





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்-இர்பாழ் இப்னு ஸாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு தினம் எழுந்து நின்று உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஓர் உபதேசத்தை செய்தார்கள். அப்போது ஒருவர் 'அல்லாஹ்வின் தூதரே, இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். அதற்கு நபியவர்கள்: 'அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், ஒரு அபீஸீனிய அடிமை உங்களுக்குப் பொறுப்பாளராக வந்தாலும், அவருக்கு செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து கொள்ளுங்கள். எனக்குப் பிறகு நீங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகளைக் கண்டு கொள்வீர்கள். எனவே, எனது ஸுன்னாவையும் நேர்வழிநடந்த கலீபாக்களின் ஸுன்னாவையும் உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் உங்கள் கடைவாய் பற்களால் பற்றிக்கொள்ளுங்கள்; (அதாவது அதனை உறுதியாக கடைப்பிடித்தொழுகுங்கள்) மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட நூதன அனுஷ்டானங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விஷயமும் வழிகேடாகும் (பிழையான வழிகாட்டுதலாகும்.)
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஒரு உபதேசத்தை செய்தார்கள். அவ்வுபதேசத்தின் கனதியை அவதானித்த தோழர்கள்; 'அல்லாஹ்வின் தூதரே! இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, உங்களுக்குப் பின் கடைப்பிடித்தொழுகும் படியான அறிவுரையை எங்களுக்கு கூறுங்கள்' என்றார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ் விதித்த கடமைகளை செய்வதன் மூலமும் தடுத்தவிடயங்களை விலகி நடப்பதன் மூலமும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறேன் என்றார்கள். மேலும் தலைவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும், அல்லது அதிகாரத்தை பொறுப்பேற்றாலும், அதாவது உங்களில் அந்தஸ்தில் குறைந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும், குழப்பங்கள் ஏற்படுவதைப் பயந்து அவரை புறக்கணிக்காது அவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களில் எனக்குப்பின் வாழ்வோர் அதிகமான கருத்து முரண்பாடுகளை –பிரச்சினைகளை –கண்டுகொள்வார். பின்னர் இந்த முரண்பாடுகளிலிருந்து தப்பிக்கும் வழியை தெளிவுபடுத்துகிறார்கள். அதுவே அவர்களினதும் அவர்களுக்கு பிறகு வந்த நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்றோரினது வழிமுறையை பின்பற்றுவதாகும். அதனைப் பின்பற்றி அதில் உறுதியாக இருப்பதுமாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற நூதன விடயங்களை விட்டும் அவர்களை எச்சரிப்பதோடு அனைத்து பித்அத்துக்களும் வழிகேடு என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸமுரா இப்னு ஜுன்துப் மற்றும் முகீரா இப்னு ஷுஃபா ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் அறிவிப்பதாவது: 'என்னைப் பற்றி பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்''
இமாம் முஸ்லிம் தனது முகவுரையில் இதை பதிவு செய்துள்ளார்ஒருவர் நபியவர்கள் கூறியதாக ஒரு செய்தியை கூறுகிறார் அதனை கேட்கும் நபர் அந்த செய்தி நபியவர்களின் மீது பொய்யாக சொல்லப்பட்ட செய்தி என்று அறிகிறார் அல்லது அதில் சந்தேகம் ஏற்படுகிறது அப்படி இருந்து அந்த செய்தியை அறிவிப்பாராயின் அந்தப்பொய்யான செய்தியை சொன்ன நபருடன் இவரும் கூட்டுச்சேருகிறார் என நபி ஸல்லல்லாஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யார் என்மீது (நான் கூறியதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்'யார் நபி மீது வேண்டுமேன்றே பொய்யாக ஒரு வார்த்தை அல்லது செயலை நபி கூறியதாக கூறுகின்றாரோ மறுமையில் அவரின் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். அதுவே நபி மீது பொய்யுரைத்ததற்கான கூலியாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்'.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''எனது சமூகத்தின் இறுதியில் சில நபர்கள் தோன்றுவார்கள் அவர்கள் நீங்களோ உங்களின் மூதாதையர்களோ செவிமடுக்காத விடயங்களை (மார்க்கத்தின் பெயரால்) கூறுவார்கள். எனவே உங்களையும் அவர்களையும் நான் எச்சரிக்கிறேன்''.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தனது உம்மத்தின் இறுதிக்காலத்தில் சில நபர்கள் தோன்றி தங்களுக்கு முன்னர் யாருமே கூறாத விடயங்களை மார்க்கத்தின் பெயரில் பொய்யாக இட்டுக்கட்டிக் கூறுவார்கள் என இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது அவர்கள் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை கூறுவார்கள், இந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எமக்கு அவர்களின் அவையில் ஒன்றாக இருப்பதை விட்டும் விலகி இருக்குமாறும், அவர்களின் ஹதீஸ்களை செவிமடுக்காது இருக்குமாறும் கட்டளையிடுகிறார்கள். ஏனெனில்; இட்டுக்கட்டப்பட்ட அந்த ஹதீஸ்களை செவிமடுப்பதால் அவை உள்ளத்தில் ஆழப்பதிந்து அதிலிருந்து விடுபடுவது சிரமமாகிவிடும் என்பதினாலாகும்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்ட அனைத்தையும் மனப்பாடம் செய்வதற்காக எழுதிக்கொள்பவனாக இருந்தேன். குரைஷிகள் என்னைத் தடை செய்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அவர்களிடமிருந்து நீங்கள் கேட்கும் அனைத்தையும் எழுதுகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர் ஒரு மனிதர் அவர் கோபத்திலும், சாதாரன நிலையிலும் பேசுகிறாரே என்று என்னிடம் அவர்கள் கூற, நான் எழுதுவதை நிறுத்திவிட்டு, அதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல் அவர்களிடம் கூறினேன். பின்னர், அவர் தனது வாயில் விரலைக் காட்டி கூறினார்: 'எழுதவும்; என் ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, இந்த வாயின் மூலம் உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவருவதில்லை!.
இதனை இமாம் அபூதாவுத் பதிவு செய்துள்ளார்நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்பவற்றை எழுத்து மூலம் பாதுகாப்பதற்காக பதிவு செய்துகொள்பவனாக இருந்தேன். அப்போது குறைஷியர்களில் சிலர் என்னை எழுத வேண்டாம் எனத்தடுத்துவிட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சாதாரண நிலையிலும் கோபத்திலும் பேசும் ஒரு மனிதராவர், அவர்கள் சில வேளை தவறிழைக்கக் கூடும் எனக் கூற நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். எனவே அவர்கள் கூறியதை நபி எஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கூறினேன். அதற்கு நபியவர்கள் தனது வாயை பெரும் விரலால் சுட்டிக்காட்டி எழுதுவீராக எனக் கூறிவிட்டு எனது ஆன்மா யாரின் கைவசம் உள்ளதோ அவனின் மீது சத்தியமாக கோபம் மற்றும் எல்லா நிலைகளிலும் இதிலிருந்து வெளிப்படும் அனைத்தும் சத்தியமாகும் எனக் கூறினார்கள். அல்லாஹ் தனது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறான்: 'அவர் மனோ இச்சைப்படி எதனையும் பேசுவதில்லை. அது அவருக்கு அறிவிக்கப்படும் வஹியைத் தவிர வேறுஎதுவுமில்லை' ( அந்நஜ்ம்: 3-4)
மனிதன் தன் தந்தையல்லாத ஒருவனை தன்னுடைய தந்தை என்று வாதிடுவது,அல்லது தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாகச் சொல்வது,அல்லது ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை நபியவர்கள் சொன்னதாகச் சொல்வது நிச்சயமாக பெரிய பொய்யில் ஒன்றாகும் என்று ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என வாஸிலா இப்னுலா அஸ்கஃ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்நிச்சயமாக அல்லாஹ்விடம் மனிதன் சொல்லும் பொய்யில் மிகக்கொடியது யாதெனில்,அவன் தன் பரம்பரையைத் தனது தந்தையல்லாத வேரொருவனின் பக்கம் சாட்டிவிடுவது.அல்லது வேறு எவரேனும் அவனுடைய தந்தையல்லாதவனை அவனுடைய தந்தை என்று சாட்டினால் அதனை அவன் அங்கீகரித்தலாகும். மேலும் மனிதன் தான் காணாத ஒன்றைக் கனவில் கண்டதாகச் சொல்வதும் அவ்வாறே ரஸூல் (ஸல்) சொல்லாத,செய்யாத, அனுமதிக்காத எதனையும் அவர்களின் பக்கம் சாட்டி விடுவதும் அல்லாஹ்விடம் பெரும் பொய்யாகக் கருதப்படும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைத் தான் செவிமடுத்ததாக உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்களின் மகன் அபூஅப்துர் ரஹ்மான் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து தூண்கள் மீது இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது'
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்ஜந்து தூண்களை தாங்கி நிற்கும் பலமான ஒரு கட்டடத்திற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தை ஒப்பிட்டார்கள். இஸ்லாத்தின் எஞ்சிய பண்புகள் யாவும் அக்கட்டடத்தை பரிபூரணப்படுத்தக்கூடிய விடயங்களாகும். இஸ்லாத்தின் தூண்களில் முதலாவதாக இரண்டு ஷஹாதா கலிமாக்கள் ஆகும். அவை 'உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்' ஆகும். இவ்விரண்டு விடயங்களும் ஒரு தூணாகவே கணிக்கப்படும். இவை ஒன்றையொன்று ஒரு போதும் பிரிந்திருக்கமாட்டாது. இவ்வார்த்தையை ஒரு அடியான் நாவினால் மொழிந்து, அல்லாஹ்வின் ஏகத்துவத்தன்மையையையும், அவன் மாத்திரமே வணக்கவழிபாடுகள் செலுத்த தகுதியானவன் என்பதையும் ஏற்று அதன் அர்த்தத்தை அறிந்து, அதன்படி செயல்படல் அவசியமாகும். அத்துடன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தூதுத்துவத்தை விசுவாசித்து, அவரை முன்மாதிரியாகக் கொண்டு பின்பற்றல் அவசியமாகும். இரண்டாவது : தொழுகையை நிலைநாட்டுதல், இது இரு சாட்சியங்களுக்கு அடுத்து பிரதான தூணாகும். தினமும் கடமையான ஐவேளை தொழுகைகளான பஜ்ர், லுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகியவைகளை அதன் நிபந்தனைகள், ருகுன்கள் மற்றும் வாஜிபாத்துக்களைப் பேணி நிறைவேற்றுவதைக் குறிக்கும். மூன்றாவது : ஸகாத் வழங்குதல், இது பொருள் ரீதியான ஒரு வணக்கமாகும். ஷரீஆவில்-மார்க்கத்தில்- வரையறுக்கப்பட்ட அளவை அடைந்த செல்வங்கள் அiனைத்திலும் இது கடமையாவதோடு அதற்கு தகுதியானவர்களுக்கு கொடுத்திட வேண்டும். நான்காவது : ஹஜ் செய்தல், ஹஜ் என்பது அல்லாஹ்வுக்கு வழிப்படும் முகமாக மக்காவுக்கு சென்று கிரியைகளை நிறைவேற்றுவதைக் குறிக்கும். ஐந்தாவது : ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது, பஜ்ர் உதயமாகியது முதல் சூரியன் மறையும் வரையில் அல்லாஹ்வுக்கு வழிப்படும் எண்ணத்துடன் உண்ணுதல் மற்றும் பருகுதல் மற்றும் நோன்பை முறிக்கும் காரியங்கள் அனைத்தையும் தவிர்த்தலை இது குறிக்கும்.
அபூ அப்துர் ரஹ்மான் அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள் : உண்மையாளரும் உண்மைப்படுத்தப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள் : 'நிச்சயமாக உங்கள் ஒவ்வொருவரது படைப்பும் தனது தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் விந்துவாக ஒருங்கிணைக்கப்படுகிறது. பின்னர் இதே கால அளவிற்கு அட்டை போன்று இரத்தக்கட்டியாகவும், பின்னர் இதே கால அளவிற்கு ஒரு துண்டு சதையாகவும் இருக்கின்றது. பின்னர் அந்தக் கருவுக்கு ஒரு வானவர் அனுப்பப்பட்டு, அவர் ரூஹ் (உயிர்) ஊதுவார். அத்துடன் அவர் நான்கு விடயங்கள் குறித்து கட்டளையிடப்படுகின்றார். அதன் வாழ்வாதார அளவு, ஆயுட்காலம், செயற்பாடுகள், அவன் பாக்கியசாலியா? துர்ப்பாக்கியசாலியா? என்பவற்றை எழுதக் கட்டளை இடப்படுகின்றார். எவனையன்று வணக்கத்திற்குரியவர் எவருமில்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக உண்மையிலேயே உங்களில் ஒருவர் சுவர்க்கத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு முழம் அளவு தூரமே இருக்கின்ற வகையில் சுவர்க்க வாசியைப் போல் நடந்து கொள்வார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. ஆதலால் அவர் நரக வாசியைப் போல் நடந்து கொள்ள ஆரம்பித்து, அதனால் அவர் நரகத்தில் நுழைகின்றார். இன்னும் உங்களில் ஒருவர் நரகத்திற்கும் அவருக்குமிடையில் ஒரு முழம் அளவு தூரமே இருக்கும் வகையில் நரக நெருப்புக்கு இரையாகும் விதத்தில் நடந்து கொள்கிறார். ஆனால் அவருக்காக எழுதப்பட்டிருப்பது அவரை முந்திக் கொள்கிறது. இதனால் அவர் சுவர்க்கவாசியைப் போல் நடக்க ஆரம்பித்து அவர் சுவர்க்கத்தில் நுழைகின்றார்'.
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்இப்னு மஸ்ஊத் கூறினார்கள் : தனது வார்த்தையில் உண்மை பேசியவரும், அல்லாஹ் உண்மைப்படுத்தியவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எங்களுக்கு அறிவித்தார்கள்: உங்கள் ஒருவரின் படைப்பு ஒருங்கிணைக்கப்படுகிறது. அதாவது ஒரு மனிதர் தனது மனைவியிடம் உறவு கொண்டால் அவனின் சிதரிய விந்தானது நாற்பது நாட்கள்; வயிற்றில்-விந்தாகவே கருவறையில்- ஒன்றிணைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்களில் இரத்தக்கட்டியாக மாறிவிடுகிறது.(இரண்டாம் நாட்பதுகளில்) அதனைத் தொடர்ந்து நாற்பது நாட்களில் மென்று சாப்பிடும் நிலையிலுள்ள சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது.( (மூன்றாம் நாற்பது நாற்களில்) அதன் பிறகு 120 நாட்கள் முடிவடைந்ததும் மலக்கு அனுப்பப்பட்டு அவருக்கு உயிர் ஊதப்படுகிறது. பின்னர் அவர் குறித்த நான்கு வார்த்தைகளை எழுதுமாறு கட்டளையிடப்படுவார். முதலாவது அவனின் வாழ்வாதாரம் குறித்ததாகும் அதாவது அவனின் ஆயுளில் அவன் பெற்றுக்கொள்ளும் இன்பங்களின் அளவாகும். அஜல் என்பது உலகில் அவர் தங்கியிருக்கும் காலத்தைக் குறிக்கும். அவனின் அமல் செயற்பாடு என்பது என்ன? அவன் ஒரு பாக்கியசாலியா? அல்லது துர்ப்பாக்கியசாலியா? பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஆணையிட்டு கூறினார்கள்: ஒருவர் சுவர்க்கவாதிகளின் செயலில் ஈடுபடுவார். மனிதர்களுக்கு வெளிப்படையில் அவரின் செயல் நற்செயலாக இருக்கும். பூமியில் ஓரிடத்தில் ஒருவருக்கு குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கான தூரம் ஒரு முழம் அளவு இருப்பது போன்று அவர் சுவர்க்ததிற்குள் நுழைய ஒரு முழம் அளவு இடைவெளி காணப்படும். அந்நேரம் அவரின் விதி அவரை முந்தி அவர் நரகவாதிகளுக்குரிய செயலொன்றை செய்து விடுவார் இவ்வாறான ஒரு செயலின் மூலம் அவரின் ஆயுல் முடிவடைந்து விடும்.இதன்காரணமாக அவர் நரகம் நுழைவார். ஒருவர் தனது செயலில் மாறாது மிக உறுதியாக இருப்பது அவரின் செயல் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனையாகும். இன்னொரு மனிதரைப்பொருத்தவரை அவரும் நரகை அண்மிக்கும் வரையில் நரகவாதிகளின் செயலை செய்து கொண்டிருப்பார். நரகத்திற்கும் அவருக்குமிடையில் நிலத்தில் ஒரு முழம் அளவான தூரம் காணப்படும் அவ்வேளை அவரின் விதி முந்தி சுவர்க்கவாதிகளின் ஒருவரின் நற்செயலை செய்வதன் மூலம் சுவர்க்கம் நுழைந்திடுவார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அருளியதாக முஃமின்களின் தாயான உம்மு அப்தில்லா ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள் : எமது மார்க்கத்தில் (தீனில்) அதில் இல்லாதவற்றை புதிதாக யார் உருவாக்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும். முஸ்லிம் என்ற நபிமொழி தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது "நம்முடைய மார்க்கப் போதனைகளோடு ஒத்துப் போகாத ஒரு செயலை எவராவது செய்யின் அது நிராகரிக்கப்பட்டதாகும்".
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் இந்த மார்க்கத்தில் புதிதாக ஒரு காரியத்தை கண்டுபிடித்து உருவாக்குகிறாரோ அல்லது அல்குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் காட்டித்தராத ஒரு செயலைச் செய்கிறாரோ அது நிராகரிக்கப் படுவதோடு அல்லாஹ்விடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெளிவு படுத்துகிறார்கள்.