





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினர். அப்போது, '(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். மேலும், அல்லாஹ் தடுத்த எந்தவோர் உயிரையும் நியாயமின்றி கொலைசெய்யவும் மாட்டார்கள், மேலும் விபச்சாரம் செய்யவும் மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆனின் 25:68 வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், '(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.. எனும் (திருக்குர்ஆனின் 39:53 வது) வசனமும் அருளப்பெற்றது.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்கொலை விபச்சாரம் போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபட்ட இணைவைப்பாளர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து நீங்கள் அழைக்கும் இஸ்லாம் அதன் போதனைகள் யாவும் மிகவும் சிறந்த விடயங்ளாகும். ஆனால் நாம் இணைவைப்பு மற்றும் பெரும்பவாங்களில் வீழ்த்துள்ளோம், அதனால் எமது நிலை எவ்வாறு அமையப் போகிறது? அதற்கு குற்றப்பரிகாரம் ஏதும் உண்டா என வினவினார்கள். அவ்வேளையில் மேற்படி இரண்டு வசனங்களும் இறங்கின. அதில் மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருப்பினும் அவை எவ்வளவு பெரியதாக உள்ள போதும் அதற்கான தீர்வாக தவ்பாவை ஏற்படுத்தி அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என உத்தரவாதப் படுத்தியுள்ளான். அவ்வாறு அல்லாஹ் அவகாசம் அளிக்காதிருந்தால் அந்த இணைவைப்பாளர்கள் அவர்களின் இறைநிராகரிப்பிலும், அத்துமீறல்களில் தொடர்ந்து இருந்திருப்பார்கள் அது மாத்திரமல்லாது இந்த மார்க்கத்தினுள் நுழைந்திருக்கவும் மாட்டார்கள்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் உரை நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் கூறினார்: ''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய பெருமைகொள்வதையும் நீக்கிவிட்டான். ஆகவே தற்போது இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: அல்லாஹ்வின் பார்வையில் நேர்மையான, பக்தியுள்ள மற்றும் கண்ணியமான நபர். அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பொல்லாத, பரிதாபத்திற்குரிய, அற்பமான மனிதர். மக்கள் ஆதமின் பிள்ளைகளாவர், அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன். (ஹுஜுராத் : 13).
இமாம்களான திர்மிதி மற்றும் இப்னு ஹிப்பான் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட தினத்தில் உரைநிகழ்த்தினார்கள், அதில் அவர்கள் : மக்களே நிச்சயமாக அல்லாஹ் ஜாஹிலிய்யக்கால ஆணவத்தையும், வீராப்புக்கொள்வதையும், தங்களின் மூதாதையர்களின் பெருமை பேசுவதையும் உங்களை விட்டும் அகற்றிவிட்டான். ஆகையால் மக்கள் இரு வகையினராவர். முதலாமவர் : அல்லாஹ்வுக்கு பணிந்து கட்டுப்பட்டு நடக்கும் நேர்மையான, பக்தியுள்ள முஃமின், இவர் மக்களிடத்தில் உயர்பரம்பரை மற்றும் உயர் குலத்தை சார்ந்தவாராக இல்லாது விட்டாலும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியவராவார். இரண்டாமவர் : ஒழுக்கக்கேடான அல்லாஹ்வை நிராகரித்த துஷ்டன், இவன் உயர் குலமும் புகழும் அதிகாரமும் மிக்கவனாக திகழ்ந்தாலும் அல்லாஹ்விடத்தில் அட்பமான மிகப்பரிதாபமானவனாகவே இருப்பான். இவனுக்கு எந்த மதிப்பும் கிடையாது. மனிதர்கள் அனைவரும் ஆதமின் சந்ததியாவார்கள். அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். ஆகவே எவரின் அசல் -அடிப்படை- மண்ணாக இருக்கிறதோ அவர் பெருமையடித்தல் தற்பெருமைக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு அருகதையற்றவர். இதனை பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது : 'மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன்'. (ஹுஜுராத் : 13).
அஸ்ஸுபைர் இப்னுல் அவ்வாம் ரழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : (பின்னர் அந்நாளில் அருட்கொடைகள் பற்றி நிச்சயமாக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்) என்ற வசனம் இறங்கிய போது (அத்தகாஸுர் : 8) அஸ்ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் தூதரே எந்த அருட்கொடைபற்றி மறுமையில் விசாரிக்கப்டும்! 'அஸ்வதான்' எனும் ஈத்தம் பழமும் நீருமா? என்று வினவ அதற்கு :அறிந்து கொள்ளுங்கள்! அந்த அருட்கொடை பற்றியும்; அந்த விசாரணையில் இருக்கும் என்று பதிலளித்தார்கள்.
இமாம் திர்மிதி, இமாம் இப்னு மாஜா ஆகியோரால் பதிவு செய்யப்பட்டதுபின்வரும் வசனமான, (ஸும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின் நஈம்) அதாவது உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தியது குறித்து உங்களிடம் மறுமையில் விசாரிக்கப்படவிருக்கிறீர்கள் என்ற வசனம் இறங்கியபோது அஸ்ஸுபைர் இப்னுல் அவ்வாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எந்ந அருட்கொடைபற்றி நாம் விசாரிக்கப்படப் போகிறோம்? அதாவது ஈத்தம் பழம் மற்றும் நீர் ஆகிய விசாரிக்கப்படுவதற்கு பொருத்தமில்லாத இரு அருள்கள் பற்றியா! என வினவினார்கள். அதற்கு : நீங்கள் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் அருள்களுடன் சேர்த்து அந்த மாபெரும் இரு அருள்கள் குறித்தும் விசாரிக்கப்பட உள்ளீர்கள் என்று பதிலளித்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : "கஹ்ஃப் அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்களை யார் மனனம் செய்கிறாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார். மற்றொரு அறிவிப்பில் ஸுறா கஹ்பின் இறுதி பத்து வசனங்கள் என்று வந்துள்ளது".
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ﷺ அவர்கள் அறிவித்தார்கள்: யார் ஸூரத்துல் கஹ்ஃபின் முதல் பத்து ஆயத்துகளை (புரிந்து) மனனம் செய்கிறாரோ, அவர் இறுதிக்காலத்தில் வெளிவந்து தன்னை இறைவன் என்று கூறும் மஸீஹுத் தஜ்ஜாலின் பெரும் சோதனையிலிருந்து பாதுகாக்கப்படுவார். தஜ்ஜாலின் சோதனையானது, ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் கியாமத் நாள் ஏற்படும் வரையில் பூமியில் ஏற்பட்ட சோதனைகளை விட மிகப் பெரிய சோதனையாகும். அல்லாஹுத் தஆலா அவனுக்கு சில அசாதாரண நிகழ்வுகள் மூலம் அற்புதங்களை ஏற்படுத்துவதற்கான சக்தியை வழங்குவான்; அவற்றின் மூலம் அவனைப் பின்பற்றுவோரைக் கவர்வான். ஸூரத்துல் கஹ்ஃபின் முதல் பகுதியில் உள்ள அதிசயங்களும் அத்தாட்சிகளும், தஜ்ஜால் மக்களைச் சோதிக்கும் விடயங்களை விட மிக ஆபத்தனாவை. ஆகவே, அவற்றை ஆழமாக சிந்தித்து உணர்ந்தவர் தஜ்ஜாலின் மாயஞாலங்களுக்கு மயங்கிவிடமாட்டார். மற்றொரு அறிவிப்பில்;: ஸூராவின் இறுதி பத்து ஆயத்துகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ஓதினாலும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புக்கிடைக்கும் அது 'அபஹசிபல்லதீனு கபரூ அய்யத்தகிது.. {أفحسب الذين كفروا أن يتخذوا...} என்று துவங்கும் வசனமாகும்.
நபி (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : எனக்கு சில வசனங்கள் இறக்கப்பட்டுள்ளன. அவற்றைப் போன்று வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் இரு குல் ஸூராக்களும்) ஆகும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபிகள் (ஸல்) அவர்கள் தனக்குக் கூறியதாக, உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : எனக்கு அல்லாஹ் சில வசனங்களை இறக்கியுள்ளான். அவற்றைப் போன்று (பாதுகாப்புத் தேடுவதில்) வேறு வசனங்களைக் காணமுடியாது. (அவையே) முஅவ்விததைன் (எனப்படும் ஸூரா அல்பலக் மற்றும் ஸூரா அந்நாஸ் ஆகிய ஸூராக்கள்) ஆகும்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நான் அபூ தல்ஹாவின் வீட்டில் மக்களுக்கு (மது) புகட்டுபவனாக இருந்தேன். அந்நாட்களில் அவர்களது மதுபானம் என்பது, 'பழீக்' எனப்படும் (ஈத்தம் பழத்தால் செய்யப்படும்) மதுவாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஓர் அழைப்பாளியை ஏவி, 'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.' என்று அறிவிக்கச் செய்தார்கள். அப்போது அபூ தல்ஹா என்னிடம், 'வெளியே சென்று, இதைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நானும் வெளியேறி அதைக் கொட்டினேன். அது மதீனாவின் பாதைகளில் ஓடியது. அப்போது மக்களில் சிலர், 'சில மனிதர்கள், மது தம்முடைய வயிற்றில் இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனரே' என்று கூறிய போது, "ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப் பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது (அல் மாஇதா : 93) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, அவர்கள், அவர்களது தாயின் கணவராகிய, அபூ தல்ஹாவின் வீட்டில் மக்களுக்கு (மது) புகட்டுபவனாக இருந்துள்ளார்கள். அந்நாட்களில் அவர்களது மதுபானம் என்பது, 'பழீக்' எனப்படும் (ஈத்தம் பழத்தால் செய்யப்படும்) மதுவாக இருந்தது. அப்போது நபியவர்கள் ஓர் அழைப்பாளியை ஏவி, 'நிச்சயமாக மதுபானம் தடுக்கப்பட்டுவிட்டது.' என்று அறிவிக்கச் செய்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : அப்போது அபூ தல்ஹா என்னிடம், 'வெளியே சென்று, இதைக் கொட்டிவிடு' என்று கூறினார்கள். நானும் வெளியேறி அதைக் கொட்டினேன். அது மதீனாவின் பாதைகளில் ஓடியது. அப்போது மக்களில் சிலர், 'சில மனிதர்கள், மது தம்முடைய வயிற்றில் இருக்கும் போதே கொல்லப்பட்டுள்ளனரே' என்று கூறிய போது, "ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப் பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. (அல் மாஇதா : 93) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினான். அதாவது, விசுவாசம் கொணடவர்கள், மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்னர் அருந்திய, சாப்பிட்ட விடயங்களில் அவர்களுக்கு எந்தக் குற்றமும் கிடையாது.
அபூ நஜீஹ் இர்பாழ் இப்னு சாரியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : இறைவனின் தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரசங்கமொன்றை நிகழ்த்தினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த எங்களது இதயங்கள் நடுங்கின. எங்களது கண்களில் கண்ணீர் சிந்தின. நாங்கள், 'அல்லாஹ்வின் தூதரவர்களே, இது பிரியாவிடை கூறுபவர்களின் அறிவுரை போன்றல்லவா இருக்கிறது! ஆகவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கூறினோம். பெருமனார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள் : இறையச்சத்தையும், ஒரு அடிமையே உங்களது தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்கு முழுமையாகக் கட்டுப்படுவதையும் நான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன். நிச்சயமாக உங்களில் அதிக நாட்கள் வாழ்பவர்கள் அதிக கருத்துவேறுபாடுகளை சந்திப்பீர்கள். ஆகவே நீங்கள் என்னுடைய நடைமுறைகளையே பின்பற்றுங்கள்.அதுபோலவே நல்வழிநடந்த கலீபாக்களின் நடைமுறைகளையும் பின்பற்றுங்கள். உறுதியுடன் அவற்றை கடைப்பிடித்து ஓழுகுங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்படுபவைகள் (பித்அத்துக்கள்) குறித்து கவனமாக இருங்கள். மார்க்கத்தில் புதிதாக புகுத்தப்பட்டவைகள் அனைத்தும் நூதன கிரியைகளாகும். ஒவ்வொரு நூதன கிரியையும் வழிகேடாகும்'.
இமாம்களான அபு தாவூத், அத்திர்மிதி ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டதுஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு உள்ளங்கள் நடுங்கி, கண்கள் கண்ணீர் சிந்துமளவிற்கு மிகவும் ஆழமான ஒரு உபதேசத்தை செய்தார்கள். அவ்வுபதேசத்தின் கனதியை அவதானித்த தோழர்கள்; 'அல்லாஹ்வின் தூதரே! இது விரைவில் பிரிந்து செல்லும் ஒருவரின் அறிவுரையாயிற்றே. எனவே, உங்களுக்குப் பின் கடைப்பிடித்தொழுகும் படியான அறிவுரையை எங்களுக்கு கூறுங்கள்' என்றார்கள். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ் விதித்த கடமைகளை செய்வதன் மூலமும் தடுத்தவிடயங்களை விலகி நடப்பதன் மூலமும் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறேன் என்றார்கள். மேலும் தலைவர்களுக்கு செவிசாய்த்து கட்டுப்பட்டு நடக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். உங்களுக்கு ஓர் அடிமை தலைவராக நியமிக்கப்பட்டாலும், அல்லது அதிகாரத்தை பொறுப்பேற்றாலும், அதாவது உங்களில் அந்தஸ்தில் குறைந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டாலும், குழப்பங்கள் ஏற்படுவதைப் பயந்து அவரை புறக்கணிக்காது அவருக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களில் எனக்குப்பின் வாழ்வோர் அதிகமான கருத்து முரண்பாடுகளை –பிரச்சினைகளை –கண்டுகொள்வார். பின்னர் இந்த முரண்பாடுகளிலிருந்து தப்பிக்கும் வழியை தெளிவுபடுத்துகிறார்கள். அதுவே அவர்களினதும் அவர்களுக்கு பிறகு வந்த நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்றோரினது வழிமுறையை பின்பற்றுவதாகும். அதனைப் பின்பற்றி அதில் உறுதியாக இருப்பதுமாகும். மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படுகின்ற நூதன விடயங்களை விட்டும் அவர்களை எச்சரிப்பதோடு அனைத்து பித்அத்துக்களும் வழிகேடு என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா கூறுகின்றார்கள் : 'என்னைப் பற்றி ஒரு வார்த்தையேனும் எத்தி வையுங்கள். பனூ இஸ்ராயீல்கள் (இஸ்ரவேல் சந்ததியினர்) பற்றி கூறுங்கள் குற்றமில்லை. என் மீது வேண்டுமென்றே யாரேனும் பொய்யுரைத்தால் அவர் நரகத்தை தனக்குரிய தங்குமிடமாக எடுத்துக் கொள்ளட்டும்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆகியவற்றிலிருந்து தன்னிடம் பெற்றுக் கொண்ட அறிவை மனிதர்களுக்கு எத்திவைக்குமாறு நபியவர்கள் கட்டளை பிரப்பிக்கிறார்கள். பிறருக்கு எத்திவைப்பவரும், அழைப்பவரும் குறித்த விடயத்தை நன்கு தெரிந்தவராகவும், விளங்கியவராகவும் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு, அறிவிக்கும் விடயம் அல்குர்ஆன் அல்லது ஹதீஸின் ஒரு வசனம் போன்று சிறியதாக இருந்தாலும் சரியே. இஸ்ரவேலர்களுக்கு நிகழ்ந்தவற்றை, அவை எமது ஷரீஅத்துடன் முரண்படாத வகையில் இருப்பின் அவற்றை அறிவிப்பதில் எவ்விதக் குற்றமுமில்லை என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். பின்னர் அவர்களின் மீது பொய்யுரைப்பதை எச்சரித்துள்ளதோடு, அவ்வாறு வேண்டுமென்று மனமுரண்டாக பொய்யுரைப்பவர் நரகத்தில் தனக்கென ஒரு தங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும் என்றும் குறிப்பிட்டார்கள்.
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அல்மிக்தாத் இப்னு மஃதீயக்ரிப் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். தனது பஞ்சனையில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு மனிதரிடம் எனது செய்தி வந்து சேரும்.அவ்வேளை அவன் உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தீர்ப்பளிக்கும் அடிப்படை இறைவேதமாகும்.அதில் அனுமதிக்கப்பட்டவை எவையென்பதை காண்கிறோமோ அதனை அனுமதிப்போம். அதில் எது ஹராம் என்பதாக காண்கிறோமோ அதனை நாம் தவிர்த்து ஹராமானதாகக் கருதுவோம். நபி ஸல்லல்லாஹு அவர்கள் ஹராமாக்கியவை அல்லாஹ் ஹராமாக்கியவை போன்றாகும்.))
இதனை இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜஹ் ஆகியோர் பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில், ஒரு காலம் வரும்,அவ்வேளை மனிதர்களில் ஒரு பிரிவினர் பஞ்சனையில் அமர்ந்து கொண்டிருப்பர். அவர்களில் ஒருவர் விரிப்பில் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபியவர்களின் செய்தியை அவர் பெறுவார். அப்போது அவர் உங்களதும் எங்களதும் விவகாரங்களில் தீர்ப்புக் கூற அல்குர்ஆன் ஒன்று மட்டுமே போதும் எனக் கூறுவார். அதில் ஹலால் என இருப்பவற்றை செயலாற்றுவோம், அதில் ஹராம் என்று குறிப்பிடப்பட்டவற்றை விட்டும் தூரமாவோம்; என்று கூறுவோர் பற்றி நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் குறிப்பிடுகிறார்கள். பின் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தான் அல்லாஹ்விடமிருந்து செய்திகளை எத்திவைப்பவர் என்ற அடிப்படையில், தனது வழிமுறையில் தடுத்தவை மற்றும் தடைசெய்தவை அனைத்தும் சட்டத்தில் அல்லாஹ் தனது வேதத்தில் தடைசெய்த விடயங்களைப்போன்றதே எனத் தெளிவுபடுத்துகிறார்கள்.