வேண்டும். அவருக்கு செய்வதற்கு இயலாமல் இருந்தால் அவரின் வலியாக இருக்கும் அவரின் தந்தை அல்லது அவரின் தாய் அவரின் கடமைகளைச் செய்வார். அத்தவ்ழீஹ் லிஷர்ஹில் ஜாமிஇஸ் ஸஹீஹ் 473 உம்ததுல் காரி10-210 நுஸ்ஹதுல்முத்தகீன்2-898 ஷர்ஹூ ரியாழுஸ்ஸாலிஹீன் லி இப்னிஉஸைமீன் 5-326-327
நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகத்தில் பல்லக்கு அமைக்காமல்) ஒட்டகத்தின் சேணத்துடன் (இணைந்த) இருக்கையின் மீதே அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களின் பொதி சுமக்கும் ஒட்டகமாகவும்இருந்ததாகவும் அனஸ் இப்னு மாலிக் அவர்கள் அறிவித்தார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்நபி (ஸல்) அவர்கள் பல்லக்கில்லாத ஒட்டகத்தின் மீது ஹஜ்ஜுக்குச் சென்றார்கள்.அத்துடன் அவரின் உணவையும்,பொருட்களையும் சுமந்து செல்வதற்கான வேறு ஒட்டகம் நபி (ஸல்) அவர்களுக்கு இருக்கவில்லை. அவைகளை தான் பிரயாணம் செய்த ஒட்டகத்திலேயே வைத்துக் கொண்டார்கள். இச்செயல் நபியவர்களின் எளிமையையும், உலகத்தில் அவரின் குறைவான ஈடுபாட்டையும் காட்டுகிறது. மாறாக இந்த ஹதீஸ் ஹஜ்ஜின் போது சொகுசான, ஆடம்பரமான வாகனங்களில் சவாரி செய்தல் ஹராம் என்பதைக் காட்டாது. ஹஜ்ஜின் போது சொகுசையும் ஆடம்பரத்தையும் குறைத்துக் கொள்வதே நபியவர்களை ஹஜ்ஜின் போது பின்பற்றுவதில் மிகச்சிறந்த விடயமாகும் என்பதை காட்டும்.
ஜாஹிலிய்யாக் காலத்தில் உகாள், மஜின்னா, துல் மஜாஸ் ஆகியன சந்தைகளாக இருந்தன.(அவற்றில்) ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்வதை (நபித் தோழர்கள்) பாவமானதாகக் கருதினார்கள் இது குறித்து (ஹஜ் காலங்களில் வியாபாரத்தின் மூலம்) உங்கள் இரட்சகனின்அருளைத் தேடிக்கொள்வதில் உங்களுக்கு எவ்விதக் குற்றமுமில்லை எனும் வசனம் ஹஜ்காலத்தில் இறங்கியது என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழி அறிவிக்கிறார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்குறித்த அந்த இடங்கள் இணைவைப்பாளர்களுக்கு சொந்தமான சந்தைகளாக இருந்தன.அவைகளில் ஹஜ்ஜுடைய நாட்களில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக இருந்தனர்.ஆகவே அவ்விடங்களில் ஹஜ்ஜுடைய நாட்களில்வியாபாரம் செய்வதினால் பாவம் ஏற்படும் என ஸஹாபாக்கள் பயந்தனர்.இதனால் அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கி ஹஜ்ஜுடைய நாட்களில் ஹஜ்ஜின் கிரியைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் வியாபாரம் செய்வது ஹஜ்ஜின் கிரியைகளில் எவ்விதப்பாதிப்பையும் ஏற்படுத்தாது என அவர்களுக்கு தெளிவு படுத்தினான்.அத்துடன் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்பட்டது என்றாலும் ஹஜ் கிரியைகளில் முழுமையாக ஈடுபடுவதுதான் மிகவும் ஏற்றமானதும் சிறந்த விடயமுமாகும்
பரீராவினதும் அவரின் கணவரினதும் சம்பவம் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடும் போது:ரஸூல் (ஸல்) அவர்கள் பரீராவிடம்"நீங்கள் மீண்டும் அவரிடம் தலாக்கினை வாபஸ் பெற்றுக் கொண்டால் எப்படி?" என்றார்கள்.அதற்கு அவர் "அல்லாஹ்வின் தூதரே!நீங்கள் எனக்குக் கட்டளை பிறப்பிக்கின்றீர்களா?"என்றார்.அதற்கு நபியவர்கள்,"நான் சிபாரிசு செய்கின்றவனாகவே இருக்கின்றேன்"என்று கூறினார்கள்.அபோது பரீரா "நான் அவர் விடயத்தில் தேவையற்றவளாக இருக்கின்றேன்" என்று கூறினார்.என்று அறிவிக்கின்றார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்பரீராவின் கணவன் முகீஸ் (ரழி) அவர்கள் ஒரு அடிமையாக இருந்தார்.மேலும் பரீரா(ரழி) அவர்களை ஆஇஷா (ரழி) அவர்கள் வாங்கி, விடுதலை செய்யு முன்னர் அவர் ஆஇஷா (ரழி) அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தார்.பின்னர் அவருக்கு ஆஇஷா (ரழி) அவர்கள் விடுதலை வழங்கியதை அடுத்து அவர் முகீஸுடன் தொடர்ந்து வாழ்வதா அல்லது அவரிடமிருந்து பிரிந்து செல்வதா என்பதைத் தெரிவு செய்து கொள்ளும் உரிமையும் அவருக்குக் கிடைத்தது.எனவே பரீரா (ரழி) அவர்கள்,அவரை விட்டும் பிரிந்து விட்டார்கள்.எனினும் முகீஸ் (ரழி) அவர்கள் தன் குடும்ப விவகாரத்தில் ஏற்பட்ட இந்த மோதலுக்குப் பின்னரும் அவருக்கு பரீராவின் மீதிருந்த கடும் அன்பின் காரணமாக பரீரா தனது தீர்மானத்தை வாபஸ் பெறலாம் என்ற எண்ணத்தில் மதீனாவின் வீதிகளிலும்,பாதைகளிலும் அவருக்குப் பின்னால் அழுது கொண்டு சுற்றித் திரியலானார். அப்பொழுது அவரின் கண்ணீர் அவரின் தாடியின் மீது வடிந்தோடியது.எனவே ரஸூல் (ஸல்) அவர்கள் பரீரா (ரழி) அவர்களிடம் "நீங்கள் அவரை வாபஸ் பெற்றுக் கொண்டால் உங்களுக்குப் நன்மை கிடைக்கும்" என்றார்கள். அப்பொழுது பரீரா (ரழி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! நான் கட்டாயம் அவரை மீட்டிக் கொள்ள வேண்டுமென்பது தங்களின் கட்டளையா? என்று கேட்டார்.அதற்கு நபியவர்கள்:நான் அவருக்காக மத்தியஸ்தம் வகிக்கின்றேன்.என்றார்கள்.அப்பொழுது பரீரா (ரழி) அவர்கள்,எனக்கு அவரை மீட்டிக் கொள்ளும் நோக்கமோ,தேவையோ இல்லை என்றார்கள்.
"சுஹதாக்கள் எனும் வீர மரணம் எய்தியோர் ஐவர்:அவர்கள் கொள்ளை நோய்,வயிற்று வழி,நீரில் மூழ்குதல்,இடிபாடுகளில் சிக்கி விடுதல் எனும் காரணமாக மரண மடைந்தவரும்,அல்லாஹ்வின் பாதையில் வீர மரணம் அடைந்தவருமாவர்" என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.மேலும் "உங்களில் சுஹதாக்கள் எத்தனை பேர்? என்று ரஸூல் (ஸல்) அவர்கள் வினவினார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதரே! எவர்அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்படுகின்றாரோ அவர்தான் சஹீத்,என்று தோழர்கள் கூறினர்.அப்படியாயின் எனது உம்மத்தில் சுஹதாக்கள் குறைவாகவே இருப்பர் என்று நபியவர்கள் கூறினா்கள்.அப்படியாயின் அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார் என்றனர் தோழர்கள்.அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவன் ஒரு ஷஹீத்,அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்,கொள்ளை நோயில் மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்,வயிற்று வழியில் மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்,தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தவனும் ஒரு ஷஹீத்"என்று ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,என இன்னொரு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டதுபொதுவாக வீர மரணமடைந்த ஷுஹதாக்கள் ஐந்து வகையினர்.அவர்களில் ஒருவர் கொள்ளை நோய் எனும் தொற்று நோயால் தாக்கப்பட்டவர்,இன்னொருவர் வயிற்று வழியால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்.மற்றுமொருவர் இஹ்ராம் உடையிலிருக்கும் முஹ்ரிமாகவன்றி கப்பல் பயணம் செய்து தண்ணீரில் மூழ்கி இறந்து போன சாதாரன பயணி,இன்னு மொருவர் கட்டிடம் போன்ற ஏதும் வீழ்ந்து அதில் சிக்குண்டு இறந்து போனவர்,மேலும் அல்லாஹ்வின் பாதையில் கொலை செய்யப்பட்டவருமாவார்.இவர்தான் ஷுஹதாக்களிடையே உயர்ந்த தரத்தை உடையவர்.மேலும் யுத்தமல்லாது அல்லாஹ்வின் வேறு பாதையில் மரணமடைந்தவனின் நிலையும் அதுவே.மேலும் முதலில் குறிப்பிட்ட நான்கு ஷுஹதாக்களும் மறுமையில் ஷுஹதாக்கள் என்ற பதவியைப் பெறுவர்.எனினும் அவர்கள் இவ்வுலகில் ஷுஹதாக்கள் என்ற சட்டத்திற்கு உட்பட மாட்டார்கள் எனவே அவர்களைக் குளிப்பாட்டுவதும்,அவர்களின் மீது தொழுகை நடாத்துவதும் அவசியம்.மேலும் ஹதீஸில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கை ஷுஹதாக்களை வரையரை செய்வதற்காகவன்றி பொதுவாகக் குறிப்பிட்டதாகும்.(அதாவது இது போன்று வேறு பல இடர்பாடுகளுக்கு ஆலாகி மரணமடைந்தவர்களும் ஷுஹதாக்களின் பட்டியலில் அடங்கவர்.)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அனந்தரச் சொத்துக்களை (அவற்றில் அளவீடு கூறப்பட்ட பங்குகளை) உரியவர்களிடம் சேர்த்து விடுங்கள். எஞ்சியவை, மிகநெருங்கிய ஆணுக்கு உரியதாகும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இங்கு நபியவர்கள், அனந்தரச் சொத்துக்களைப் பிரிப்பதற்குப் பொறுப்பாக இருப்பவர்கள், தகுதியானவர்களுக்கு, அல்லாஹ் விரும்பும் பிரகாரம், நீதமான, மார்க்க அடிப்படையிலான பங்கீடாக பங்கீடு வைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றார்கள். எனவே, வரையறுக்கப்பட்ட பங்கீடுகளை உடையவர்களுக்கு, அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி அவர்களது பங்கீடு வழங்கப்படும். மூன்றில் இரண்டு, மூன்றில் ஒன்று, ஆறில் ஒன்று, அரைவாசி, நான்கில் ஒன்று, எட்டில் ஒன்று என்பனவே அவையாகும். அதற்குப் பின்னர் எஞ்சியவை, மரணித்தவருக்கு மிக நெருக்கமான ஓர் ஆணுக்கு வழங்கப்படும். அவர்கள் 'அஸபா' என அழைக்கப்படுவார்கள்.