





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "நான் உங்களுக்கு எதைத் தடை செய்திருக்கின்றேனோ அதனை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு எதை ஏவியுள்ளேனோ அதனை முடியுமானளவு செய்யுங்கள். அளவுக்கு அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்களுக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களோடு ஒத்துப் போகாததுமே உங்களுக்கு முன்னால் இருந்தவர்களை அழிவுக்கு ஆக்கபடுத்தியது.
இமாம்களான புஹாரி, முஸ்லிம் ஆகியோர் இதை பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், எமக்கு ஏதாவது ஒன்றைத் தடை செய்தால், அதை விதிவிலக்கின்றி முழுமையாக தவிர்ந்து நடப்பது எம்மீது கடமை என்றும், அவர்கள் ஏதாவது செய்யுமாறு கட்டளையிட்டால், எம்மால் முடிந்தவரை அதைச் செய்ய வேண்டும் என்றும் இங்கு எங்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள். அதனைத்தொடர்ந்து, நபியவர்கள் முன்பு வாழ்ந்த சில சமூகங்கள் தங்கள் தூதுவர்களிடம்; பயனற்ற கேள்விகளை அதிகம் கேட்டு, அவர்களுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்கள். அவர்களைப் போல இருக்க வேண்டாம் என்று எம்மை எச்சரிக்கிறார்கள். இவ்வாறான நடத்தையுடையவர்களை அல்லாஹ் பல்வேறு வகையான பேரழிவுகள் மூலம்; தண்டித்தான். எனவே நாமும் அவர்கள் போலல்லாது இருப்பது அவசியம். அவர்கள் போன்று நாம் இருந்தால் அவர்களின் நிலையே எமக்கும் ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் தூயவன், அவன் தூயவைகளை மட்டுமே ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் தனது தூதர்களிடம் எதைச் செய்யும்படி கட்டளையிட்டானோ, அதையே நம்பிக்கையாளர்களையும் (முஃமின்களையும்) செய்யும்படி கட்டளையிட்டுள்ளான்." 'தூதர்களே! தூயவைகளிலிருந்தே உண்ணுங்கள், நற்செயல்களையே செய்யுங்கள்' என்று கூறிய எல்லாம் வல்ல அல்லாஹ் ''நம்பிக்கையாளர்களே! நான் உங்களுக்குத் தந்துள்ளவற்றில் தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்'' என்றும் கூறியுள்ளான். பின்னர் பெருமானர் (ஸல்) அவர்கள் அதிக தூரம் பயணம் செய்த ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். தலைவிரிகோலமாக, மாசு படிந்தவராக அவர் தனது கரங்களை வானத்தை நோக்கி உயர்த்தி ' எனது இரட்டசகனே! எனது இரட்சகனே! என கதறுகிறார். ஆனால் அவர் தனது உணவைப் பெறும் வழி தடுக்கப்பட்டதாக (ஹராமானதாக) இருக்கின்றது, அவர் அருந்தும் பானம் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது உடை தடுக்கப்பட்டதாக இருக்கின்றது. அவரது மொத்த வாழ்க்கையே ஹராமான வழியில் தான் இருக்கின்றது. இந்த நிலையில் அவர் எவ்வாறு இறைவனிடமிருந்து பதிலை எதிர்பார்க்க முடியும்!
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நிச்சயமாக அல்லாஹ் குறைகள் மற்றும் பலவீனங்களை விட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட, பரிசுத்தமானவன் என்றும், பரிபூரணம் மிக்க பண்புகள் கொண்டவன் என்றும் செயற்கள், வார்த்தைகள் மற்றும் நம்பிக்கைகள் என அனைத்திலும் அவனுக்கென்றுத் தூய்மையாக இருக்கும், நபியுடைய வழிக்கு நேர்பட்டிருக்கும் பரிசுத்தமானதை மாத்திரமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான் என்றும் நபியவர்கள் இங்கு அறிவிக்கின்றார்கள். அவ்வாறு மாத்திரம் தான் அல்லாஹ்வை நெருங்கப்படவேண்டும். ஒரு மனிதனின் அமல் பரிசுத்தமடைவதற்கான மிக முக்கியமான ஒரு காரணி, அவனது உணவு ஹலாலானதாகவும், தூய்மையானதாகவும் இருப்பதாகும். அதனூடாகவே அவனது அமல் பரிசுத்தமடைகின்றது. இதனால் தான் அல்லாஹ், ரஸூல்மார்களுக்கு ஹலாலானதை சாப்பிட்டு, நல்லமல்கள் செய்யுமாறு ஏவியது போன்று, விசுவாசிகளுக்கும் ஏவியுள்ளான் "தூதர்களே! நல்லவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள், இன்னும், நற்செயலைச் செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்" , "நம்பிக்கைக் கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு - (வணக்கத்திற்குரியவனான) அவனையே வணங்குபவர்களாக இருந்தால் - நீங்கள் நன்றி செலுத்துங்கள்." பின்பு நபியவர்கள் துஆ ஏற்றுக்கொள்ளப் படுவதற்கான பின்வரும் காரணிகளைப் பயன்படுத்தியும், அமல்களைப் பாழ்ப்படுத்தி, துஆ ஏற்றுக்கொள்ளப்படத் தடையாக இருக்கும், 'ஹராமாண உணவை' நபியவர்கள் எச்சரிக்கின்றார்கள். முதலாவதாக, ஹஜ், ஜிஹாத், உறவுகளை சேர்ந்து நடத்தல் போன்ற வணக்கங்களுக்காக நீண்ட பயணம் செய்தல். இரண்டாவதாக, தலைமுடியை வாராமல், பரட்டைத் தலையுடன், நிறம் மாறிய நிலையில், தனது ஆடைகளும் புழுதிபட்ட பட்டநிலையில் இருத்தல். எனவே இவர் ஒரு நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார். மூன்றாவதாக, தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்தி, துஆக் கேட்டல். நான்காவதாக, அல்லாஹ்வின் பெயர்களை முன்னிறுத்தி, யா ரப்பு! யா ரப்பு! என மீண்டும் மீண்டும் கேட்டல். துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான இவ்வாறான காரணங்கள் இருந்தும், அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. ஏனெனில், அவனது உணவும், பானமும், ஆடையும் ஹராமாகும். அவன் ஹராமாலேயே ஊட்டப்பட்டுள்ளான். இவ்வாறான தன்மை உடையவர்களுக்கு பதிலளிக்கப்படுவதென்பது மிகத் தூரமானது. அவனுக்கு எவ்வாறு பதிலளிக்கப்படும்?
அபுல் அப்பாஸ் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒருநாள் நான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் : சிறுவனே! நான் சில அறிவுரைகளைக் கற்றுத் தருகின்றேன் என்று கூறி பின்வருமாறு அறிவுரை கூறினார்கள் : அல்லாஹ்வை நீ மனதிற் கொள். அவன் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வை மனதிற் கொள். நீ அவனை உன் முன் காண்பாய். நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுனால் அல்லாஹ்விடமே உதவிதேடு. இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும், அல்லாஹ் ஏற்கனவே உனக்கு எழுதி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் செய்திட முடியாது. இன்னும் இந்த உலகமே ஒன்று திரண்டு வந்து உனக்கு தீங்கிழைத்திட முயன்றாலும், அது அல்லாஹ் உனக்கு ஏற்கனவே எழுதிவைத்துள்ளதை தவிர வேறு எந்த தீங்கையையும் ஏற்படுத்திட முடியாது. விதிகள் எழுதப்பட்ட எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. விதிகள் எழுதப்பட்ட ஏடுகளும் காய்ந்து விட்டன". திர்மிதி தவிர்ந்த பிறிதொரு நபிமொழித் தொகுப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது : அல்லாஹ்வை மனதிற் கொள்ளுங்கள். நீங்கள் அவனை உங்கள் முன் காண்பீர்கள். நீங்கள் செழிப்பாக இருக்கும் போது அல்லாஹ்வை நினையுங்கள். அவன் நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது உங்களை நினைவு கூர்வான். அறிந்து கொள்வீர்களாக : உங்களுக்குக் கிட்டாமல் சென்றவை உங்கள் மீது உங்களுக்கு விதிக்கப் படவில்லை. உங்களுக்குக் கிட்டியவைகள் உங்களைக் கடந்து சென்று விடும்படி விதிக்கப் படவில்லை. பொறுமையுடன் வெற்றி வரும். துன்பத்துடன்தான் விடிவு கிடைக்கும் கஷ்டத்துடன் தான் இலகு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சிறுவராக இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் சவாரி செய்கையில் நான் உமக்கு பயனுள்ள சில விடயங்களை கற்றுத் தரப்போகிறேன், அல்லாஹ் அதனை பயனுள்ளதாக ஆக்கித்தர வேண்டும் என அவரிடம் கூறினார். அல்லாஹ்வின் ஏவல்களைப் பேணி விலக்கள்களை தவிரந்து நடப்பதன் மூலம் அல்லாஹ்வை பேணி நடப்பீராக. அதாவது உன்னை அவன் வழிபாட்டிலும் வணக்கங்களிலும் காண வேண்டும். பாவத்திலும் குற்றங்களிலும் காணக்கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் உம்மை அல்லாஹ் இம்மை, மறுமை பேராபத்திலிருந்து பாதுகாப்பது உமக்கு அல்லாஹ்வால் வழங்கப்படும் கூலியாக அமைந்துவிடும். அதே போல் நீ எங்கு சென்றாலும் உமது காரியங்களில் அவன் ஒத்தாசை வழங்குவான். நீ ஏதாவது ஒன்றை கேட்டால் அல்லாஹ்விடமே கேள், அவன்தான் கேட்போரின் கோரிக்கைகளை ஏற்று பதிலளிப்பவனாக உள்ளான். உமக்கு உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்விடம் மாத்திரமே உதவி கோருவீராக. ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது நன்மை செய்திட முயன்றாலும் உமக்கு அல்லாஹ் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக எந்த நன்மையையும் அவர்களால் செய்திட முடியாது. இன்னும் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு உமக்கு ஏதாவது தீங்கிழைக்க முயன்றாலும் அல்லாஹ் உமக்கு ஏற்கனவே குறித்து வைத்தவற்றைக் கொண்டல்லாமல் எந்தக் தீங்கையும் அவர்களால் செய்திட முடியாது என்ற ஆழமான நம்பிக்கை கொண்வராக இருப்பீராக! இந்த விவகாரத்தை அல்லாஹ் அவனின் அறிவிற்கும், ஞானத்திற்கும் ஏற்ப அவனே தீர்மானித்து எழுதிவிட்டான். ஆகவே அவனால் விதித்து எழுதப்பட்டவற்றை மாற்ற முடியாது. அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அவனது தடைகளைத் தவிர்ப்பதன் மூலமும் எவர் அல்லாஹ்வைப் பாதுகாக்கிறாரோ, அப்போது அல்லாஹ், தன் அடியாரின் முன் இருந்து, அவனுடைய நிலையை அறிந்து உதவி செய்து அவனுக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்கிறான். ஒருவன் செழிப்பான- வசதியாக இருக்கும்- நிலையில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அல்லாஹ் கஷ்டமான காலங்களில் அவனுக்குரிய விடிவையும், கஷ்டத்திலிருந்து வெளியேறுவதற்கான வழியையையும் ஏற்படுத்துவான். ஒவ்வொரு அடியானும் அல்லாஹ் அவனுக்கு விதித்த நன்மை தீமைகளில் திருப்தி அடையட்டும். கஷ்டங்கள் மற்றும் துன்பமான நிலைகலில் , அடியான் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் ஏனென்றால் பொறுமைதான் விடிவுக்கான திறவுகோலாகும் துன்பம் கடுமையாகும்போது, அல்லாஹ்விடமிருந்து விடிவு கிடைக்கும், கஷ்டம் ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தித் தருவான்.
அபூ அம்ரு (இவருது புனைப்பெயர் அபூ அம்ரா என்றும் கூறப்பட்டுள்ளது) ஸுப்யான் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதரிடம் : அல்லாஹ்வின் தூதரே தங்களுக்குப் பிறகு இஸ்லாத்தைப் பற்றி எவரிடமும் கேட்டகத் தேவையில்லாத அளவு எனக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கூறுங்கள் எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்: அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டேன் எனக் கூறி அதிலேயே உறுதியாக நிலைத்திருப்பீராக எனக் கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபித்தோழர் ஸுப்யான் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் கடைப்பிடித்தொழுகுவதற்கு இஸ்லாத்தின் கருத்துக்கள் யாவும் பொதிந்துள்ள, அது குறித்து வேறு யாரிடமும் கேட்பதற்கு அவசியமற்ற ஒரு கூற்றை சொல்லித் தருமாறு வேண்டினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவரிடம் : நான் அல்லாஹ் ஒருவன் என்று ஏற்று , அவனே எனது இரட்சகனும், உண்மையான கடவுளும், எனது படைப்பாளனும், எனது உண்மையான இறைவனுமாவான், அவனுக்கு நிகராக எவனும் இல்லை என்று நம்பிக்கை கொண்டேன் எனக் கூறுவீராக என்று வேண்டினார்கள். பின் அல்லாஹ் விதித்த கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் அல்லாஹ் தடுத்த விடயங்களை தவிர்ந்திருப்பதன் மூலமும் அவனுக்குக் கட்டுப்பட்டு அதிலே நிலைத்திருக்குமாறும் வேண்டினார்கள்.
அப்துல்லா-அல்-அன்ஸாரி (ரழி) அவர்களின் மகன் அபூ அப்துல்லாஹ் ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸலல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் 'நான் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றி, ரமழானில் நோன்பையும் நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்குகின்றேன். இதற்குமேல் அதிகமாக நான் எதுவும் செய்யவில்லையாயின், இந்த நிலையில் நான் சுவர்க்கத்தில் நுழைவேனா? என்று எனக்குக் கூறுங்கள் என வினவினார்'. அதற்கு நபியவர்கள் 'ஆம்!' என்று பதிலளித்தார்கள்' அதற்கு அந்த மனிதர் அல்லாஹ்வின் மீது ஆணையாக இதற்கு மேலதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன் என்று கூறினார்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில்,ஒரு மனிதர் உபரியான தொழுகைளை தவிர்த்து கடமையான ஐவேளைத் தொழுகைகளை மாத்திரம் தொழுபவராகவும், உபரியான நோன்புகளைத் தவிர்த்து கடமையான நோன்புகளை மாத்திரம் நோற்பவராகவும், ஹலாலானவை ஹலால் என ஏற்று அவற்றை செய்தும் ஹராமானவை தவிர்க்கப்படவேண்டியவை என்பதை ஏற்று அவற்றை தவிர்ந்தும் இருப்பாராயின்; அவர் சுவர்க்கம் நுழைவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
முஆது இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் : அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியதும், நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடியதுமான ஒரு செயலை சொல்லித் தாருங்கள் என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள் : 'நீங்கள் மிகவும் பெரிய ஒரு விடயம் குறித்து வினவி இருக்கின்றீர்கள். இருந்தாலும் அல்லாஹ் யாருக்கு அதனை இலகுவாக்கி வைத்திருக்கின்றானோ அது அவர்களுக்கு மிகவும் இலகுவானதாக இருக்கும். நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணைவைக்காதீர். கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிலைநாட்டுங்கள். 'ஸகாத்'த்தை கொடுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள். நீங்கள் இறைஇல்லத்திற்கு புனித பயணம் மேற்கொள்ளுங்கள். (ஹஜ் செய்யுங்கள்;). என்று கூறிவிட்டு, பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு நன்மையின் வாசல்களை காட்டித் தரட்டுமா? என வினவி விட்டுச் சொன்னார்கள் : நோன்பு ஒரு கேடயம், நீர் நெருப்பை அணைப்பது போல் தர்மம் பாவங்களை அழித்தொழிக்கின்றது. அதுபோலவே இரவின் கடைசிப் பகுதியில் ஒருவரின் தொழுகையும் என்று கூறி விட்டு, பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வரும் இறைவசனத்தை ஓதினார்கள் : ''அவர்கள் (இரவில்) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, (எழுந்து அப்புறப்பட்டு) தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும், (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்த அவர்கள் செலவு செய்வார்கள்'. அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக, அவர்களுக்காக(ச் சித்தப்படுத்தி) மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிரக் கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்து கொள்ள முடியாது' (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ளன.)". அல்குர்ஆன் (32:16-17) பின் பெருமானார் (ஸல்) அவர்கள் நான் உங்களுக்கு இந்த விடயத்தில் (மார்க்கத்தின்) தலையாயது பற்றியும் தூண் மற்றும் உச்சம் பற்றியும் சொல்லட்டுமா?' என்றார்கள். 'இறை தூதரவர்களே, ஆம்! சொல்லுங்கள் என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள், இந்த விடயத்தின் தலையாயது இஸ்லாமாகும். அதன் தூண் தொழுகையாகும். அதன் உச்சி ஜிஹாத் ஆகும் என்றார்கள். பிறகு அவர்கள், இவை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவது குறித்து நான் சொல்ல வேண்டாமா? என வினவினார்கள். நான் 'இறைவனின் தூதரவர்களே! ஆமாம் சொல்லுங்கள்'' என்றேன். பெருமானார் (ஸல்) அவர்கள் தங்களது நாவை கரத்தால் பற்றிக் கொண்டு, ''இதைக் கட்டுப்படுத்துங்கள்'' என்று சொன்னார்கள். இறைவனின் தூதரவர்களே! நாம் பேசுவது குறித்து குற்றம் பிடிக்கப்படுவோமா? என்று நான் கேட்டேன். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள், ''உம் தாய் உம்மை இழக்கட்டும்!. மனிதர்கள் தங்கள் நாவால் அறுவடை செய்தவைகளைத் தவிர அவர்களை நரக நெருப்பில் முகங்குப்புற தள்ளக் கூடியது வெறெதுவும் உண்டா?'' என்று கேட்டார்கள். - 1.ஜிஹாத் : ஜிஹாத் என்பதற்கு அறப்போர் அல்லது புனிதப்போர் எனப் பொதுவாக பொருள் கொள்ளப்படுகின்றது. அதற்கு இன்னும் விரிவான பொருள்கள் உண்டு. இதில் இஸ்லாத்தை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளும் அடங்கும். ஆகவே தான் 'ஜிஹாத்' என்ற அரபிச் சொல் அப்படியே இங்கு கையாளப்பட்டிருக்கின்றது. 2. ஸகிலத்க உம்முக. ''தவறான பயனற்ற பேச்சைப் பேச வேண்டாம்!'' என்று கூறுவதற்கு அரபி மொழியில் இச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்முஆத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான் நபியவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். ஒரு நாள் பயணித்துக்கொண்டிருக்கும் போது நான் நபியவர்களை நெருங்கிவிட்டேன். அப்போது நான், 'அல்லாஹ்வுடைய தூதரே! என்னை நரகை விட்டுத் தூரப்படுத்தி, சுவனத்தில் நுழைய வைக்கும் ஒரு அமலை எனக்குக் காட்டித் தாருங்கள்' எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : 'மனித ஆத்மாக்களால் செய்யச் சிரமமான ஒரு அமலைப் பற்றி நீங்கள் கேட்டுள்ளீர்கள். யாருக்கெல்லாம் அல்லாஹ் அதனை இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அவர்களுக்கு அது இலகுவாக இருக்கும். இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுங்கள் : முதலாவது : அல்லாஹ்வுக்கு எந்த இணையும் வைக்காது அவனை மாத்திரமே வணங்க வேண்டும். இரண்டாவது, தினமும் கடமையாக்கப்பட்டுள்ள ஸுபஹ், ளுஹர், அஸ்ர், மஃரிப், இஷா ஆகிய ஐவேளைத் தொழுகைகளையும், நிபந்தனைகள், அடிப்படைகள் மற்றும் கடமைகளைப் பேணித் தொழவேண்டும். மூன்றாவது, கடமையான ஸகாத்தைக் கொடுக்க வேண்டும். ஸகாத் என்பது, ஒரு சொத்து, குறிப்பிட்ட ஒரு அளவை அடையும் போது கடமையாகும் பணம் சார்ந்த ஒரு வணக்கமாகும். தகுதியானவர்களுக்கு அது ஒப்படைக்கப்பட வேண்டும். நான்காவது, நோன்பு நோற்கவேண்டும். அதாவது, வணக்கம் என்ற நோக்கத்துடன், அதிகாலை உதயமாகியதில் இருந்து, சூரியன் மறையும் வரை உணவு, பானம் போன்ற நோன்பை முறிக்கும் அனைத்தையும் தவிர்த்தல். ஐந்தாவது : ஹஜ் செய்தல். அதாவது, மக்காவை நாடிச் சென்று, அல்லாஹ்வை வழிபடும் நோக்கில் ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றல். பின்பு நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் : நன்மையின் வாயில்களை அடையச் செய்யும் காரணிகள் பற்றி உமக்கு அறிவித்துத் தரட்டுமா? அதாவது, அந்தக் கடமைகளுடன், உபரியானவற்றையும் நீ செய்யவேண்டும் : முதலாவது: உபரியான நோன்புகள். இவை இச்சைகளை உடைத்து, பலத்தைக் குறைத்து பாவத்தில் வீழ்வதைத் தடுக்கின்றன. இரண்டாவது : உபரியான தர்மங்கள். இவை செய்யப்பட்ட பாவங்களை அணைத்து, அழித்து, அதன் தடயங்களையும் நீக்கிவிடும். மூன்றாவது : இரவுடைய இறுதி மூன்றில் ஒரு பகுதியில் தஹஜ்ஜுத் தொழுதல். பின்பு நபியவர்கள் "அவர்களுடைய விலாக்கள் படுக்கைகளிலிருந்து விலகிவிடும்; அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும், ஆர்வத்தோடும் (தொழுகை, திக்ர், குர்ஆன் ஓதுதல், துஆக் கேட்டல் போன்றவற்றின் மூலம்) பிரார்த்தனை செய்வார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களின் குளிர்ச்சியை (மறுமை நாளில் அவர்களது கண்களைக் குளிரச் செய்பவை மற்றும் சுவனத்தில் உள்ள இன்பங்களை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்துகொள்ள முடியாது." என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்பு நபியவர்கள், 'மார்க்கத்தின் அடிப்படையையும், அது தாங்கியிருக்கும் தூணையும், அதன் உச்சநிலையையும் கூறட்டுமா?' எனக் கேட்டார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'ஆம்! யா ரஸூலல்லாஹ்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள் : அடிப்படையான அம்சம் இஸ்லாமாகும். அதாவது, ஷஹாதத் கலிமாவாகும். அதன் மூலம் தான் மார்க்கத்தின் அடிப்படையை அவன் அடைந்து கொள்கின்றான். அதன் தூண் தொழுகையாகும். தூண்கள் இல்லாமல் வீடில்லை என்பது போன்று, தொழுகையில்லாமல் இஸ்லாம் இல்லை. யார் தொழுகின்றாரோ, அவரது மார்க்கம் பலமடைந்து, உயர்வடைந்துவிடும். அதன் உயர்நிலை, அதாவது, அது உயர்வடைவது, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை உயரச் செய்வதற்காக சிரமப்பட்டு, மார்க்கத்தின் எதிரிகளோடு போரிட்டு ஜிஹாத் செய்யும் போதே! பின்பு நபியவர்கள், 'முன்சென்ற அனைத்தையும் முறையாகப் பேணிப் பாதுகாக்கும் ஒன்றைக் கூறட்டுமா?' எனக் கேட்டுவிட்டு, தமது நாவைப் பிடித்து, 'இதைத் தடுத்துக்கொள். அவசியமில்லாத எதனையும் பேசிவிடாதே' என்று கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள், 'நாம் பேசுகின்ற அனைத்துக்கும் அல்லாஹ் எம்மை விசாரித்துத் தண்டிப்பானா?' என்று கேட்கின்றார்கள். அதற்கு நபியவர்கள், 'உன் தாய் உன்னை இழக்கட்டும்' (இங்கு அவர்களுக்கெதிராக துஆச் செய்வது நோக்கமல்ல. அறிந்து, விழிப்புடன் இருக்கவேண்டிய ஒரு விடயம் பற்றி விழிப்பூட்டும் போது அரபிகள் பாவிக்கும் ஒரு வார்ததையாகும்.) என்று கூறிவிட்டு, 'அவர்களின் நாவுகளின் அறுவடைகளாகிய, நிராகரிப்பு, ஏசுதல், புறம், கோள், இட்டுக்கட்டல் போன்றவற்றைத் தவிர, வேறு எவைதான் அவர்களை நரகில் முகங்குப்புற எறிகின்றன?' என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது இரட்சகன் நவின்றதாகக் கூறியதை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அறிவிக்கின்றார்கள் : 'நிச்சயமாகஅல்லாஹ் (ஒருவர் செய்யும்) நல்ல செயல்களையும், தீய செயல்களையும் எழுதி, பின்னர் அதனை விளக்கிக் கூறினான். யார் ஒரு நல்ல செயலை செய்ய எத்தனித்து அதனை அவர் செய்யவில்லையோ அதற்கு அல்லாஹ் அவனிடத்தில் முழுமையான ஒரு நன்மையை எழுதுகிறான். ஒருவர் ஒரு நன்மையான காரியத்தை செய்ய முனைந்து அதனை அவர் செய்வாரானால் அவருக்கு பத்து முதல் எழுநூறு நன்மைகள் எழுதப்படுவதுடன் அதனை பன்மடங்குகளாக அதிகப்படுத்திக் கொடுக்கிறான். ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, ஆனால் அதை அவர் செய்யவில்லையென்றால் அல்லாஹ் அதை ஒரு நல்ல செயலாகவே எழுதிக் கொள்கின்றான். ஒருவர் ஒரு தீய செயலைச் செய்ய நினைத்து, அதை செய்தும் முடித்தால் அல்லாஹ் அதை ஒரு தீமையாக மட்டுமே எழுதிக் கொள்கின்றான்".
இமாம்களான புஹாரியும் முஸ்லிமும் தமது நூலில் இதே வாசகத்தில் பதிவு செய்துள்ளார்கள்அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் நிர்ணயித்து அதனை எவ்வாறு எழுத வேண்டும் என்பதை இரு மலக்குகளுக்கும் தெளிவுபடுத்திய விடயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ஹதீஸில் விவரிக்கிறார்கள் : ஆகவே யார் நன்மை செய்ய விரும்பி அதனை செய்வதென உறுதிகொண்டு செய்யாவிட்டாலும் அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அவ்வாறு அதனை செய்துவிட்டால் அவருக்கு பத்திலிருந்து எழுநூறு மடங்காகவும் அதைவிட பல மடங்கு அதிகமாகவும் நன்மைகளை எழுதிவிடுகின்றான். இவ்வாறு நன்மைகள் பல மடங்காக அதிகரிப்பதென்பது அவரின் மனத்தூய்மை மற்றும் பிறருக்கு நன்மை விளைதல் என்ற அடிப்படையிலாகும். யார் தீமையொன்றை செய்ய நாடி அதனை செய்வதற்கு உறுதிகொண்டும் பின்னர் அல்லாஹ்வுக்காக அதனை விட்டு விட்டால் அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. அதனை அவர் வேறு விடயங்களில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டதனால் அந்தத் தீமையை செய்வதற்கான எந்த காரியங்களையும் செய்யாதிருந்தால் அதற்காக அவருக்கு எதுவும் எழுப்படமாட்டாது. அவர் இயலாமையின் காரணமாக அதனை செய்யவதை விட்டுவிட்டால் அவரின் எண்ணத்திற்கான கூலி எழுதப்படுகிறது. அவ்வாறு நினைத்த அந்தத் தீமையை செய்துவிட்டால் அவருக்கு ஒரு தீமை எழுதப்படும்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றதாக அறிவிக்கின்றார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான் : என்னுடைய நெருங்கிய அடியான் ஒருவரை யார் எதிர்த்து பகைமை பாராட்டுகின்றானோ அவனோடு நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனது அடியான் என்னை நெருங்குவதற்கு அவன் மீது நான் கடமையாக்கியவற்றை விட எனக்கு விருப்பத்திற்குரியவை வேறு ஏதுமில்லை. நான் எனது அடியானை விரும்பும் வரை அவன் (நப்லான்) உபரியான வணக்கங்களைக் கொண்டு என்னை நெருங்கிக்கொண்டே இருக்கின்றான். நான் அவனை விரும்பிவிட்டால் நான் அவன் கேட்கும் செவிப்புலனாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பற்றும் கையாகவும், அவன் நடக்கும் காலாகவும் இருப்பேன். அவன் என்னிடம் கேட்டால் அதனை அவனுக்கு நிச்சயமாக கொடுப்பேன். அவன் என்னிடம் அடைக்கலம் தேடினால் அவனை நிச்சயம் பாதுகாப்பேன்.'
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்யார் எனது நேசர்களில் ஒருவரை நோவினை செய்து அவருக்கு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறாரோ அவருக்குக்கு எதிராக எனது பகையை பகிரங்கமாக அறிவிக்கிறேன் என அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹதீஸ் குத்ஸியில் குறிப்பிடுகிறார்கள். 'வலி' என்பவர் இறையச்சமுள்ள முஃமினாவார். ஒரு அடியான் பெற்றிருக்கும் ஈமான் (இறைவிசுவாசம்) மற்றும் தக்வாவிற்கு (இறையச்சம்) ஏற்ப அவனுக்கு அல்லாஹ்வின் நெருக்கமும் நேசமும் கிடைக்கிறது. ஒரு முஸ்லிம் அல்லாஹ் மிகவும் விரும்புகின்ற அவன் கடமையாக்கி கட்டயாப்படுத்திய வணக்கங்களை செய்து, தடைசெய்யப்பட்ட செயல்களை தவிர்த்தல் மூலமேயன்றி அவன் வேறு எதன் மூலமும் அல்லாஹ்வுடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை . எப்போதும் ஒரு முஸ்லிம் பர்ழான கடமைகளுடன் உபரியான (நப்லான) வணக்கங்களை செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நேசத்தை அடைந்து கொள்ளும் வரை தனது இரட்சகனை நெருங்கிக் கொண்டிருக்கிறான். ஆகவே அல்லாஹ் அவனை நேசித்து விட்டால் குறிப்பிடப்பட்ட நான்கு உறுப்புகளினாலும் தான்விரும்பியவற்றை செய்வதற்கு வழிகாட்டுவான். அவரது செவித்திறனை அல்லாஹ் விரும்பியதை மாத்திரம் செவிமடுக்க வழிகாட்டுவான் . அவர் தனது பார்வையை, அல்லாஹ் எதைப் பார்ப்பதை விரும்பி அதன் மூலம் திருப்தி அடைவானோ அவற்றை பார்ப்பதற்கு உதவி செய்வான். அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் விடயங்களை மாத்திரம் தனது கையால் செய்வதற்கு அவனது கைக்கு அல்லாஹ் வழிகாட்டுவான். மேலும் அவனது காலுக்கு வழிகாட்டுவது என்பது அல்லாஹ் விரும்புகின்ற செயலுக்காக மாத்திரம் நடந்து செல்லுதல் மற்றும் நன்மையான காரியத்திற்கு விரைந்து செல்வதைக் குறிக்கும். இவற்றுடன் அந்த அடியான் அல்லாஹ்விடம் எதையாவது கேட்டுப் பிரார்த்தித்தால் அவன் கேட்டவற்றை அவனுக்கு அல்லாஹ் வழங்குவான். இந்த வகையில் துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அடியானாக அவன் இருப்பான். அதே போன்று ஏதாவது ஒரு தீங்கிலிருந்து தன்னை பாதுகாக்குமாறு கோரி பாதுகாப்புத் தேடினால் அவன் பயப்படுகின்ற தீங்குகளை விட்டு அவனை அல்லாஹ் பாதுகாப்பான்.
நபி ஸல்லல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, அவர்கள் கூறுகிறார்கள் : 'நான் கொண்டு வந்தவற்றுக்கு (இறைத்தூதுக்கு) ஏற்ப தனது மனோஇச்சை (கட்டுப்பட்டதாக) மாறும் வரை உங்களில் எவரும் உண்மையாக நம்பிக்கை கொண்டவராக மாட்டார்'
இதனை நாம் 'கிதாபுல் ஹுஜ்ஜா' என்ற நூலில் நம்பகமான அறிவிப்பாளர் தொடரின் மூலம் பதிவு செய்துள்ளோம்ஒருவரது ஈமான் பூரணமாக அமைய வேண்டுமாயின் நபியவர்கள் ஏவிய கட்டளைகளை மனமுவந்து விரும்பி, அவர் தடுத்தவற்றை வெறுத்து, அவர்கள் கொண்டு வந்ததற்கு ஏற்ப தனது நேசத்தை ஆக்கிக்கொள்ளும் வரை ஒரு மனிதன் முழுமையான ஈமான் கொண்டவராக மாட்டார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் விளக்குகிறார்கள்.