





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நான்கு குணங்கள் எவனிடம் உள்ளனவோ அவன் தெளிவான நயவஞ்சகன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்) ஆகும்."
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான்கு பண்புகள் குறித்து எச்சரித்துள்ளார்கள். அவை ஒரு முஸ்லிமிடம் காணப்படின் அப்பண்புகளின் காரணமாக நயவஞ்சகர்களுக்கு மிகவும் ஒப்பானவராக இருப்பார். பெரும்பாலும் இப்பண்புகள் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ அவரின் நிலை நயவஞ்சகனை ஒத்த நிலையாகும். ஆனால் இப்பண்புகள் யாரிடம் அரிதாக காணப்படுகிறதோ அவர் இவ்வட்டத்தினுள் வரமாட்டார். அப்பண்புகளாவன: முதலாவது: பேசினால் வலிந்து பொய் பேசுவான் அவனின் பேச்சில் உண்மை இருக்காது. இரண்டாவது: ஒப்பந்தம் ஒன்றை செய்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மோசடி செய்வான். மூன்றாவது: வாக்களித்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மாறுசெய்வான். ஒருவருடன் சண்டை சச்சரிவில் ஈடுபட்டால் கடும் பகையை காட்டுவதோடு நேர்மை தவறி நடப்பதோடு, குறித்த நபருக்கு மறுப்புத் தெரிவிப்பதிலும் அவரின் கூற்றை பொய்யாக்குவதிலும் சூழ்ச்சி செய்து பொய்யையும் புரட்டையும் பேசுவான். நயவஞ்சகம் என்பது உள்ளிருப்பதற்கு மாற்றமாக வெளியே ஒன்றை செய்தல். இக்கருத்து இப்பண்புகளைப் பெற்றோரிடத்தில் காணப்படுகிறது. அவர் தன்னிடம் பேசுபவர், வாக்குறுதி அளிப்பவர், நம்பிக்கை வைப்பவர், வாதிடுபவர் மற்றும் உடன்படிக்கை செய்பவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து கொள்கிறார். மாறாக, நம்பிக்கையின்மையை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நயவஞ்சகர் அல்ல. இந்த குணாதிசயங்களில் ஒன்றைக் கொண்டவர் அதைக் கைவிடும் வரை நயவஞ்சகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளார்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த சமூகத்தில் உள்ள ஒரு யூதன் அல்லது கிறிஸ்தவர் அல்லது இவர்கள் அல்லாத பிறமதம் சார்ந்த எவராயினும், தங்களுக்கு நபி ஸல்லலலாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மார்க்கம் பற்றிய அழைப்பு கிடைத்தும் அதனை விசுவாசிக்காது மரணித்தால் அவர் நிரந்தர நரகாவாதிகளுள் ஒருவராக மாறிவிடுவார்.
ஆஇஷா மற்றும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா இருவரும் கூறினார்கள் : 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தம் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும் போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது 'தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூத கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!' எனக் கூறி அவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஆஇஷா மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய இருவரும் எமக்கு ஓரு செய்தியை தெரிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது தனது முகத்தில் ஒரு துணித்துண்டை முகத்தில் போடுவதும், மூச்செடுப்பது சிரமமாகும் போது அதனை அகற்றுபவராகவும் இருந்தார்கள். அந்த நெருக்கடியான நேரத்தில் : யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக, அவனின் அருளை விட்டும் தூரப்படுத்துவானாக எனக் கூறினார்கள். ஏனெனில் அவர்கள் தமது நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். இந்த விடயத்தின் பாரதூரத்தின் காரணமாக அவர்கள் இதனை இவ்வாறான நெருக்கடியான நேரத்தில் கண்டித்துள்ள்ளார்கள். யூத, கிறிஸ்தவர்கள் வீழ்ந்த அதே பாவத்தில் தமது சமூகமும் வீழ்ந்துவிடாமலிருக்கவே நபியவர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளார்கள், அது மாத்திரமின்றி இந்த செயலானது அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதகச் செயலுக்கும் வழிவகுக்கும் ஒரு மிகப்பெரும் பாவமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: 'யா அல்லாஹ்! எனது மண்ணறையை (சமாதியை) வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே! தமது நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ் தளங்களாக ஆக்கிக் கொண்ட கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக'.
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது மண்ணறையை மக்கள் போற்றி வணங்கும், ஸுஜூத் செய்யும் சிலைபோல் ஆக்கிவிடாதிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்தார்கள். மேலும் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தளங்களாக எடுத்துக்கொள்வது அதனை வணங்கி வழிபடவும், அவைகளில் ஆழமான நம்பிக்கை கொள்ளவும் காரணமாக அமைந்துவிடுவதால், நபி மார்களின் அடக்கஸ்தளங்களை வணக்கஸ்தளங்களாக எடுத்துக்கொள்வது இறைவனின் அருளிலிருந்து தூரமாக்கி இறைசாபத்தைப் பெற்றுத்தரும் பெரும் பாவம் என்பதை இந்த ஹதீஸில் தெரிவித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "சோதனையின் பரப்புக்கேற்ப்பவே கூலியின் பரப்பும் இருக்கும். அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான், அதனைப் பொருந்திக் கொண்டவருக்குப் பொருத்தமுள்ளது, கோபித்தவருக்குக் கோபமுள்ளது".
இதனை இப்னு மாஜா பதிவு செய்துள்ளார் - இதனைத் திர்மிதி பதிவு செய்துள்ளார்ஒரு விசுவாசிக்கு தனது உயிர், பொருளில் சிலவேளை சோதனைகள் ஏற்படலாம், அதன்போது பொறுமையாக இருந்தால் அதற்காக அல்லாஹ் அவருக்குக் கூலி வழங்குவதாகவும், சோதனையின் பரவல், வீரியத்திற்கு ஏற்ப அதன் கூலியும் விருத்தியடையுமென நபியவர்கள் கூறுகின்றார்கள். மேலும் சோதனைகள் விசுவாசியுடனான அல்லாஹ்வின் நேசத்தினுடைய அடையாளமாகும். அல்லாஹ் நிர்ணயித்த விதி எப்படியும் நிகழ்ந்தே தீரும், இருப்பினும் பொறுமையாக இருந்து, அதனைப் பொருந்திக் கொண்டால் அவனைப் பொருந்திக் கொள்வதன் மூலம் கூலி வழங்குகின்றான். கூலியால் அவ்விசுவாசிக்கு இதுவே போதுமாகும். அவன் கோபப்பட்டு, அச்சோதனையை வெறுத்தால் அல்லாஹ்வும் அவனுடன் பகைக்கின்றான், தண்டனையால் இதுவே அவனுக்குப் போதுமாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'தூய்மையும்; உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்'.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இணையாளர்களின் இணைவைப்பை விட்டும் அல்லாஹ் முற்றாகத் தேவையற்றவன். ஏனெனில் அவன் எல்லாப்படைப்பினங்ளை விட்டும் எவ்விதத் தேவையுமற்ற தன்னிறைவாளன் என உயர்வும் மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவர் வணக்கங்களில் ஏதாவது ஒன்றை செய்து அதனை அல்லாஹ்வுக்கும், அல்லாஹ் அல்லாதாருக்கும் நிகராக ஆக்கிவிட்டால் அந்த செயலை அவன் ஏற்றுக்கொள்ளாது விட்டு விடுவதோடு அந்தச்செயலை செய்தவனுக்கே திருப்பிவிடுகிறான். அல்லாஹ்வுக்காக மாத்திரம் என்ற தூய எண்ணத்துடன் அமல்களை செய்வது அவசியமாகும். ஏனென்றால் அல்லாஹ்வுக்கென்று தூய்மையாக செய்யப்படாத எந்த செயலையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்மாட்டான்.
ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் 'உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் ரழியலல்லாஹு அன்ஹு அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கஸ்தளங்களை வழிபாட்டுத்தளங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் அடக்கஸ்த் தளங்களை வழிபாட்டுத்தளங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்' என்று கூறுவதை நான் கேட்டேன்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபியவர்கள் தனது மரணத்திற்கு சில நாட்களுக்கு முன் தனது சமூகத்திற்கு முக்கியமான ஒரு செய்தியை அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்விடம் தனக்கிருக்கும் இடத்தைப் பற்றிக் கூறுகின்றார்கள், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்தது போன்று தனக்கும் நேசத்தின் அதியுயர் தரம் கிடைத்திருப்பதாகக் கூறுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வை அன்றி வேறுயாரும் தனக்கு உற்ற தோழனாக இல்லையென மறுத்தார்கள், ஏனெனில் அன்னாரது உள்ளம் இறை நேசத்தாலும், அவனது மகத்துவத்தினாலும், அறிவாலும் நிரம்பியுள்ளது. எனவே அவனைத் தவிர வேறு யாருக்கும் அதில் இடமேதுமில்லை. அவ்வாறு படைப்பினங்களில் உற்ற தோழராக இருக்கும் ஒருவருக்கு அத்தகுதி இருப்பின் அபூ பக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மாத்திரமே உண்டு. பின்னர், யூத, கிறிஸ்தவர்கள் செய்தது போன்று தமது நபிமார்களின் அடக்கஸ்தளங்களில் அங்கீகரிக்கப்பட்ட நேசத்தில் அளவுகடந்து சென்று, அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் அல்லாஹ்வுக்கு இணையான கடவுள்களாக மாற்றியதை எச்சரித்தார்கள். அது மாத்திரமின்றி அவற்றின் மீது வழிபாட்டுத்தளங்களை அமைத்தார்கள். இது போன்ற பாதகச் செயலை அவர்களைப்போன்று செய்ய வேண்டாமென தனது சமூகத்தைத் தடுத்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். இறை நம்பிக்கையாளனான முஃமினும் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு முஃமின் ரோஷப்பட்டு கோபப்பட்டு வெறுப்பதை போன்று அல்லாஹவும் அவனின் கண்ணியம்,மகத்துவத்திற்கேற்ற நிலையில் ரோஷப்படுவதாகவும், கோபம் கொள்வதாகவும், வெறுப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். அல்லாஹ் ரோஷப்படுவதற்கான காரணம் ஒரு முஃமின் அவனின் மீது தான் ஹராமாக்கிய விபச்சாரம், ஓரினச்சேர்க்கை, களவு, மது அருந்துதல் போன்று மாபாதகச் செயல்களை செய்வதினாலாகும்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர், கஃபாவின் மீது சத்தியமாக, இல்லை என்று கூறுவதை கேட்டார்கள் உடனே இப்னு உமர் அவர்கள் கூறினார்கள் இறைவனைத் தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்யப்படக்கூடாது, ஏனென்றால் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன்: 'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'.
இமாம்களான அபுதாவூத், திர்மிதி, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஇந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் அல்லாஹ் மற்றும் அவனது திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் அல்லாதவற்றில் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார் என்று கூறுகிறார்கள். ஏனெனில் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்வது அதனை மகத்துவப் படுத்துவதைக் குறிக்கின்றது, உண்மையான மகத்துவமானது அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியதாகும். ஆகவே அல்லாஹ்வின் மீதும் அவனது திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் மீதுமே சத்தியம் செய்தல் வேண்டும். இந்தவகை சத்தியம் சிறிய வகை ஷிர்க்காகும். என்றாலும் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்தவர் அவர் சத்தியம் செய்தவற்றை அல்லாஹ்வை மகத்துவப்படுத்துவது போல், அல்லது அதை விடவும் அதிகமாக போற்றி மகத்துவப் படுத்தினால் அவரின் சத்தியம் பெரிய வகை இணைவைப்பாக மாறிவிடும்.