





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் தனது சகோதரருக்கு வெட்கம் குறித்து உபதேசம் செய்து கொண்டிருப்பதை செவிமடுத்தார்கள், அப்போது நபியவர்கள் ' வெட்கம் ஈமானைச் சார்ந்தது என்று கூறினார்கள்.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு மனிதர் தனது சகோதரனுக்கு அதிகம் வெட்கப்படுவதை விட்விடுமாறு உபதேசிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் செவி மடுத்தார்கள், அதற்கு நபியவர்கள் வெட்கம் ஈமானைச் சார்ந்தது அது நன்மையை மாத்திரமே கொண்டுவரும் என அவருக்கு தெளிவுபடுத்தினார்கள். வெட்கம் ஒரு இயல்பண்பாகும், அது நல்லதைச் செய்யவும், அசிங்கமான அருவருக்கத்தக்க விடயங்களை தவிர்ந்து கொள்ளவும் மனிதனைத் தூண்டுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்தாக அந் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : பிரார்த்தனையே (துஆவே) வணக்கமாகும்'. என்று கூறிவிட்டு ஸுறா காஃபிரின் 60வது வசனத்தை ஓதினார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன்.எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக் கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".
இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்பிரார்த்தனை வணக்கமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அந்தப் பிரார்த்தனை அனைத்தும் அல்லாஹ்வுக்கென்று தூய்மையுடனும் இதயச்சத்துடனும் இருத்தல் வேண்டும். துஆவானது தேவையை முன்னிருத்திக் கேட்பதாகவோ, அல்லது கோரிக்கையொன்றை முன்னிருத்திக்கேட்பதாகவோ இருக்கலாம். அதாவது அல்லாஹ்விடம் அவனுக்கு பயனுள்ளதை தருமாறும், இம்மையிலும் மறுமையில் அவனுக்கு தீங்காக அமைபவற்றை விட்டும் பாதுகாக்குமாறும் வேண்டுவதாகும். அல்லது வணக்கம் எனும் பிரார்த்தனை அதாவது அல்லாஹ் விரும்பி திருப்தியடையக்கூடிய வெளிப்படையானதும் மறைமுகமானதுமான வார்த்தைகள் செயல்கள் மற்றும் உள்ளத்தால் அல்லது உடலால் அல்லது பணத்தால் செய்யக் கூடிய அனைத்தையும் குறிக்கும். பின்னர் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இதற்கான ஆதாரமான பின்வரும் அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக குறிப்பட்டார்கள் : ''என்னை அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிப்பேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் இழிவடைந்தவர்களாக நரகத்தினுள் நுழைவார்கள்".
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நீங்கள் உண்மையைக் கடைப்பிடியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக உண்மை நன்மைக்கு வழி காட்டும். மேலும் நிச்சயமாக நன்மை சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் . மேலும் மனிதன் உண்மை பேசிக் கொண்டும் உண்மையைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அவன் அல்லாஹ்விடம் உண்மையாளன் என்று எழுதப்படுவான். நீங்கள் பொய் சொல்வதையிட்டு உங்களை எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில் நிச்சயமாகப் பொய் தீமைக்கு வழிகாட்டும். மேலும் நிச்சயமாக தீமை நரகிற்கு வழிகாட்டும். எனவே மனிதன் பொய் பேசிக் கொண்டும் பொய்யைத் தேடிக் கொண்டும் இருக்கும் போது அல்லாஹ்விடம் அவன் பொய்யன் என்று எழுதப்படுவான்'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மை பேசுமாறு வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு உண்மை பேசுவதை கடைப்பிடிப்பதும் நிலையான நற்காரியங்களை செய்யவும் நற்செயல்களை தொடராக செய்யவும் வழிவகுப்பதோடு அவரை சுவர்கத்தின் பால் கொண்டு போய்சேர்க்கும். இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தொடராக இப்பண்பை கடைப்பிடிப்பவர் உண்மையாளர் என்ற பெயருக்கு தகுதிபெற்றவராக மாறி விடுகிறார். அரபு மொழியில் சித்தீக் என்பது மிகப்பெரும் உண்மையாளர் என்ற கருத்தைக் காட்டும் ஒரு சொல்லாகும். மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பொய் மற்றும் வீணாண வார்த்தை பேசுவதை விட்டும் எச்சரிக்கை செய்தார்கள். ஏனெனில் இச்செயற்பாடானது மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை விட்டு தடம்புரள தூண்டுவதோடு தீமைகளையும் பாவங்களையும் குழப்பங்களை செய்யயவும் வழிவகுக்கும். பின் இவை நரகத்திற்கு கொண்டுபோய் சேர்த்துவிடும். ஒருவர் தொடர்ந்தும் அதிகமாக பொய் சொல்பவராக இருக்கும் பட்சத்தில் அவர் பொய்யர் என அல்லாஹ்விடத்தில் பதிவு செய்யப்படுகிறார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'இரண்டு வார்த்தைகள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளனுக்கு மிகவும் பிரியத்திற்குரியவையுமாகும். அவை : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதன் எந்த சிரமுமின்றி எல்லா வேளைகளிளும் இலகுவாக கூறக்கூடிய இரண்டு வார்த்தைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை மீஸானில் வைக்கப்படும் நன்மைகளில் மிகவும் கணதியானதாகவும், அருளாளனான எங்கள் இரட்சகனுக்கு அதி விருப்பத்திற்குரியதாகவும் உள்ளது. அவ்வார்த்தைகள் இரண்டும் பின்வருமாறு : 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்), 'ஸுப்ஹானல்லாஹில் அழீம்' (கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்)'. இவை இரண்டும் அல்லாஹ்வின் மேன்மை, அவனின் பரிபூரணத்துவம், எல்லாவித குறைகளிலிருந்து நீங்கியிருத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தொட்டு-அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள் : 'பிரார்த்தனையை விட அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரிய விடயம் வேறு ஏதுமில்லை'.
இமாம்களான திர்மிதி, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரார்த்தனையை (துஆவை) விட அல்லாஹ்விடம் மிகவும் மதிப்பிற்குரிய விடயம் ஏதுமில்லை என இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் : 'எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில்(நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கிறான்'.
இமாம்களான திர்மிதி மற்றும் அஹ்மத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளதுயார் தனது சகோதர முஸ்லிமின் மானத்தை அவர் இல்லாத வேளை அவனை கண்டிப்பது அல்லது அவனுக்கு மோசமான வார்த்தையினால் அவனை ஏசுவது போன்ற விடயங்களை விட்டும் பாதுகாக்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையில் நரக வேதனைவிட்டும் அவனை பாதுகாக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யார் "ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி" வபிஹம்திஹி' ( பொருள்: அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என 100 தடவைகள் கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் நுரையளவு போல் இருப்பினும் அவை மன்னிக்கப்பட்டு விடும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்யார் தினமும் 'ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' (அல்லாஹ்வை புகழ்வதோடு அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்ற வார்த்தையை –தஸ்பீஹை- கூறுகிறாரோ அவரின் பாவங்கள் கடல் அலையின் போதும் கடல் கொந்தளிக்கும் போதும் எழும் நுரையின் அளவுக்கு அதிகமாக இருந்தாலும் அவை அழிக்கப்பட்டு மன்னிக்கப் பட்டுவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள் : 'யார் ஒருவர்; 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' (பொருள்: உண்மையான வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாறுமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சியதிகாரமும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் யாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக உள்ளான் என 10 தடவைகள் கூறினால் அவர் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியிலிருந்து நான்கு அடிமைகளை உரிமையிற்றவரைப் போன்றவராவார்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீகலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' என்பதன் கருத்து அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியவானவன் வேறு யாரும் கிடையாது. அவன் தனித்தவன் அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. அவன் மாத்திரமே முழுமையான ஆட்சி அதிகாரகத்துக்கு உரித்துடையவன். அத்துடன் ஏனையோரைத் தவிர்த்து நேசம்கொள்ளுதல் மற்றும் மகிமைப்படுத்துதல் என்ற விடயங்களுடன் பாராட்டுக்கும் புகழுக்கும் தகுதியானவன். அவன் ஆற்றல் மிக்கவன் அவனை எதனாலும் இயலாமல் செய்திட முடியாது என்பதாகும். ஆகவே இந்த மகத்தான திக்ரை யார் ஒரு நாளில் பத்து தடவைகள் கூறினால் இஸ்மாஈல் இப்னு இப்ராஹீம் அலைஹிமஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளில் உள்ள அடிமைகளில் நான்கு அடிமைகளை உரிமையிட்ட நன்மை அவருக்கு கிடைக்கிறது. இங்கு இஸ்மாஈல் அலைஹிஸ் ஸலாம் அவர்களின் சந்ததிகள் என குறிப்பிட்டு கூறக்காரணம் அவர்கள் ஏனையோரை விடவும் சிறப்புக்குரியவர்கள் என்பதினாலாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவைக் கொடுக்கின்றான் அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை பகிர்ந்தளிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது'
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் நபியவர்கள் அல்லாஹ் அவருக்கு அளித்துள்ள அறிவு மற்றும் ஆகாரம் போன்றவற்றை பகிர்ந்தளிப்பவராக உள்ளார். உண்மையில் அல்லாஹ்வே வழங்குபவன். அவனைத் தவிர உள்ள மற்றோர் இவற்றிற்கான காரணங்களாக உள்ளனர். அவனின் அனுமதியின்றி எவ்வித பயனையும் அவை தரமாட்டாது. இந்தச் சமுதாயத்தினர் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணி நடப்பதில் உறுதியாக இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது.