





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அனஸ்பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் மற்றும் உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களைப் பார்த்து, “நபிமார்களையும் இறைத்தூதர்களையும் தவிர ஆரம்பமாகவும் இறுதியாகவும் வந்த அனைத்து வயதானவர்களுக்கும் சொர்க்கத்தில் இவர்களே தலைவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்கள்.
இதனை இமாம் திர்மிதி பதிவு செய்துள்ளார்இங்கு நபியவர்கள், அபூபக்கர் அஸ்ஸித்தீக், உமர் அல்பாரூக் ஆகிய இருவரும் நபிமார்களுக்குப் பின்னர் மிகச் சிறந்த மனிதர்கள் என்றும் சுவனம் நுழைந்தவர்களில் நபிமார்களுக்கும் இறைத் தூதர்களுக்கும் பின்னர் மிகச் சிறந்தவர்கள் என்றும் அறியத் தருகின்றார்கள்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்: ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோர் சுவனத்து வாலிபர்களின் தலைவர்களாகும்.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுஇங்கு நபியவர்கள் தனது மகள் பாத்திமா மற்றும் அலீ பின் அபீ தாலிப் அவர்களது பிள்ளைகளாகிய ஹஸன், ஹுஸைன் ஆகிய இரு பேரப்பிள்ளைகளும், வாலிபர்களாக மரணித்து அல்லாஹ்வின் கிருபையினால் சுவனம் நுழைந்த அனைவருக்கும், அல்லது நபிமார்களையும் நேர்வழி நடந்த கலீபாக்களையும் தவிர்ந்து அனைத்து சுவனபதி வாலிபர்களுக்கும் தலைவர்களாக இருப்பார்கள் என அறிவிக்கின்றார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதைக் தான் கேட்டதாக தமீமுத்தாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இந்த மார்க்கம் இரவு பகல் சென்றடையும் இடமெல்லாம் சென்றடையும்;. அல்லாஹ் இந்த மார்க்கத்தை நகரத்தில் மற்றும் கிராமத்தில் உள்ள எந்த வீட்டையும் சென்றடையாது விட்டுவிட மாட்டான்.ஆகவே இந்த மார்க்த்தை ஏற்றுக்கொன்றவனை கௌரவப்படுத்துவான் அல்லது இதனை ஏற்றுக்கொள்ளாதவனை இழிவுபடுத்துவான் . அதாவது இஸ்லாத்தின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவனை கண்ணியப்படுத்துவான், இஸ்லாத்தை நிராகரித்தவனை இழிவு படுத்துவான். இது குறித்து தமீமுத்தாரி அவர்கள் குறிப்பிடுகையில் நான் இதனை எனது குடும்பத்தவரில் கண்டேன். யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனரோ அவர்களுக்கு பாக்கியமும் கௌரவமும் கண்ணியமும் கிடைத்தது. யார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு அவமானமும் இழிவும் ஏற்பட்டது. அவர்கள் ஜிஸ்யா செலுத்துவோராக இருந்தனர்.'
இமாம் அஹ்மத் இதனைப் பதிவு செய்திருக்கிறார்இந்த மார்க்கம் உலகின் எல்லாப்பகுதியை உள்ளடக்கி பரவும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதாவது இரவும் பகலும் அடையும் இடமெல்லாம் இம்மார்க்கம் சென்றடையும். அல்லாஹ் இந்த மார்க்கத்தை நகரங்கள்,கிராமங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் பாலை நிலங்களில் உள்ள எல்லா வீடுகளிலும் நிச்சயம் நுழைவிப்பான். ஆகவே யார் இந்த மார்க்கத்தை ஏற்று விசுவாசம் கொள்கிறாறோ அவர் இஸ்லாத்தின் கண்ணியத்தால் கண்ணியமிக்கவராய் இருப்பார். யார் இந்த மார்க்கத்தை மறுத்து விசுவாசம் கொள்ளாதவராக இருப்பாரோ அவர் இழிவும் அவமானமும் பெற்றவராக விளங்குவார். தொடர்ந்தும் நபித்தோழரான தமீமுத் தாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்கள் அறிவித்த இந்த செய்தியை தனது குடும்பத்தில் நேரில் கண்டதாக தெரிவிக்கிறார்கள். அதாவது யார் இஸ்லாத்தை ஏற்றுகொண்டாரோ அவருக்கு நற்பாக்கியமும் கண்ணியமும் கௌரவமும் கிடைத்தது. யார் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவருக்கு இழிவும் அவமானமும் கிடைத்தது மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு வரி செலுத்துபவராகவும் இருந்தார்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறரார்கள் : அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் ஜாஹிலிய்யாக்காலத்தில் -அறியாமைக்காலத்தில்- இனபந்துக்களை பேணிநடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தார் இவை அவருக்கு மறுமையில் பயன் அளிக்குமா? என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள் :அவை அவருக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது ஏனெனில் அவர் 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக என்று ஒரு நாளாவாது அவர் கூறவில்லை. என்று பதிலளித்தார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த ஹதீஸில் நபியவர்கள் இஸ்லாத்திற்கு முன் இருந்த குறைஷித்தலைவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஜுத்ஆன் பற்றி குறிப்பிடுகிறார்கள். அவரிடம், உறவுகளை சேர்ந்து நடந்து, உபகாரம் புரிதல் மற்றும் ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற இஸ்லாம் செய்ய வேண்டும் என வலியுறுத்திக் குறிப்பிட்டிருக்கும் சிறப்பான விடயங்களில் சில காணப்பட்டன. என்றாலும் அவைகள் ஒருபோதும் மறுமையில் அவருக்கு எவ்விதப்பயனையும் தராது. அவர் அல்லாஹ்வை நிராகரித்தமையும், 'எனது இரட்சகனே எனக்கு எனது குற்றத்தை மறுமை நாளில் மன்னித்தருள்வாயாக' என்று ஒரு நாளாவாது அவர் கூறாது இருந்தமையும் இதற்கான காரணங்களாகும்.
ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் '{ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று இறைத்தூதர்(ஸல்லலல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்மக்காவிற்கு அருகில் அமைந்துள்ள கிராமமான ஹுதைபிய்யாவில் -அன்றிரவு பெய்த மழையைத் தொடர்ந்து- நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸுப்ஹ் தொழுகையை நடாத்தினார்கள். ஸலாம் கொடுத்து தொழுகையை முடித்துக்கொண்ட பின் மக்களை நோக்கி தனது முகத்தைத் திருப்பி அவர்களிடம் 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று பதிலளித்தனர். அதற்கு நபியவர்கள்; மழைபொழியும் போது மக்கள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டோர் அல்லாஹ்வை நிராகரித்தோர் என இரு பிரிவுகளாக பிரிந்துவிடுகின்றனர் என அவர்களுக்கு தெளிவு படுத்தினார்கள் அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் எமக்கு மழை பொழிந்தது எனக் கூறி மழைபொழிதல் எனும் விவகாரத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறியவர் இந்தபிரபஞ்சத்தை நிர்வகிக்கும் படைப்பாளனான அல்லாஹ்வை விசுவாசித்து, நட்சத்திரங்களை மறுத்தவராவார். இந்த,இந்த நட்சத்திரங்களினால்; எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவராவார்.மழைபொழிவதை கோல்கள் -நட்சத்திரங்களின் செயல் என இணைத்துக் கூறுவது சிறியவகை இணைவைப்பாகும். அல்லாஹ் மழைபொழிவிப்பதற்கு ஷரிஆரீதியான மற்றும் விதியின் அடிப்படையிலான இதற்கான எந்த காரணங்களையும் நட்சத்திரங்களுக்கு ஏற்படுத்தவில்லை. யார் மழை பொழிதல் மற்றும் பூமியில் நிகழும் பிற நிகழ்வுக்கு கோள்களின் தோற்றம் மற்றும் மறைவு போன்ற இயக்கங்களை காரணம் காட்டி, அவைதான் இவை நிகழ்வதற்கான உண்மையான காரணி என நம்புகிறானோ அவன் மிகப்பெரும் காபிராக இறைநிராகரிப்பாளனாக ஆகிவிடுகிறான்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)' என்று கேட்டனர். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'தங்களது உள்ளத்தில் எழுகின்ற, அருவருக்கத்தக்கதும்,பிறர் வெறுத்து புறக்கணிக்கத்தக்கதும், அவற்றைப் பேசுவது என்பதே மிகப்பெரிய பாவம் என்ற நிலையில் இருக்கும் விடயங்கள் சம்பந்தமாக விசாரித்தார்கள். அதற்கு நபியவர்கள் நீங்கள் உங்கள் உள்ளத்தில் காணும் இவ்வாறான எண்ணங்கள் ஈமானின் அப்பளுக்கற்ற தன்மைக்கு ஆதாரமாகவும். ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் எற்படுத்துகின்றவற்றை தடுக்கவும், அவற்றை பேசுவதை நீங்கள் வெறுக்கவும், அவற்றை மிகப்பெரியதொரு விடயமாக கருதவும் உங்களைத் தூண்டுகின்ற ஆழமான ஈமானிய உறுதியின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளதுடன் ஷைத்தான் உங்களுடைய உள்ளங்களை ஆட்கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது. மாறாக ஷைத்தான் ஆட்கொண்ட உள்ளத்தைப் பொருத்தவரை இந்நிலை காணப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, -ஒருவிடயத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி- எம்மில் ஒருவருக்கு இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகின்றன - அவர் அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருக்க விரும்புகிறார்', அப்போது நபியவர்கள் 'அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்,ஷைத்தானின் சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் என்று கூறினார்கள்.
இமாம்களான அபூதாவூத், குப்ரா எனும் நூலில் நஸாஈ ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து கூறினார்: 'அல்லாஹ்வின் தூதரே, - எம்மில் ஒருவருக்கு உள்ளத்தில் ஒரு வகையான எண்ணங்கள் ஏற்படுகின்றன.அது பற்றி பேசுவது மிகப்பாரதூரமானது.; அது பற்றி பேசுவதை விட நெருப்புக் கனலாக இருப்பதே மேல் என்று கூறுகிறார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு தடவைகள் தக்பீர் கூறி ஷைத்தானின் திட்டத்தை-சூழ்ச்சியை வெறும் மனஊசலாட்டமாக மாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் எனக் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு முஃமின் மீது ஷைத்தான் ஏற்படுத்தும் ஊசலாட்டத்தின் போது வரும் கேள்விகளுக்கு ஆரோக்கியமான ஒரு தீர்வை குறிப்பிடுகிறார்கள். ஷைத்தான் இதனைப் படைத்தது யார்? இதனைப் படைத்தது யார்? வானத்தைப் படைத்தது யார்? பூமியைப்படைத்தது யார் எனக் கேட்பான். அதற்கு முஃமின் மார்க்கம் மற்றும் இயல்பூக்கம் மற்றும் பகுத்தறிவு அடிப்படையில் அல்லாஹ் எனப் பதிலளிப்பான். என்றாலும் ஷைத்தான் ஊசலாட்டத்தில் இந்த எல்லையில் நிற்கமாட்டான் மாறாக இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்து சென்று உனது இரட்சகனைப் படைத்தவன் யார்? எனக் கேட்டுவிடுவான். அவ்வேளை ஒரு முஃமின் இந்த ஊசலாட்டத்திலிருந்து தடுத்துக் கொள்ள மூன்று விடயங்களை செய்ய வேண்டும். அல்லாஹ்வை ஈமான் கொண்டேன் (ஆமன்து பில்லாஹ்) எனக் கூறுதல். ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுதல்( அஊது பில்லாஹி மினஷ்ஷைதானிர் ரஜீம்) எனக் கூறுதல் ஊசலாட்டத்தை தொடராது நிறுத்திக் கொள்ளுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல ம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் ஒரு முஃமினுக்கு அவன் செய்த எந்த நற்செயலிலும் அநீதி இழைக்க மாட்டான்;.(கூலி வழங்காது விட்டுவிடமாட்டான்) அதன் காரணமாக அவனுக்குரிய கூலி இவ்வுலகில் வழங்கப்பட்டு, மறுமையிலும்; அதற்கான வெகுமதி கிடைக்கும். காஃபிரைப் பொறுத்தவரை, அவன் இந்த உலகில் அல்லாஹ்வுக்காக செய்த நற்செயல்களுக்கான வெகுமதி அவனுக்கு வழங்கப்படும், அவன் மறுமையை அடையும் போது, அவனுக்கு வெகுமதி அளிக்கக்கூடிய எந்த நன்மையும் இருக்காது.'
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் முஃமின்களுக்கு அல்லாஹ் வழங்கும் அளப்பரிய அருள் குறித்தும், காபிர்களுடனான அவனின் நீதி குறித்தும் விவரிக்கிறார்கள். முஃமினைப் பொறுத்தவரை அவன் செய்த நற்செயலுக்கான கூலியில் எதுவும் குறைக்கப்படமாட்டாது. மாறாக அவனின் வணக்கவழிபாட்டிற்காக அவனுக்கு உலகத்தில் நன்மை வழங்கப்படுவதுடன்,மறுமையில் அவனுக்குரியவை சேமிக்கப்படும். சிலபோது அவனுக்குரிய கூலிகள் அனைத்தும் மறுமையில் வழங்கப்படுவதற்காக பாதுகாக்கப்படும். காபிரைப் பொருத்தவரை இவ்வுலகில் அவன் செய்த புன்னியங்களுக்கான நன்மைகளை கூலியாக வழங்கிடுவான்.ஆனால் அவன் மறுமைக்காக சென்று விட்டால் அங்கே கூலியாக வழங்கப்பட எந்த வெகுமதியும் இருக்காது.இம்மை மறுமையில் நற்செயல்கள் பயனளிக்க குறித்த நபர் கட்டாயம் ஈமான் கொண்டிருத்தல் அவசியமாகும்.