





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'திருடர்களில் மிகவும் மோசமானவர் அவருடைய தொழுகையில் திருடுபவராவார்' அதற்கு நான்; 'அவன் எப்படி தொழுகையை திருடுகிறான்?' எனக் கேட்டேன் அதற்கு அவர்கள்: 'அவர் அதன் ருகூவையோ அல்லது ஸுஜூதையோ சரியாகச் செய்வதில்லை' என்று கூறினார்கள்.
இதனை இமாம் இப்னு ஹிப்பான் பதிவு செய்துள்ளார்மனிதர்களில் மிகக்கேவளமானவன் தொழுகையில் களவு செய்பவர் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். தொழுகைத் திருடனுக்கு மாற்றமாக பிறரின் செல்வத்தை திருடுபவன் சில வேளை அதனால் பயனடைவான், ஆனால் தொழுகையை திருடுபவன் தனக்கு கிடைக்க வேண்டிய கூலி மற்றும் வெகுமதியை அவனாகவே இழந்து கொள்கிறான். இதனால்தான் ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒருவன் தனது தொழுகையை திருடுவது எப்படி என வினவ அதற்கு 'தொழுகையின் ருகூஉ மற்றும் ஸுஜூதை முறையாக செய்யாமலிருப்பது என பதிலளித்தார்கள். அதாவது ருகூஉ மற்றும் ஸுஜூதை மிகவும் விரைவாக நிறைவேற்றுவதன் மூலம் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றாததை இது குறிக்கிறது.
இப்னு அபீ அவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூவிலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறிவிட்டு, அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷைஇன் பஃது என்று கூறுபவர்களாக இருந்தார்கள்' (யாஅல்லாஹ்! எங்கள் அதிபதியே! வானங்கள் மற்றும் பூமி நிரம்பும் அளவுக்கும்; நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கும் உனக்கே புகழனைத்தும்.)
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ருகூஇலிருந்து தனது முதுகை உயர்த்தினால் 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் என்று கூறுவார்கள். இதன் கருத்து : யார் அல்லாஹ்வை புகழ்கிறானோ அவனுக்கு பதிலளிப்பதோடு அவனின் புகழை ஏற்று அதற்கு கூலியும் வழங்குகிறான் என்பதாகும்'. 'அல்லாஹும்ம ரப்பனாலகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது ' என்பது வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்டவை அவன் நாடிய எல்லாவிடயங்களில் அவனின் புகழ்நிறைந்துள்ளது என்பாகும்.
முகீரதுப்னு ஷுஃபாவின் எழுத்தாளர் வர்ராத் கூறுகிறார்: முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் முகீரதுப்னு ஷுஃபா எனக்கு எழுதுமாறு பின்வரும் ஹதீஸை குறிப்பிட்டார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகை முடிந்ததும் பின்வருமாரு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதய்த்த, வலா முஃதிய லிமா மனஃத்த, வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து .(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவராலும் கொடுக்கவும் முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் உன்னிடம் பயன் அளிக்காது)
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒவ்வொரு பர்ழான தொழுகையைத் தொடர்ந்து : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லிஷைஇன் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதய்த்த வலா முஃதிய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து என கடமையான தொழுகைக்குப் பிறகு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த திக்ரின் கருத்து : லாஇலாஹ இல்லல்லாஹு என்ற ஏகத்துவ வார்த்தையை உளப்பூர்வமாக ஏற்று அங்கீகரிக்கிறேன். உண்மையான வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது என்று உறுதிப்படுத்துவதோடு, அவனைத் தவிர உள்ளவற்றிற்கு வழிபாடு எதுவும் இல்லை என்றும் கூறுகிறேன். எனவே உண்மையாக வணங்கப்பட வேண்டியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. உண்மையான அரசாட்சி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளோரின் அனைத்து புகழாரங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் எல்லாவற்றிலும் சக்தி படைத்தவனாக உள்ளான் எனவே அவன் நாடி கொடுத்தவற்றை அல்லது தடுத்தவற்றை எவராலும் தடுத்திட முடியாது. மேலும் செல்வந்தனின் செல்வம் மறுமையில் எவ்விதப்பயனையும் தரமாட்டாது அவனின் நல்லமல்கள் மாத்திரமே அவனுக்கு நற்பயனளிக்கும்.
ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, ரப்பிஃபிர்லீ,' என கூறுபவர்களாக நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இருந்தார்கள். (பொருள் : எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக, எனது இரட்சகனே! எனக்கு மன்னிப்பளிப்பாயாக).
இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறதுநபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் -மத்தியில் 'ரப்பிஃபிர்லீ, என்ற இஸ்திஃபாரை மீண்டும் மீண்டும் கூறுபவர்களாக இருந்தார்கள். 'ரப்பிஃபிர்லீ, என்பது : அடியான் தனது இரட்சகனிடம் தனது பாவத்தை அழித்து விடுமாறும் குறைகளை மன்னித்து விடுமாறும் இறைஞ்சுவதைக் குறிக்கும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி 3.இறைவனிடம் பிரார்த்திக்கும் ஸாலிஹான குழந்தைகள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒருவர் மரணித்துவிட்டால் அவரின் செயல்களும் நின்றுவிடும். என்றாலும் அவரின் மரணத்தின் பின் மூன்று செயல்கள் மூலம் மாத்திரமே அவருக்கு நன்மைகள் கிடைக்கும். ஏனெனில் அச்செயல்களுக்கு அவரே காரணமாக இருந்திருக்கிறார். அவைகள் வருமாறு : முதலாவது : அல்லாஹ்வின் பாதையில் எதையாவது அர்ப்பணித்தல், (வக்ப் செய்தல்) பள்ளிவாசல்கள் கட்டுதல், கிணறுகள் தோண்டுதல் போன்ற தொடர்ச்சியான வெகுமதியையும் நிரந்தரமான நன்மையையும் பெற்றுத் தரும் தர்மம். இரண்டாவது: மக்களுக்கு பயனளிக்கும் அறிவு. இதில் புத்தகங்களை எழுதுதல் மற்றும் கற்பித்தல் போன்றன அடங்கும். ஒருவர் மற்றொருவருக்கு அறிவைப் புகட்டி, அந்த நபர் தனக்கு கற்பித்தவரின் மரணத்திற்குப் பிறகு அதை மற்றவர்களுக்கு கற்பித்தால் பரப்பினால் அக்கூலி மரணித்தவருக்கு வந்து சேரும். மூன்றாவது: தனது பெற்றோருக்காகப் பிரார்த்தனை செய்யும் இறைவிசுவாசமும் நல்லொழுக்கமும் நிறைந்த குழந்தை.
ஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதரே! ஸஃத் (ரழி அவர்களின் தாயார் இறந்துவிட்டார். எனவே (அவளுக்காக) வழங்குவதற்கு மிகச் சிறந்த தர்மம் எது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தண்ணீர்.' என்றார்கள் எனவே ஸஃத் ஒரு கிணற்றைத் தோண்டி, 'இது ஸஃத்தின் தாய்க்கு' என்றார்.
இமாம்களான அபூதாவுத், நஸாஈ, இப்னுமாஜா ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறதுஸஃத் இப்னு உபாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் இறந்தபோது, ஸஃத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் தனது தாய்க்கு வழங்கக்கூடிய சிறந்த தர்மம் எது என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தண்ணீர் கொடுப்பதே சிறந்த தர்மம் என்று பதிலளித்தார்கள். அவர் தனது தாய்க்காக ஒரு கிணற்றைத் தோண்டி அதனை தர்மமாக வழங்கினார்கள்.
இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் ஒருவரை விழித்து -இப்பெண்ணின் பெயரை இப்னு அப்பாஸ் கூறினார்கள் ஆனால் நான் அவளுடைய பெயரை மறந்துவிட்டேன்.- 'எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு வருவதை உம்மை எது தடுத்தது?' என வினவியதற்கு அந்தப் பெண்மணி எம்மிடம் நீர் இரைக்கும் இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று கூறினாள். அப்பொழுது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் வதாஇலிருந்து திரும்பி வந்த பொழுது ஹஜ்ஜுவணக்கத்தை நிறை வேற்றாத அன்ஸாரிப் பெண்ணிடம் எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு உம்மை எது தடுத்தது? என வினவினார்கள் அதற்கு அவள் தமக்கு இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று காரணம் கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ரமழான் மாதம் உம்ரா வணக்கத்தை நிறை வேற்றுவதன் கூலி ஒரு ஹஜ்ஜுடைய கூலிக்கு சமம் என்று அப் பெண்ணிடத்தில் கூறினார்கள்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதரே! அறப்போர் புரிவதை மிகச்சிறந்த அமலாக நாம் காண்கின்றோம். நாமும் அறப் போரில் கலந்துகொள்ளட்டுமா? அதற்கு நபியவர்கள் இல்லை, எனினும் அறப்போரில் மிகச்சிறந்தது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் எனக் கூறினார்கள் .
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதையும், எதிரிகளுடன் போராடுவதையும் நபித்தோழர்கள் சிறந்த அமல்களில் ஒன்றாகக் கருதிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தாங்(பெண்)களும் அறப்போர் புரியலாமா? என வினவினார்கள். அதற்கு நபியவர்கள், பெண்களுக்கான மிகச் சிறந்த அறப்போர் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் செய்யப்பட்ட இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாகும் அது அல் குர்ஆனுக்கும் அஸ்ஸுன்னாவாகிய நபி வழிக்கும் முற்றிலும் முழுமையாக தோதுவாக அமைந்து, பாவத்தைவிட்டும் முகஸ்துதியை விட்டும் முற்றாக நீங்கியதாக அமைந்திருத்தல் வேண்டும்.
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கிடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்)தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில் இரண்டு கொம்புள்ள வெள்ளையும் கறுப்பு நிறமும் கலந்த செம்மறியாடுகளை அறுத்தார்கள். அப்போது 'பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று கூறினார்கள். அதனை அறுக்கும் போது அதன் கழுத்தில் தனது காலை வைத்தார்கள் என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.