





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
கைஸ் இப்னு ஆஸிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக வந்தேன். அப்போது நபியவர்கள் நீர் மற்றும் இலந்தை இலையைக் கொண்டு குளித்துவருமாறு எனக்குப் பணித்தார்கள்.
இமாம்களான அபூதாவுத், திர்மிதி மற்றும் நஸாஈ ஆகியோர் இதை பதிவு செய்துள்ளார்கள்நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் இஸ்லாத்தை தழுவுவதற்காக கைஸ் இப்னு ஆஸிம் அவர்கள் வந்தார்கள், அப்போது நபியவர்கள் நீர் மற்றும் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக உபயோப் படுத்தும் நறுமணம் நிறைந்த இலந்தை மரத்தின் இலையைக் கொண்டு குளித்துவருமாறு பணித்தார்கள்.
மஹ்மூத் இப்னு லபீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியை –மஸ்ஜிதுன் நபவியை- மீள் நிர்மாணிக்க –புணரமைக்க- நாடியபோது அதனை மக்கள் விரும்பவில்லை, அதனை நபியவர்களின் காலத்தில் இருந்த அமைப்பில் இருப்பதை விரும்பினார்கள். அப்போது அவர்கள் 'யார் அல்லாஹ்வுக்காக பள்ளியை கட்டுகிறாரோ அதனைப்போன்ற ஒன்றை சுவர்க்கத்தில் அவனுக்காக கட்டுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் கேட்டதாகக் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மஸ்ஜிதுன் நபவியை முன்பிருந்ததை விட மிக அழகிய தோற்றத்தில் புணர்நிர்மானம் செய்ய விரும்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் இருந்த கட்டடத்தின் தோற்றம் மாறிவிடும் என்பதனால் மக்கள் இதனை விரும்பவில்லை. மஸ்ஜிதுன் நபவியானது களிமண்ணால் கட்டப்பட்டு ஈத்தம் ஒழைகளால் வேயப் பட்டிருந்தது. இதனை மாற்றியமைத்து கல் மற்றும் சுன்னாம்பினால் அதனை நிர்மாணிக்க உஸ்மான் ரழியல்லாஹு அவர்கள் விரும்பினார். அவ்வேளை உஸ்மான் ரழியல்லாஹு அவர்கள் மக்களிடம் தான் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டதாக பின்வரும் இந்த செய்தியை குறிப்பிட்டார்கள் : யார் ஒருவர் அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் வேண்டி முகஸ்துதி பிறர் புகழ் நாடாது இறையில்லத்தை நிர்மாணிக்கிறாரோ அவருக்கு அதையொத்த கூலியான சுவர்க்கத்தில் அவருக்கென அதே மாதிரியான ஒன்றை நிர்மாணிக்கிறான் என்றார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது பள்ளியில் தொழுவதன் சிறப்பை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அதாவது இந்த உலகத்தில் உள்ள பள்ளிகளில் தொழும் தொழுகைக்கு கிடைக்கும் கூலியை விடவும் மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது ஆயிரம் தொழுகைக்குரிய கூலியைவிடவும் அதிகம் நன்மைகளை பெற்றுத்தரவல்லது. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதை விடவும் அதிகம் நன்மையை பெற்றுத்தரவல்லது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூகதாதா அஸ்ஸுலமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''உங்களில் ஒருவர் பள்ளிக்குச்சென்றால் அவர் உட்கார முன் இரண்டு ரக்அத்கள் தொழுதுகொள்ளட்டும்''.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்யாராவது ஒருவர் பள்ளிக்குள் எந்த நேரத்திலேனும் வந்தாலும் அல்லது எந்த நோக்கத்திற்கு வந்தாலும் அவர் அமரும் முன் பள்ளியின் காணிக்கை தொழுகை 'தஹிய்யதுல் மஸ்ஜித்' இரண்டு ரக்அத்துக்களை தொழுது கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் வலியுறுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுமைத் அல்லது அபூ உஸைத் அறிவிக்கிறார்: உங்களில் ஒருவர் பள்ளிக்குள் (மஸ்ஜிதினுள்) நுழைகையில் 'அல்லாஹும்மப்பதஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் உனது அருளின் வாயில்களை எனக்கு திறந்து தருவாயாக). அவர் பள்ளியிலிருந்து வெளியேறும் போது 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்று கூறட்டும். (யா அல்லாஹ் நான் உனது அருளை வேண்டுகிறேன்').
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்மஸ்ஜிதிற்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓத வேண்டிய துஆவை தனது சமூகத்திற்கு கற்றுக்கொடுத்து வழிப்படுத்தினார்கள். பள்ளியினுள் நுழையும் போது அல்லாஹும்மப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக' என்று கூற வேண்டும் அதாவது அல்லாஹ்வின் கருணையை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை தயார்படுத்தித் தருமாறு அல்லாஹ்விடம் அடியான் வேண்டுகிறான். மஸ்ஜிதிலிருந்து வெளியேறும் போது : 'அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக மின் பழ்லிக' என்ற துஆவை ஓத வேண்டும். இதன் கருத்து அடியான் ஹலாலான வாழ்வாதாரத்தை அல்லாஹ்வின் அருட்கொடையிலிருந்து தருமாறு வேண்டுகிறான்.
ஸாலிம் இப்னு அபுல் ஜஃத் கூறுகிறார்கள்: ஒரு மனிதர் நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்குமே! என்று கூற அங்கிருந்தவர்கள் இதனை குறையாகப் பார்த்தார்கள் இதற்கு அவர், தான் அல்லாஹ்வின் தூதர் கூறுவதை செவிமடுத்துள்ளேன். பிலாலே தொழுகைகாக இகாமத் கூறுவீராக! அதன் மூலம் எமக்கு ஆறுதல் அளிப்பீராக என்றார்கள்.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்நபித் தோழர்களில் ஒருவர் 'நான் தொழுது ஓய்வு பெற்றால் சிறப்பாயிருக்கமே' என்று கூற, அதற்கு அவரை சூழ உள்ளோர் குறைபட்டுக் கொண்டார்கள். அதற்கு அவர், தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை செவிமடுத்தேன் அவர்கள்: நாம் ஆறுதல் பெறுவதற்காக பிலாலே தொழுகைக்கான அதானைக் கூறி இகாமத்தும் கூறுவீராக! ஏனெனில் அல்லாஹ்வுடன் உரையாடுவது, ஆன்மாவுமக்கு உள்ளத்திற்குமான நிம்மதி அதிலுள்ளது.
அபூ ஹாஸிம் இப்னு தீனார் அவர்கள் அறிவித்தார்கள் : சில மனிதர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மிம்பர்-பிரசங்க மேடை எதனால் அமைக்கப்பட்டது என்ற வாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அது பற்றி வினவினர். அதற்கு ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மின்பர் மேடை எதனால் அமைக்கப்பட்டது என்பது குறித்து நான் அறிவேன். அதே போன்று அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதனைப் பார்த்ததுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதில் அமர்வதை நான் கண்டேன். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணிடம் - அன்ஸாரிப் பெண்களில் ஒருவரான ஸஹ்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகின்ற பெண்ணிடம்- 'தச்சு வேலை செய்யும் உன்னுடைய அடிமையிடம் நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்து கொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச் சொல்' என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் தம் அடிமையிடம் இதைக் கூறினார். அந்த அடிமை ஃகாபா எனும் பகுதியில் உள்ள மரத்தில் அதைச் செய்து வந்தார். அப்பெண் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கொடுத்தனுப்பினார். அதை தற்போது இருக்கும் இந்த இடத்தில் வைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள், பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி அதன் மீது தொழுததையும், அதன் மேல் இருந்தபோது தக்பீர் - ஆரம்ப தக்பீர் - கூறுவதையும் நான் பார்த்தேன்; பின்னர் அவர் அதன் மேல் இருந்தவாறு குனிந்து ருகூஉ செய்தார்கள், பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பரின் அடிப்பகுதியில் ஸஜ்தா செய்ததன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி: மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்சில மனிதர்கள் நபித்தோழர் ஒருவரிடம் வந்து, நபியவர்கள் பயன்படுத்திய பிரசங்க மேடை –மின்பர்- எதனால் செய்யப்பட்டது? என்று விசாரித்து தகராறிலும் வாதத்திலும் ஈடுபட்டார்கள். அதற்கு அந்த ஸஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தச்சு வேலை தெரிந்த அடிமையைப் பெற்றிருந்த ஒரு அன்ஸாரிப் பெண்ணிடம் : 'நான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்வதற்காக உங்கள் தச்சு வேலை தெரிந்த அடிமையிடம் ஒரு மின்பரை அமைத்து தருமாறு கூறுங்கள்' என்று வேண்டிக் கொள்ள அதனை அப்பெண்மணி ஏற்றுக் கொண்டு, தனது அடிமையிடம் தர்பாஉ எனும் மரத்தினால் மின்பரை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு செய்து தருமாறு பணித்தாள். அதனை செய்து முடித்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அப்பெண் அனுப்பி வைத்தாள். அதனை நபியவர்கள் பள்ளியில் உரிய இடத்தில் வைக்குமாறு பணித்தார்கள் பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி தக்பீர் கூறி தொழுதார்கள், பின்னர் அவ்கள்; அதன் மேல் இருந்து ருகூஉ செய்தார்கள். பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பர் மேடையின் அடியில் ஸுஜூத் செய்தது விட்டு அவர்கள் திரும்பிச் சென்றாரகள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி, மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.
ஹித்தான் இப்னு அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூமூஸா அல்அஷ்அரீ -ரழியல்லாஹு அன்ஹு- அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் 'உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி' (நன்மை, தானதருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது) என்று கூறினார். அபூமூஸா -ரழியல்லாஹு அன்ஹு- அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். மீண்டும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போதும் மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), ஹித்தான்! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை. அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றேன் நான். அப்போது மக்களில் ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூஸ-ரழியல்லாஹு அன்ஹு- அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ் ழால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉ செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும், அவர் (இமாம்) ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான். மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ஸஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்ம துல்லாஹி வ பரக்கா துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாஇலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு. (பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபீட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபித்தோழரான அபூமூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு தொழுகை நடாத்தினார்கள்;. அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் 'குரினத் பில் குர்ஆனி ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி' (அல் குர்ஆனில் நன்மை, தானதர்மம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டு விட்டது) என்று கூறினார். அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். இக்கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் ஹித்தானைப் பார்த்து அவரின் வீரம் மற்றும் உறவுமுறையின் நெருக்கம் காரணமாகவும் அவரை நோவிக்காத விதத்தில் உண்மையில் இந்த வார்த்தையைக் கூறிய நபரை தூண்டவேண்டும் என்ற நோக்கில் ஹித்தானே ! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை என்று மறுத்ததோடு அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீரதுல் இஹ்ராம் கூறினால், நீங்களும் அதே போன்று தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். ஆகவே நீங்கள் இமாமை முந்திச்செல்லவேண்டாம் , இதுஇமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வதுஅதற்கு நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉச் செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) மேலும், அவர் (இமாம்) ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் 'அல்லா{ஹம்ம ரப்பனா லக்கல் ஹம்து' (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலமஸமிஅல்லா{ஹ லிமன் ஹமிதஹ் என்று கூறினான். மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் ஸஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ஸஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ஸஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி. (இவ்வாசகமானது அதிகாரம், நித்தியம், மேண்மை ஆகியவை அனைத்திற்கும் தகுதியானவனாக அல்லாஹ் திகழ்கிறான் என்பதாகும் அதே போல் ஐவேளை தொழுகைகள் யாவும் அவனுக்கே உரித்தானதாகும். 'அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்' இவ்வாசகமானது அல்லாஹ்விடத்தில் ஆபத்து குறைகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பைக் கோருமாறு குறிப்பிடுகிறது. அதே போல் இங்கே முதலாவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; மீதும் ஸலாம் கூறுகிறோம் அதனைத்தொடர்ந்து எமக்கும் நல்லடியார்களின் மீதும் ஸலாம் கிடைக்க வேண்டி பிரார்த்திக்கிறோம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதி மொழி கூறுகிறோம். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழி கூறுகிறோம்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் : ஒவ்வொரு கடமையான மற்றும் ஸுன்னத்தான தொழுகைகளிலும், ரமழானிலும் அதுவல்லாத நேரங்களிலும் தக்பீர் கூறுவார்கள்.தொழுகைக்காக எழுந்து நின்றால் (இஹ்ராம்)தக்பீர் கூறுவார்கள், ருகூவிற்கு செல்லும் போது தக்பீர் கூறுவார்கள், ருகூஉலிருந்து முதுகை நிமிர்ததும் போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ஸுஜூதிற்கு செல்ல முன் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள், பின்பு (ஸஜ்தாவுக்காகக்) குனியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தலையை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (இரண்டாவது) ஸஜ்தாச் செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாம் ரக்அத்திலும் எழும்பும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்ததும் அபூஹுரைரா ரழியல்லாஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எனது ஆன்மா எவன் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுத முறையின் ஒரு பகுதியை அபூஹுரைரா அறிவிக்கிறார்கள். நபியவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் இஹ்ராம் தக்பீர் கூறுவார்கள், பின்னர் ருகூவிற்கு செல்லும்; போதும், ஸுஜூதிற்கு செல்லும் போதும் ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இரண்டாவது ஸுஜூதிற்கு செல்லும் போதும் அதிலிருந்து தலையை உயர்த்தும் போதும், மூன்று மற்றும் நான்கு ரக்அத்துக்கள் உள்ள தொழுகைகளில் முதலாவது தஷஹ்ஹுத் ஓதியதின் பின் நிலைக்கு வரும்போதும் தக்பீர் கூறுவார்கள். இவ்வாறே தொழுகை நிறைவேற்றி முடியும் வரையில் செய்வார்கள். ருகூவிலிருந்து நிலைக்கு வரும்போது 'ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ்' என்றும் நிலைக்கு வந்ததும் 'ரப்பனா வலகல் ஹம்து' என்றும் கூறுவார்கள் என அவர்கள் தெரிவிக்கிறார்கள். அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு தொழுகையை முடித்ததன் பின் எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவன்மீது சத்தியமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பாகும் அளவிற்கு தொழுகை நடாத்தினேன். நபியவர்கள் இவ்வுலகைவிட்டு பிரியும் வரை அவர்களின் தொழுகை இவ்வாறே இருந்தது எனக் கூறினார்கள்.