





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நாற்பதாவது வயதில் அல்குர்ஆன் இறக்ககப்பட்டது. அவர்கள் மக்காவில் பதின்மூன்று வருடங்கள் தங்கினார்கள். பின்னர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செல்ல அல்லாஹ்வின் உத்தரவு கிடைக்க மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கே பத்து வருடங்கள் வாழ்ந்து பின்னர் அங்கேயே மரணித்தார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வஹி இறக்கப்பட்டு அவர் நபியாக அனுப்பப் படுகையில் அவர்களின் வயது நாற்பதாகும். வஹி இறங்கியதன் பின்பு பதின்மூன்று வருடங்கள் மக்காவில் தங்கினார்கள். பின்பு மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு உத்தரவு கிடைக்க அங்கே சென்று பத்து வருடங்கள் வாழ்ந்தார்கள். பின்பு அவர்கள் தமது அறுபத்து மூன்றாம்(63) வயதில் மரணமானார்கள்.
கதாதா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: எமக்கு அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் . ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! (திருக்குர்ஆன் 25:43 வது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தன்னுடைய முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?' என்று கேட்டார். நபியவர்கள் 'இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.(இதை அறிவித்த) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்கள் 'ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!'' என்றார்கள்
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மறுமை நாளில் காபிரான ஒருவர் முகம்குப்புர நிலையில் எழுப்பப்படுவது எப்படி? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப் பட்டது அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ''இம்மையில் அவனை இரண்டு கால்களால் நடக்கச் செய்த (இறை)வனுக்கு, மறுமைநாளில் அவனை அவனுடைய முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா? அவன் எல்லா விடயங்களிலும் வல்லமைமிக்கோனாக உள்ளான்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்;: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சிறிய தந்தையிடம்; 'அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்று கூறுங்கள்,நான் மறுமை நாளில் உங்களுக்கு சான்று பகர்கின்றவனாக இருப்பேன். அதற்கு அவர் ' மரண பயம் இஸ்லாத்தை ஏற்பதற்கு தூண்டியது என குரைஷிகள் என்னைக் குறைகூறும் நிலை இல்லாதிருந்தால்; நான் நிச்சயமாக உம்மை மகிழ்வித்திருப்பேன் என்று கூறினார்.அல்லாஹ்; பின்வரும் வசனத்தை இறக்கியருளினான் : '(நபியே) நீ விரும்புபவரை நேர்வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது எனினும்; அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். (ஸுறத்துல் கஸஸ்: 56) என்ற வசனத்தை இறக்கியருளினான்
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது சிறிய தந்தை மரணத் தருவாயில் இருக்கும் நிலையில் அவரிடம், கலிமாவை மொழியுமாறு வேண்டிக்கொண்டார்,அவ்வாறு செய்தால் அவருக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்வதோடு அவர் முஸ்லிம் என சாட்சி கூறுவதாகவும் குறிப்பிட்டார்கள். மரண பயம் மற்றும் இயலாமை காரணமாக அவர் இஸ்லாத்தை தழுவினார் என குறைஷியர் கண்டித்துவிடுவர் என்ற பயத்தினால் அவர் ஷஹாதா கலிமாவை மொழிய மறுத்துவிட்டார். மேற்குறிப்பிட்ட விடயம் மாத்திரம் இல்லாதுவி;;ட்டால் ஷஹாதாக் கலிமாவைக் கூறி நபியின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன்; நபியின் எதிர்பார்ப்பை அவர் விரும்பியது போல் தான் நிறைவேற்றியிருப்பார் என்று கூறினார்.உடனே அல்லாஹ் தனது நபிக்கு 'இஸ்லாத்தை ஏற்கச்செய்வதற்கான வாய்ப்பை உம்மால் வழங்க முடியாது அல்லாஹ்வே நேர்வழியை ஏற்று நடப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறான்.' என்ற கருத்தை பிரதிபளிக்கும் அல்குர்ஆன் வசனத்தை இறக்கினான். இந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப்பொருத்தவரை மக்களுக்கு நேர்வழியை தெளிவுபடுத்தி அதன் பால் அழைப்புவிடுப்பது தவிர வேறு பொறுப்பு கிடையாது.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள் : (ஒரு முறை) நபி(ஸல்லல்லலஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரைப் பற்றிய செய்தியை அறிந்து கொண்டு தங்களிடம் வருகிறேன். என்று சொல்லிவிட்டு ஸாபித் இப்னு கைஸ்(ரழி) அவர்களிடம் சென்றார். ஸாபித் இப்னு கைஸ்(ரழி) தம் வீட்டில் தலையைக் (கவலையுடன்) கவிழ்த்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டார். 'உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று அவரிடம் கேட்டதற்கு அவர், '(பெரும்) தீங்கு ஒன்று நேர்ந்துவிட்டது. நான் நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குரலை விட என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். எனவே, என் நற்செயல்கள் வீணாகி விட்டன. நான் நரகவாசிகளில் ஒருவனாகி விட்டேன்' என்று பதிலளித்தார். உடனே, அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் இப்படியெல்லாம் கூறினார் என்று தெரிவித்தார். அடுத்த முறை அந்த மனிதர் (பின்வரும்) மாபெரும் நற்செய்தியுடன் திரும்பிச் சென்றார். (அதாவது அம்மனிதரிடம்) நபி(ஸல்) அவர்கள் 'நீ ஸாபித் இப்னு கைஸிடம் சென்று, 'நீங்கள் நரகவாசிகளில் ஒருவரல்லர்; மாறாக, சொர்க்க வாசிகளில் ஒருவரே' என்று சொல் என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸாபித் இப்னு கைஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை சபையில் காணவில்லை அதனால் அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நான் அவர் பற்றிய செய்தியையும் அவர் சபைக்கு சமூகம் தராததிற்கான காரணத்தையும் அறிந்து வருகிறேன் என்று கூறிவிட்டு ஸாபித் இ்னு கைஸிடம் சென்றார் அவரே, தலையை கவிழ்த்த நிலையில் சோகத்துடன் அவரின் வீட்டில் இருப்பதைக் கண்டார். பின்னர் அவரிடம் உமக்கு என்ன நேர்ந்தது எனக் கேட்க அவருக்கு பெரும் நாசம் -தீங்கு – ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதாவது தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சப்தத்திற்கு அதிகமாக தனது குரலை உயர்த்திப் பேசுகிறேன்;,அவ்வாறு குரலை உயர்த்திப்பேசுவோரின் அமல்கள் அழிந்து போவதாக அல்லாஹ் எச்சரித்துள்ளான் ஆகையால் எனது அமல்கள் வீணாகி நான் நரகவாதிகளுள் ஒருவனாக மாறிவிட்டேன் என்று அவரிடம் கூறினார் அதன் காரணமாகவே இவ்வாறு கவலை தோய்ந்த நிலையில் உளளேன் என்றார். உடனே அந்த மனிதர் நபியவ்களிடம் வந்து அவர் கூறியதைத் தெரிவித்தார். அதற்கு நபியர்கள் ஸாபித் அவர்களிடம் உடன் திரும்பிச் சென்று அவர் நரகவாதியல்ல என நற்செய்தியை அவரிடம் கூறிவிடு எனப் பணித்தார்கள். காரணம் அவரின் சப்தம் அதிகமாக இருப்பது அவரின் இயற்கையில் அமைந்த விடயம். மேலும் அவரே அல்லாஹ்வின் தூதர் அவர்களினதும், அன்ஸரிகளினதும் பேச்சாளராகத் திகழ்ந்தார்கள்.
தான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் கேட்டதாக அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் (முஅத்தின்) அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்தொழுகைக்காக முஅத்தின் அதான் சொல்லக் கேட்டால் 'ஹய்யஅலஸ்ஸலாத்'; ஹய்யஅலலல் பலாஹ்' தவிர்ந்த வாசகங்களில் அவரைத் தொடர்ந்து அவர் கூறுவதைப் போன்று பதில் கூறுமாறும், மேற்படி இரு வாசகங்களை கூறுகையில் 'லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ்' என்று பதில் கூறுமாறும், அதான் கூறி முடிந்ததைத் தொடர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுமாறும் இந்த ஹதீஸில் வழிகாட்டுகிறார்கள். யார் நபியவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அதன் காரணமாக அவரின் மீது அல்லாஹ் பத்து தடவை ஸலவாத் கூறுகிறான். அல்லாஹ் அடியார் மீது ஸலவாத் கூறுதல் என்பது மலக்குகளிடத்தில் அந்த அடியானை அல்லாஹ் புகழ்வதைக் குறிக்கும். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வஸீலா எனும் சுவர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியை வழங்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு கட்டளையிட்டார்கள். இவ்வுயர் பதவியானது உலகில் உள்ள அனைத்து அடியார்களில் ஒரே ஒரு அடியாருக்குத் தவிர வேறு யாருக்கும் சாத்தியமாகாது. அந்த அடியான் நானாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்றேன். இவ்வாறு நபியவர்கள் கூறியது அவர்களின் பணிவினாலாகும். ஏனெனில் அடியார்களில் இவ்வுயரிய அந்தஸ்தை பெருவதற்கு அவ்கள்; ஒருவரே பொருத்தமானவர்கள்; காரணம், அவர்களே அடியார்களில் மிகவும் சிறப்புக்குரியர்கள். இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் நபியவர்களுக்காக வஸீலாவை அல்லாஹ்விடம் கேட்கிறாறோ அவருக்கு நபியவர்களின் ஷபாஅத் -பரிந்துரை கிடைக்கும் எனவும் தெளிவு படுத்துகிறார்கள்.
உஸ்மான் இப்னு அபில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஷைத்தான் எனக்கும், எனது தொழுகைக்குமிடையில் குறுக்கிட்டு எனது ஓதலை குழப்புகிறான் என்று கூறிய போது, நபியவர்கள்; "அவன்தான் ஹின்ஸப் எனப்படும் ஷைத்தான், அவன் குழப்புவதை நீர் உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிவிட்டு, உமது இடது பக்கத்தில் மூன்று விடுத்தம் துப்பிவிடு' என்று கூற, நான் அவ்வாறே செய்தேன், அல்லாஹ் அவனை விட்டும் என்னை காப்பாற்றி விட்டான் என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்உஸ்மான் இப்னு அபில்-ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே, ஷைத்தான் எனக்கும் எனது தொழுகைக்கும் இடையே குறுக்காக நின்று அதில் பக்தியுடன் தொழுவதை தடுக்கிறான் . இதனால் அல்குர்ஆன் ஓதுவது குழம்புகிறது. அதில் சந்தேகமும் ஏற்படுகிறது' என்று கூறினார் அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவன்தான் கின்ஸப் என்று அறியப்பட்ட ஷைத்தான். நீங்கள் கூறியவாறு இவ்வாறான ஊசலாட்டங்களை நீங்கள் உணர்ந்தால், அவனிடமிருந்து அல்லாஹ் விடம் பாதுகாப்புத் தேடுங்கள், உங்கள் இடது புறத்தில் மூன்று முறை துப்பவும் என்று கூறினார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று செய்தேன். அல்லாஹ் என்னை விட்டும் ஷைத்தானை அகற்றி விட்டான் என்று உஸ்மான் அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டதாக அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'யார் அல்லாஹ்வைத் தன் இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது (ஸல்) அவர்களைத் தன் தூதராகவும் கொண்டு திருப்தியாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர் ஈமானின் சுவையை சுவைத்துவிட்டார்.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு உண்மையான விசுவாசி தனது ஈமானில் உண்மையாக இருந்து அதில் மனநிம்மதியைக் கண்டால், அந்த ஈமானின் விளைவாக உள்ளம் விரிவடைந்து ஆறுதல், மகிழ்ச்சி மற்றும் அல்லாஹ்வை நெருங்குவதால் கிடைக்கும் இன்பம் ஆகியவற்றை தனது இதயத்தில் அனுபவிக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த நிலையை அடைய, அவர் மூன்று விடயங்களை மனமுவந்து ஏற்று திருப்திகொள்ளவேணடும்;. அவை வருமாறு: முதலாவது: அல்லாஹ்வை தனது இறைவனாகவும் இரட்சகனாகவும் ஏற்றுக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். அல்லாஹ் தனது இறைவனாக இருப்பதால், அவன் வழங்கும் வாழ்வாதாரங்கள் மற்றும் அவன் விதித்துள்ள பல்வேறு நிலைகளில் திருப்தி அடைய வேண்டும். இவற்றில் எதற்கும் அவன் இதயத்தில் எந்த முரண்பாடும் இருக்கக்கூடாது. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த இறைவனையும் அவன் தேடக்கூடாது. இரண்டாவது: இஸ்லாத்தை தனது மார்க்கமாக கொண்டு திருப்தி அடைய வேண்டும். இஸ்லாம் உள்ளடக்கியுள்ள பொறுப்புக்கள் மற்றும் கடமைகளில் அவன் திருப்தி அடைய வேண்டும். இஸ்லாத்தின் வழிகாட்டலைத் தவிர வேறு எந்த வழிகாட்டலையும் ஏற்று நடப்பவராக அவர் இருக்கக்கூடாது. மூன்றாவது: நபிகள் நாயகம் (ﷺ) அவர்களைத் தனது தூதராகக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நபி (ﷺ) அவர்களிடமிருந்து வந்த எந்த விஷயத்திலும் அவருக்கு எந்த சந்தேகமோ, தடுமாற்றமோ ஏற்படாத அளவுக்கு அவர் மன நிறைவுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அத்துடன் வாழ்க்கையில் நபியவர்களின் வழிமுறை மற்றும் முன்மாதிரிக்கு ஏற்ப செல்லும் பாதையை மட்டுமே பின்பற்றி செல்ல வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான்கு பண்புகள் உள்ளன. அவை எவரிடத்தில் உள்ளதோ அவர்; மிகத்தெளிவான நயவஞ்கராவார். இந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று ஒருவரிடம் காணப்படுமாயின் அவர் அதனை விட்டும் வரையில் அவரிடம் நயவஞ்சகத்தின் பண்புகளில் ஒன்று உள்ளது. அப்பண்புகளாவன. பேசினால் பொய்யுரைப்பான். ஒப்பந்தம் செய்தால் அதில் மோசடி செய்வான். வாக்களித்தால் மாறுசெய்வான். வழக்காடினால் -விவாதம் செய்தால்- நேர்மை தவறி நடந்து கொள்வான்”.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நான்கு பண்புகள் குறித்து எச்சரித்துள்ளார்கள். அவை ஒரு முஸ்லிமிடம் காணப்படின் அப்பண்புகளின் காரணமாக நயவஞ்சகர்களுக்கு மிகவும் ஒப்பானவராக இருப்பார். பெரும்பாலும் இப்பண்புகள் யாரிடம் அதிகம் காணப்படுகிறதோ அவரின் நிலை நயவஞ்சகனை ஒத்த நிலையாகும். ஆனால் இப்பண்புகள் யாரிடம் அரிதாக காணப்படுகிறதோ அவர் இவ்வட்டத்தினுள் வரமாட்டார். அப்பண்புகளாவன: முதலாவது: பேசினால் வலிந்து பொய் பேசுவான் அவனின் பேச்சில் உண்மை இருக்காது. இரண்டாவது: ஒப்பந்தம் ஒன்றை செய்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மோசடி செய்வான். மூன்றாவது: வாக்களித்தால் அதனை நிறைவேற்றாது அதற்கு மாறுசெய்வான். ஒருவருடன் சண்டை சச்சரிவில் ஈடுபட்டால் கடும் பகையை காட்டுவதோடு நேர்மை தவறி நடப்பதோடு, குறித்த நபருக்கு மறுப்புத் தெரிவிப்பதிலும் அவரின் கூற்றை பொய்யாக்குவதிலும் சூழ்ச்சி செய்து பொய்யையும் புரட்டையும் பேசுவான். நயவஞ்சகம் என்பது உள்ளிருப்பதற்கு மாற்றமாக வெளியே ஒன்றை செய்தல். இக்கருத்து இப்பண்புகளைப் பெற்றோரிடத்தில் காணப்படுகிறது. அவர் தன்னிடம் பேசுபவர், வாக்குறுதி அளிப்பவர், நம்பிக்கை வைப்பவர், வாதிடுபவர் மற்றும் உடன்படிக்கை செய்பவர்களிடம் நயவஞ்சகமாக நடந்து கொள்கிறார். மாறாக, நம்பிக்கையின்மையை மறைத்து இஸ்லாத்தை வெளிப்படுத்தும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறும் நயவஞ்சகர் அல்ல. இந்த குணாதிசயங்களில் ஒன்றைக் கொண்டவர் அதைக் கைவிடும் வரை நயவஞ்சகத்தின் பண்புகளைக் கொண்டுள்ளார்.
நபியவர்கள் கூறியதாக உம்மு தர்தா ரழி அன்ஹா அறிவிக்கிறார்கள் முஸ்லிமான ஒருவர் தன் சகோதரருக்காக மறைவாக கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக்;கொள்ளப்படும்.பிரார்த்திக்கும் அந்த மனிதரின் தலையருகே நியமிக்கப்பட்ட ஒரு வானவர் இருப்பார்.பிரார்த்தனை செய்யும் அம்மனிதர் தனது சகோதரருக்காக நல்லதை வேண்டும் போதெல்லாம் நியமிக்கப்பட்ட அவ்வானவர் ஆமீன் எனக் கூறி "உனக்கும் இது போலவே கிடைக்கட்டும்" என்று கூறுவார்
இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்காக அவர் அறியாத விதத்தில் கேட்டும் பிரார்த்தனை அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.அவர் தனது சகோதரருக்காக இறைஞ்சும் போது வானவர்களில் ஒருவர் அவரின் தலையருகே இருந்து கொண்டு ஆமீன் கூறி "உனது சகோதரருக்கு கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்த அந்த நன்மை உனக்கும் கிடைக்கட்டுமாக" என கூறுகிறார்.