





























Hadeeth Cards
Da'wa cards that highlight great meanings from the noble prophetic hadiths in a simple style and attractive display that helps the Muslim to have a deeper understanding of his religion in an easy way
All
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் மிகப் பொருத்தமானது உங்கள் மனைவியரின் கற்பை ஹலாலாக அடைந்து கொள்ளச் செய்து கொண்ட ஒப்பந்தமாகும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானதும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதுமான நிபந்தனைகளுள் ஒரு பெண்ணை மனைவியாக அனுபவிப்பதை அனுமதிக்க காரணமாக அமைந்துள்ள நிபந்தனையே என நபியவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள். இங்கு நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிபந்தனையாவது ஒரு பெண் திருமண ஓப்பந்தத்தின் போது கோரும் அனுமதிக்கப்பட்ட நிபந்தனைகளையே குறிக்கும்.
அபுஸ்ஸுபைர் அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு ஸுபைர் அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகையிலும் ஸலாம் கொடுத்ததும் பின்வருமாறு ஓதுவார்கள் : 'லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீகலஹூ லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் பழ்லு வலஹுஸ் ஸனாஉல் ஹஸன். லாஇலாஹ இல்லல்லாஹு முஃக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காபிரூன்'. மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் இதனை ஓதுவார்களெனக் கூறினார்கள். பொருள் : உண்மையான வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் புகழனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன், தீமையிலிருந்து விலகுவதும் நன்மையின் மீது ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத்தவிர வேறெவரையும் நாங்கள் வணங்கமாட்டோம். அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையதே. சிறப்பும் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்இந்த மகத்தான திக்ரை ஒவ்வொரு கடமையான தொழுகைளிலும் ஸலாம் கொடுத்ததன் பின் ஓதி தஸ்பீஹ் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். இதன் கருத்து பின்வருமாறு : 'லாஇலாஹ இல்லல்லாஹு' என்ற வார்த்தை உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாறுமில்லை என்பதைக் குறிக்கும். 'வஹ்தஹு லா ஷரீகலஹு'அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, என்பது (இறைமைத்துவத்திலும்) உலூஹிய்யாவிலும், ருபூபிய்யாவிலும் பெயர்கள் மற்றும் பண்புகளிலும் தனித்துவமானவனாகவும், பிற படைப்புகளுடன் கூட்டுச்சேராதவனாகவும் உள்ளான் என்பதாகும். 'லஹுல் முல்க்' வானங்கள் மற்றும் பூமி அதற்கிடைப்பட்ட அகன்று விரிந்த ஆட்சியதிகாரத்திற்கு சொந்தக்காரன் என்பதைக் குறிக்கும். 'வலஹுல் ஹம்து' என்பது ஒட்டுமொத்தமான முழுமைத்துவத்தைப் பெற்றவன் இன்பத்திலும் துன்பத்திலும் மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் நேசித்து போற்றி புகழத்தக்கவன் என்பதாகும். 'வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்' அவனின் சக்தியும், வல்லமையும் எல்லா வகையிலும் முழுமையானது, அவனுக்கு இயலாதது என்று ஒன்று கிடையாது, அனைத்தும் அவனுக்கு இயலுமான விவகாரங்களே என்பது இதன் பொருளாகும். ' லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்பது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறிச்செல்லவதோ, அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் நிலையிலிருந்து அவனுக்கு கட்டுப்படும் நிலைக்குச் செல்வதற்குமான ஆற்றலைப் பெறுவது அல்லாஹ்வின் மூலமேயாகும், அவனே இதற்கு உதவிபுரிபவனாக உள்ளான். அவனின் மீதே எமது பொறுப்புகளை நாம் ஒப்படைக்கிறோம். ' லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு' என்ற வாசகம் இணைவைத்தலை புறக்கணித்து உலூஹிய்யாவை வலியுறுத்துவதாக இது அமைந்துள்ளது. அவனைத் தவிர வணங்கி வழிபட தகுதி படைத்தவன் வேறு யாரும் கிடையாது. 'லஹுன்னிஃமது வலஹுல் பழ்லு' "அருளும் அருட்கொடைகளும் அவனுக்கே உரியன" என்பது அருள்களைப் படைத்து அதனை அவனே சொந்தமாக்கி கொள்வதோடு அவற்றை நாடிய அடியார்களுக்கு கொடுத்து கண்ணியப் படுத்துகிறான் என்பதாகும். ' வலஹுஸ்ஸனாஉல் ஹஸன்' அழகிய பாராட்டும், புகழும்' அவனுக்கே உரியன என்பது இந்தப்பாராட்டு அவனின் தாத் -மெய்நிலை- மற்றும் அவனின் பண்புகள் செயற்பாடுகள் அருட்கொடைகள் மற்றும் எல்லா நிலைகளுக்குரித்தாகும். 'லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன' என்பதன் கருத்து : அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் எவ்வித முகஸ்துதியோ, வெளிப்பகட்டோ இன்றி அல்லாஹ்வை மாத்திரம் நோக்காகக் கொண்டு தூய்மையைக் கடைப் பிடித்தலைக் குறிக்கிறது. 'வலவ் கரிஹல் காபிரூன்' அதாவது காபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ்வை ஏகத்துவப் படுத்தி அவனுக்கு வணக்கங்களை செலுத்துவதில் நிலைத்திருப்போம் என்பதாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள் : ' துல்ஹிஜ்ஜா பத்து நாட்களில் செய்யும் அமல்கள்தான் ஏனைய நாட்களில் செய்யும் அமல்களை விடவும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே 'ஜிஹாதை விடவுமா?' என்று கேட்டனர். அதற்கு 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' எனப் பதிலளித்தார்கள்.
இமாம்களான புஹாரி, அபூதாவூத் ஆகியோரால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பு அபூதாவூத் உடையதாகும்வருடத்தில் ஏனைய நாட்களை விடவும் துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் மிகவும் சிறப்புக்குரியது என நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். ஸஹாபாக்களிடம் அமல்களில் ஜிஹாதே மிகவும் சிறப்புக்குரிய அமல் -செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டதினால் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த பத்து நாட்கள் அல்லாது வேறு நாட்களில் ஜிஹாத் செய்வது சிறப்புக்குரியதா அல்லது இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது சிறப்புக்குரியதா என வினவினார்கள்.அதற்கு நபியவர்கள்: இந்த நாட்களில் நல்லமல்களில் ஈடுபடுவது ஜிஹாதை விடவும் மிகவும் சிறப்புக்குரியது என பதிலளித்தார்கள். ஆனால் ஒரு மனிதரைத் தவிர, அவர் தனது உயிரையும் உடமைகளையும அல்லாஹ்வின் பாதையில் பணயமாக வைத்து போராளியாக வெளிக்கிளம்பிச் சென்று, தனது செல்வத்தையும், உயிரையையும் இழக்கிறார் என்றால் அந்த மனிதரைத் தவிர என்றும் கூறினார்கள். இந்த சிறப்பான நாட்களில் சிறப்புற்று விளங்கும் அமல்களில் இதுதான் மேலானது.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக புரைதா இப்னுல் ஹஸீப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : அஸ்ர் தொழுகையை நேர காலத்துடன் நிறைவேற்றுங்கள், ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'யார் அஸ்ர் தொழுகையை விட்டுவிடுகிறானோ அவனின் நற்செயல்கள் அழிந்து விடும்'.
இமாம் புஹாரி இதனைப் பதிவு செய்திருக்கிறார்அஸ்ர் தொழுகையை வேண்டுமென்றே அதற்குரிய நேரத்தை தவிர்த்து பிற்படுத்தி தொழுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். அவ்வாறு பிற்படுத்தித்தியவரின் செயல் வீணாகி விடுவதோடு அது எவ்விதப் பெறுமானமுமற்றதாக ஆகிவிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் இப்னு அப்பான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : ''அழகிய முறையில் வுழூ செய்பவரின் (சிறு)பாவங்கள் நகங்களின் கீழ் உட்பட உடலின் எல்லாப் பகுதியிலிருந்தும் வெளியேறி விடுகின்றன''.
இதனை இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ளார்யார் வுழுவின் ஸுன்னத்துக்களையும் அதன் ஒழுங்குகளையும் பேணி வுழூ செய்கிறாரோ அது அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக அமைந்து விடுவதுடன், அவரின் பாவங்கள் அவரின் கை மற்றும் கால் நகங்களின் கீழாலும் வெளியேறிவிடும் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் : 'நன்மையை எதிர்பார்த்து ஒரு மனிதன் தனது குடும்பத்திற்கு செலவு செய்தால், அது தர்மமாக அமையும்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்ஒரு மனிதர் தனது மனைவி, பெற்றோர் பிள்ளைகள் போன்ற தன்மீது செலவு கடமையான குடும்பத்தார்க்கு அல்லாஹ்வை நெருங்கி, அவனிடம் நன்மையை எதிர்பார்த்து செலவு செய்தால் அவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கிறது என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் சிலதை வைத்து, சிலதை சிரைப்பதை தடுத்தார்கள்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தலை முடியில் ஒரு பகுதியை மழித்து இன்னொரு பகுதியை விட்டுவிடுவதை தடுத்தார்கள். இந்தத் தடையானது ஆண்களில் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் பொதுவானது. பெண்களைப் பொருத்தவரை அவர்களின் முடியை மழிப்பது கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் : "நீங்கள் சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். ஏனெனில் கப்ரில் பெரும்பான்மையான வேதனை அதன் காரணமாகத் தான்".
இதனை அத்தாரகுத்தனீ பதிவு செய்துள்ளார்கப்ரில் இருக்கும் வேதனைக்கான காரணங்களில் ஒன்றை நபியவர்கள் எமக்கு விளக்குகின்றார்கள். அதுதான் பரவலாக உள்ள ஒரு விடயமாகும். அது சிறுநீர் கழித்ததும் முறையாக சுத்தம் செய்யாமையாகும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : 'நெற்றி- இதன் போது தம் கையால் மூக்கையும் அடையாளம் காட்டினார்கள்-, இரண்டு கைகள், இரண்டு முட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புகக்ள்; படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) சேர்த்துப் பிடித்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்'.
இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்நபி ஸல்லல்லாஹு அவர்கள் தொழுகையின் போது ஏழு உறுப்புக்களினால் ஸுஜூத் செய்யுமாறு அல்லாஹ் தனக்கு கட்டளையிட்டதாக தெளிவுபடுத்துகிறார்கள். முதலாவது : நெற்றி : மூக்கு மற்றும் இருகண்களுக்கு மேலுல்ல முகத்தின் பகுதியை குறிக்கும். ஏழு உறுப்புகளில் நெற்றியும் மூக்கும் ஒன்று என்பதை தெளிவுபடுத்தவும், ஸுஜூத் செய்பவர் தரையில்; அவரின மூக்கை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நபி ஸல்லல்லாஹு அவர்கள் தனது கையினால் மூக்கையும் சுட்டிக்காட்டினார்கள். இரண்டாவதும் மூன்றாவதும்; உறுப்பு இரு கைகளாகும். நான்காவதும் ஐந்தாவதும் உறுப்பு : இரு முழங்கால்களாகும். ஆறாவதும் ஏழாவதும் உறுப்பு இரு கால்களினதும் விரல்களாகும் எமது முடிகளையோ அல்லது எங்களது ஆடைகளையோ ஸுஜூத் செய்யும் வேளையில் சேர்த்துப் பிடிக்கக்க கூடாது என்றும் உறுப்புகளுடன் சேர்ந்து அவைகள் தரையில் படுமாறு விட்டுவிட வேண்டும் என்றும் எங்களுக்கு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.